Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு சம்பவத்துக்கு பாராளுமன்றத்திலும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு சம்பவத்துக்கு பாராளுமன்றத்திலும் கண்டனம்

srilanka_parliament-300x195.jpg

பாடசாலை மாணவியான வித்தியா புங்குடுதீவில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாராளுமன்றத்திலும் கண்டிக்கப்பட்டதுடன், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குடிவரவு, குடியகல்வாளர் திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டதுடன், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தனர்.

வடக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் காரணமாகவே புங்குடுதீவு சம்பவம் போன்ற சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி மகளிர் விவகார அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சுமத்தினார். குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பொது மக்களின் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறித்த மாணவி காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் முறையிட்டபோதும் பொலிஸார் அசட்டையாக இருந்ததுடன், பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளார்கள். சடலம் இருக்கும் இடம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும் மிகவும் காலதாமதாகவே ஸ்தலத்துக்கு அவர்கள் வந்தாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் நல்லாட்சியும் ஜனநாயகமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் பின்னர் உரையாற்றிய ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம், பொது மக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பதையும் கண்டிப்பதாகக் கூறினார்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்களை உசுப்பிவிட்டு தமது அரசியல் பிரசாரங்களை முடுக்குவிடுவதற்கு எடுக்கும் முயற்சிகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது என்ற குற்றச்சாட்டை சுமத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடைய விரிவுரையாளர் ஒருவர் குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்பட்டதாகவும், ஐ.தே.கவின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பெண் அரசியல் வாதியொருவரும் குற்றவாளியை தப்ப வைக்க முயற்சித்ததாகவும் அவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிச் சென்றார்.

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான், ஹ{னைஸ் பாரூக் உள்ளிட்டவர்களும் புங்குடுதீவு சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருந்தனர்.

http://www.colombomirror.com/tamil/?p=4605

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள் இருக்கின்றன

இதே விஜயகலா மகேஸ்வரனிடமும் விரி தமிழ்மாறனிடமும் சட்டத்தை கையிலெடுக்காதீர்கள்

சட்டத்திடம் ஒப்படைத்து

சட்டப்படி அதிக தண்டனை  வாங்கித்தருவோம்

எம்மை நம்புங்கள் என மக்களுக்கு நம்பிக்கையூட்டி பொறுப்பெடுத்துச்செல்லப்பட்ட

மக்களால் குற்றம் சாட்டப்பட்ட நபர்

அடுத்த நாளே எவ்வாறு கொழும்பில் இருந்தார்.....??

இதற்கு விஜயகலா மகேஸ்வரனும் விரி தமிழ் மாறனும் உண்மையை மக்களிடம் சொல்லணும்

அதுவே இந்தக்குளப்பங்களும் குளறுபடிகளும் பிரிவுகளும் தீர ஒரேஒரு வழி

இதற்கு கூட்டமைப்பு உட்பட எல்லோரும் ஒரு மொழியில் பேசணும்

மக்களது பக்கம் நின்று

அவர்களது வலியை உணர்ந்து நடக்கணும்

இல்லாது விட்டால்

இன்றையநிலையில் கூட்டமைப்பு தீவகப்பகுதிகளிலிருந்து அந்நியப்பட்டுவிடும்

இது யாருக்கு நன்மையாகும்.....??

முன்பின் அறிமுகமற்ற ஊர் மக்களுக்கு புதிதானசிலர் ஊருக்குள் புகுந்து வன்முறையிலேயே குறியாக இருக்கும் நபர்கள் யார்??

சிந்தித்து

சூழ்ச்சிகளை இனம் கண்டு உடனடியாக தலைவர்கள் செயற்படவேண்டிய தருணம் இது.

ஈழத்து எம் மக்களே தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள் இந்த புங்குடுதீவு பாலியல் வல்லுறவு கொலை வழக்கில்!!

ஆதாரத்துடன் நிருபிக்கிறேன் விழித்தெழுங்கள்..!!!

இலங்கையில் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட கொழும்பு வக்கீல் இப்போ பாதிக்கபட்ட புங்குடுதீவு மாணவிக்கு சார்பாக இலவசமாக வாதாடுகிறேன் என்று முன்வந்து இருக்கிறார் கொழும்பு வக்கீல் தவராசா!!

இந்த தவராசா வக்கீலின் வலது கைதான் சுவிஸ் குமார்!! ஆதாரம் இதோ... முடிந்தவரை பகிருங்கள்!! 

காரணம்: தவராசா வக்கீல் எதிரியுடன் நின்று படம் எடுத்து இருக்கிறார்.. கொலைகாரனுடன் நின்று படம் எடுத்து இருக்கிறார்... இந்த தவராசா வக்கீல் இந்த வழக்கை திசை திருப்புவார் யாரும் இவரை நம்ப வேண்டாம் உறவுகளே!!!

இந்த படத்தில் இருக்கும் மொட்டையந்தான் சுவிஸ் epdp கிளை பொறுப்பாளன், இவனும் சேர்ந்துதான் புங்குடுதீவு மாணவியை கூட்டு வல்லுறவு கொண்டு கொன்றார்கள்!!

 11150787_1514720605419522_55926917064639

தவறான தகவல்

இதில் இருப்பவர் புலிக்குட்டி என அழைக்கப்படும் சுவிஸ் ரஞ்சன் என்பவர்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் அல்ல..

இந்த வக்கீல் தவராசா தான்

தமிழரசுக்கட்சியின் கொழும்புத்தலைவராவார்...

எனவே சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும்

விரி தமிழ்மாறன் உட்பட

தாயகத்தமிழரின் அரசியல் மற்றும் முக்கிய பொறுப்புக்களில்  இருப்பவர்கள்

மிகவும் கவனமாக கையாளவேண்டும் உறவுகளே..

யாரை நம்பப்போகின்றோம்?

யாரை தூக்கப்போகின்றோம்..??

யார் நல்லவர்?

யார் கெட்டவர்?

வித்தியா என்னும் உயிர் விதைத்துவிட்டுச்சென்றிருக்கும் பெரிய வினா இது.

இதற்கான விடையைக்கண்டு பிடித்துக்கொடுப்பதே நித்தியாவுக்கான அஞ்சலியாகும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர் இல்லையா இவர்? ஒரே குழப்பமாய் இருக்கே......

10426071_1600996843513028_21502454727636

Edited by putthan

இல்லை

மேலே ஆட்களுடன் நிற்பவர் தான் புலிக்குட்டி என்று அழைக்கப்படும்  சுவிஸ் ரஞ்சன் 

ஆனால் தனியே இருப்பவர் தான் மக்களால் பிடிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்.

இருவருக்கும்  இடையே ஆன அதிகளவிலான உடல் ஒற்றுமை சில தேவையற்ற வதந்திகளை நம்பும்படி செய்கிறது.

அதை விளக்கவேண்டிய தேவைக்காகவே நானும் இங்கு எழுதவேண்டிவந்தது..

முகப்புத்தகத்தில் அவர்தான் இவர் என்ற வகையில் பிரச்சாரம் நடக்கின்றது.....உண்மையை தெளிவு படுத்துங்கள்

என்னய்யா இது 

இருக்குன்றிங்க இல்லங்றிங்க 

முடிவா இப்ப என்னதான் சொல்ல வாரிங்க? இருக்க? அல்லது இலையா? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் அவர்தான் இவர் என்ற வகையில் பிரச்சாரம் நடக்கின்றது.....உண்மையை தெளிவு படுத்துங்கள்

6 h · Modifié · 

என்ன கொடுமை இது?? ஹா.. ஹா...

கடந்த இரு தினங்களாக முகநூலிலும் ஒரு சில இணையத்தளங்களிலும் என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான வகையில் புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவருடன் தொடர்புபடுத்தி, நான் அரசியல் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்களை, புங்குடுதீவு வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் படத்துடன் இணைத்து, புனையப்பட்ட தகவல்களுடன் வெளிவந்த வண்ணமுள்ளன.

இதுகுறித்து முகநூல் நண்பர்களும் முகநூல் உறவுகளும் என்னிடம்; தங்களுக்காக என்றாலும் பகிரங்கமாக விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஆயினும் நான் அதனைத் தவிர்த்து வந்தேன். ஏனெனில் "கடந்த முப்பத்தைந்து வருட எனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற பல்வேறுவகையான சேறுபூசும் சம்பவங்களை எதிர்கொண்டவன் என்ற வகையில் எனக்கு இது பிரச்சினையாகப்படவில்லை".

எனவே இந்த சேறுபூசல்கள் பற்றி விளக்கமளிக்கத் தேவையில்லை என்றிருந்தேன். ஏனெனில் "அரசியல் காழ்ப்புணர்ச்சியினதும், பிரதேச துவேசத்தினதும் வெளிப்பாடகவே இவர்கள் இதனைப் பிரசுரித்து வருகின்றார்கள்" என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.

அத்துடன் நான் ஒரு மாயாவி அல்ல, காலையில் சுவிஸிலும் மாலையில் புங்குடுதீவிலும் மறுநாள் சுவிசிலும் நிற்பதற்கு. புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இதனைப் புரிந்து கொண்டால் சரி என்று இருந்தேன். ஆயினும் பல முகநூல் உறவுகளின் அன்புக்கட்டளைக்கு இணங்கவே இந்த விளக்கம்... (எனக்கு ஆதரவாக பல முகநூல்களிலும் கருத்துக்களை பதிவிட்ட என்னைப் புரிந்து கொண்ட அன்புள்ளங்களுக்கும் நன்றி..)

— avec Sinnathamby Kumarathas et 47 autres personnes.

https://www.facebook.com/swiss.ranjan.1?fref=nf&pnref=story

என்னய்யா இன்னும் குழப்பாமா இல்ல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பத்தகத்தில் அவர்தான் இவர் என்று போட்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம் என்ன சித்திர குப்தனின் புத்தகமா? எழுதியதெல்லாம் உண்மையாய் இருக்க ?

நானும் நேற்று இதை இங்கே பதிந்து விட்டு பின் அழித்து விட்டேன். காரணம் செய்தியின் நம்பகமின்மை.

சுவிஸ் ரஞ்சன் எனும் புளொட் பிரமுகர் தான் அது இல்லை என்று சொல்வதுடன் வித்தியாவுக்காக சுவிசில் நடந்த கூட்டத்தில் தான் பேசிய படத்தையும் போட்டுள்ளார்.

அவர் சொல்லுவது நம்பும் படியாக உள்ளது.

உருவ ஒற்றுமையை பயன்படுத்தி கேப்பில் கிடாய் வெட்டுகிறார்கள்.

தவராசா, கூட்டமைப்பு என எல்லோர்கும் சேறடிக்கிறார்கள் போலத்தான் படுகிறது.

ஒரு சிறுமியின் மரணத்தை இவ்வளவு கேவலமாயா பயன்படுத்துவார்கள்?

கேட்டால் தமிழன் என்று பெருமை கொள்கிறோம் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

6 h · Modifié · 

என்ன கொடுமை இது?? ஹா.. ஹா...

கடந்த இரு தினங்களாக முகநூலிலும் ஒரு சில இணையத்தளங்களிலும் என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான வகையில் புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவருடன் தொடர்புபடுத்தி, நான் அரசியல் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்களை, புங்குடுதீவு வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் படத்துடன் இணைத்து, புனையப்பட்ட தகவல்களுடன் வெளிவந்த வண்ணமுள்ளன.

இதுகுறித்து முகநூல் நண்பர்களும் முகநூல் உறவுகளும் என்னிடம்; தங்களுக்காக என்றாலும் பகிரங்கமாக விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஆயினும் நான் அதனைத் தவிர்த்து வந்தேன். ஏனெனில் "கடந்த முப்பத்தைந்து வருட எனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற பல்வேறுவகையான சேறுபூசும் சம்பவங்களை எதிர்கொண்டவன் என்ற வகையில் எனக்கு இது பிரச்சினையாகப்படவில்லை".

எனவே இந்த சேறுபூசல்கள் பற்றி விளக்கமளிக்கத் தேவையில்லை என்றிருந்தேன். ஏனெனில் "அரசியல் காழ்ப்புணர்ச்சியினதும், பிரதேச துவேசத்தினதும் வெளிப்பாடகவே இவர்கள் இதனைப் பிரசுரித்து வருகின்றார்கள்" என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.

அத்துடன் நான் ஒரு மாயாவி அல்ல, காலையில் சுவிஸிலும் மாலையில் புங்குடுதீவிலும் மறுநாள் சுவிசிலும் நிற்பதற்கு. புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இதனைப் புரிந்து கொண்டால் சரி என்று இருந்தேன். ஆயினும் பல முகநூல் உறவுகளின் அன்புக்கட்டளைக்கு இணங்கவே இந்த விளக்கம்... (எனக்கு ஆதரவாக பல முகநூல்களிலும் கருத்துக்களை பதிவிட்ட என்னைப் புரிந்து கொண்ட அன்புள்ளங்களுக்கும் நன்றி..)

— avec Sinnathamby Kumarathas et 47 autres personnes.

https://www.facebook.com/swiss.ranjan.1?fref=nf&pnref=story

நன்றிகள் விசுகு ....தெளிவு படுத்தியமைக்கு ....நிர்வாகம் இதில் இருக்கும் படத்தை நீக்குவதாயின் நீக்கிவிடலாம் என நினைக்கிறேன்.....நிர்வாகம் விரும்பினால் இதை நீக்கிவிடலாம்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு ....தெளிவு படுத்தியமைக்கு ....நிர்வாகம் இதில் இருக்கும் படத்தை நீக்குவதாயின் நீக்கிவிடலாம் என நினைக்கிறேன்.....நிர்வாகம் விரும்பினால் இதை நீக்கிவிடலாம்...

நன்றி  புத்தர்

இன்றைய தமிழனது நிலை எடுப்பு இது தான்..

செய்திகள்

கூட்டங்கள்

ஊர்வலங்கள்

விழாக்கள்

அமைப்புக்கள்

ஏன் தனிநபர்கள்  சார்ந்தும்

கண்டதை

கேட்டதை

மனதில் பட்டதை எழுதுவது

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பதிவு

ஒரு சிறு துணுக்கு

நமக்கு பிடிக்காத ஆளா போட்டுத்தாக்குவது

எமக்கு பிடிக்காத அமைப்பா

என்ன செய்தாலும் தாக்கு

காலையில் எழும்பும் போதே இன்றைக்கு இவருக்கு சூடேத்தணும்

எங்காவது கிடைக்கும் தகவல்களை எவருடனாவது முடிச்சுப்போட்டு பரபரப்பாக்கணும்

செய்தியை ஆராய்வது

விசாரிப்பது

சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது....

கிடையாது

பேசினால் சூடாக்கமுடியாதே...

லைக் வாங்கணும்

இந்தப்பிள்ளையின்  இறப்புச்செய்திக்கே 300 லைக்குக்கு மேல் என்றால் பாருங்கள் நாம் எங்கே போகின்றோம்???

எதற்கு  லைக்???

இதைப்பழக்கியது யார்??

இதிலிருந்து மீளுவது எவ்வாறு????

என் இனம் மாலுமி இல்லாத கப்பல் போல......

எங்கே போகின்றோம்

ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கணும் பொறுப்புடன் நடந்து கொள்ளணும்

ஒவ்வொருவருக்கும் இந்தக்கடமையுண்டு

செய்யணும்

செய்தாகணும்

செய்வோமா...?

அல்லது அடுத்த பரபரப்புச்செய்திக்காக காத்திருப்போமா..?

அது சிலவேளை நமது வீட்டுச்செய்தியாகவும் இருக்கலாம்........... :(  :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.