Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை தளராத முன்னாள் போராளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தளராத முன்னாள் போராளி!

121.gif

இறுதி யுத்தத்தில் சரணடைந்து அல்லது படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு நடவடிக்கைகளிற்காக அனுப்பப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளில் பெருமளவானவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லையென்பதை ஏற்கனவே செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

விடுதலையானவர்களின் தொழில்வாய்ப்புக்களிற்காக அரசாங்கம் மனப்பூர்வமான நடவடிக்கையெதனையும் செய்யவில்லை. ஏனோதானோ பாணியில் சில சிறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது யானைப்பசிக்கு சோளப்பொரி போட்ட கதையாகத்தான் உள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் போராளிகளிற்கு நிறைய உதவிகள் செய்துள்ளனர். எனினும் இந்த உதவிகள் நெறிப்படுத்தப்பட்ட பொறிமுறையொன்றின் ஊடாக செல்லாததால் உதவிகள் சரியானமுறையில் அவர்களை சென்றடையவில்லை. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக செய்யப்படும் உதவிகள் தொடர்பில் களத்திலிருப்பவர்களால் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. தமக்கு சார்பானவர்கள் மற்றும் தம்முடன் தொடர்பில் இருப்பவர்களிற்கும், தமது வாக்குவேட்டைக்காகவும் அவற்றை பயன்படுத்துகிறார்களே தவிர, கிடைக்கும் உதவிகளை முறையாக பகிர்ந்தளிக்கிறார்கள் இல்லையென பரவலாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும்விதமாக இந்த செய்தி அமைந்துள்ளது. இந்த போராளி மட்டக்களப்பை சேர்ந்தவர். ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்குடாவெளியை சேர்ந்த துரைசாமி அரிதாஸ் (54) இறுதி யுத்தத்தில் தனது காலை பறிகொடுத்துள்ளார். மனைவி புவனேஸ்வரி, மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளுடன் தற்காலிக வீட்டில் வசித்து வருகிறார்.

ஆரம்பத்தில் கோழி, ஆடு, தாரா என்பவற்றை வளர்க்க தொடங்கியவர், பின்னர் சிறியளவிலான தோட்டமொன்றை செய்ய ஆரம்பிதார். ஆடுகளை விற்று கிணறு தோண்டியுள்ளார். மாற்றுதிறனாளிகளிற்கான போட்டியான்றில் கலந்து கொண்டு சிறியரக உழவு இயந்திரமொன்றை பரிசாக பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளிற்கான சர்வதேச பயிற்சிநெறியொன்றில் இலங்கை சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுவரை தமிழர்கள் யாரும் தனக்கு உதவியதேயில்லையென்றும் கூறியுள்ளார்.

26.gif

http://pagetamil.com/?p=27159

  • கருத்துக்கள உறவுகள்
நல்லவர்களாயினும், கெட்டவர்களாயினும் வாழ்க்கை, எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. இதிலிருந்து கடவுள்களுக்கும் விதிவிலக்கில்லை. :(
 
இலங்கையில் முருகனுக்கான கோவில்கள் பலவுண்டு. ஆனாலும் நல்லூர் முருகனே செல்வச்செழிப்போடும் சகல வசதிகளோடும் விளங்கிவருகிறார். :o  
 
  • கருத்துக்கள உறவுகள்

Sent Today, 08:41 AM

http://www.yarl.com/...முன்னாள்-போராள/

வணக்கம் விசுகு அவர்களே,
 
இந்தமாதம் இவருக்கொரு உதவியைச் செய்வோமா? 35ஒ30 என்று ஒரு திட்டமிடலோடு 1000யூரோகளை இலக்குவைத்து அவருக்கு உதவுவோமா?

 

 

எனக்கு  இவ்வாறு ஒரு தனிமடல் வந்துள்ளது...

உறவுகளின் பார்வைக்கு வைக்கின்றேன்....

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Sent Today, 08:41 AM

http://www.yarl.com/...முன்னாள்-போராள/

வணக்கம் விசுகு அவர்களே,
 
இந்தமாதம் இவருக்கொரு உதவியைச் செய்வோமா? 35ஒ30 என்று ஒரு திட்டமிடலோடு 1000யூரோகளை இலக்குவைத்து அவருக்கு உதவுவோமா?

 

 

எனக்கு  இவ்வாறு ஒரு தனிமடல் வந்துள்ளது...

உறவுகளின் பார்வைக்கு வைக்கின்றேன்....

 

 

நல்லது. உதவித்திட்டம் முன்னரைப்போல் மாதக்கணக்கில் இழுபறிப்படாவிட்டால் நானும் இணைந்து கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியும் தன்னம்பிக்கையும் உள்ளவரை யாராலும் வாழ முடியும், மற்றவர்களையும் வாழ வைக்க முடியும்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் போராளிகளிற்கு நிறைய உதவிகள் செய்துள்ளனர். எனினும் இந்த உதவிகள் நெறிப்படுத்தப்பட்ட பொறிமுறையொன்றின் ஊடாக செல்லாததால் உதவிகள் சரியானமுறையில் அவர்களை சென்றடையவில்லை.

புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் தொகையுடன் ஒப்பிடும் போது தாயகத்தை சென்றடையும் உதவிகள் போதாது ,மக்களுக்கு செய்யாவிட்டாலும் போராளிகளுக்கு ,எல்லா நாடுகளிலும் உள்ள முன்னாள் தமிழீழ செயற்பாட்டாளர்கள் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்கி செய்திருக்கவேண்டும் .ஆனால் கஜேந்திரனுக்கு தேர்தலுக்கு நிதிசேர்த்து அனுப்பிய அக்கறையை இந்த முன்னாள் போராளிகளிற்கு,மாவீரர் குடும்பங்களுக்கு செய்யவில்லை .

இன்றைய நிலையை மாற்றுவதற்கு யார் பூனைக்கு மணிகட்டுவது ?

கிளிநொச்சி ,முல்லைத்தீவில் வசிக்கும் 10 மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான மலசல கூடங்களை கனடாவில் வசிக்கும் அன்பர் அமைத்துக்கொடுத்துள்ளார் .இந்த உதவி மாற்றுதிறனாளிகளுக்கான அமைப்பு ஊடாக வழங்கப்பட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே இந்த மனிதருக்கு 2011 நேசக்கரம் உட்பட வேறும் சிலரும் உதவினார்கள். இந்த நபர் பல வழிகளிலும் உதவிகள் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டு நேசக்கரம் தொடர்பை துண்டித்து கொண்டோம். இந்தப் படம் கூட 2011எடுக்கப்பட்டது. இந்த நபர் எனக்கு எழுதிய கடிதங்கள் படங்கள் யாவும் இருக்கிறது. பார்க்க விரும்புவோருக்கு மின்னஞ்சலில் தரப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே இந்த மனிதருக்கு 2011 நேசக்கரம் உட்பட வேறும் சிலரும் உதவினார்கள். இந்த நபர் பல வழிகளிலும் உதவிகள் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டு நேசக்கரம் தொடர்பை துண்டித்து கொண்டோம். இந்தப் படம் கூட 2011எடுக்கப்பட்டது. இந்த நபர் எனக்கு எழுதிய கடிதங்கள் படங்கள் யாவும் இருக்கிறது. பார்க்க விரும்புவோருக்கு மின்னஞ்சலில் தரப்படும்.

 

நான் எனது உறவினர்களிடமே பல உதவி துர்ப்பிரயோகங்களை கண்டு மனமொடிந்து விட்டேன்.

நாம் பணம் சொரியும் மரங்களுக்குள் இருந்து பணம் அனுப்புவதாக அவர்கள் நினைக்கின்றார்கள் போல் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.