Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி
[ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 05:50.53 AM GMT ] [ புதினப்பலகை ]
Uma-kumaran-bob-blackman.jpg
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில்  கொன்சர்வேட்டிவ்  வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார்.

இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 331 முடிவுகளில்,136 இடங்களை தொழிற்கட்சியும், 119 இடங்களை கொன்சர்வேட்டிவ் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

அதேவேளை, ஹம்ப்செயர் வட கிழக்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட, மற்றொரு இலங்கையரான, ரணில்  ஜெயவர்த்தன, சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 35,573 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதனிடையே, ரூசிலிப், நேர்த் வூட், மற்றும் பின்னர் தொகுதியில், தேசிய லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் யோகலிங்கம் படுதொல்வியடைந்தார்.

இந்த தொகுதியை 30, 520 வாக்குகளுடன் கொன்சர்வேட்டிவ் கட்சி  வேட்பாளர் கைப்பற்றிய நிலையில், 166 வாக்குகளை மட்டும் பெற்று சொக்கலிங்கம் யோகலிங்கம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி முகம்

_82851636_82848004.jpg

150508052059_cameron_miliband_montagem_a

பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இது வரை தெரிந்த சுமார் 540 தொகுதிகளுக்கான முடிவுகளில் கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 274 இடங்களில் வென்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு இதுவரை 216 இடங்களே கிடைத்துள்ளன.

ஸ்காட்லாந்தின் ஆளும் பிராந்தியக் கட்சியான, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அந்த மாகாணத்தின் 59 தொகுதிகளில் 55 இடங்களை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

இதுவரை ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியும், நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருந்த லிபரல் ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது.

பிரதமர் டேவிட் கேமரன் அவரது விட்னி தொகுதியில் வெற்றி அடைந்துள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வின்செண்ட் கேபிள் மற்றும் முன்னாள் அமைச்சர் எட் டேவி, முன்னாள் தலைமை கருவூல செயலர் டேனி அலெக்ஸாண்டர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

ஆனால் லிபெரல் ஜனநாயகக் கட்சியின் தலைவ்ர் நிக் கிளெக் தனது ஷெபீல்ட் ஹாலம் தொகுதியில் வென்றுள்ளார்.

ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தொழிற்கட்சி தலைவர்கள் ஜிம் மர்பி, டக்ளஸ் அலெக்ஸாண்டர் ஆகியோர் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளனர்.

தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரன் " கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாதாரத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒற்றுமைக்குப் பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிப்பதாக தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.co.uk/tamil/global/2015/05/150508_britpollresults

கன்செர்வடிவ் அரசமைக்க தேவையான ஆசனங்களை எடுப்பது, ஸ்காட்லான்ட் கட்சியின் வரலாற்று வெற்றி (56 ஆசனங்கள் ) அவ்வளவு பாதிப்பை பாராளுமன்றில் ஏற்படுத்தாது. இது கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் பெற்ற வெற்றியை போன்றது. பேரம் பேசும் வலு பெரிதாக இல்லை. சிறுபான்மை அரசாங்கமாக இருந்திருந்தால், இவர்கள் கிங் மேகேராக இருந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எட் மிலிபாண்ட் ஒரு யூதர். தனது அண்ணன், முன்னால் வெளியுறவு அமைச்சர், டேவிட் மிலிபாண்ட் வெல்வார் என எதிர்பார்க்கப் பட்ட தொழிற்கட்சி தலைமைப் பதவி போட்டியில் உள் நுழைந்து அண்ணனை வீழ்த்தினார்.

நொந்து போன அண்ணன் அரசியலை விட்டே விலகினார். அண்ணணின் முதுகில் குத்தியவர் இவர் என்ற எதிராளிகள் குற்றச்சாட்டு வேறு.

ஸ்கொற்லாந்தில், கொன்சவேற்றிவ் கட்சிக்கு அறவே ஆதரவு இல்லை. தொழிற்கட்சியே அங்கு பெருவாரியாக வெல்வது வழக்கம்.

இம்முறை, யூதரான எட் தலைமையை, வெகுவாக ரசிக்காத ஸ்கொட்டிஸ் மக்கள், உள்ளூர் தேசியவாதச் கட்சிக்கு முழு ஆதரவு தர, மேலும் இங்கிலாந்தில், இதே காரணத்தால் ஆதரவு குறைய, தொழிற்கட்சி காலி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் நடப்பு அரசில் செல்வாக்குச் செலுத்தும்..பழமை வாதக் கட்சி தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி. மீண்டும் பிரதமராகிறார் டேவிட் கம்ரூன். தொழிற்கட்சி படுதோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ராதிகாவை வெல்லவைத்து அழகு பார்த்தோம்.. :wub: நீங்கள் சிங்களவனை வெல்ல வச்சிட்டீங்களே.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ராதிகாவை வெல்லவைத்து அழகு பார்த்தோம்.. :wub: நீங்கள் சிங்களவனை வெல்ல வச்சிட்டீங்களே.. :o:D

 

ரணில் ஜெயவர்த்தன போட்டி இட்ட தொகுதி லண்டனுக்கு வெளியில். அதிகம் வெள்ளையர்கள் வாழுமிடம். அவர்கள் தமக்கு சேவை செய்யும் யாரையும் தேர்ந்தெடுப்பார்கள். தமிழ் சிங்களம் என்று பார்ப்பதில்லை.

 

லண்டனில்.. குடியேற்றக்காரர்கள் அதிகம். மேலும்.. அரச சலுகைகளில்.. உதவியை நம்பி வாழ்வோர் அதிகம். நம்மவர்கள்.. இவற்றைக் கருத்தில் கொண்டு தொழிற்கட்சிக்குத்தான் வாக்குப்போடுறவை. அவைக்கு நாடு.. பொருண்மியம் எல்லாம் பிரச்சனை இல்லை. தங்கட அரச உதவித் தொகைகள் குறைவில்லாமல் வரணும்.. என்பது தான் நோக்கம்.

 

லண்டனில் தொழிற்கட்சி தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளது.

 

உங்களுக்கே தெரியும் தானே ஓசின்னா.. எங்கட சனம் என்ன செய்யும் என்று. அதுங்களட்டப் போய்.. நாடு.. நாட்டாமை என்றால்..?! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ராதிகாவை வெல்லவைத்து அழகு பார்த்தோம்.. :wub: நீங்கள் சிங்களவனை வெல்ல வச்சிட்டீங்களே.. :o:D

உண்மைதான் சிங்களம் இங்கு பிள்ளையார் மாம்பழம் எடுக்கும் விளையாட்டில் இறங்கி உள்ளது .

11178304_620812714687268_589128218315506

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப்பார்த்தால் பரதேசி மாதிரி இருக்கு.. பலமான கட்சியில் எப்படியோ ஆள் சீட் வாங்கிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வரும் 7ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியாம் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும், ஈழத் தமிழ் மகன் Pinner, Northwood and Ruislip பகுதியில் பாராளுமன்ற வேட்ப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாராம்? அன்னார் ஈழத்தமிழ் மக்களுக்கு பலதை செய்யப்போகிறாராம்? இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை கொண்டு வரப்போகிறாராம்? .... கேட்கிறவன் கேணையன் என்றால், கேற்பை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்!

ஆமா யார் இந்த வானவேடிக்கைகள் விடும் டுபாக்கூறு???

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ் நாட்டில் சிங்களத்தின் ஒட்டுக்குழுவாம் புளொட்டின் சுவிஸ் பொறுப்பாளராக இருந்து, இன்றுவரை காட்டுக்கொடுப்புகள், குழப்பங்கள், கொலைகள் என பல குற்றச்செயல்களை புரிந்ததாக கூறப்பட்டு பல தடவைகள் சுவிஸில் கம்பிகளையும் எண்ணிய "புலிக்குட்டி" சுவிஸ் ரஞ்சனின் சகோதரர் ஆவார். 

நன்றி நெல்லையன் முகநூல் https://www.facebook.com/photo.php?fbid=620812714687268&set=a.173141539454390.27198.100002756352837&type=1&theater

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வரும் 7ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியாம் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும், ஈழத் தமிழ் மகன் Pinner, Northwood and Ruislip பகுதியில் பாராளுமன்ற வேட்ப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாராம்? அன்னார் ஈழத்தமிழ் மக்களுக்கு பலதை செய்யப்போகிறாராம்? இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை கொண்டு வரப்போகிறாராம்? .... கேட்கிறவன் கேணையன் என்றால், கேற்பை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்!

ஆமா யார் இந்த வானவேடிக்கைகள் விடும் டுபாக்கூறு???

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ் நாட்டில் சிங்களத்தின் ஒட்டுக்குழுவாம் புளொட்டின் சுவிஸ் பொறுப்பாளராக இருந்து, இன்றுவரை காட்டுக்கொடுப்புகள், குழப்பங்கள், கொலைகள் என பல குற்றச்செயல்களை புரிந்ததாக கூறப்பட்டு பல தடவைகள் சுவிஸில் கம்பிகளையும் எண்ணிய "புலிக்குட்டி" சுவிஸ் ரஞ்சனின் சகோதரர் ஆவார். 

நன்றி நெல்லையன் முகநூல் https://www.facebook.com/photo.php?fbid=620812714687268&set=a.173141539454390.27198.100002756352837&type=1&theater

 

பாவம் விடுங்க. அந்தாளே வெறும் 166 வாக்கில சொக்கிப் போய் சொர்க்கலோகம் போய் சேர்ந்திருக்கும் இந்தளவுக்கும்.

 

இதென்ன சிறீலங்காவே.. தோற்றக் தோற்க தேர்தலில் நிற்க. அவனவன் கட்சித் தலைமையை விட்டுக் கொடுத்திட்டு போயிடுறாங்கள். எனிச் சொக்கலிங்கம் யோதிலிங்கம்.. ஊர்ப்பக்கம் போய் வாள் அரிவாளோட அரசியல் செய்தால் தான் உண்டு விமோசனம். :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளை நேரில் பார்த்தால் ஜோக்கர் தான் ஆனலும் இவ்வளவு சொறிலங்கா கூட்டம் நம்பிக்கை வைச்சு சந்திக்கின்றார்களே ?

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார் இலங்கையர்

 

ranil-jayawadena.jpg

 

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இவர் 35 ஆயிரத்து 573 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ரணில் ஜயவர்தன கடந்த 2008 ஆண்டில் கென்சவேட்டிவ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்
 
  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதிலும் ஏற்பட்ட தொழில் கட்சியின் பின்னடைவே உமா குமரனின் தோல்விக்கும் காரணம். 5000 வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் தோல்வி அடைந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதிலும் ஏற்பட்ட தொழில் கட்சியின் பின்னடைவே உமா குமரனின் தோல்விக்கும் காரணம். 5000 வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் தோல்வி அடைந்துள்ளார்.

அப்படி சொல்லமுடியாது. அவர் போட்டியிட்டது, தோற்றது, கரோ கிழக்கில்.

பக்கத்து கரோ மேற்கில் தொழிற்கட்சியின் கரத் தோமஸ் வென்றுள்ளாரே.

இரு தொகுதிகளிலும் வென்றவர்கள் இருவருமே பழையவர்கள். தோல்வி உறுதி என்ற படியால் தான் புதியவரான, நம்மாள் உமா குமரனுக்கு சான்ஸ் தந்தார்கள்.

அரசியலில் இது சகயம் புலவர். :D

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.