Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்கள் ஒன்றிணைந்து எங்கள் கரங்களை பலப்பத்தவேண்டும்; த.தே.கூ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்கள் ஒன்றிணைந்து எங்கள் கரங்களை பலப்பத்தவேண்டும்; த.தே.கூ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்


வடமாகாணத்திலுள்ள தமிழ்  மக்கள்  அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தேச விரோத சக்திகளை நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தலைவருமான  ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.


 news


உதயன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வரும்  ஒளியரசி சஞ்சிகை வாசகர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரை , விவாதம் மற்றும்  குறுக்கெழுத்து ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நெல்லியடி உதயன் கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
 
அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
எமது இனப்பிரச்சினைக்கு பல்வேறு வழிகளில் தீர்வு காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு அவை அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது இராஜதந்திர முறைகளை பின்பற்றி வருகின்றோம்.
 
இதனை எல்லோராலும் செய்துவிட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே முடியும்.  2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச சமூகம் எம்மை திரும்பிப்பார்ப்பதற்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள்.
 
அவர்களது போராட்டத்தை சர்வதேச சமூகம்  ஏற்பட்டிருந்தது. எம்மிடையே உள்ள ஒற்றுமையை உடைப்பதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு தமிழ் மக்கள் இடமளிக்க கூடாது.
 
ஒட்டுமொத்தமாக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களும் ஒன்று சேர்ந்து எமது த.தே.கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்த வேண்டும் அப்போதுதான் பேரம் பேசும் சக்தியாக நாம் மாறமுடியும் என அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாதிரி நாற்காலியை கட்டிபிடிக்கும், பணம்தசை கொண்டு அலையும் நபர்களுக்கு போடப்படும் வாக்குகள் ஒவ்வொன்றும் எமது , நியாமான நிரந்தரமான,  அபிலாசைகளை குழி தோண்டி புதைக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேரம் பேசும் பலம் என்றால் என்னவெண்டாவது வாக்காளர்களுக்கு விளங்கப் படுத்த மாட்டார்கள் போல இருக்கு! அறுதிப் பெரும்பான்மை அரசை அமைக்க ஆதரவு தேவையானால் த.தே.கூ வினரை விட சிங்கள மக்களைக் குசிப்படுத்தும் ஒரு கட்சியிடம் தான் வென்ற தரப்பு பேசும்! சிறு பான்மையினர் தான் வேணுமெண்டால் இருக்கவே இருக்கிறார்கள் தொண்டமானும் ஹக்கீமும்! தெரிவாகும் த.தே.கூ எம்.பி மார் பார்லிமென்ற் கன்ரீனில் ஐந்து நட்சத்திர சாப்பாட்டை நிதம் தின்று தொந்தி வளர்க்கவும் சிராவஸ்திபுரத்தில ஏ.சி வீடுகளில நித்திரை கொள்ளவும் மட்டும் தான் தமிழர்களின் வாக்கு உதவும்! இவையும் இவையிட பேரம் பேசுற பலமும்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபற்றி நான் நினைக்கிறன், குருபரனோ வேறுயாரோ சொன்ன விளங்கம் ஒன்று facebook இல் இருக்கிறது . இவர்களின் பேரம் பேசும் வலு என்பது 20 பேர் போவதாலோ 12 பேர் போவதாலோ வருவதில்லை.  60 வருட பிரச்சனை , எத்தனையோ ஆயிரம் உயிர்களின் இழப்பு , எத்தனையோ அரசுகளின் பூகோளநலன் சார்ந்த நடவடிக்கைகள் , புலம்பெயர் தமிழர்களின் வாக்குபலம் , அவர்களின் புதிய போராடும் மரபு, போன்ற பல காரணங்களால் வருவதே ஒழிய சம்பந்தன் தலைமை தாங்குவதாலோ, அதில் சார சேர்ந்து வருவதாலோ அல்ல. அதை விளங்க கூடிய நிலையிலா எங்களின் கருத்து பரிமாற்றங்கள் இருக்கு? எங்களுக்கு ஒரு தெளிவான தலமை வேண்டும் அதற்காக அதில் 5 பேரோ  10 பேரோ என்பதல்ல பிரச்சனை. நாளைக்கு சம்பந்தனுக்கு ஆசனம் கிடக்காவிடாலும் அவர்கள் பேசுவார்கள். அதில் வரும் முன்னேற்றங்களை பயன்படுத்ததான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சப்றா யுனிக்கொ புகழ் சரவணபவான் அவர்கள் தனக்குப்பக்கத்துவீட்டில என்ன நடக்குது எனத் தெரியாமல் வாக்காளர்கள் முன்னால் போய் நிற்கிறார். இவரது மைத்துணர் ஜனநாயகப் புலிகள் எனும் பெயரில் ஒருகுழுவை முள்ளிவாய்க்காலுக்குப்பின்னரான கைதுகளின்பின்னராகப் புனர்வாழ்வளிக்கபட்ட புலிஉறுப்பினர்களைவைத்து இயக்குகிறார். இவர் முதலில் தனது மச்சினனிடம்போய் இதுகளை விடச்சொல்லவேண்டும்

ஆனால் உண்மை எதுவெனில் சிங்களம், இந்தியா, ஆகியனவற்றின் புலனாய்வாளர்களும் கூட்டமைப்பின் தலைமையும் சேர்ந்தே முன்னைநாள் புலிகளை களத்தில் இறக்கியவர்கள் எனும் சந்தேகம் ஒருசிலருக்கு இருக்கு, காரணம் கூடமைப்பின்மீது அதிருப்தியிலுள்ள வாக்காளர்களது வாக்குகள் தமிழ் தேசிய மக்கள் முண்ணணிக்குப்போகாது சிதறுண்டுபோவதற்கான ஏற்பாடாகவும் இது இருக்கலாம்.

தேர்தல் முடிவுற்ற அடுத்தநாளே எல்லாம் சரிவந்திடும் எனக் கூட்டமைப்பு சொல்வது பெரும் வேடிக்கையாக இருக்கு, இலங்கைத்தீவு சுதந்திரமைடைந்த காலத்திலிருந்து அதாவது அறுபத்துஏழு வருடங்களாக வெவ்வேறு வழிகளில் போராடி இந்தியாவும் இந்திய இராணுவமும் சிங்களவன் தலையணைக்குப் பக்கத்தில் வந்துநிண்டு முயற்சிசெய்தும் நாராயணனை நடுத்தெருவில் அலையவிட்டு வேடிக்கை பார்த்ததையும் அன்றிலிருந்து இன்றுவரை இனவழிப்பினை தொடர்ந்து செய்வதை நிறுத்தாமலும் தனது தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி செயற்படும் சிங்களத்தை நம்புங்கள் எனக்கூறுவது இலவுகாத்த கிளியின் செயலுக்கு ஒப்பானது.

இதுவரையிலும், போரின் இறுதிநாட்களிலும் தமிழர்க்கெதிரான இனவழிப்பை இலக்காகக்கொண்ட போர்க்குற்றம் என்பதை நாம் சர்வதேச அளவில் நிரூபித்து, அதன்பின்னரான, இனவழிப்புக்கு உள்ளான ஒரு தேசிய இனம் தானே பிரிந்துபோகக்கூடிய உரிமையையும் அதற்கான தாராதரத்தையும் பெற்றுக்கொள்கின்றது எனும் உலகப்பொதுவிதிகளுக்கு அமைவான தன்னாட்சிமிக்க தனித்தேசத்தை அமைக்கக்கூடிய சூழ்நிலையைநோக்கிப் பயனிப்பதே இலங்கைத்தீவின் தமிழனுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு, அதற்கான பாதையையும் அப்பாதையில் இணைபவர்களையும், பயனிக்கக்கூடியவர்களையும், தற்போது யார் ஆதரித்துநிற்கிறார்களோ அவர்களது கைகளை பலம்மிக்கதாக ஆக்குவதே தமிழா, காலம் உனக்கிட்டிருக்கும் கட்டளை.

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் தன்னட்சி மிக்க தனித் தேசியம் அமையும் தமிழ்த் தேசிய விண்ணணியின் விண்ணர்கள் நிச்சயம் வழிசமைப்பார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் தன்னட்சி மிக்க தனித் தேசியம் அமையும் தமிழ்த் தேசிய விண்ணணியின் விண்ணர்கள் நிச்சயம் வழிசமைப்பார்கள்!

இறக்கும் வரை இரந்து வாழ்பவனைவிட
இறக்கும் வரை போராடி வாழ்பவனே சிறந்த மனிதன்

அந்த வகையில் நீங்கள் சொல்லும் விண்ணர்கள் சிறந்தவர்களே

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே மாதத்தில் கடைசியில் போர்நிறுத்தத்துக்காக கெஞ்சி கௌரவமாக ஆயுதங்களை மௌனித்தவர்களின் (உங்கள் மொழியில் இறக்கும் வரை போராடினார்கள்) வழியில் செல்லும் விண்ணர்களையா சொல்கிறீர்கள்? நல்லது மீண்டும் ஒருமுறை கௌரவமாக தலைகுனிவொன்றுக்கு புலிவால்களுடன் இணைந்து அழைத்துச் செல்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஐயா வடக்கோட மட்டுப்படுத்திட்டார். பிசினஸை கிழக்கிற்கு கொண்டு போற பிளான் இப்போதைக்கு இல்லைப் போல. ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.