Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயூரன் சுகுமாரன் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Featured Replies

ஓபியத்திலை இருந்து தயாரிக்கப்படும் ஹெரோயினுக்கு அடுத்தபடியான வேதிபொருள் கோர்டின்.. class B வகையை சேர்ந்த அடிமையாக்க கூடிய இந்த வேதிப்பொருள் இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்யப்படவில்லை மருத்துவ தேவைக்கு பயன்படுகிறது.

  • Replies 60
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா என்னதான் சொல்லவருகிறீர்கள் எல்லாரும் ? :unsure:

 

மயூரனையும் மைக்கேலையும் போட்டது சரியா தப்பா ???  :(

 

அட விடுங்கோப்பா. எல்லாம் முடிஞ்சபிறகும் சரி பிழை பேசிக்கொண்டு ! :D

 

ஏதாவது மாறப்போகுதெண்டாலும் பரவாயில்லை. ஒனண்டுமே அசையப் போறதில்லை. எதுக்கு இந்தளவு குத்தல், முறியல் ??? :icon_mrgreen:

எல்லாம் எழுதுகிறீர்கள்  மயூரனின் வழக்கு விபரம்  நடந்து கொண்ட விதம்.  குற்றவாளியாக காணப்பட்ட முறை என்பவற்றை தாருங்களேன்.

சும்மா புலி  ரெலோ என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு  எழுதி கொண்டு இருக்கிறீர்கள்

 

மயூரனின் வழக்கு நடந்த விதம் தான் தேவை  .ராஜிவ் கொலை வழக்கு போல் அப்பாவிககள்  ம்ரண தண்டனை பெறக்கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா என்னதான் சொல்லவருகிறீர்கள் எல்லாரும் ? :unsure:

 

மயூரனையும் மைக்கேலையும் போட்டது சரியா தப்பா ???  :(

 

அட விடுங்கோப்பா. எல்லாம் முடிஞ்சபிறகும் சரி பிழை பேசிக்கொண்டு ! :D

 

ஏதாவது மாறப்போகுதெண்டாலும் பரவாயில்லை. ஒனண்டுமே அசையப் போறதில்லை. எதுக்கு இந்தளவு குத்தல், முறியல் ??? :icon_mrgreen:

 

 

ரகு

உங்கள் சகோதரனாக இருந்தால் போடுவது என்ற சொல்லை பாவிப்பீர்களா??

உங்களை காயப்படுத்த எழுதவில்லை

அதன் வலியை நாம் உணரவேண்டாமா??

 

ஒரு ஆட்டை

மாட்டை

நாயை ...வீதியில் வைத்துக்கொன்றால் பார்த்துச்செல்வீர்களா??

ஒரு உச் ஆவது வருமே...

அதைத்தான் இங்கு சொல்லி நிற்கின்றோம்..

அதற்காக

நீங்க சாப்பிடாத ஆடா?

மாடா? என்று கேட்டால்....???

 

நேபாளத்தில் அழிவு வந்தது

அதைத்தடுக்கமுடியாது

இதை தடுக்கலாமே....

அதையே நாம் செய்தோம்

தொடர்ந்து செய்வோம்....

 

இதற்குள் எதற்கு புலி

போராட்டம்

தேசியம்

அவர்

இவர்......?

 

ஒரு மனிதனாக இருந்தால் போதும்...

இப்ப முடிவா என்னதான் சொல்லவருகிறீர்கள் எல்லாரும் ? :unsure:

 

மயூரனையும் மைக்கேலையும் போட்டது சரியா தப்பா ???  :(

 

அட விடுங்கோப்பா. எல்லாம் முடிஞ்சபிறகும் சரி பிழை பேசிக்கொண்டு ! :D

 

ஏதாவது மாறப்போகுதெண்டாலும் பரவாயில்லை. ஒனண்டுமே அசையப் போறதில்லை. எதுக்கு இந்தளவு குத்தல், முறியல் ??? :icon_mrgreen:

 

ஐயோ அது Michael இல்லை, Andrew. 

 

தெரியாமலா கருத்து எழுதுறிங்க? 

எல்லாம் எழுதுகிறீர்கள்  மயூரனின் வழக்கு விபரம்  நடந்து கொண்ட விதம்.  குற்றவாளியாக காணப்பட்ட முறை என்பவற்றை தாருங்களேன்.

சும்மா புலி  ரெலோ என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு  எழுதி கொண்டு இருக்கிறீர்கள்

 

மயூரனின் வழக்கு நடந்த விதம் தான் தேவை  .ராஜிவ் கொலை வழக்கு போல் அப்பாவிககள்  ம்ரண தண்டனை பெறக்கூடாது.

 

தெரிஞ்சு என்ன பண்ணப்போறிங்க? 

 

கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கோ எல்லாம் விளங்கும், விளங்க்காட்டா என்னும் இணைப்புக்கள் அந்த தளத்திலேயே இருக்கு அழுத்தி அழுத்தி பாருங்கோ. 

 

http://en.wikipedia.org/wiki/Myuran_Sukumaran 

 

ஆங்கிலம் புரியாது என்றால் கிழே தமிழ் இணைப்பு 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

Edited by Sooravali

ரகு

உங்கள் சகோதரனாக இருந்தால் போடுவது என்ற சொல்லை பாவிப்பீர்களா??

உங்களை காயப்படுத்த எழுதவில்லை

அதன் வலியை நாம் உணரவேண்டாமா??

 

ஒரு ஆட்டை

மாட்டை

நாயை ...வீதியில் வைத்துக்கொன்றால் பார்த்துச்செல்வீர்களா??

ஒரு உச் ஆவது வருமே...

அதைத்தான் இங்கு சொல்லி நிற்கின்றோம்..

அதற்காக

நீங்க சாப்பிடாத ஆடா?

மாடா? என்று கேட்டால்....???

 

நேபாளத்தில் அழிவு வந்தது

அதைத்தடுக்கமுடியாது

இதை தடுக்கலாமே....

அதையே நாம் செய்தோம்

தொடர்ந்து செய்வோம்....

 

இதற்குள் எதற்கு புலி

போராட்டம்

தேசியம்

அவர்

இவர்......?

 

ஒரு மனிதனாக இருந்தால் போதும்...

 

மயூரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றபட்டது கொடுமைதான். இருந்தாலும் இங்கே வந்து ஏனைய கருத்தாளர்களை பார்த்து சரியா பிழையா என்று கேட்டு என்னவரப்போகுது? 

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அதை தெரிவிப்பது அவரவர் விருப்பம் அதுக்காக உங்களுக்கு பிடிக்காத கருத்துக்கள் எல்லாம் பிழை என்று நினைத்தால் அதுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

 

உங்களிடம் ஒரு கேள்வி. 

 

தற்செயலாக மகிந்தவை போர் குற்றத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதித்தால் உங்களின் நிலைப்பாடு என்ன? 

 

இந்த கேள்வி உங்களுக்கு மாத்திரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருது ஒரு முரண்பாடுமில்லை.

புலிகள் due process ஐ பின்பற்றி தமது நீதிமன்றில் தண்டனை கொடுத்திருந்தால், ஒரு கண்துடைப்பு விசாரணீயேனும் செய்திருந்தால் அதை சட்டம் எனலாம்.

ஆனால் புலிகள் செய்தது பகிரங்க விசாரணையில்லாத, பகிரங்க summary executions.

இந்தோனேசியாவில் நடந்திருப்பது நீதிமன்ற விசாரணை. அதுவும் 10 வருடங்கள் அவுசின் முழு அரச ஆதரவு குற்றவாளிக்கு இருந்தது.

மறுபடியும் சொல்கிறேன் மயூரன் குற்றவாளியில்லை என அவரின் தாயாரோ ஆசி அராசோ சொல்லவில்லை. புலிகளால் கொல்லப்ப்பட்ட மற்ற இயக்கத்தவரை அப்படிச் சொல்ல முடியுமா?

புலியே நாட்டில் இருந்த கோர்டு பிடியனைக்கு பயந்து ஓடித்திரிந்த காலத்தில் 
புலிக்கு கோர்டு இருந்து வழக்கு நடந்திருந்தால் ..........?
இதைவிட நீங்கள் எனக்கு இரண்டு குட்டு தலையில் குட்டி இருக்கலாம். 
 
புலிகளிடம் இருந்த வசதியும் காலமும் 
 
தற்போதைய காலமும் இந்தோனேசிய அரசின் வசதியும்தான் 
 
நான் குறிபிட்ட முரண்பாடு! 
 
 
மயூரன் சுத்தவாளி என்று யாரும் வாதடவில்லை.
மனிதநேயம் பற்றிதான் பேசுகிறார்கள்.
 
மயூரனுக்கு இந்தோனேசியா வருவதற்கு தடை விதித்து இருந்தாலே 
அவருடைய போதைவஸ்து கடத்தலால் இந்தொனெசியாவிட்கு கெடுதல் இல்லாது போயிருக்குமே ?
ஏற்கனவே செய்ததற்கு 10 வருடம் சிறை இருந்து விட்டார்கள். 
 
அளவிற்கு அதிகாமா ஐஸ்பிரின் போட்டு பலர் இறந்து போயிருக்கிறார்கள் 
டிஸ்பிரினை கொக்கோ கோலாவில் போட்டு வெறி ஏறி வருகிறர்கள் பள்ளி மாணவர்கள். 
அதற்காக டிஸ்பிரின் விற்கும் பார்மசி காரர்களை உள்ளே போடுவதா ?
 
இந்தோனேசியாவில் போதைச்வஸ்து கடத்துவதுக்கு மரணதண்டனை என்று சட்டம் இருக்கிறது.
இந்தோனேசியா தனது சட்டத்தை செய்தது என்று விட்டே போகாலாமே ??
சட்டம் பரிசீலனைக்கு உரியது என்பதுதானே தர்க்கமே ?
 
இவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிடுவோர் எல்லோரும் 
போதைபொருள் நல்லது என்று கூறுவதாக .....
போதைபோருளின் கெடுதலை பற்றி பேசுவது முரண்பாடு. 
 
சவூதியில் ஒரு பெண் முக்காடு இன்றி முகம் தெரிய வெளியே சென்றால் மரண தண்டனை குற்றம் (சட்டமும் இருக்கிறது)
இந்த காட்டுமிராண்டி சட்டங்களை மீள் பரிசிலீக்க வேண்டும் என்பதுதான் வாதம்.
 
அதற்காக மக்களை குண்டு வைத்து கொல்பவர்களையும் 
இவர்களையும் ஒரே தராசில் தூக்கி வைக்கிறார் நிழலி.
 
அப்போ நான் முதல் சொன்னதுபோல் ஏகாபத்தியம் மூன்றாம் தர நாடுகளில் நாளும் கொலை செய்கிறதே ?
எகாபத்தியத்தில் வாழும் நாமும் அல்லவா மரண தண்டனை பெற வேண்டும்?
மரணதண்டனைதான் தீர்வு என்று தெளிவாக தெரிந்தால் 
ஏன் யாருக்கும் காத்திருக்க வேண்டும் ? நாமாகவே தற்கொலை செய்யலாமே ?

(ஒரு சின்ன குறிப்பு விசாரணை செய்த பின்புதான் எங்களை புலிகள் விட்டார்கள். சரணடைய மறுத்து சண்டை செய்தவர்கள்தான் இறந்து போனது. அது கல்வியங்காட்டில் அவர்களுக்காக டேலோவில் இருந்த நாமே ஒருபோதும் வருந்தியதில்லை. அந்த கலவாடிகளல்தான் தங்கண்ணா வளர்த்த இயக்கத்தை பார்த்து யாழில் மக்கள் காறி உமிழ்ந்துவிட்டு போவார்கள்) 

  • கருத்துக்கள உறவுகள்

குகன், மயூரன் கொல்லப்படுவது தவறென்றுதான் இதே திரியில் எழுதினேன். ஆனால் நிழலி உட்பட பலரும் கத்தல்க்காரனுக்கு இரங்கத் தேவையில்லை என்று வாதிட்டதால் ஒதுங்கிவிட்டேன். ஆனாலும் மயூரன் இறந்த பின்னரும் கூட இந்தத்திரி தொடர்ந்தும் அவரை வசைபாடிக் கொண்டிருக்கிறதே என்கிற வேதனையில்த்தான் அப்படி எழுதினேன். அப்படியாவது இந்ததிரி முடியாதா என்கிற நப்பாசை.அவ்வளவுதான்.

சரி தவறு என்பதுக்கு அப்பால் மயூரனின் மரணதண்டனை என்னை வெகுவாக பாதித்து விட்டது. அவரின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். 
மயூரனது முடிவை பார்த்து தன்னும் தவறான வழிகளில் செல்லும் எமது இளைஞர்கள் திருந்த வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

மயூரனின் மரணம் என்னையும் வெகுவாகப் பாதித்திருந்தது. எனக்குத் தெரியும் கடிசிவரையும் இந்தோனேசியா இவர்களை விடமாட்டார்கள் என்பது. குறிப்பாக அகதிகள் விடயத்தில் டோனி இந்தோனிசிய ஜனாதிபதி ஜோக்கோவுடன் நன்றாக முறுகுப்பட்டிருந்தார். ஆள்கடத்தல் காரர்களிடம் காசை வாங்கிவிட்டு இந்தோனிசிய கடற்படை அகதிகளை கண்டும் காணாமல் விடுவது அவுசுக்கு நன்கு தெரியும். இதனை தடுக்குமாறு அவுஸ் பலமுறை கேட்டும் இந்தோனேசியா பாராமுகமாக இருந்து விட்டது.

 

சரி, மயூரனும் அன்றூவும் முன்பே சரக்கை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்து காசு பார்த்திருந்தார்கள். இரண்டாவது முறை முயற்சியை கைவிட்டு திரும்பினார்கள். மூன்றாவது முறை வளமாக அம்பிட்டார்கள். முதல் முரயுடனேயே நிறுத்தியிருக்கலாம். பிடிபடாவிட்டால் இப்பவும் தூள் கடத்துவார்கள் என்பது உறுதி. விமான நிலையத்தில் கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கிறார்களே "போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரணம் உறுதி" என, அதை வாசிக்கும்போதே ஒருவித பயம் வருமே? அதாவது பார்த்து யோசித்திருக்கலாமே.

 

இந்தப் பெடியன் ஏன் இந்த பேய் வேலை செய்தது என்பதுதான் எனக்கு விளங்காத விடயம். அவுசில உழைக்க எவளவோ வழிமுறைகள் இருக்கு. மூளையைப் பாவிக்காமல் பிழையானவர்களுடன் சேர்ந்து தானும் அழிந்து தனது குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி விட்டாரே. அந்த தாயுக்கும் சகோதரன் சகோதரிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சம்பவத்தை ஒரு கெட்ட அத்தியாயமாக நினைத்து மறந்து விடுங்கள். கடந்த 10 வருடங்களும் நீங்கள் பட்ட துன்பங்கள் போதும்.  

மரணதண்டனைக்கு நான் எப்போதுமே எதிரானவன். ஒரு மனித உயிரை கொல்ல யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒரு நாட்டின் சட்டம் என்னும்போது யார் என்ன செய்ய முடியும். முடிந்தளவு இப்படியான நாடுகளுக்குப் போவதையே தவிர்ப்பது நல்லது. நான் மத்தியகிழக்கு நாடுகளுக்குப் போவதையோ, அந்த நாடுகளூடாக பயணம் செய்வதையோ விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மயூரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றபட்டது கொடுமைதான். இருந்தாலும் இங்கே வந்து ஏனைய கருத்தாளர்களை பார்த்து சரியா பிழையா என்று கேட்டு என்னவரப்போகுது? 

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அதை தெரிவிப்பது அவரவர் விருப்பம் அதுக்காக உங்களுக்கு பிடிக்காத கருத்துக்கள் எல்லாம் பிழை என்று நினைத்தால் அதுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

 

உங்களிடம் ஒரு கேள்வி. 

 

தற்செயலாக மகிந்தவை போர் குற்றத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதித்தால் உங்களின் நிலைப்பாடு என்ன? 

 

இந்த கேள்வி உங்களுக்கு மாத்திரம் இல்லை.

 

நான் கேட்டது ரகுவிடம்..

உங்களிடமிருந்து மாற்றுக்கருத்து

அதேநேரம் மாற்றுக்கருத்து இருக்கப்படாதோ என என்னிடம் நீங்களே கேட்கின்றீர்கள்..

 

அப்புறம்  ஆட்டுக்குள்ள மாடு.....

 

உங்களது கேள்வியைப்பார்த்தபின் தான் புரிந்தது

தமிழரின் தோல்விக்கான காரணம்..

நமக்கு குறியே தெரியவில்லை

எப்படி வெற்றி வரும்..

 

போர்க்குற்றவிசாரணையின் முடிவில் இனஅழிப்புத்தீர்ப்பு 

அதிலிருந்து இரு இனங்களும் ஒன்றாக வாழமுடியாது என்ற சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்தனியாக  பிரிந்து செல்லல்....

இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்..

இதற்குள் மகிந்தவுக்கு மரணதண்டனை எங்கும் வரவில்லை....

அதைப்பற்றி அக்கறையுமில்லை..

இறுதிக்கணங்களிலும் தன்னால் பிடித்து  வைக்கப்பட்டிருக்கப்பட்டிருந்த சிறீலங்கா படைக்கைதிகளையும் விடுதலை செய்தவர் தலைவர்.

 

 

ஆனால் பலருக்கு மகிந்தவை அழிப்பது தான் குறி போலுள்ளது.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.