Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழியில் அடாத்தாக முளைத்த விகாரைக்கு அங்கீகாரம்?

Featured Replies

jaffna%20100_CI.jpg

நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களால், எந்தவொரு அனுமதியும் பெறப்படாது அமைக்கப்பட்ட விகாரை, பௌத்த சாசன அமைச்சின் கீழ் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் அங்கு ஏற்கனவே அத்திபாரம் வெட்டப்பட்ட நிலையிலிருந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில், ஒரு தொகுதி சிங்கள மக்கள் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அத்துமீறிக் குடியேறினர். 

அவர்கள் எந்தவொரு அனுமதியும் பெற்றுக் கொள்ளாது, அடாத்தாகப் பிடித்த காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அத்துடன் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் விகாரை ஒன்றையும் அமைத்தனர். இந்த விகாரை அமைப்பதற்கும் எந்தவொரு முறைப்படியான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

 குறித்த விகாரையைப் பதிவு செய்வதற்காக, தென்மராட்சி பிரதேச செயலகத்தை, விகாரையின் பிக்கு அணுகியுள்ளார். இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். 

இதன் பின்னர், பௌத்தசாசன அமைச்சின் கீழ், குறித்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது.   தற்போது அங்கு 5 குடும்பங்கள் வரையிலேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளன. ஆனாலும் 72 குடும்பங்கள் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. 

இதனை விட, ஏற்கனவே அத்திபாரம் வெட்டபட்ட நிலையிலிருந்த வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் அங்கு தங்கியுள்ள சிங்கள மக்கள் ஈடுபட்டுள்ளனர். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119468/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் பக்கத்துநாட்டிலை புலியை பசுவாக்கவேனும் எனும் அடாத்து பண்ணும் கூட்டத்துக்கு யாழில் ஹிந்து சமயத்தை அழித்து விகாரை கட்டுறான் என நெருப்பை கொளுத்திப்போட்டுடனும் படம் வந்தால் இன்னும் நல்லா இருக்கும் .

மைத்திரி அரசு வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல காரியங்களை நிறைவேற்றுகிறது

அது விளங்காமல் / விளங்காதமாதிரி சம்பந்தரும் சுமத்தியரும் விளக்கு பிடிக்கினம் :icon_idea:

மணலாத்தில குடியேட்டி வடக்கையும் கிழக்கையும் உடைச்ச சிங்களவன் இப்ப உள்பிராந்தியங்களை டார்கெட் பண்ணுறான்

மொத்தத்தில கழுத்தில பிடிக்குறான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சியிலும்.. நல்லாட்சியிலும் இதெல்லாம் சகஜமப்பா. நாங்க தான் சமாளிச்சு வாழப் பழகனும்.

இப்படிக்கு.. பின் கதவு சுமந்திரன். முன் கதவு சம்பந்தன். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சியிலும்.. நல்லாட்சியிலும் இதெல்லாம் சகஜமப்பா. நாங்க தான் சமாளிச்சு வாழப் பழகனும்.

இப்படிக்கு.. பின் கதவு சுமந்திரன். முன் கதவு சம்பந்தன். :lol::icon_idea:

நாவற்குளி சிங்களக் குடியேற்ற நாயகன் அத்தியடிக் குத்தியனை மறந்ததென்ன...... ???

  • கருத்துக்கள உறவுகள்

நாவற்குளி சிங்களக் குடியேற்ற நாயகன் அத்தியடிக் குத்தியனை மறந்ததென்ன...... ???

இப்ப அவரை

சிங்களம் மட்டுமல்ல  தமிழரும் கணக்கிலெடுக்கிறார்களில்லை....

நல்ல விடயம் பக்கத்துநாட்டிலை புலியை பசுவாக்கவேனும் எனும் அடாத்து பண்ணும் கூட்டத்துக்கு யாழில் ஹிந்து சமயத்தை அழித்து விகாரை கட்டுறான் என நெருப்பை கொளுத்திப்போட்டுடனும் படம் வந்தால் இன்னும் நல்லா இருக்கும் .

நாவற்குழி விகாரைக்கு அங்கீகாரம்!

உள்ளுர் அதிகாரிகளது தடையினை தாண்டி நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களால், தன்னிச்சையாக அமைக்கப்பட்ட விகாரை, பௌத்த சாசன அமைச்சின் கீழ் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில், ஒரு தொகுதி சிங்கள மக்கள் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அத்துமீறிக் குடியேறினர். அவர்கள் தங்கியுள்ள பகுதியில் விகாரை ஒன்றையும் அமைத்தனர். இந்த விகாரை அமைப்பதற்கும் எந்தவொரு முறைப்படியான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

குறித்த விகாரையைப் பதிவு செய்வதற்காக, தென்மராட்சி பிரதேச செயலகத்தை, விகாரையின் பிக்கு அணுகியுள்ளார். இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை என கூறி நிராகரித்துள்ளனர்.

இதன் பின்னரே, பௌத்தசாசன அமைச்சின் கீழ், குறித்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 5 குடும்பங்கள் வரையிலேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளன. ஆனாலும் 72 குடும்பங்கள் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

Navakule.jpg?resize=470%2C271

http://www.jvpnews.com/srilanka/107968.html

  • கருத்துக்கள உறவுகள்

நாவற்குளி சிங்களக் குடியேற்ற நாயகன் அத்தியடிக் குத்தியனை மறந்ததென்ன...... ???

அவற்ற ஆட்டம் மகிந்தவோட இடைநிறுத்த.. சுமந்திரனும் சம்பந்தனும் ஆரம்பிச்சிட்டினம்.. நல்லாட்சி.. சான்றிதழோடு. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நாவற்குழி விகாரைக்கு அங்கீகாரம்!

உள்ளுர் அதிகாரிகளது தடையினை தாண்டி நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களால், தன்னிச்சையாக அமைக்கப்பட்ட விகாரை, பௌத்த சாசன அமைச்சின் கீழ் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில், ஒரு தொகுதி சிங்கள மக்கள் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அத்துமீறிக் குடியேறினர். அவர்கள் தங்கியுள்ள பகுதியில் விகாரை ஒன்றையும் அமைத்தனர். இந்த விகாரை அமைப்பதற்கும் எந்தவொரு முறைப்படியான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

குறித்த விகாரையைப் பதிவு செய்வதற்காக, தென்மராட்சி பிரதேச செயலகத்தை, விகாரையின் பிக்கு அணுகியுள்ளார். இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை என கூறி நிராகரித்துள்ளனர்.

இதன் பின்னரே, பௌத்தசாசன அமைச்சின் கீழ், குறித்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 5 குடும்பங்கள் வரையிலேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளன. ஆனாலும் 72 குடும்பங்கள் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

Navakule.jpg?resize=470%2C271

http://www.jvpnews.com/srilanka/107968.html

உதென்ன யாருப்பா சீலைக்குகுள் ஒளிக்கிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கஞ்சா புகைக்க முடியாதா?

உதென்ன யாருப்பா சீலைக்குகுள் ஒளிக்கிறது ?

இப்பவெல்லாம் சிங்களவர்கள் பிள்ளையாரைக் கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். 
 
சீலைக்குள்ளே பிள்ளையார் இருந்தாலும் இருப்பார். எதுக்கு தேவை இல்லாத வம்பு. :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.