Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரன் இந்திய உளவு அமைப்புக்களது கொலை முயற்சியிலிருந்தே தப்பித்தாரா?

Featured Replies

பதிவு இணையத்தளம் தன் மீதான நம்பிக்கையை தன் செயல்களின் மூலமே தொலைத்து பல வருடங்களாகி விட்டன. அதன் முக்கிய நோக்கமே தமிழ் தேசிய கூத்தமைப்புக்கு (எழுத்துப் பிழை இல்லை) சேறு பூசிவது ஒன்றே. வாசகர்களை எப்பவும் உணர்ச்சி மேலிட்ட ஒரு கற்பனைத் தளத்தில் வைத்து இருப்பதன் மூலமே தன்  இணையத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தலாம் என்று வெறுங்கனவு காண்கின்றது பதிவு தளம்.

 

இவ் எல்லாவற்றையும் விட, தாயக மக்களின் தலைமத்துவத்தினை வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள் தீர்மானிக்கலாம் என்று நினைக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தின் பிரச்சார ஊடகமாகவும் பதிவின் பதிவுகள் பல உணர்த்துகின்றன

 

நிற்க,

 

கஜேந்திரன் மீது இந்திய புலநாய்வுப் பிரிவு இப்படியான தாக்குதலை செய்ய எத்தனிக்குமா இல்லையா என்பது கேள்விக்குரியது. பதிவு சொல்கின்றது இது இந்திய புலநாய்வுப் பிரிவின் செயல் என்று.  அதை மறுக்க ஆயிரம் காரண்களை நாம் சொல்ல முடியும்

 

ஆனால் இந்தியா இப்படியான கீழ்த்தரமான விடயங்களை செய்ய எத்தனிக்காத ஒரு நாடா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அதுவும் எம் அரசியல் பிரச்ச்சனையில்?

 

டி.சிவராமை கொன்றதில் இந்தியாவின் பங்கு பற்றி சந்தேகத்து இடமின்றி தகவல்கள் உள்ளன: பலர் அறிந்த பரம ரகசியம் அது.

 

2006 ஆகஸ்டில், பாகிஸ்தான் இராதந்திரி பஷிர் வலி யினை கொழும்பில் கொல்ல கிளிமோர் தாக்குதல் ஒன்றை செய்ததில் இந்தியாவின் பங்களிப்பு  எந்தளவுக்கு இருந்தது என்பது பற்றி பல ஊடகவியளாலர்களுக்கும் அன்றைய அரசுக்கும் தெரியும்.

 

இந்தியாவின் செல்லப் பிள்ளை சம்பந்தர் அன்ட் கோ. விற்கு எதிராக அரசியல் செய்யும் எவரையும் இந்தியா விரும்பாது என்பது இந்தியாவின் வரட்டு அரசியலை புரிந்தவர்களுக்கு புரியும்

 

இச் சம்பவத்தில் இந்தியா பங்களிப்பு செய்து இருக்குமா என்ற கேள்வியை விட நாம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி

 

இந்தியா இது போன்ற செயல்களை எம் அரசியல் / பொருளாதார விடயங்களில் செய்யுமா இல்லையா என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழமண்ணில் தனது நலனுக்காக எந்தக் கெட்டதையும் செய்யும் என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்ட ஒன்று தானே. பலர் 1987 - 90 வரையான வரலாற்றையே மறந்து நின்று தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்... அரசியல் சதிராட்டம். இதுக்கு அப்புறம் எதை விளக்கி விளக்காமல் விட்டு. அவர்களுக்கு எதுவுமே விளங்காத மாதிரி தான். :lol::icon_idea:

இந்தியாவின் செல்லப் பிள்ளை சம்பந்தர் அன்ட் கோ. விற்கு எதிராக அரசியல் செய்யும் எவரையும் இந்தியா விரும்பாது என்பது இந்தியாவின் வரட்டு அரசியலை புரிந்தவர்களுக்கு புரியும்

 

"இந்தியா இது போன்ற செயல்களை எம் அரசியல் / பொருளாதார விடயங்களில் செய்யுமா இல்லையா என்பதுதான்." 

 

 
நிச்சயமாக செய்யும் ஆனால் இதை செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம் பல இயக்கங்களையே உருவாக்கி எம்மை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைந்தவர்கள் கூட்டமைப்பிற்கும் ஒரு எதிரியை உருவாக்கவே முனைவார்களே தவிர அழிக்கவல்ல.
 
தவிர, இந்தியா எமது நாட்டை குழப்ப நிலையில் வைத்திருப்பதால் அடைந்த பொருளாதார முன்னேற்றங்கள் பல. இதென்னடா இலங்கை ஒரு சிறிய நாடுதானே இதனால் இந்தியாவிற்கு பொருளாதார இலாபங்களா என்று யோசித்தால் அதற்கு விடை தர நான் ஒரு கட்டுரையே எழுத வேண்டும். இந்தியா நாம் விட்டாலும் எம்மை விடாது.
 
ஆரம்பத்தில் இருந்தே இந்தியாதான் எமது முக்கிய பிரச்சனை. இந்தியாவுடன் சேர்ந்தும் இருக்க முடியாது எதிர்த்தும் வாழ முடியாது என்னதான் செய்வது.
 
எதிர்த்துப் பார்த்தோம் முறிந்து விட்டோம். இனி அணைக்க முடியாது இணங்கிப் பார்க்கலாமே. எமக்கு எமது மக்களின் எதிர்காலம் முக்கியம். மக்களற்ற வறண்ட பூமியாக தமிழீழம் கிடைப்பதை விட மக்களுடனான மக்களிற்கான உரிமைகளுடன் எமது நிலம் கிடைப்பதற்காக எந்த இணக்கத்திற்கும் வரலாமே.
 
இதற்காக பேயையா கட்டிப் பிடிச்சு கொஞ்சுவது என்று கேட்பது எனக்கும் கேட்குது - வேற வழி!
 
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி

இது என்ன இதுக்கும் மேலாக கீழ்தர வேலைகளில் இந்திய புலனாய்வாளர்கள் இறங்கக் கூடியவர்களே.

ஆனால் அவர்கள் முட்டாள்களில்லை. தேவையில்லாமல் அவர்கள் ஏன் செத்த பாம்படிக்க வேண்டும்?

2006-2009 இல் இலங்கை புலனாய்வாளரே கொல்ல வேண்டுமென்று நினைக்காத அளவுக்கு தமிழர்க்கும், தமிழரின் எதிரிகளுக்கும் பிரயோசமில்லாத ஆள் கஜன்.

இவர் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று, இந்தியாவின் வகி பாகத்தை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கிறதெண்டால் இந்தியா கொல்லப் பார்க்குது என்பதில் நியாயம் இருக்கு. இவரோ ஒரு நாடாளு,மாகாண, நகர, கிராம சபை, ஏன் வாசிக சாலையில் கூட பிரதிநிதிதுவம் இல்லாத லெட்டர்பேட் கட்சிக் காரர்.

கிழக்கில் கட்சி கிளை அமைக்கவே ஆளில்லை.

இவரை கொல்லும் தேவை யாருக்குமில்லை.

வேணுமெண்டால் இவருடன் யாருக்கும் வேலி/எல்லை/கதியால் சண்டை இருந்தால் - அவை செய்திருக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

3) நீங்களே சொல்கிறீர்கள் கூட்டமைப்பு தே த வின் கொள்கையில் இருந்து மாறி வெகுநாளாச்சு. த தே கூ தான் அவரின் கொள்கையை அச்சொட்ட பின் பற்றுகிறது என. அப்போ ஏன் மக்கள் தொடர்ந்தும் த தேகூ வை புறக்கணிகிறார்கள்?

மக்கள் தே த வின் கொள்கையை புறக்கணித்து விட்டனரா?

அல்லது த தே வழிகாட்டியது என்பதுக்காக, அவர் சொன்ன வழிக்கு 100 எதிராய் போகும் அமைப்பை ஏகோபித்து ஆதரிக்கும் அளவுக்கு மக்கள் முட்டாள்களா?

 

ஆமா.. அதுதான் தேர்தல் மேடைகளில்.. இன்னும்.. பிரபாகரனும்.. தமிழீழம்.. சுயநிர்ணய உரிமையும்.. பேசுக்கிறீனம்.

 

சம் சும்.. கொழும்பில.. டெல்லில ஒரு அறிக்கை.

 

மாவை யாழ்ப்பாணத்திற்கு இன்னொரு அறிக்கை.

 

இதெல்லாம்.. மக்களை நேர்மையா வழிநடத்திற மார்க்கங்கள் கண்டியளோ.

 

சனத்துக்கு எல்லாரின் சுத்துமாத்தும் விளங்கும். சனம் ஒற்றுமையே பலம் அது சிதறிடக் கூடாது என்ற தேசிய தலைவரின் சிந்தனைக்கு கட்டுப்பட்டு வாக்குப் போட்டிட்டு வருகுது. அதன் தார்ப்பரியத்தை விளங்கி வைச்சிருக்குது. சம் சும் கும்பல்.. அதில குளிர் காய நினைக்கினம். ஆனால் சனம் சங்கரிக்கு .. ஈபி டிபிக்கு.. சித்தார்த்தனுக்கு வவுனியாவில் வைச்சு.. சிவாஜிக்கு யாழில் வைச்சு.. அடிச்சது போல.. எச்சரிக்கை மணிகளும் அடிக்காமல் இல்லை.

 

இதனை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. சனம்.. ஒரு கட்டத்தில் மாற்றி யோசிக்க வெளிக்கிடும். தேசிய தலைமை இல்லாத இவ்வேளையில்.. தங்களை ஏமாற்றுகிற.. சக்திகளின் கூடாரமாக.. கூட்டமைப்பு மாறிட்டுது என்று சனம் தீர்மானிக்கிற போது.. இப்படியே போனால்.. தேசிய தலைமை எதிர்பார்த்த ஒற்றுமையை தொடர்ந்து சாத்தியப்படுத்த முடியாது என்ற நிலையை சனம் உணரத்தலைப்படும் நிலையில்.... மாத்தி யோசிக்கும். அந்த நிலையை நோக்கியே சம் சும் கும்பல் மக்களை நகர்த்திக் கொண்டிருக்குது. தாங்களே தோண்டும் படுகுழியில்.. சம் சும் கும்பல் கவிழும் நாளை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

தேசிய தலைமை எதிர்பார்த்த அரசியல் ஒற்றுமை என்பதற்கு.. பாதகமில்லாத நிலை ஒன்று வரின்.. சனம் மாற்றி முடிவெடுக்கும். அப்ப விழும் சம் சும் கும்பலுக்கு ஆப்பு. :D:icon_idea:

 

இதனை இந்தியா விளங்கிக் கொண்டு தான் தன் கொள்கைக்கு மாறாக மக்கள் இன்றும் மதிப்பளிக்கும்.. தேசிய தலைமையின் கொள்கையை வலியுறுத்தி வரும்..த.தே.ம.மு ன்னணி மீது கண் வைத்திருக்கிறது. அதன் ஒரு விளைவாகக் கூட இந்த விபத்து அமைஞ்சிருக்கலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது அவர்களுக்கும் "சுத்தம்" அவர்களின் வால்களுக்கும் "சுத்தம். அந்தச் "சுத்தம்" முள்ளிவாய்க்காலில் வந்து மண்டியிடும் வரை தொடர்ந்து மக்களை பெருந்திரளாகப் பலிகொடுத்தது வீர வரலாறு. இன்னும் அந்தச் "சுத்தத்தை" தொடர நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பார்கள்!

 

 

என்ன சுத்தம்? சுகம் தரும் என சவுக்கார விளம்பரமா? :lol: எத்தனை அரசியல் கருத்தை நீங்கள் எழுதி நாங்கள் அறிவுகளை பெருக்கி இருக்கிறோம்? :icon_mrgreen:

நிழலி

இது என்ன இதுக்கும் மேலாக கீழ்தர வேலைகளில் இந்திய புலனாய்வாளர்கள் இறங்கக் கூடியவர்களே.

ஆனால் அவர்கள் முட்டாள்களில்லை. தேவையில்லாமல் அவர்கள் ஏன் செத்த பாம்படிக்க வேண்டும்?

2006-2009 இல் இலங்கை புலனாய்வாளரே கொல்ல வேண்டுமென்று நினைக்காத அளவுக்கு தமிழர்க்கும், தமிழரின் எதிரிகளுக்கும் பிரயோசமில்லாத ஆள் கஜன்.

இவர் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று, இந்தியாவின் வகி பாகத்தை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கிறதெண்டால் இந்தியா கொல்லப் பார்க்குது என்பதில் நியாயம் இருக்கு. இவரோ ஒரு நாடாளு,மாகாண, நகர, கிராம சபை, ஏன் வாசிக சாலையில் கூட பிரதிநிதிதுவம் இல்லாத லெட்டர்பேட் கட்சிக் காரர்.

கிழக்கில் கட்சி கிளை அமைக்கவே ஆளில்லை.

இவரை கொல்லும் தேவை யாருக்குமில்லை.

வேணுமெண்டால் இவருடன் யாருக்கும் வேலி/எல்லை/கதியால் சண்டை இருந்தால் - அவை செய்திருக்கக் கூடும்.

 

 

நீங்கள் கஜேந்திரன் பற்றி கணித்திருக்கும் கணிப்புத் தான் எனதும். ஆனால் பதிவு சொல்லி இருக்கும் விடயம் நாளைக்கே இன்னொருவருக்கு நடக்கலாம்

 

அவர் குப்பனோ சுப்பனோ ஆகக் கூட இருக்கலாம்

 

நாம் தனித் தனிச் செய்திகளை புறாவின் பார்வையுனூடாக அணுகுவதை விட பிறாந்தின் / கழுகின் பார்வையில் அணுகினால் தான் நல்லம்.

 

இந்தியா பற்றி நெடுக்கின் கருத்தில் உடன்படுகின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் கூட பரராஜசிங்கம், ரவிராஜ் என பல செயல்திறன் மிக்க எம் பி களை போட்ட இலங்கை புலனாய்வுதுறை, கஜனை சீந்தவே இல்லை.

இவரை சுட்டு ஒரு தோட்டாவை ஏன் வீணாக்குவான் என்று.

அந்தளவுக்கு ஒரு வெங்காயம் இந்தாள்.

இதுக்க சாறத்தை தூக்கி விட்டு போஸ் கொடுக்கிறார்.

வாக்குப் பொறுக்கி அரசியல்.

 

இதுவே சுமந்திரனுக்கோ அல்லது சம்பந்தருக்கோ சுரேசுக்கோ மாவைக்கோ நடந்து இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள். இவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பில் பயணிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது என்பது வேறு கதை. இதே கஜன் எனப்படுபவரும் யாழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்று ஒரு காலத்தில் வென்றவர் தான். இப்போ ஏதோ கொள்கை முரண்பாடு காரணமாகவோ அல்லது சம்பந்தருக்கு எடுபிடியாக செயற்படாத காரணமாகவோ பிரிந்து விட்டார் என்பதற்காக சறத்தை உயர்திக்காட்டி அரசியல் செய்கிறார் என்கிறீர்கள். இதே சம்பந்தர் தூங்கி வழிந்த காட்சிகள் எத்தனை பார்த்திருப்பீர்கள். ஆனால்  அதற்கு இப்படியான நக்கல்களை (வழமை போல) காணவில்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

அப்படி ஒரு முடிவை மக்கள் எடுத்தால் - அந்த முடிவுக்கு கட்டுப்பட்டே நானும் கருதெழுதுவேன்.

இற்றவரைக்கும் கூட்டமைப்பு போகும் பாதையை மக்கள் தூக்கி எறியவில்லை.

பிரபா வகுத்த பாதையில் இருந்து கூட்டமைப்பு விலகி ரொம்ப நேரமாச்சு. இது மக்களுக்கும் தெரியும். பிரபா ஒரு மாவீரன் என்பது உண்மைதானே?

பிரபா ஒரு மாவீரன், புலிகள் தன்னலமற்ற வீரர்கள், ஆனால் அவர்கள் பாதையில் இருந்து எம் பாதை வேறு பட்டது என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு.

கல்யாணி,

சம்பந்தர் தான் தூங்கி வழியிற படத்தைப் போட்டு, ஐயோ பாவம் ஐயாக்கு றோ தூக்க மாத்திரை கொடுத்துட்டுது பாரீர் என்று செய்தி போட்டால் - அதையும் ந்ச்க்கலடிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி தைரியம் இருந்தால் சம்பந்தரோ அல்லது சுமத்திரனோ என் மாவையோ வேறு எந்தக் கொம்பனோ தமிழ்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்று காட்டினால் மக்கள் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். ததேகூட்டமைப்பை மக்கள் புலிகளின் அரசியல் பிரிவாகவே பார்க்கிறார்கள். தில் இருந்தால் இந்தச்சவாலுக்கு சம்சும்கோஸ்டி தயாரா??????????????????

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் நினவேந்தல் செய்வதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு நீதிமன்றம் மூலம் தடை ததேகூட்டமைப்புக்கு நினைவேந்தல் செய்ய இந்தியத் தூதரகம் தலையிட்டு அனுமதி வழங்கப்பட்டது.(அவைத்தலைவர் சிவஞானம் பேட்டி)(தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமப்பீடம் இந்தியாவுடன் நெருக்கமானது. அந்தத்தலைமை தொடர்ந்து நீடிக்க இப்படியான உணர்சி அரசியல் அவசியம்.ஆனால் இதில் தங்கள் இந்திய விசுவாசத்தை நிகழ்வில்கலந்து கொள்ளாததன் மூலம் சமசும் காட்டி விட்டார்கள். சிறிலங்காவின் சுதந்திர தினத்துக்கு அவர்கள் போனதும் இதற்கு அவர்கள் போகாததும் அவர்களை இந்தியாவே வழிநடத்துவதைக்காட்டுகிறது. இந்த வகையில் தனது சொல்லைக் கேட்கும் ஒரு தலைமைக்கு எதிரான ஒரு அமைப்ப உருவாகுவதை இந்தியா எப்படி விரும்பும் என்பது கேள்வி????

சரி தைரியம் இருந்தால் சம்பந்தரோ அல்லது சுமத்திரனோ என் மாவையோ வேறு எந்தக் கொம்பனோ தமிழ்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்று காட்டினால் மக்கள் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். ததேகூட்டமைப்பை மக்கள் புலிகளின் அரசியல் பிரிவாகவே பார்க்கிறார்கள். தில் இருந்தால் இந்தச்சவாலுக்கு சம்சும்கோஸ்டி தயாரா??????????????????

 

இதற்கு உங்கள் சம்சும் கோஸ்டி தயாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படி நடந்தாலும் நிச்சயமாக தமிழரசுக்கட்சிதான் வெல்லும். 
 
அப்புறம் கஜன் கோஸ்டி, அனந்திக்கு இடம் கொடுக்கவில்லை என்று இங்கு வந்து அழக்கூடாது சொல்லிப்புட்டன்.
  • கருத்துக்கள உறவுகள்

 

இதற்கு உங்கள் சம்சும் கோஸ்டி தயாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படி நடந்தாலும் நிச்சயமாக தமிழரசுக்கட்சிதான் வெல்லும். 
 
அப்புறம் கஜன் கோஸ்டி, அனந்திக்கு இடம் கொடுக்கவில்லை என்று இங்கு வந்து அழக்கூடாது சொல்லிப்புட்டன்.

 

 

புலிகள் இருந்த போது.. கூட்டமைப்புக்கு.. 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவம்.

 

பின்  சம்.. சும்மின் அபரிமித ராஜதந்திரத்தால்.. 16. அதிலும் ஒருத்தர் ஓடிட்டார்.

 

தமிழரசுக் கட்சியில் நின்றால்.. 2.. ஓ.. 3 டோட எதிர்கட்சி கனவு காண வேண்டியான். :lol::D

 

சம் சும் சிங்க கொடிய ஆட்டு ஆட்டெண்டு ஆட்டின பிறகும் சனம் பெருவாரியா அவர்களுக்கு வாக்களிக்குது. ஏன் சித்துவுக்கும் வாக்களிக்குது. 
கஜன் கோஷ்டி தே தா வின்ட கொள்கைகளை மூலைக்கு மூலை கூவினாலும் பதிவு போன்ற காமடி இணையதளங்கள் எவ்வளவு முண்டு குடுத்தும் வாக்குகள் சில நூறை தாண்டவில்லை. 
இவ்வளவுக்கு பிறகும் இங்க சிலர் வெள்ளை காக்கா பறக்குது என்று கதை விட்டுக்கொண்டு திரியுதுகள். 
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒண்டும் தமிழரசுக் கட்சிக்காரனில்லை. ஆனால் கூட்டமைப்பு எம்பிகளில், மாகாணசபை உறுப்பினர்களில் பேருவாரியானார் சம்சும் பாதையையே ஒட்டி நிக்கிறனர். சுரேஸ் மட்டும்தான் குறுக்க இழுக்கிறார். கஜன்ஸ் விலகியதுபோல சுரேசும் விலகிப் போவதுதான் முறை. ஜனநாயகம்.

தே த கை காட்டினார் - யாரை? தங்கேஸ்வரி வேலாயுத்தத்தை, சிவநாதன் கிசோரை, கனகரத்தினத்தை, ஜெயாநந்த மூர்த்தியை, மக ஈழவேந்தனை, தயா மாஸ்டரை, கேபியை, கருணாவை -இவர்கள் எல்லோரும் ஏன் செல்லாக் காசாகிப் போகினர்? ஏனெண்டால் மக்கள் முட்டள்களில்லை. தே த கை காட்டினாலும், இவர்கள் தே த விற்க்கே தீத்தியவர்கள் என்பதை மக்கள் துல்லியமாக கணித்து வைத்துளனர்.

2009 மேயில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு நினைவில் இருக்கிறது. அப்படி ஒரு அழிவுக்கு முன் 60 000 சவப்பெட்டிகளை தயாராய் வையுங்கள் என முட்டாள் தனமாய் பாராளுமன்றில் யார் பேசினார்கள் என்பதும் நினைவில் இருக்கிறது.

கஜன் ஒரு அடிவருடி/ஊதுகுழல். மாறும் சூழலுக்கேற்ப சுயமாய் சிந்திக்க தெரியாத ஒருவர். 2009 ற்கு முன் தமிழர் சார்பில் தலைமைத்துவ பண்பற்ற அடிவருடிகள் இலங்கை பாராளுமன்றம் போனால் போதுமாய் இருந்தது. ஏனெண்டால் இவர்கள் யாரும் முடிவெடுக்க தேவை இருக்கவில்லை. சம், மாவை எல்லோரும், ஆமாசாமி போட்டபடி இருந்தால் போதுமாயிருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இருக்கிற வத்தலோ, தொத்த்தலோ இவர்களே முடிவு எடுத்து வெட்டி ஆட வேண்டி உள்ளது, இந்த நிலையில் கஜன் தரவழிகள் தமிழர் தலைமை ஏற்றால் - பேரினவாதிகளுக்கு வேலை சுளுவாய் முடியும்.

இது மக்களுக்கு தெரியும் ஆகவேதான், ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ ( சம்பந்தர் தலைமை) யை தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்களும், தமிழ் நெட்டும், பதிவும் மக்களுக்கு இலுப்பை கசக்கும் எனக்கூறி புண்ணாக்கை (கஜேந்திரன்) தீத்தப் பார்கிறீகள்.

தீர்கமான தலைமைக்கு மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதுக்கு சீவியின் தெரிவும், தொடர் சம்பவங்களுமே நல்ல உதாரணங்கள். சம்பந்தனோ, சுமந்திரனோ, சீவியோ, உடையார் வீட்டு கொக்கத்தடியோ, இப்போ கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை யார் எடுத்தாலும், அவர்களுக்கே மக்கள் ஆதரவு இருக்கும்.

தீர்கமான தலைமைக்கு மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதுக்கு சீவியின் தெரிவும், தொடர் சம்பவங்களுமே நல்ல உதாரணங்கள். சம்பந்தனோ, சுமந்திரனோ, சீவியோ, உடையார் வீட்டு கொக்கத்தடியோ, இப்போ கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை யார் எடுத்தாலும், அவர்களுக்கே மக்கள் ஆதரவு இருக்கும்.

 

இதுதான் இன்று தாயகத்தின் யதார்த்த நிலை. மக்கள் விரும்பினால் தலைமை மாறும். மாறாதவரை இதுதான் எமது தலைமை என்பதையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான்,

 

கூட்டமைப்பு புலிகளின் பாதையிலிருந்து விலகி வெகு நேரமாச்சுது என்பதன்மூலம் நீங்கள் விளங்கிக் கொள்வது என்ன ? கூட்டமைப்பு புலிகளைப்போல் ஆயுதம் தூக்கி சண்டை போடவில்லை என்பதா ?

 

அப்படி கூட்டமைப்பினாலும், அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத எந்த விடயத்தை புலிகள் இதுவரை செய்துவந்தார்கள் என்று கருதுகிறீர்கள்? சுயநிர்ணய உரிமையும், சுயாட்சியும், சுதந்திரமும் கேட்டுப் போராடியது பிழை என்கிறீர்களா? இவை புலிகள் எனும் அமைப்பினர் தோன்றுவதற்கு முன்னமே தமிழர் விடுதலைக் கூட்டணியாகட்டும், தமிழரசுக் கட்சியாகட்டும் , இவர்கள் எல்லாருலுமே முன்மொழியப்பட்டு, மக்கள் முன் அங்கீகாரம் கேட்கப்பட்டு தேர்தலில் அமோகமாக வெற்றியிட்ட வைக்கப்பட்ட கோரிக்கைகள் இல்லையென்கிறீர்களா?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ன சொல்லியது என்பதாவது நினைவிலிருக்கிறதா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து தொடர்ந்து வந்த தேர்தலில் தமிழ்மக்கள் பெருவாரியாக எதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்தார்கள் என்பதாவது நினைவிருக்கிறதா? அப்படி நினவிருந்தால், புலிகள் கோரிப் போராடியவற்றுக்கும், அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த நிலைப்பாட்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று கருதுகிறீர்கள்? அப்படி வேறுபாடு இல்லையென்றால், இன்று புலிகளின் பாதையிலிருந்து கூட்டமைப்பு விலகி நேரமாச்சுது என்று நீங்கள் சொல்வதன் அர்த்தம், தமிழர் விடுதலைக் கூட்டணீயின் ஆரம்பகால (புலிகளுக்கு முன்னரான காலம்) கொள்கையிலிருந்து இன்றைய கூட்டமைப்பு விலகிவிட்டதுதான் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?

 

தமிழர் விடுதலைக் கூட்டணியாகட்டும் (புலிகளுக்கு முன்னரான), புலிகளாகட்டும், ஏன், புலிகள்போலவே போராட கிளம்பிய ஏனைய போராளிகளாகட்டும், எல்லோருமே தமிழருக்கான தனிநாடே தீர்வென்றுதான் போராடப் போனார்கள். முன்னைய கூட்டணி அரசியலின்மூலம் செய்ய நினைத்தார்கள், தோற்றும் போனார்கள். இதன்பிறகு புலிகளும் ஏனையவர்களும் வந்தார்கள், ஆயுதம் மூலம் செய்யலாம் என்று ஆரம்பித்தார்கள், ஆனால் பல சக்திகளின் கைகளுக்குள் அகப்பட்டுக் காணாமாலும் போனார்கள். இப்போது கூட்டமைப்பினர் வந்திருக்கின்றனர், பழையபடி அரசியல் பேசி தமிழர்க்கான விடிவைத் தேடிக்கொள்ளலாம் என்கின்றனர். ஆனால், புலிகளும், முன்னால் கூட்டணியும் நடந்த பாதையிலிருந்து விலகிப் போவதாக நீங்கள் கூறுகிறீர்கள்? அப்படி எங்கே போகிறார்கள் என்று நீங்கள் கூறினால் நல்லது.  

 

சோர்ந்துபோய், அரசியலில் கூட்டி ஒதுக்கப்பட்டிருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற நாமத்தையும் கொடுத்து மீண்டும் மக்களின் பேராதரவைப் பெற்ற ஒருமித்த குரலாக கூட்டமைப்பை ஆக்கியவர்கள் புலிகள்தான் என்பதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து எதுவும் இருக்காது என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு பெற்ற மக்களின் பேராதரவிற்குக் காரணம், அவர்களின் அன்றைய கொள்கைகளுக்கும், புலிகளின் விருப்பங்களுக்குமிடையே வேறுபாடு இருக்கவில்லை என்பதுதான் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படியாயின், இன்று மட்டும் அவர்கள் அந்தக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டுச் செல்வது ஏன் என்று கூறுகிறீர்கள்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை சிங்களத்தில் இருப்பதுபோல, சமபலம் பொருந்திய இரு கட்சிகள் தமிழர்களிடத்தில் இல்லை. இது நண்மைக்காகக் கூட இருக்கலாம். அதாவது தமிழரின் வாக்குப் பிரிந்து, பலமும் பாதியாகக் குறைந்து (கருணா இடையிலே அறுத்துக் கொண்டோடியதுபோல ) சிங்களவரிடம் முற்றான ஒரு சரணாகதிக்குப் போவதைக் காட்டிலும் ஒரு கட்சியாக இருப்பது பரவாயில்லை என்பது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது தமிழரின் ஏக பிரதிநிதித்துவத்தைக் கைய்யில் வைத்திருக்கும் ஒரு கட்சி, தான் எடுக்கும் முடிவுகளால் தான் சார்ந்த இனத்துக்கு ஏதும் கேடு வராமலிருப்பதை உறுதிப்படுத்தவேண்டிய தேவை அவர்க்ளைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நிச்சயம் இருக்கிறது. இதை அடுத்த தேர்தல்களில் அந்த ஏக பிரதிநிதிக் கட்சிக்குப் போட்டியாக களமிறங்கும் இன்னொரு கட்சிக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடுவதன் மூலம் செய்துகொள்ளலாம். ஆனால் அப்படியொரு எதிரணி இன்றுவரை தமிழர்களிடத்தில் இல்லை. ஒன்றில் இந்த மாற்று அணியினர் சிங்களக் கட்சிகளுடன் இணைந்து நிற்கிறார்கள் , அல்லது ராணுவ ஒட்டுக் குழுக்களாக இருக்கிறார்கள். ஆக சிங்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மாற்றுக் குழுக்களுக்குப் போடுவதைக் காட்டிலும் கூட்டமைப்பிற்கே போடலாம் என்கிற மனநிலைதான் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமைப்பைத் தேர்வு செய்யக் காரணமாகிவிடுகிறது. இந்த "வேறு தெரிவில்லாமல்" என்னும் மனோநிலை ஜனநாயகத்துக்கும், மக்களின் விருப்புகளுக்கும் விரோதமாகப் போவதற்கு நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. 

 

இன்றுவரை கஜேந்திரக் குமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு எதற்காக மக்கள் ஆதரவு வழங்கப் பயப்படுகிறர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் பயப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் தமிழர் விரோதியானவர் என்று எனக்குத் தெரியவில்லை.  இங்கே கூட்டமைப்பினை முன்னிறுத்தியும், கஜேந்திரக் குமாரின் கட்சியை வசைபாடியும் கருத்திடும் கள உறவுகள், வெறுமனே கஜேந்திரக் குமாரை நகையாடுவதைத் தவிர்த்து, எதற்காக மக்கள் அவர்களுக்கு தமது ஆதரவை இற்றைவரை வழங்கத் தயங்குகிறாறர்கள் என்பதை நியாயமான முறையில் எழுதினால் அறிந்துகொள்ள ஆசை. முடியுமா அவர்களால் ?

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நீங்கள் கேட்ட கேள்விகளிலேயே அதுக்கான பதிலும் இருக்கிறது.

1) 83 க்கு முன் வட்டுக்கோட்டை தீர்மானம் படி கூட்டணி பயணித்த பாதையும், 2009 வரை பிரபா பயணித்த பாதையும் ஒன்றுதான். அதாவது, பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை அடங்கலாக, வடகிழக்கு இணைந்த அடிப்படையிலான தீர்வு.

2) சோர்ந்து போயிருந்த தமிழ் கட்சிகள் - யாரால் சோர்க்கப் பட்டார்கள், அமிர் தொடங்கி நீலன் வரை? அதை விடுங்கள் அது தலைப்புக்கு தேவை இல்லாதது. பிரபா சேர்த்தார் என்பது உண்மை. அந்த கொள்கைக்கு விசுவாசமாகவே கூட்டமைப்பும் 2009 வரை நகர்ந்தது.

3)2009 இன் பின் கூடமைப்பிலே ஒரு புலி நீக்கம் நடந்தது. இதை உலகமே அறியும். அதன் பிந்தான் கூட்டமைப்பின் அரசியல் போக்கு பிரபாவின், வட்டுக்கோட்டையின் போக்கில் இருந்து 180 பாகை எதிர் திசையில் போகத் தொடங்கியது. இந்த போக்குக்கு, மாவை, செல்வம் என எல்லோரும் சம்மதமே. சுரேசும் கூட கொடியாட்டுறார், விழாவுக்குப் போறார் என தன்னை முன்னிலைப் படுத்த இதை பயன்படுத்துவாரோ ஒழிய அவரும் இந்த போக்குக்கு உடந்தைதான். பிரபா/வட்டுக்கோட்டை வழியை உண்மையிலேயே இப்போ பின்பற்றுவார்கள் கஜன்ஸ்தான்( சுரேசு உண்மையானவராய் இருந்தால் அங்கே போய்ச்சேரணும்). ஆனால் கூட்டமைப்பு ஒன்று பட்ட இலங்கைக்குள், பிரிந்து போகும் உரிமை அற்ற, சுயாட்சி அலகையே இப்போது கோருகிறது. இதை உள்ளக சுயநிர்ணயம் எனும் ஒரு மாய வார்த்தையால் சொல்கிறார்கள். சுயநிர்ணயம் என்பதுக்கு எந்த கட்டுப்பாடும் ( கொண்டிசன்) இருக்க முடியாது.

பிரிந்து போகும் உரிமை இலாத எந்த தீர்வும் சுயநிர்ணயமாய் இருக்க முடியாது.

ஆக கூட்டமைபு சுயநிர்ணய உரிமையையையும் எப்போதோ கைவிட்டு விட்டது. இப்போ அவர்கள் கேட்பது மாநில சுயாட்சி (regional autonomy) இதுக்கும், வட்டுக்கோட்டைக்கும்/பிரபா கேட்டதற்க்கும் 180 பாகை வித்தியாசம்.

மக்களுக்கும் இது நல்லாவே தெரியும். தெரிந்தும் மக்கள் கூட்டமைப்பை ஆதரிப்பதன் நோக்கம், மக்களும் பிரபா/வட்டுக்கோட்டையை பாதையை தலையைச் சுற்றி எறிந்து விட்டார்கள். சொல்லப் போனால் இப்போ கூட்டமைப்புப் போகும் பாதை மக்கள் வகுத்த பாதை. மக்கள் முன் தெட்டத்தெளிவாக இன்னொரு தெரிவு இருக்கிறது. அதுதான் கஜன்ஸ் தூக்கிப்பிடிக்கும் பிரபா போட்ட பாதை. மக்கள் இப்போ அதை சீந்தவும் தயாரில்லை. இதுதான் யதார்த்தம்.

77 முதல், 2009 வரை அந்த பாதைக்கு முயன்று களைத்துப் போய்விட்டார்கள் மக்கள். இப்போ இருக்கும் இதே சூழ்நிலையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நடத்தினால் வடக்கு கிழக்கில் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

உடனே இங்கே சில அறிவுகொழுந்துகள் கேட்பார்கள். - ஐநா மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பை நடத்தலாமே என்று. ஐநா வாக்கெடுப்பு நடந்தால் மக்கள் மீளவும் வட்டுக்கோட்டைக்குதான் வாக்களிப்பார்கள். நோகாமல் நொங்கு தின்ன கசக்குமா என்ன? ஆனால் இப்போதிருக்கும் இதே சூழ்நிலையில், வட்டுக்கோடையா அல்லது இப்போ கூட்டமைப்பின் வழியா எனக் கேட்டால் பெருவாரியான தமிழர் பின்னதையே ஆதரிப்பர். என் வாழ்நாளில் இது மாறுமென நான் நினைக்கவில்லை.

இதை ஏற்றுகொள்ள சிலருக்கு முடிவதில்லை. அதனால்தான் தலைவர் கட்டிய கூடு கூட்டமைப்பு என்று காமெடி பண்ணி, மக்களுக்கு முட்டாள் பட்டம் கட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை கஜேந்திரக் குமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு எதற்காக மக்கள் ஆதரவு வழங்கப் பயப்படுகிறர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் பயப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் தமிழர் விரோதியானவர் என்று எனக்குத் தெரியவில்லை.  இங்கே கூட்டமைப்பினை முன்னிறுத்தியும், கஜேந்திரக் குமாரின் கட்சியை வசைபாடியும் கருத்திடும் கள உறவுகள், வெறுமனே கஜேந்திரக் குமாரை நகையாடுவதைத் தவிர்த்து, எதற்காக மக்கள் அவர்களுக்கு தமது ஆதரவை இற்றைவரை வழங்கத் தயங்குகிறாறர்கள் என்பதை நியாயமான முறையில் எழுதினால் அறிந்துகொள்ள ஆசை. முடியுமா அவர்களால் ?

 

ஒன்றே ஒன்று தான். தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் வடிவமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் இனங்காட்டி விட்டது தான். கஜேந்திரகுமாரை மக்கள் வெறுக்கவில்லை. இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பில்.. இருந்து பாராளுமன்றம் போன ஒருவர். அதேபோல்.. கஜேந்திரன்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற எல்லைக்குள்... எவர் நின்றாலும்.. அதனை தாயக மக்கள்.. தமது ஏகோபித்த அரசியல் குரலாகக் காட்டியபடி காணத் தலைப்பட்டதன் விளைவு தான்.

 

ஆனால்.. இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முள்ளமாரித் தனங்கள்.. அதன் உருவாக்கத்தில் இருந்த தேவையை சிதைத்து வருகின்ற நிலையில்.. எனி வரும் காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகள்.. பிரியும். பிரிய வாய்ப்புள்ளது.

 

காரைநகரில்.. ஐ. தே.கட்சிக்கு வாக்குப் போடும் மக்கள் உள்ளனர். ஆனால் மண்ணெண்ணை மகேஸ்வரன் சரி.. விஜயகலா சரி புலிகளைப் பற்றி.. அவதூறு பேசுவதில்லை. பேசிட்டு... காரைநகரில் வாக்கு என்ன பனங்கொட்டை கூடச் சேர்க்க முடியாது.

 

மக்கள் இப்போது.. தமது ஒருமித்த வாக்கு பலத்தை சாத்தியமான முறையில் காட்டுவது என்ற அடிப்படையில்.. தேசிய தலைமை காட்டிய அந்த திசையில் சிந்தித்து வாக்குப் போடுகிறார்களே.. தவிர.. சம் சும் கும்பலை தமிழரசுக் கட்சியை எல்லாம்.. நம்பி வாக்குப் போடுவதில்லை. அது தெரிந்த படியால் தான் இவ்வளவு சுய திமிர் கதைக்கும் சம் சும் கும்பல்.. இன்னமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒட்டிக் கொண்டிருக்கினம். சித்தார்த்தன்... புளொட்டில நின்று ஒன்றும் புடுங்க முடியாமல் பதுங்கின இடம்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஏன் பழம் சங்கரி..??!

 

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களின் வாக்குகளைப் பிரித்து தம்மை பலப்படுத்த ஈபிடிபி போன்ற கழுகுகள் காத்திருப்பதையும் மக்கள் அறிவதால்.. கூட்டமைப்பு என்ற தேசிய தலைமையின் வழிக்காட்டலை மக்கள் பின்பற்ற நினைப்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டதும் தான். :icon_idea:

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.