Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் பள்ளிகள் தர வரிசையில் கிழக்காசியா முன்னணி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில விளக்கங்கள் அளித்த உறவுகளுக்கு நன்றி ...!

 

பிரான்சில் நான் மேற்கூறிய படிப்புகளுக்கு தனித்தனியாக கொன்கூர் ( concour ) என்று ஒன்று நடக்கும். அதில் யுரோப்  முழுதும் இருந்து பலர் பங்கு பற்றுவர்கள் . குறைந்தது 800 க்கு மேல்.  அதில் 150 , 200 இடங்கள்தான் இருக்கும். அதில் தேர்வாகித்தான் அந்தந்தப் படிப்புகளுக்குப் போக வேண்டும். இப்போது அதன் அனுமதிகள் எல்லாம் இன்டர்நேட் மூலமாக நடைபெறுவதால் யாராவது ஒரு மாணவர் குறித்த நேரத்தில் பதிலிடவோ சமூகமளிக்கவோ தவறும் பட்சத்தில் அவரது அந்த வருடமும் ,  படிப்பும்  வீனாகிவிடும். அப்படியே தாமதமாய்க் கிடைத்தாலும் தங்குமிட வசதிகள் எல்லாம் பாடசாலையில் இருந்து தூரமாய்ப் போய்விடும்.

 

இந்நாடுகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் அந்தந்தத் துறைகளில் அதிவிற்பன்னர்களாக இருக்கினம் பக்கப் பார்வையை மறைத்து ஒரே இலக்கை நோக்கி ஓடும் குதிரைகள்போல். அதைத் தவித்து வேறொரு பொது விசயங்களைக் கேட்டால் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. அதைவிட நல்ல விடயம் தெரியாததைத் தெரியாது என்று மிக நேர்மையாக ஒப்புக் கொள்கின்றார்கள். என்னைப் போல் எல்லாம் தெரியும் என்று சொல்லி மாட்டி க்கொண்டு முழிப்பதில்லை...!

 

உ.ம் : நேபாளத்தில் நிலநடுக்கம் வந்தது தெரியுமா ?  சாப்பிடேக்க  செய்தியில் சொன்னார்கள். ( அது ஒரு 30 செக்கந்தான் செய்தி).

மயூரனுக்கு தூக்காமே தெரியுமா ?  யார் மயூரன் , தெரிஞ்சாக்களா...!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

உ.ம் : நேபாளத்தில் நிலநடுக்கம் வந்தது தெரியுமா ?  சாப்பிடேக்க  செய்தியில் சொன்னார்கள். ( அது ஒரு 30 செக்கந்தான் செய்தி).

மயூரனுக்கு தூக்காமே தெரியுமா ?  யார் மயூரன் , தெரிஞ்சாக்களா...!

 

ம்ம்..... முடியல. :D  :lol: .

வீட்டுக்கு வீடு வாசல்படி. :)

இசை... மேலே சுவி, குறிப்பிட்டுள்ள மாதிரி,

பாடசாலை தரத்தில், எட்டு வருடங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்த மாணவரால்... அடுத்த தெருவுக்கு கூட வழி காட்டுவது சிரமம் :D.

 

அந்த ஆங்கிலக் கல்வி, ஆங்கில நாட்டுக்கு சுற்றுலா செல்லும் செல்லும் போது..."தபால் கந்தோர் எங்கை இருக்கு" ,  "அடுத்த ரயில் எப்ப வரும்", "இந்த ஹோட்டேலுக்கு.. எப்படி போவது?" போன்றவற்றை கேட்க மட்டுமே... பிரயோசனப் படும். :lol:

 

 

ஜெர்மனியில் உள்ள எல்லா பாடசாலைகளையும்  அப்படி சொல்லமுடியாது. இங்கு சகல மாநிலங்களிலும் ஒரு சில பாடசாலைகளில் Bilingualer Unterrricht Deutsch-Englisch என்னும் பாடதிட்டம் இருக்கிறது. அந்த பாடசாலையை நாம் தெரிவு செய்து எமது பிள்ளைகளை அங்கு விடலாம். அந்த பாடசாலைகளில் உயிரியல், புவியியல், வேறு சில பாடங்களை கட்டாயம் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும்.

 

12 ம் வகுப்பில் ஆங்கிலத்துக்கு மாத்திரம் இன்னுமொரு பரீட்சை எழுதவேணும். அந்த பரீட்சையில் சித்தி பெறுவவர்களுக்கு Cambridge Certificate of

Proficiency என்னும் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த பரீட்சை பங்கு பெறுவதுக்கு ஒருமுறை 200 euro செலுத்தவேண்டும்.

 

இப்படியான பாடசாலையில் படித்து முடித்து வரும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக உரையாடவும், எழுதகூடியவர்களாகவும் விளங்குவார்கள். :)

 

இந்த பாடசாலைகளும் அரச பாடசாலைகளே.  தனியார் பாடசாலைகள் அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேயனாகிறது (என்னதான் படிச்சததாய் சொல்லிக்கொண்டாலும், வார்த்தைப் பிரயோகம், உரையாடல் நாகரீகம் என்னவோ இன்னும் சொறிலங்கன் ரேஞ்ச்சில்தான் இருக்கு) இருக்கட்டும்,

இண்டர் நேசனல் ஸுடன்ஸ் பற்றி இல்லை கேள்வி. கேள்வி ஈயூவில் இருந்து, பள்ளிப் படிப்பின் பின், யூனிக்குப் போக யூகே வரும் தமிழ் மாணாக்கரை பற்றியது.

எனது அவதானத்தில் (not properly researched but anecdotal ) இப்படி வரும் தமிழ் மணாக்கர் பலர் பிந்தங்கிய யூனிகளில் படித்து, மிக்கி மவுஸ் டிகிரிகளையே பெறுகிறனர்.

இது எனது தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே. இல்லை என்றால் அதுக்கு ஆதாரம் இருந்தால் காட்டவும், என் கருத்தை மாற்றி கொள்ளுவேன்.

இல்லை உங்கள் தனிப்பட்ட கருத்து என் கருத்துக்கு எதிராய் இருக்கிறதெண்டால், we can agree to disagree.

இல்லாமல் சும்மா யூசிஎல் லின் வெப்சைட்டை பொத்தாம் பொதுவாய் ஆதாரம் என்று காட்டும் பெப்பே எல்லாம் ஜி ஜி பொன்னம்பலம் காலத்து பழைய டிரிக் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவை தூக்கிப் பிடிக்கிறவைக்கு சொறீலங்கா பாசை தான் நல்லா விளங்கும். அதுதான் அதைப் பிரயோகிப்பது இடைக்கிடை.

 

யுனி வெப்சைட் சொல்லும் தகவல் பொதுவில்.. பிரிட்டனில்... உயர் வகுப்பு பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் நாடுகள் ரீதியான கல்வித் தகமையை இனங்காட்டத்தான். எத்தனை தமிழ் பிள்ளைகள் அதற்குரிய தகுதியை பெறுகிறார்கள் என்பதை அதனடிப்படையில் நம் கள உறவுகளே தீர்மானிக்கக் கூடியதாகவும் இருக்கும். அதில் இருந்து உங்களின் தனிப்பட்ட குறுகிய அவதானிப்பின் பாலான பொய் என்ன என்பதை மக்களும் யாழ் உறவுகளும் தெளிவாக அடையாளம் காண முடியும்.

 

எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன. மேலே கூட ஒரு உதாரணம் பதியப்பட்டுள்ளது. ஆனால்.. நிச்சயமாக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல.. எங்கள் பதிவு. மக்கள் தவறாக வழிநடத்தப்படும் வகையில் கருத்திடல் அமையக் கூடாது.. மக்களுக்கு ஒரு தெளிவான நிலையை காட்டனும் என்பது தான் எங்களின் நோக்கம். அதுதான் மக்களுக்கு உதவும். ஒரு தனிநபர் அவரின் அடாத்தான கருத்துக்களோடு கூடிய பார்வையை பரிகரித்தால் என்ன விட்டால் என்ன. அதனால் மக்களுக்கு பாதிப்பில்லை. ஆனால் மக்களுக்கு நியத்தை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம். :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய கல்வித் தகமைக்கு ஈடான பிறநாட்டு பள்ளிக்கால கல்வித் தகமைகள்.. விபரம் இங்கு.. :icon_idea:

 

https://www.ucas.com/sites/default/files/2015-international-qualifications.pdf

 

International student statistics: UK higher education

 

        EU students (non-UK domicile) in HE    

Higher degree (research) Full-time 11,420, Part-Time 2,920 Total 14,340

Higher degree (taught) Full-time 21,845, Part-time 6,385 Total 28,230

Postgraduate other Full-time 1,610, Part-time 2,280 Total 3,885

First degree Full-time 70,555, Part-time 2,545 Total 73,100

Other undergraduate Full-time 1,485, Part-time 4,265 Total 5,745

 

Total non-UK EU Full-time 106,915, Part-Time 18,395 Total 125,300

 
ஐரோப்பாவில் இருந்து இங்கு படிக்க வரும் மாணவர்கள் தொகை விபரம் மேலே ...
ஐரோப்பாவுக்கு வெளியே ஆகக் கூடியது சீனாதான். இரண்டாவது இந்தியா.
http://www.ukcisa.org.uk/Info-for-universities-colleges--schools/Policy-research--statistics/Research--statistics/International-students-in-UK-HE/#

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இதுபற்றிக்கருத்தெழுதிய அனைவரும் எந்த நாடுகளிலிருந்து எந்த நாடுகளைப்பற்ரிக் கருத்தெழுவது எனத் தெரியாத முறையில் எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.

 

அடிப்படையில் உலகில் கல்விக்கடைவிரித்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் இருக்கின்றது இரண்டாவது மூன்றாவது இடங்களில் அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் உள்ளன. இந்நாடுகளது இலக்குகளே கடந்த காலங்களில் பிரித்தானியக் காலனித்துவம் சார்ந்த நாடுகள் மற்றும் வளர்முக நாடுகளது மாணவர்கள் ஆகியோராவர்.

 

அடிப்படையில் இந்நாடுகள் தங்களது சொந்த மாணவர்களது அறிவுத்திறன் வளர்ச்சிக்காக கல்விக்கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதியளித்தமைக்கான முக்கியகாரணம் பணம் பணம் பணமே.

 

தற்போதைய சூழலில் இங்கிலாந்து தவிர்ந்த ஐரோப்பிய நாடுகளது மாணவர்களது ஆங்கில மொழித்திறன் அப்படியொன்றும் மோசமானதல்ல, இலங்கையிலிருந்து இங்கிலாந்துவரும் மாணவர்களது ஆங்கிலமொழி அறிவுத்திறனுடன் ஒப்புடும்போது உயர் அளவிலேயே உள்ளது.

 

ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்பற்றி அறிதியிட்டுக்கூறமுடியாதுவிடினும் நான் வாழும் "பின்லாந்து" நாட்டின் பாடசாலை மாணவர்களது ஆங்கில அறிவுத்திறன் எந்தவித மேலதிக பயிற்சிப்பட்டறைகளிலும் பங்குகொள்ளாது அவர்கள் இங்கிலாந்தில் தமது கல்வியைத் தொடர விரும்பில் நேரடியாகவே அவர்களால் கல்வியைத் தொடரமுடியும்.

 

தவிர கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பிலான கல்விபயிலுதலில் எந்தத் தரத்தில் உலக அளவில் நாடுகள் இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வின் முடிவுகளே மேற்குறிப்பிட்ட விடையம்.

 

இதில் மாணவர்களது வளர்சூழல் அவர்களது கலாச்சாரம் சார் பின்பற்றல்கள் மற்றும் பிறகாரணிகளும் இதன் பின்னணியில் உள்ளது என பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியிலிருந்து வெளிவரும் செய்தித்தாள் ஒன்று பத்தி எழுதியுள்ளது.

 

மேலதிக செய்தியாக, எனக்குத் தெரிந்த ஒருவர் இங்கிலாந்தில் பல்கலைக்கழகம் ஒன்றின் பொறியியலாளர் பட்டப்படிப்புத் தராதரப் பத்திரம் வைத்திருக்கிறார், தற்போது அவர் செய்கின்ற வேலை லண்டன் தெருக்களில் காணப்படும் வங்கிகளது தானியங்கிக் காசுபெறும் இயந்திரங்களைச் திருத்தும்வேலையில் உள்ளார். இதே வேலையைப் பின்லாந்தில் சாதாரண தொழில்நுட்பக்கல்லூரியில் படித்த "ரெக்னிக்கோ" தராதரக் கல்விநிலையில் உள்ளவரே செய்வார்கள்.

 

இங்கிலாந்து தேசத்தில் புலம்பெயர்ந்துவந்தோ அன்றேல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தோ உயர்கல்வி பெற்றவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்தவர்கள் என எம்மவர்களில் கூறிக்கொள்வதில் அரிதாகவே உள்ளது.

 

சம்பாத்தியத்துக்கான ஒரு வேலை வாய்ப்பு, அழகான வெள்ளைத்தோல் பொண்டாட்டி, மோட்ஹேச்சில ஒரு வீடு இவைகளுடன் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளக்கூடிய கல்வியறிவைப்பெற்றவர்களையே இங்கிலாந்தின் கல்விச்சமூகம் எமக்குக்க்கொடுத்துள்ளது.

 

ஒப்பீட்டளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடப்பிரிவில் பட்டம்பெற்று அரச உத்தியோகம் எடுப்பதற்குச் சமமானது இங்கிலாந்தின் எம்மவர் படிக்கத் தேர்ந்தெடுக்கும் பாடநெறிகள்.

 

எமக்கான நல் வாய்ப்புக்களையெல்லாம் கல்யானக் கனவுக்குள்ளும் மோட்ஹேச் வீடுகளுக்குள்ளும் தொலைத்துவிட்டு நாம் கனியிருக்கக் காய் பறிக்கின்றோம்.

 

கவிஞர் சேரன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய விடையம் எனக்கு இப்போது நினைவில் வருகின்றது, கனடா முழுமைக்கும் இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்தபோதிலும் என்ன காரணத்தால் உங்களில் ஒரு உங்கள் சமூகத்தின் மனப்போக்கை அறிந்துகொள்ள அவர்களை சரியான திசையில் இட்டுச்செல்வதற்காகக் கனேடிய அரசநிர்வாகத்துடன் கைகோர்க்க அதனடிப்படையிலான கல்வியாளர்கள் உங்கள் மத்தியில் இல்லையே என ஒரு கனேடிய அதிகாரி விசனப்பட்டதாகக் கூறியுள்ளது இப்போது நினைவில் வருகின்றது.

 

 

 

 

 

 

சிங்கப்பூர் பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவ எப்படித் தயாராகிறார்கள்?

 

150522161033_singapore_schools_640x360_b

 

கல்வியில் சிறந்து விளங்குவது சிங்கப்பூரில் குடும்பங்கள் மத்தியில் பெருமைக்குரிய விஷயம். ஆனால், அந்நாட்டுக் கல்விமுறை பரீட்சைகளிலேயே கூடுதல் அக்கறைகாட்டுவதாக விமர்சனங்கள் உள்ளன.
சிக்கலான வீட்டுப்பாடங்களால் குழம்பிப் போகும் பெற்றோர் அந்த சவாலை எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்க்கலாமா?
 
ஒலி வடிவில் கேட்க
 

சிறு வயதிலேயே கணினிக் கல்வி - காணொளி

 

அடுத்த தலைமுறை நல்ல வேலையை தேடிக்கொள்வதற்கு இனிமேல் வெறுமனே ஆங்கிலமும், கணிதமும், விஞ்ஞானமும் மாத்திரம் கற்றால் போதாது.

 

இப்போது குழந்தைகள் கணினி அறிவும் குறிப்பாக புரோகிராமிங் அறிவும் பெற்றாக வேண்டியுள்ளது.
பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், முக்கிய பாடமாக இப்போது கணினி இல்லாவிட்டாலும் கூட, ஹொங்ஹாங்கில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே கணினி கற்பிக்க ஆரம்பிக்க தவறுவதில்லை.
 
இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.