Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரை விமர்சனம்: பாகுபலி

Featured Replies

baahubalireview_2470363f.jpg

காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி.

பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை.

மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா அருகிலுள்ள அபாயகரமான மலை உச்சியின்பால் ஈர்க்கப்படுகிறான். புஜபலம் பொருந்திய வீர இளைஞனாக வளரும் சிவா (பிரபாஸ்) தொடர்ந்து அந்த மலை உச்சியை நோக்கிச் செல்ல முயல்கிறான். பலமுறை தோற்கும் அவன் முயற்சி, மலையின் அந்தப் பக்கம் ஒரு அழகிய பெண்ணைக் (தமன்னா) கண்டதும் புதிய உத்வேகம் பிறக்கிறது. அந்தப் பெண் மீது மையல் கொண்டவன் அவளது லட்சியத்தைத் தன் லட்சியமாக ஏற்றுப் புறப்படுகிறான்.

தென்னிந்திய நிலப்பரப்பில் மகிழ்மதி ஒரு சாம்ராஜ்யம். அங்கே அரங்கேறும் சதியின் விளைவால் ஒரு அரச குடும்பம் வீழ்த்தப்படுவதும், ராஜ வாரிசு எங்கோ வளர்ந்து, உண்மை அறிந்து பழி தீர்த்து பகை முடிப்பதும்தான் கதை. மன்னன் பாகுபலியாகவும், மகன் சிவாவாகவும் பிரபாஸ்... அரசி தேவசேனாவாக அனுஷ்கா... பாகுபலியுடன் வாரிசுரிமைப் போர் நடத்தும் சகோதரன் பல்லாளனாக ராணா டகுபதி.

மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும் இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன் மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன் கதையைத் தெரிந்துகொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.

அமர் சித்திரக் கதைகளை ஞாபகப் படுத்தும் ஃபேண்டசி படம்தான். அடிப் படைக் கதையும் திரைக்கதையும் புதுமையானவை அல்ல. எனினும் படத்தின் காட்சி அமைப்பும் பாத்திர வார்ப்புகளும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.

படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர் பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் சுவாரசியமாக்கி யிருக்கிறார் ராஜமௌலி.

போர்க் களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயனின் படையை, 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவை.

திரண்ட புஜங்களும் முறுக்கேறிய உடலும் கொண்ட பிரபாஸ், ராணா டகுபதி இருவருமே சண்டைக் காட்சிகளில் தனித்துவமாக வெளிப் படுகின்றனர். பிரபாஸ் புஜபலம் காட்டும் இடங்களில் சோபிக்கும் அளவுக்கு அழுத்தமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சோபிக்க வில்லை. நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் ராணாவின் கண்களில் தெறிக்கும் வன்மம் மனதில் நிற்கிறது. தமன்னா, வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கும் தேவதையாக அறிமுகமாகி, போராளியாகவும் காதலியாகவும் இரு வித உணர்வு பாவங்களைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்.

நடிப்பு என்று சொன்னால் நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகி யோர்தான் ஜொலிக்கிறார்கள்.

நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட வெர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம், ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட் ஆகிய இரண் டும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அடித் தளம். குறிப்பாகப் போர்க்களக் காட்சிகள் அபாரம். மகிழ்மதி ராஜ் ஜியத்தின் தலைநகரைப் பிரமாத மான கற்பனையுடன் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங் களின் ஆடை, அணிகளின் வடிவமைப் பாளர்கள் ரமா, பிரசாந்தியும் பாராட்டுக்குரியவர்கள்.

இத்தனை இருந்தும் முதல் பாதி சற்று இழுவைதான். பாத்திரங்களின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது கதை நடக்கும் நிலப்பரப்பு தமிழகம் அல்லது தென்னிந்தியா என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பனி படர்ந்த மலை எங்கே இருக்கிறது? பனிச் சரிவில் பிரபாஸும் தமன்னாவும் தப்பித்து வரும் காட்சியில் விறுவிறுப்பு இருக்கும் அளவு நம்பகத்தன்மை இல்லை. தேவசேனாவை மீட்டு வரும் காட்சியும் அப்படியே. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும் கலை வேலைப்பாடுகளும் அபாரமான தொழில்நுட்பமும் சேர்ந்து இந்தக் குறைகளை ஈடுகட்டுகின்றன.

காலகேயர்களின் மொழி, தோற்றம், கொடூரம் ஆகியவை அவர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கருப்பு வண் ணம் பூசப்பட்டிருப்பது கருப்பு நிறம் மீதான ஒவ்வாமையையே பிரதிபலிக் கிறது.

மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் செழுமையைச் சேர்க்கின்றன. மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் மற்றொரு பலம்.

எதிர்பார்ப்புகள் அதிகமாகக் கிளம்பு வது ஒரு படைப்புக்குப் பாதகமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால் பாகுபலி ஏற்படுத்தும் பிரமிப்பு, அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-பாகுபலி/article7413451.ece?homepage=true

 

இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்  இப்போதிருந்தே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Prabhas.jpg

நல்ல படமெண்டுதான் கனபேர் சொல்லுறாங்கள்.......நேரம் கிடைச்சால் பார்ப்பம்.

 

 

பாகுபலி படத்தினை இன்று குடும்பத்துடன் சென்று பார்த்தேன்.

பிரமாண்டத்தின் உச்சம்.

வெறுமனே காட்சியமைப்பு மட்டுமன்றி கதை, இசை, நடிப்பு என்று விரிந்து செல்லும் பிரமாண்டம். சின்னஞ் சிறு காட்சிகளுக்கு கூட கடும் மினக்கெடலும், நுணுக்கமுமாக பிரமிக்கத்தக்க படைப்பு இது.

திரையரங்கம் சென்று பார்த்தால் மட்டுமே அதன் உச்ச பிரமாண்டத்தினை உணர முடியும்.

படம் முடிந்து, திரை அரங்கத்திலிருந்து வெளியே வந்த பின்னும் பின் தொடருகின்றது பிரமிப்பு.

இரண்டாம் பாகம் எப்ப வரும் என்று காத்திருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, தியேட்டருக்குப் போய் படம் பார்க்க, பஞ்சியாய் இருக்கு.
இணையத்தில்... இந்தப் படத்தின், "லிங்கை" இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் இரண்டாம் பாகத்தை பார்க்க மாட்டேன்..!

பல இடங்களில் இது கணணிமூலம் உருவாக்கியதுதான் என மிகத் தெளிவாக தெரிகிறது.. குறிப்பாக காளை மாடு, கொட்டும் அருவிகள், அரண்மனை செட்டுகள், தூரத்தில் தோன்றும் பனிமலை சிகரங்களின் அடியின் காட்டப்படும் நகரம் போன்றவை..

கதாநாயகன் ஸ்பைடர்மேன் மாதிரி மலைகளின் மீது தாவித்தாவி வருவது படு செயற்கை.. படம் சுத்த போர்..!

கவர்ந்த ஒரே அம்சம், போர்க்காட்சிகள் மட்டுமே..

இப்படத்தை ஒப்பிடுகையில் "பாபநாசம்" திரைப்படம் ஆயிரம் மடங்கு திறம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

சார், வன்னியன் சார் ! நீங்கள் முன்னுக்கு அழகான ஆசனத்தில் உக்காந்து ஸ்டீரியோவில் வரும் மெல்லிசையை கேட்டுக் கொண்டு , அருகில் இருக்கும் ஓவியங்களை (சுவரில்) ரசித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு வாறதை விட்டுட்டு எதற்காக சமையல் அறையினுள் நுளைந்தீர்கள்...! :lol: :)

இப்ப வாந்தி வருது, வயிற்றைப் பிசையுது என்றால் நாம் என்ன செய்ய முடியும்...! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சார், வன்னியன் சார் ! நீங்கள் முன்னுக்கு அழகான ஆசனத்தில் உக்காந்து ஸ்டீரியோவில் வரும் மெல்லிசையை கேட்டுக் கொண்டு , அருகில் இருக்கும் ஓவியங்களை (சுவரில்) ரசித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு வாறதை விட்டுட்டு எதற்காக சமையல் அறையினுள் நுளைந்தீர்கள்...! :lol: :)

இப்ப வாந்தி வருது, வயிற்றைப் பிசையுது என்றால் நாம் என்ன செய்ய முடியும்...! :)

சுவி ஐயா..!  குடும்பத்தோடு எந்த ஓட்டலுக்கு உணவருந்த சென்றாலும், ஆண்கள் 'ஞே' என முழித்தாவாறு பரிமாறும் உணவுகளை ஒன்றும் சொல்லாமல் விழுங்கையில், வீட்டுப்பெண்கள் என்ன சொல்வார்கள்..?

"என்ன மசாலா போட்டிருக்கான் பாவி.. உப்பு தூக்கலாக இருக்கு.. சுவையேயில்லை, நீங்கள் இப்படி 'கோட்டான்' மாதிரி எதைக் கொண்டு வந்து போட்டாலும் வாரிக் கொட்டிக்கிறீங்களே..?" என இடி வாங்கியதில்லை..? :):lol:

பெண்களுக்கு சமையலின் நேர்த்தியும், சுவையும் அதிகம் தெரியும் தானே?

அதுமாதிரிதான் இதுவும்! :innocent:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Prabhas.jpg

நல்ல படமெண்டுதான் கனபேர் சொல்லுறாங்கள்.......நேரம் கிடைச்சால் பார்ப்பம்.

 

 

20 பேரை சுட்டுகொன்று, மீண்டும் வந்தால் சுடுவோம் என்கிறான் தெலுங்கன்,
காவேரி தரமாட்டோம், நீதி ஆணை வந்தாலும் ஒரு சொட்டு கூட குடுக்க மாட்டோம் என்கிறான் தெலுங்கன்...
காவிரியில அணை கட்டக்கூடாதுனு இங்க விவசாயி போராடுனப்ப அங்க தமிழ் மொழியே ஒலிக்ககூடாதென்று தமிழ் தொலைகாட்சி சேனல்களை தடை பண்ணினானுங்க...
ஆனால் நாம் மட்டும் வாரி கொடுத்துவிட்டு எழுதிகொண்டிருக்கிறோம் "பாகுபலி - திரை விமர்சனம்"
தமிழன் மட்டும் தான் பொங்கிய பொழுதே அணைந்துவிடுகிறான், 
சினிமாவால் அழிந்தும் விடுகிறான்...

11219694_723251987800264_356731323211663

படித்ததில் பிடித்தது.

 

பாகுபலி - விகடன் சினிமா விமர்சனம்

 

'ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...’ கதைதான். அதை ஆண்ட்ராய்டு யுக அப்டேட் சினிமாவாக மாற்றினால்... 'பாகுபலி’! 

ஒரு சாம்ராஜ்யம்... இரு வாரிசுகள்... குரோதம், விரோதம். ஓர் அரசு வாரிசு கொல்லப்பட, அவருடைய குழந்தை எங்கோ யாரோ ஓர் ஏழை வீட்டில் வளர்ந்து பெரியவனாகி பழிவாங்கும் படலத்தின் முதல் அத்தியாயம்தான் படம். 'அடிமைப்பெண்’ காலத்துக் கதை. அதில் மெகா அருவி, மகா சாம்ராஜ்ஜியம், செம பில்ட்அப் பிரபாஸ், ரணகள ராணா, கெடுபிடி சத்யராஜ், ஆஹா தமன்னா, கொலவெறி யுத்தம் என லொகேஷன்களுக்கும் கேரக்டர்களுக்கும் செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.

அருவி முதல் அரண்மனை வரை... பூக்கள் முதல் போர் வரை... இதுவரையிலான இந்திய சினிமா தொடாத பிரமாண்ட உச்சத்தைத் தொட்டிருக்கிறது 'பாகுபலி’ குழு. ஹாலிவுட் சினிமாக்களின் தமிழ் டப்பிங் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு, 'மேட் இன் இந்தியா’ பெருமிதம் கொடுத்ததற்காக, ராஜமௌலிக்குத் தரலாம் ஒரு பிரமாண்ட பூங்கொத்து.

இந்திய சினிமாக்களில் சொல்லிய கதைதான்... ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்த பிரமாண்டம்தான். ஆனாலும், அரை மணிக்கு ஒருமுறை விஷ§வலாக அசரடிக்கிறான் 'பாகுபலி’. 'விஷுவல் ட்ரீட்’டை மனதில் வைத்தே படத்தின் ட்ரீட்மென்ட்டை அமைத்திருக்கிறார்கள்.

p11a.jpg

குழந்தையை ஒற்றைக் கையில் தாங்கிக் காப்பாற்றும் ரம்யாகிருஷ்ணன், சிவலிங்கத்தை அலேக்காகத் தூக்கும் பிரபாஸ், 'நீர் மலை’யேறும் முயற்சிகள், 'டியூட்டி’ தமன்னா சில டச்-அப்களில் 'பியூட்டி’யாவது, காட்டு எருமையைக் கதிகலங்கவைக்கும் ராட்சச ராணா, அசரவைக்கும் மகிழ்மதி அரண்மனையின் ப்ளூ பிரின்ட்,

120 அடி உயர தங்கச் சிலை, 'திரிசூல’ப் போர் வியூகம் என உறுத்தாத 'சி.ஜி’-க்களால் நம் புருவங்களை உயர்த்துகிறது அந்தப் பிரமாண்ட உழைப்பு.

மகிழ்மதி அரண்மனை வாயிலை அலங்கரிக்கும் யானைகளின் தூக்கிய கால்களுக்குக் கீழே வளர்ந்திருக்கும் பனைமரம் முதல், ராணாவின் தேர் முகப்பாக மிரட்டும் சிங்கமுகம் வரை கிராபிக்ஸ்களிலும் கலை இயக்கத்திலும் அவ்வளவு நகாசு.

விளையாட்டுப் பையனாகத் திரிந்ததாலோ என்னவோ மகனைவிட 'அப்பா’ பிரபாஸ்தான் நச் முத்திரை பதிக்கிறார். சகோதரனை நம்பி மலை உச்சியில் இருந்து தயங்காமல் குதிப்பதும், போர் சவாலை சகோதரன் முறியடித்தபோது கலங்காமல் சிரிப்பதுமாக... அச்சு அசல் 'மக்களின் மன்னர்’! 'அப்படியொரு ஹீரோவுக்கு இப்படியொரு வில்லன்தான் சரி’ என ரசிகர்களையே மார்தட்ட வைக்கிறது ராணாவின் கட்டுமஸ்து. காட்டு எருமையை 'டண்டனக்கா’ ஆக்குவதும், சகோதரன் வீசிய கயிறு கை நழுவுவதைப் புன்னகையோடு ரசிப்பதுமாக... வெஷம்... வெஷம்.. வெஷம்! சில காட்சிகள்தான் என்றாலும் தோன்றும்போதெல்லாம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.சிம்மாசனத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பால் புகட்டியபடி, 'இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்’ என அரசாங்கத்தை வழிநடத்துவது... மிரட்டல் மதியூகம். அடிமையாகவும் வீரனாகவும் செம கெட்டப் காட்டுகிறார் 'கட்டப்பா’ சத்யராஜ். 'ஆக்ஷன் அவதார்’ எடுத்திருக்கிறார் தமன்னா. ஆனாலும், 'அழகி’யாக்கி அருவியில் நனைத்து, பூக்களால் இழைத்து 'தெலுங்கு சினிமா ஹீரோயின்’ ஆக்கிவிட்டார்கள். நைச்சியச் சிரிப்போடு வில்லத்தனம் செய்யும் நாசரும், வித்தியாச உடல்மொழியில் உறுமும் அந்தக் காலக்கேயத் தலைவனும்... நச். அனுஷ்கா..? அடுத்த பாகத்துக்கு விமர்சனம் ரிசர்வ்டு!

p11b.jpgஇப்படி, படத்தின் நடிகர்களையும் பின்னணியையும் பற்றி எவ்வளவு நீளமாகவும் சிலாகிக்கலாம். ஆனால், திரைக்கதையில் அந்த அளவுக்கு 'வெயிட்’ இல்லை. எதிர்பார்த்த திருப்பம் எதிர்பார்த்த சமயம் தவறாமல் 'உள்ளேன் ஐயா’ சொல்கிறது. 'ஈ’யை வைத்து அத்தனை பிரமாண்ட எமோஷன் உண்டாக்கிய ராஜமௌலியின் திரைக்கதையா இது? என்ன சாரே!

'சிவன் என்ன நினைக்கிறான்னு எவனுக்குத் தெரியும்?’, 'இதுவரை நான் பார்க்காத கண்ணுலாம், என்னைக் கடவுள்போல பார்க்குது’, 'அரசனுக்கான தகுதி எத்தனை எதிரிகளைக் கொன்றான் என்பது அல்ல; தன் மக்கள் எத்தனை பேரைக் காப்பாற்றினான் என்பதுதான்’ - 'விஷ§வல்களுக்கு’ இடையே கிடைக்கும் இடைவெளிகளில் ஈர்க்கிறது மதன் கார்க்கியின் வசனங்கள். பிரபாஸின் வாள், ராணாவின் கிரீடம், சிங்கமுகத் தேர், குத்தீட்டி கால் காப்பு யானை, போர்க் கருவிகள், அரசவை... என 'மகிழ்மதி’க்கே அழைத்துச் செல்லும் சாபு சிரிலின் கலை இயக்கம், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கான பிரத்யேக ஆடை, மேக்கப்... இவற்றில் நிஜம் எது, நிழல் எது என உணர முடியாத கிராபிக்ஸ்... போட்டிபோட்டு உழைத்திருக்கிறார்கள். பின்னணி இசையில் மெர்சல் செய்திருக்கிறார் மரகதமணி. முரசறைகள், போர்ப் பறைகள், பிளிறல்களை 'டால்பி அட்மாஸ்’ துல்லியத்துடன் அலறவைத்துப் பதறவைக்கிறது பேக்ரவுண்ட் ஸ்கோர். கிராபிக்ஸுக்கு இடம் கொடுத்து அடக்கி வாசிக்கவேண்டிய நிர்பந்தம்தான் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருக்கு. ஆனால், அந்த 'அண்டர்ப்ளே’யிலும் செம ஸ்கோர் அடிக்கிறார். அசத்தல் போர்க் காட்சிகளில் சீனிவாச மோகனின் வி.எஃப்.எக்ஸ் டீமும், பீட்டர் ஹெய்னின் ஆக்ஷனும் சாகசக் கூட்டணி அமைத்திருக்கிறது.

ஆனால், இவ்வளவு இருந்தும் முதல் பாதியில் அவ்வளவு மெதுவாக நகரும் கதை அலுப்பு. அதிலும் சம்பிரதாயமாக வரும் பாடல்கள்... பிரமாண்ட சலிப்பு! வானத்துக்கே உயர்ந்து நிற்கும் அருவி, பனிச்சரிவை உண்டாக்கும் பனிமலை, போர்க்களப் பாலைவனம்... இம்புட்டு வெரைட்டி காட்டும் நிலங்களை 'கால்நடை’யாகவே பிரபாஸ் கடப்பது... ஜியோகிராபி மிராக்கிள்!

'அட... இது என்னடா ட்விஸ்ட்?’ என நிமிர்ந்து அமரும்போது, 'இதான் க்ளைமாக்ஸ்... மிச்சத்தை, அடுத்த பாகத்துல அடுத்த வருஷம் பார்த்துக்கோ’ எனச் சொல்லும் அந்த க்ளைமாக்ஸ் தில்... 'வி ஆர் வெயிட்டிங் ராஜமௌலி’!

'வாய் வழி’ தொடங்கி அனிமேஷன் காலம் வரை பல வெர்ஷன்களில் கேட்ட, பார்த்த ராஜா - ராணி கதையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்ற                தற்காகவே சொல்லலாம்... 'ஜெய் பாகுபலி’!

- விகடன் விமர்சனக் குழு

 

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108363

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.