Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MH 179 விமானம் அவசரமாக தரையிறங்கியதில் மர்மம்

Featured Replies

article_1431246951-images.jpg

மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH  179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன.  விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது.

மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம் வட்டமிட்டதன் பின்னரே கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் கூடுதலாக எரிபொருட்கள் இருந்த நிலையில், அது தரையிறக்கப்பட்டமை ஆபத்தானது என்றும் மலாக்கா நீரிணைக்கு மேலாக விமானத்தை வட்டமடிக்கவேண்டிய நிலைமை விமானிக்கு ஏற்பட்டது என்றும் மலேசியா ஊடகங்கள் தெரிவித்தன.

அதன் பிரகாரம் நேற்றிரவு 11.30க்கு புறப்பட்ட விமானம் மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிகாலை 1.30க்கு தரையிறங்கியுள்ளது.  விமானம் மீண்டும் தரையிறங்கியமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அது மர்மமாகவே இருக்கின்றது.  இந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.18க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

: http://www.tamilmirror.lk/145795#sthash.LORekAm5.dpuf

  • தொடங்கியவர்
கொழும்பு நோக்கி வந்த MH179 விமானம் கோலாலம்பூருக்குத் திரும்பியமைக்கு போதையில் இருந்த பயணியே காரணம் 
 
10015_32.jpg
 
மலே­ஷி­யாவின் கோலாலம்பூர் நக­ரி­லி­ருந்து கொழும்பை நோக்கி வந்து கொண்­டி­ருந்த மலே­ஷியா எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்று மீண்டும் கோலா­லம்­பூருக்கு திரும்பிச் சென்ற சம்­பவம் நேற் றுக் காலை இடம்­பெற்­றது.
 
மது­போ­தை­யி­லி­ருந்த பய­ணி­யொ­ரு­வரே இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
அதி­க­ளவு எரி­பொ­ரு­ளுடன் விமா­னத்தை உட­ன­டி­யாக தரையிறக்கு­வது ஆபத்­தா­னது என விமா­னிகள் கரு­தி­ய தால் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளாக மலாக்கா நீரி­ணைக்கு மேலாக வானில் வட்­ட­மிட்­டுக்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
 
மலே­ஷியா எயார்­லைன்ஸின் எம்.எச். 179 எனும் இந்த விமானம் சனிக்­கி­ழமை இரவு 11.27 மணி­ய­ளவில் கேலா­லம்­பூ­ரி­லி­ருந்து கொழும்பை நோக்கி புறப்­பட்­டது.
 
இலங்கை நேரப்­படி அதி­காலை 12.18 மணி­ய­ளவில் அவ்­வி­மானம் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டை­ய­வி­ருந்­தது.
 
ஆனால், இவ்­வி­மானம் புறப்­பட்டு சிறி­து­நே­ரத்தில் மீண்டும் கோலாம்பூர் நோக்கி திசை திருப்­பப்­பட்­டது.
 
உட­ன­டி­யாக இதற்­காக காரணம் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.
 
எனினும், அதிக மது­போ­தையில் ஊழி­யர்­க­ளுக்கு தொந்­த­ரவு ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த பய­ணி­யொ­ரு­வரே இதற்குக் காரணம் என மலே­ஷியா எயார்லைன்ஸ் நிறு­வனம் நேற்று மாலை அறி­வித்­தது.
 
"அப்­ப­ய­ணியின் அதிக பருமன் கார­ண­மாக, அவரைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சக பய­ணி­களின் உத­வியும் ஊழி­யர்­க­ளுக்குத் தேவைப்­பட்­டது" என அந்­நி­று­வனம் தெரி­வித்­தது.
 
கோலாம்பூர் நோக்கித் திரும்­பிய அவ்­வி­மா­னத்தில் அதிக எரி­பொருள் இருந்­ததால் அதை உட­ன­டி­யாக தரை­யி­றக்க முடி­ய­வில்லை.
 
எனவே, எரி­பொருள் குறை­யும்­வரை சுமார் இரு மணத்­தி­யா­லங்கள் அவ்­வி­மானம் மலாக்கா நீரிணை வான் பரப்பில் வட்­ட­மிட்டு பறந்து தபின்­னரே தரை­யி­றக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
 
விமானம் தரையிறங்கிய பின் குறித்த பயணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நேற்று காலை 10.06 மணிக்கு மீண்டும் அவ்விமானம் கொழும்பு நோக்கி புறப்பட்டதாகவும் மலேஷியா எயார்லைன்ஸ் நேற்று தெரிவித்தது.
 
  • கருத்துக்கள உறவுகள்

எனவே, எரி­பொருள் குறை­யும்­வரை சுமார் இரு மணத்­தி­யா­லங்கள் அவ்­வி­மானம் மலாக்கா நீரிணை வான் பரப்பில் வட்­ட­மிட்டு பறந்து தபின்­னரே தரை­யி­றக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதற்கு யாராவது விஞ்ஞான விளக்கம் கொடுங்கோப்பா?

முழு ஏரி பொருள் எடையும் சேர்த்து விமானம் தரை இறங்க முடியாததற்கான  காரணம் அதன் கட்டமைப்பு அதற்காக வடிவமைக்கப் பாடாமையே. ஏனெனில் விமானங்கள்   தேவைக் கேற்ற எடையைக் கொண்டு செல்லவே வடிவமைக்கப்படுகின்றன. ஒரு கிலோ எடையைக் கொண்டு செல்ல ஒரு கிலோ எரிபொருளைக் கொண்டு செல்ல வேண்டி இருக்கும். அதனால் எரிபொருளை மிச்சம் பிடிக்க விமானங்கள் தரை இறங்கும் போது என்ன எரிபொருள் எடை காணப்படுமோ அதற்கு  ஏற்ற  வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. இதனை அதி கூடிய தரை இறங்கு எடை என்று சொல்வார்கள். இதற்கு மேற்பட்ட எடையுடன் விமானம் தரையிறங்க முடியாது.

maximum landing weight.

http://en.wikipedia.org/wiki/Maximum_landing_weight

அண்ணா நீங்கள் சொல்லும்படி பார்த்தால் விமானத்தை அவசரத்திட்கும் தரையிறக்கமுடியாதோ?

பயணி ஒரவருக்கு மாரடைப்போ அல்லது பிரசவவலி ஏற்பட்டுவிட்டால் என்ன கதி?

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு குறைந்த அளவு எரிபொருளை வைத்திருப்பது நல்லது. விபத்து நிகழ்ந்தாலும், தீ மற்றும் புகையினால் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்படுவதைக் குறைக்கலாம்.

இந்த விமானத்திலும் ஏதோ வில்லங்கம் இருந்திருக்கலாம். எரிபொருள்தான் பிரச்சினை என்றால் அதை கடலில் கொட்டியிருக்கலாமே?

அண்ணா நீங்கள் சொல்லும்படி பார்த்தால் விமானத்தை அவசரத்திட்கும் தரையிறக்கமுடியாதோ?

பயணி ஒரவருக்கு மாரடைப்போ அல்லது பிரசவவலி ஏற்பட்டுவிட்டால் என்ன கதி?

அனைத்து விமானங்களும் அதி கூடிய  மேலெழும்பும் எடை (maximum permitted takeoff weight)  உடன் தரை இறங்கக்கூடியவையே. ஆனால் இவ்வாறு தரையிறங்கினால் landing gear மிகவும் மிகவும் உயர் வெப்பநிலையை அடையும் அத்துடன் விமானம் முழுமையான பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே மறுபடியும் பறக்க அனுமதிக்கப்படும். எனவே இவ்வாறான அதி அவசரமற்ற தரை இறங்கல்களில் எரிபொருள் வெளியேற்றப்படும் அல்லது மேலதிக பறப்பால் எரிபொருளினளவு குறைக்கப்படுவது வழமை. இதனால் விமானம் அதி கூடிய தரை இறங்கு எடை (maximum landing weight) இற்குள்ளாக தரையிறங்கும்.மறுபடியும் எரிபொருள் நிரப்பிய பின் சாதாரணமாக பறக்கலாம். தேவையற்ற முழுமையான பரிசோதனைகளத் தவிர்க்கலாம்.

Edited by ஜீவன் சிவா

//ஆனால் இவ்வாறு தரையிறங்கினால் landing gear மிகவும் மிகவும் உயர் வெப்பநிலையை அடையும் அத்துடன் விமானம் முழுமையான பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே மறுபடியும் பறக்க அனுமதிக்கப்படும்//

உயர் வெப்ப நிலையை அடையும் என்பது  மட்டும் தவறு . விமானப் பாகங்கள் குறிப்பிட்ட எடை அழுத்தத்திற்கே வடிவமைக்கப் படுகின்றன . அதனாலெயே ஏதாவது    வெடிப்புக்கள் ஏற்படிருக்கின்றனவா  என்று பார்ப்பதற்கு  பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும் .

Inspections are carried out to look for any structural failures. Landing loads above the design limits could lead to structural failures.

நன்றி,

ஜீவன் & நாரதர்

நாரதர் திருத்தத்திற்கு நன்றி 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு விமானம் பறப்பதற்கு முன்பு 
எத்தனை பயணிகள் 
எத்தனை பொதிகள் 
(அண்ணளவாக )
என்பதை கருத்தில் கொண்டுதான் 
எரிபொருள் நிரப்புவது 
 
வெயிட் அண்ட் பலன்ஸ் தான் பிரச்சனை 
 
எரிபொருள் விமானத்தின் நாடு பகுதியில் இருக்கிறது 
ஏறுவதற்கு இது மிகவும் உந்து சக்தியாக இருக்கிறது 
 
அனால் நடுபகுதியில் இருக்கும் அதிக அளவான பாரம் 
விமானத்தை இறங்க அனுமதிக்காது 
 
விமானத்தில் நாடு பகுதியிலும் .... செட்டைக்கு கீழும் 
முன்னுக்கும்தான் சில் இருக்கிறது 
பின்பகுதி பலன்சில் இருக்கிறது 
அப்படியே வந்து இறங்கினால் 
பின்பக்கம் ஓடுபாதையில் முட்டிவிடும். 
எரிபொருளின் பாரம் விமானத்தை கீழ் நோக்கி (பின்புறமாக) உந்தும். 
boeing-777-300er_600x0w.jpg
14395342376_df3f44ac5f_o.jpg

Airfrance-777-number-2002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.