Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!- போராட்டக்கரர்களின் ஊடே ஊடுருவிய ஓட்டுகுழுக்கள் தாக்குதல் Photo in

Featured Replies

புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
neethimanram-1.JPG
மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர்.

neethimanram-2.JPG
மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மக்களுடன் மக்களாக ஈபிடிபி  ஓட்டுகுழுக்கள்   நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசி நீதி மன்ற வளாகத்தில் நின்ற வாகனங்கள் மீதும் தாக்கி உள்ளனர். மக்கள் மாணவ போரட்டங்களை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறான  ஓட்டுகுழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
neethimanram-4.JPG

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கவசம் அணிந்து தங்களை மறைக்கும் அந்த சிலர் யார்?? :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அமைதியான.. நீதியான போராட்டத்தை.. ஒட்டுக்குழுக்கள் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. இதுதான் அவர்களின் வாடிக்கையே. இது தொடர்பில் மக்களே மாணவர்களே விளிப்போடு இருக்க வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கவசம் அணிந்து தங்களை மறைக்கும் அந்த சிலர் யார்?? :o:unsure:

 

உறவுகளே

மிகவும் நிதானமாகவும்

போராட்டக்காரர்கள்

மக்கள்

சட்டத்தரணி என எல்லோரோடும் தொடர்பிலுள்ளோம்....

 

தமிழ்த்தலைமைகள்

மக்கள் பிரதிநிதிகள்

கூட்டமைப்பு

எதிரணிகள்

போட்டியாளர்கள்

தமிழர் விரோத சக்திகள்.....

என மிகவும் கலந்த நிலை காணப்படுகிறது..

 

இந்த போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள்

போராட்டம் தமது கைகளைவிட்டு

அறியாத சக்திகளின் கைக்கு  போய்விட்டதாகவும்

தம்மால் எதுவும் செய்யமுடியாதநிலையை எட்டியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 

எந்த சந்தேகமும்   வேண்டாம்

எந்தக்குற்றவாளிக்கும்

எந்த சந்தர்ப்பவாதிகளுக்கும் மன்னிப்போ

ஆதரவோ தரமாட்டோம்

தகப்பனாலும் தப்பென்றால் தலைக்குள் வைக்கும் தலைமுறையைச்சேர்ந்தவர்கள் நாம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இஸ்லாமிய சமுகமும் குரல் கொடுக்குது.......முகப்புத்தகத்தில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டம் வேறு திசையில் செல்வது சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இராணுவத்தின் தொடர் பிரசன்னத்துக்கு வழிவகுக்கும் .வீதிகளில் ரயர் போட்டு எரிப்பது ,தொடர்ந்த கடையடைப்பு,கல்லூரிகளுக்கும்,நீதிமன்றத்துக்கும் கல் எறிவது போன்றவை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.ஆவேசத்தில் ஒன்றிரண்டு நாள் நடப்பது வேறு.குற்றவாளிகளை வெளியில் விடச்சொல்லி கொலை செய்து விட்டு இன்னும் சிலர் உள்ளே போகப் போகிறார்களா?தலைக்கவசத்துக்குள்ளே ஒழிந்துருப்பவர்கள் யார்.இந்த விடயத்தில் நிதானம் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
வன்முறையில் ஈடுபட்ட 86 பேர் கைது; பதட்டமும் ஓரளவு தணிந்தது
நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற மோசமான வன்முறை சம்பவங்களுடன்  தொடர்புடைய 86 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 
 
புங்குடுதீவு சிறுமி படுகொலையுடன்  தொடர்புடைய மகாலிங்கம்  சிவகுமார் நேற்று கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.  
 
அத்துடன் அவருக்கு உதவினார் என சட்டக்கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவரையும் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்தது.
 
அந்தநிலையில் நீதிமன்றத்தின்  பிரதான வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள்  கோசங்களை எழுப்பியதுடன் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
பின்னர் பொலிஸாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்  நீதிமன்றத்தை கற்கள் , கண்ணாடிப்போத்தல்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.
 
அத்துடன்  அங்கு நிறுத்தித்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணிகளின்  வாகனம் மற்றும்  பொலிஸாரின்  வாகங்களையும்  கற்கள்  மற்றும்  பொல்லுகள்  கொண்டு தாக்கினர். 
 
இதன்போது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும்  துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைய வைத்தனர். இருப்பினும்  அவர்களை அடக்கமுடியாத நிலையில் சுமார் 2 மணித்தியாலயங்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றன. 
 
இதன்போது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதல் மற்றும்  துப்பாக்கிப் பிரயோகங்கள்  மேற்கொள்ளப்பட்டன . அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற ஆர்ப்பாட்ட காரர்கள் யாழ். சிறைச்சாலைக்கும் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளனர்.
 
இதன்போது கைதுகளும்  இடம்பெற்றன. இதனையடுத்துள்ளது  சுமார் 3மணித்தியாலயங்கள்  பதட்டமாக இருந்த நீதிமன்ற சூழல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வன்முறையுடன்  தொடர்புடைய 86 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்கள்  - 36, துவிச்சக்கர வண்டிகள் -27, முச்சக்கர வண்டி - 02 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கைதுகள்  இடம்பெறலாம் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.  ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் 3 பொலிஸாருக்கும் சட்டத்தரணி ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=112414042720330237#sthash.mXlrtBUu.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அமைதியான.. நீதியான போராட்டத்தை.. ஒட்டுக்குழுக்கள் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. இதுதான் அவர்களின் வாடிக்கையே. இது தொடர்பில் மக்களே மாணவர்களே விளிப்போடு இருக்க வேண்டும். :icon_idea:

 

இது தான் அரசு இயந்திரங்களின் வேலை.

இதில மகிந்தா என்ன மைதிரி என்ன

  • கருத்துக்கள உறவுகள்

தாலிபானை நிகர்த என் (ஒரு சில) தமிழ்ச் சிங்கங்காள்,

நிலமை இப்படியாகும், vigilantism தலைதூக்கும் என்றுதானே 5 நாளாய் தொண்டை தண்ணி வத்தக் கத்தினேன்?

அப்போ வெட்டுடா, கொத்துடா, மொட்டை மண்டையை பிளவுடா எண்டெல்லாம் எழுதி உசுப்பேத்திப்போட்டு,

இப்ப குத்துதே குடையுதே என்று அழுது என்ன பயன்.

தீவகத்தை மறுபடியும் ஈபிடிபி கோட்டை ஆக்காமல் விட மாட்டீர்கள் போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.