Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம உள்ள வரலாமுங்களா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட வரவேற்புகளுக்கு நன்றிங்கோ.

நீங்க சொல்லுற 'சாதீய பெயரை தவிர்த்தல் நல்லது' என்கிற புத்திமதி மிக்க மோசமுங்கோ. இருக்கிறதை இல்லாத மாதிரி ஏனுங்கோ காட்டச் சொல்லுறியள்.

பாரதி பாடினான் ' சாதிகள் இல்லையடி பாப்பா' என்றால், என்ன இல்லாத சாதியையா இருக்கு என்று பாடினான்?

மொழி, மதம், கலாச்சாரம், பிரதேசம் , அரசியல் போன்றவற்றை தங்கட புனைபெயரில் தாங்கி வரும் பெயர்கள் குறித்து யாழ் களத்தில் ஆரும் அக்கரை 'காட்டியதாக தெரியவில்லை. ஏன் யாழ் களம் என்பது கூட ஒரு பிரதேசத்தின் குறியீட்டையும் தனக்குள் கொண்டுள்ளதுதானுங்கொ.

'மதன்' உங்க பெயர் கூட இந்துமத சின்னத்தின் ஒரு பிரதிபலிப்புதான்.

அப்பிடி யாழ் களத்தில ஆள் ஆளுக்கு தங்க இஸ்டத்துக்கு புனைபெயரை வைச்சிருக்கிறியள்.

'தலித்' என்றதும் கெம்பி எகிறாதீங்க.

ஒருத்தர் எழுதியிருந்தார் 'கலப்பு திருமணம்' எண்டதை தான் மனிசருக்கு மிருகத்துக்கும் கலியாணம் கட்டி வைப்பதாக நினைத்ததாக.

அவங்க நினைபில பிழை இல்லீங்க. நாங்க காலம் காலமாக மிருகங்கள் மாதிரித்தான் நடத்தப்பட்டோம். நாங்க எங்களை எப்பிடி சொல்லவேணும் என்டதை கூட கட்டப்பஞ்சாயத்து செய்யும் வெள்ளாள மனவமைப்பில், அவர்களது 'உட்டோப்பியன்' சமூக பிரக்ஞையில், அவர்களது அரசியல் கருத்துலகில் அடிப்படையான மாற்றங்கள் நிகழுமென நாம எப்படி எதிர்பார்க்க முடியும்.

  • Replies 71
  • Views 6.6k
  • Created
  • Last Reply

வாருங்கள் தலித் வணக்கம்!

என்னைப் பொறுத்த வரையில் தலித் என்ற உங்கள் பெயர் லலித் என்பது போன்ற ஒரு பெயரே. ஏனெனில் எங்கள் காலத்தில் யாரும் சாதி குறித்து அதிகம் பாதிக்கப்பட்டதாக நான் வாழ்ந்த சூழலில் அனுபமில்லை. ஆனால் ஏழைகள் நடுத்தரம் பணக்காரர் என்று 3 பிரிவுகளை சமுகத்திலும் பாடசாலையிலும் கண்டிருக்கிறேன்.

உங்களிடம் ஆழமான மற்றும் பாரமான கருத்துக்கள் உள்ளன என எதிர்பார்க்கிறேன். அவற்றை நீங்கள் இங்கே பகிர அன்புடன் வேண்டி நிற்கின்றேன்.

உங்கடை வரவேற்புக்கு மெத்தப்பெரிய நன்றிங்கோ

நம்மட வசிப்பிடம் யுகே யில் இல்போர்ட் என்னும் இடமுங்கோ

;) ;) ;) ;) ;) ;) வந்திருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னேற்றம் தான் தலித்.

முந்தி மேல்ஜாதிக்காரன் என்று சொல்லுறவர்கள். உங்களைக் கேவலப்படுத்த அந்தச் சொல்லைப் பாவித்தான். இப்போது என்னடா என்றால் நீங்களாகவே உங்களைச் சொல்லும் அளவுக்குத் தாழ்ந்து போனது உங்களுக்கு மிகப் பெரும் வெற்றி. அப்படியே தொடருங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொத்தம்பொதுவாக பூசிமொழுகி சொல்லாமல் நேரடியா சொல்லுக்கோ.

சாதிப் பெயர் சொல்லி அழைக்கிறது ஏதோ பழைய வரலாறுமாதிரி சொல்லிறியள். இப்பவும் இருக்கு. வெள்ளாளர் வலுகெட்டித்தனமா சாதியை இப்ப கையாண்டு வர்றியள். அப்பிடி ஒண்டுமே இல்லை எண்டு படு பாசாங்கு பண்ணிகினம்.

தூயவன் சொல்லுறார் ''..உங்களைச் சொல்லும் அளவுக்குத் தாழ்ந்து போனது.....'' சாதியை நாம சொன்னதால தாழ்ந்து போனது நாம அல்ல நீங்கள் தான். உங்கட மனங்களுக்கை ஒழிஞ்சு கிடக்கிற சாதிய மனவுலகு உங்களுக்கே ஒரு குற்ற உணர்வை தருகுது.

தமிழர் மத்தியில் சாதிய உணர்வு இன்னும் இருக்குது. அது புலம்பெயர்ந்து வேறை வந்திட்டுது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் அடையாளம் என்பது வெள்ளாள சாதியின் தனித்துவமே என்பதை மூடிமறைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மொழி, மதம், கலாச்சாரம், பிரதேசம் , அரசியல் போன்றவற்றை தங்கட புனைபெயரில் தாங்கி வரும் பெயர்கள் குறித்து யாழ் களத்தில் ஆரும் அக்கரை 'காட்டியதாக தெரியவில்லை. ஏன் யாழ் களம் என்பது கூட ஒரு பிரதேசத்தின் குறியீட்டையும் தனக்குள் கொண்டுள்ளதுதானுங்கொ.

'மதன்' உங்க பெயர் கூட இந்துமத சின்னத்தின் ஒரு பிரதிபலிப்புதான்.

அப்பிடி யாழ் களத்தில ஆள் ஆளுக்கு தங்க இஸ்டத்துக்கு புனைபெயரை வைச்சிருக்கிறியள்.

யாழ் களத்தின் அல்லது தளத்தின் இலச்சினை என்பது அதன் யாழ் என்பதற்கான பதப்பிரயோகத்தின் தன்மையை விளக்குகிறது. யாழ் என்பது ஒரு வாத்தியக் கருவி. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளாக இருந்ததில் அதுவும் ஒன்று. அந்த வகையில் யாழ் வாசிக்கும் பழக்கம் அருகியே போய்விட்ட இக்காலத்தில் அதனை யாழ் ஞாபகமூட்டுகிறது.

யாழ் இங்கு கருத்தை இசைக்கிறது. யாழ்ப்பாணர்களை அல்ல. அந்த யாழ் பாணர்களில் தான் தொழில் அடிப்படையில் அமைந்த பாணர்கள் என்ற சமூக பாகுபாடு உண்டு. அது யாழ்ப்பாணத்தின் பெயரோடே இன்னும் இருக்கும் போது யாழ்ப்பாணத்தவர்களின் உள்ளத்தில் இருந்து போய்விடுமா என்பது?????????????! அந்த வகையில் உங்கள் இதர வினவல்கள் நியாயமே..!

பொத்தம்பொதுவாக பூசிமொழுகி சொல்லாமல் நேரடியா சொல்லுக்கோ.

சாதிப் பெயர் சொல்லி அழைக்கிறது ஏதோ பழைய வரலாறுமாதிரி சொல்லிறியள். இப்பவும் இருக்கு. வெள்ளாளர் வலுகெட்டித்தனமா சாதியை இப்ப கையாண்டு வர்றியள். அப்பிடி ஒண்டுமே இல்லை எண்டு படு பாசாங்கு பண்ணிகினம்.

தூயவன் சொல்லுறார் ''..உங்களைச் சொல்லும் அளவுக்குத் தாழ்ந்து போனது.....'' சாதியை நாம சொன்னதால தாழ்ந்து போனது நாம அல்ல நீங்கள் தான். உங்கட மனங்களுக்கை ஒழிஞ்சு கிடக்கிற சாதிய மனவுலகு உங்களுக்கே ஒரு குற்ற உணர்வை தருகுது.

தமிழர் மத்தியில் சாதிய உணர்வு இன்னும் இருக்குது. அது புலம்பெயர்ந்து வேறை வந்திட்டுது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் அடையாளம் என்பது வெள்ளாள சாதியின் தனித்துவமே என்பதை மூடிமறைக்க வேண்டாம்.

தலித் என்ற சொல் ஈழத்தைப் பொறுத்தவகையில் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை.

தலித்தியம் என்று இப்போ அதற்கு ஒரு இயமே கற்பிக்க வெளிக்கிட்டுவிட்டார்கள். இது தலித்துக்களின் இருப்பை இந்தியாவில் நிறுவி சமூக பாகுபாடுகளைத் திணித்து அதில் அரசியல் நடத்துவதே நோக்கம்.

அமெரிக்காவும் மேற்குலகும் பிச்சைக்காரநாடுகளில் பிரச்சனைகளை மூட்டிவிட்டு தங்களின் அரசியலை நடத்துவது போல..(அங்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு எதிர்ப்பின்றி தலைவிரித்தாடுகிறது) இவர்களுக்கும் இந்தப் பாகுபாடு அவசியம்.

இயற்கையாக இல்லாத மனிதன் தானே தன்னினத்தை அடிமைப்படுத்த பலவீனப்படுத்த பயன்படுத்திய வழிமுறைகளை இன்னும் காவித் திரிவதில் இலாபம் கிடைப்பவர்கள் நிச்சயம் அதை விடமாட்டார்கள். நீங்களும் தான் அவர்களும் தான். :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''தலித் என்ற சொல் ஈழத்தைப் பொறுத்தவகையில் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை.'' என்னும் நெடுக்காலபோவானின் கருத்து வெள்ளாள சாதிக்கு எதிரான புதிய சிந்தனையை- புதிய மொழியை- புதிய பார்வையை நிராகரிப்பது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளின் அய்கியத்துக்கு ஆப்பு வைக்கும் வேலையையும் நசுக்கிடாமல் செய்யுதுங்கோ.

''தலித்தியம் என்று இப்போ அதற்கு ஒரு இயக்மே கற்பிக்க வெளிக்கிட்டுவிட்டார்கள். இது தலித்துக்களின் இருப்பை இந்தியாவில் நிறுவி சமூக பாகுபாடுகளைத் திணித்து அதில் அரசியல் நடத்துவதே நோக்கம்.'' என்பது அப்பட்டமான யாழ் உயர் சாதியின் அரசியல் பார்வையாகும். உவருடைய கருத்தை பார்த்தால் தமிழ் தேசியம் என்பதும் அரசியல் வியாபாரம் எண்ட அர்த்தமாகிவிடும்.. சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளானவனுக்குதான் தெரியும் அதன் கொடூரம் எப்படியானது எண்டு, அதாவது சிங்கள இனவெறிக்கு உள்ளானவனுக்குதான் தமிழ் தேசியம் என்பதன் தேவையும் அர்த்தமும் தெரியும்.

''இயற்கையாக இல்லாத மனிதன் தானே தன்னினத்தை அடிமைப்படுத்த பலவீனப்படுத்த பயன்படுத்திய வழிமுறைகளை இன்னும் காவித் திரிவதில் இலாபம் கிடைப்பவர்கள் நிச்சயம் அதை விடமாட்டார்கள். நீங்களும் தான் அவர்களும் தான்'' சாதியரீதியாக ஒடுக்கிக்கொண்டு இருக்கும் உம்போன்ற தரவளிகளிடம் நாம மடிப்பிச்சை ஏந்த இங்கை வரவில்லை. சாதியரீதியா நாம ஒடுக்கப்படும் வரை என்னை தலித் என்றுதான் காவித்திரிவேன். முதலில் சாதிய ஒடுக்கு முறை எமது சமூகத்தில் மிக மோசமானது என்பதை வெளிப்படையாகவேனும் நெடுக்காலபோவான் ஒத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் ''இல்லாத சாதியை தூக்கிப்பிடிப்பதாக குரைப்பவர்களில் ஒருவராகதான்'' அவரை நாம கருதுவோமுங்கோ.

Edited by தலித்

சாதி..தலித்து இவையெல்லாம் நீங்களா உருவாக்கிக் கொண்டு காவித் திரிவது. வேளாண்மை செய்பவர்களிடம் தானியமும் நெல்லும் பெறுவதற்காக அவர்களிடம் சேவகம் செய்துவிட்டு மற்றவர்கள் அவர்களுக்கு தாங்களாகவே பணிந்து நடந்து பொருள் தேடிக் கொண்டு பிழைத்துக் கொண்டனர். வேளாளர்கள் பிரபுக்களாக இருந்ததால் நில புல சொந்தக்காரர்களாக இருந்ததால் ஏனையவர்கள் அவர்களுக்கு சேவகம் செய்து தங்கள் இயலாமையை வளர்த்து வயிறு வளர்த்தனராம். ஆக சாதி தலித்து என்பதெல்லாம் இயலாமைகளின் வெளிப்பாடுகள். இன்றைய உலக ஒழுங்கில் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலை தோன்றிய பின்னும் இன்னும் சாதியும் தலித்தியமும் பேசுவேன்..என்னைத் தடுக்க முடியாது என்றால் வேளாளரும் பதிலுக்கு தன் பிரபுத்துவத்தை நிறுவுவான் நீங்கள் தொடர்ந்து சேவகம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கங்கள். இப்படியான மனநிலை இருக்கும் வரை தமிழ் தேசியம் என்ன தமிழர் உலகம் இரண்டாகப் பிளந்தாலும் உங்கள் போன்றோரின் சேவக மனபான்மையையும் வேளாளரின் பிரபுத்துவ எண்ணங்களையும் அழிக்கவே முடியாது. மாமரம் இருந்தால் தானே குருவிச்சைகள் பிழைக்க முடியும். :P :icon_idea:

மாண்புமிகு தலித் அவர்களே!ஒரு மாட்டுக்கு ஒரு சூடு.முதலில் நீங்கள் திருந்துங்கள் உலகம் தானாக திருந்தும்.உம்மைப்போலவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

சாதிக்கட்டமைப்பு தாயகத்தில் இருக்க கூடாது ஆனால் இல்லை என்று சொல்பவர்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. 3 வருடங்களுக்கு முன் தாயகம் சென்ற போது என் நண்பன் சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. வன்னியிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியில் வேலை செய்யும் பெண்ணும் அவ்வானொலியில் கவிஞராக இருந்த ஒருவரும் காதல் ஒருவரை ஒருவர் காதலித்தனர். கடைசி நேரத்தில் ஆஸ்தான கவியொருவரால் அப்பெண் குறைந்த சாதிப்பெண் என்று ஆலோசனை வழங்கப்பட்டதால் காதலன் பெண்ணை கைவிட்டு விட்டார்.

பி.கு: இச்செய்திக்கு ஆதாரம் கேட்டு பொல்லுடன் வருபவர்களின் கவனத்திற்கு, என்னிடம் எழுத்து மூல ஆதாரம் இல்லாததால் தான் எவரின் பெயர்களையும் வெளியிடவில்லை.

நாடு விட்டு நாடு போனாலும் தமிழருக்கு இந்தப் பிரைசிசனை மட்டும் தீராது ஆனால் இந்த யாழ் களத்துக்கு ஜாதி, மதம், இனம், மொழி எதுவும் தெரியாது இதுக்கு தெரிந்ததுயெல்லாம் தமிழ் உறவுகளை மட்டும் தான். அப்படிப்பட்ட இடத்தில் ஐயோhhhhhhhhhhhh ஆண்டவாhhhhhhhhhh இந்த பிரைச்சனை எப்பதான் தீருமோ. அதைவிட இந்தப் பகுதி யாழுக்கு புதிதாக வரும் முகம் தெரியா உறவுகளை இன்முகத்துடன் வரவேற்கும் பகுதி. அப்படி உங்களுக்கு இதைப் பற்றி ஆராய இல்லை வாதாட விரும்பினால் விவாதப் பகுதியில் விவாதிக்களாமே. (இது அனைத்தும் என் தனிப்பட்ட கருத்து)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலித்,

வருகைக்கு நன்றி.

நீங்கள் எங்கள் நாட்டுக்குரிய சொல்லான 'பஞ்சமர்' என்பதை உங்கள் பெயராகக் கொண்டு வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். கொள்கைகள், சித்தாந்தங்கள், போராட்ட வடிவங்கள் எல்லாத்தையும் கடன் பெறுவதுபோல் பெயரையும் கடன் பெறுவதாகத் தோன்றுகிறது.

ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கென பொதுச்சொல்லையும் அதன்வழி பொதுப்போராட்டத்தையும் கொண்டிருப்பதூடாக பலம்பெறுதல் எனும் தடத்தில் எனக்கு ஒப்புதலுண்டு.

நீங்கள் இங்கு வந்த நோக்கமும், எழுப்பப்போகும் பிரச்சினையும் எந்நோக்கத்திலானது என்பது எனக்குத் தெரியாது. (இன்று புலியெதிர்ப்பு நோக்கத்துக்காக மட்டும் ஒடுக்கப்பட்டோர் பிரச்சினை - ஒடுக்கப்பட்டோர் மீது துளியளவும் கரிசனையில்லாதோரால்- விசமத்தனமாகப் பாவிக்கப்படுவதையும் பார்க்கிறோம். பல சந்தர்ப்பங்களில் உண்மைக்குப் புறம்பாக கதைகளைக் கட்டவிழ்த்து விடுவதையும் உணர்கிறோம்)

ஆனால் இங்குச் சிலர் சாதிப்பிரிவினை இல்லை, அது அற்றுப் போயிற்று அல்லது போய்க்கொண்டிருக்கிறது என்றவாறு புலம்புவதைத்தான் விளங்கிக்கொள்ளவில்லை.

இன்னும் தமிழகத்தைப் போல் எல்லோரும் சாதி சொல்லியே ஆகவேண்டிய -சாதியை அரசுரீதியாக அங்கீகரிக்கிற நிலைக்கு எங்கள் நாடு வரவில்லை. ஆனால் சிலர் தங்கள் சாதியை வெளிப்படையாகவும் திமிராகவும் ஆவணபூர்வமாகவும் சொல்லிக்கொண்டிருக்கும்பே

தலித்தார் அவர்களே வாருங்கள், உங்களை இன்முகத்துடன் வரவேற்க்கிறேன் இந்தியனாக

தலித்தார் அவர்களே வாருங்கள், உங்களை இன்முகத்துடன் வரவேற்க்கிறேன் இந்தியனாக

ஏனங்கோ இந்தியானாக வரவேற்கின்றேன் என்று சொல்லி வரவேற்றால் தானோ ஏற்றுக்கொள்வார்கள்.

மோகன் அண்ணாவின் கவனதிற்கு இவர் எங்கு யாரை வரவேற்றாலும் இந்தியனாக என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறர் அதென்ன மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா இல்லை இந்தக் களத்திலை இவர் மட்டும் தானா? தமிழகத் தமிழர். இங்கு இவரை மாதிரி நிறையப் பேர் உள்ளார்கள் அவர்களும் இவரைமாதிரி கருத்து வைக்க வெளிக்கிட்டால் தமிழர் என்ற ஒன்றே தேவையில்லை

சரியா சொன்னிங்க சந்தியா

சரியா சொன்னிங்க சந்தியா

நன்றி மூகி தங்கள் ஆதரவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஏனங்கோ இந்தியானாக வரவேற்கின்றேன் என்று சொல்லி வரவேற்றால் தானோ ஏற்றுக்கொள்வார்கள்.

மோகன் அண்ணாவின் கவனதிற்கு இவர் எங்கு யாரை வரவேற்றாலும் இந்தியனாக என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறர் அதென்ன மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா இல்லை இந்தக் களத்திலை இவர் மட்டும் தானா? தமிழகத் தமிழர். இங்கு இவரை மாதிரி நிறையப் பேர் உள்ளார்கள் அவர்களும் இவரைமாதிரி கருத்து வைக்க வெளிக்கிட்டால் தமிழர் என்ற ஒன்றே தேவையில்லை

சந்தியா மிக மிக அருமையான கருத்து.உங்கள் கருத்துடன் நான் 100வீதம் ஒத்து போகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவனின் கருத்தோடு உடன்படுகிறேன:- பேப்பரில உயர் இந்து வேளாளர் எண்டு திருமண விளம்பரம் செய்யினம். அதுவும் சாதியத்திலிருந்து விடுபடா நிலைதானே..

உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தங்கள் சாதியை பகிரங்கமா சொல்லும் போது கிளம்பாத புகைச்சல் மற்றவர்கள் சொல்லும் போது ஏன் வரோணும்..

சும்மா ஒரு பேச்சக்கு யாராவது ஒருவர் பேப்பரில உயர் இந்து பறைய இனத்தை சேர்ந்த என்று விளம்பரம் கொடுத்தால் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கோ.. சாதாரணமான உயர் இந்து வேளாள இன விளம்பரங்களை படித்துச் செல்வது போல இருந்திடுவீர்களா.. சிலர் கிண்டலடிப்பர்.. சிலர் கேலி செய்வர்.. சிலர் இங்கை நடப்பது போல சாதி சாதி எண்டு உப்பிடி தூக்கித் திரியிற படியாலைதான் எங்கடை தமிழ் தேசியத்துக்கு விடுதலை இல்லை என்பீர்கள்..

நிற்க..

வன்னியிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியில் வேலை செய்யும் பெண்ணும் அவ்வானொலியில் கவிஞராக இருந்த ஒருவரும் காதல் ஒருவரை ஒருவர் காதலித்தனர். கடைசி நேரத்தில் ஆஸ்தான கவியொருவரால் அப்பெண் குறைந்த சாதிப்பெண் என்று ஆலோசனை வழங்கப்பட்டதால் காதலன் பெண்ணை கைவிட்டு விட்டார்.

இது தவறான தகவல்.. நடந்தது என்ன என்றால்..

காதலித்த வானொலிக் கவிஞர் பின்னர் சாதியை காரணம் காட்டி காதலை முறிக்க.. அதற்கெதிராக வானொலி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வெளிக்கிட ஆஸ்தான கவிஞர் ஒருவரால் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டது. ஆயினும்.. அந்த நேரத்தில் புலிகளின் படையணியொன்று வெளியிட்ட பாடல் ஒலிப்பெழை ஒன்றில் அவர் எழுதியிருந்த 2 பாடல்கள் நீக்கப்பட்டு வேறு போராளிகள் எழுதிய பாடல் சேர்க்கப்பட்டது.

சந்தியா மிக மிக அருமையான கருத்து.உங்கள் கருத்துடன் நான் 100வீதம் ஒத்து போகிறேன்.

நன்றி அண்ணா இது வெறும் கருத்து இல்லை என் மனதின் ஆதங்கம் ஏன் இந்தியர் மட்டுமா மனிதர் நாம் இல்லையா என்ன எங்களுக்கு தமிழர் என்று மட்டும் தான் சொல்லத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா இது வெறும் கருத்து இல்லை என் மனதின் ஆதங்கம

ஒருவர் பேசுவது புண்படுத்தாது ஆனால் நாம் அதை எடுத்துக் கொள்ளும் விதம் எம்மை புண்படுத்துகிறது

:3d_039:

ஆமாம் காவடி அது உண்மை அதற்காக எல்லா இடங்களிலும் ஏதாவது ஒன்றை சுட்டிக்காட்டக் கூடாது இங்கு ஒருவர் மட்டுமில்லை நிறைய இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அப்படி செய்தார்களா? இவர் இப்படி சுட்டிக் காட்டுவது என்னைப் பொறுத்தவரை இவரின் நோக்கப்படி எங்களை ஏளனம் செய்வது போன்று.

எவ்வளவு காலமாக யாழ் வருகின்றீங்கள் நான் யாழுடன் இணைந்து 1 வருடம் ஆகிறது ஆனால் யாழ் வர ஆரம்பித்து 2ஆண்டுகளுக்கு மேல் இது வரை ஒரு நாள் கூட யாரும் இலங்கைத் தமிழர் என்று கருத்து வைக்கும் போது சுட்டிக் காட்டியதை நான் அறியேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஏதாவது இந்திய தளங்களுக்கு செல்லும் போது நானொரு ஈழத்தமிழன் என சுட்டிக்காட்டுவோம் இல்லையா.. மற்றும் படி அவரது நோக்கம் விளங்கிறது. தயாராகத்தானே இருக்கிறொம்

நானும் நல்லவனின் கருத்தோடு 98.72381531942045 வீதம் ஒத்துப் போகிறேன். யாழில் பதிவு செய்யும் பொழுது எந்த சாதி எந்த குலம் கோத்திரம் போன்ற கேள்விகள் உள்ளடக்கப்பட வேண்டும். அந்த தகவல்கள் கட்டாயமாக எல்லாரின் சுயகுறிப்பில் காணப்படுவதன் மூலம் குறைந்த சாதி குலம் கோத்திரத்தினருக்கு மறுமொழி கொடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை. யாழில் களமாடியபடி நாம் பாவம் சேர்த்து அடுத்த பிறப்பில் புழுவாகவோ ப+ச்சியாகவோ பிறக்க விரும்பாவிட்டால் யாருடன் குப்பை கொட்டிறம் என்றதில் கவனம் தேவை. அந்த ஞானத்தை அடைய எம்பெருமான் அருள் பாலிப்பாராக.

[ஃஉஒடெ நமெ='சந்தியா' டடெ='Dஎc 13 2006, 11:09 PM' பொச்ட்='245520']

ஏனங்கோ இந்தியானாக வரவேற்கின்றேன் என்று சொல்லி வரவேற்றால் தானோ ஏற்றுக்கொள்வார்கள்.

மோகன் அண்ணாவின் கவனதிற்கு இவர் எங்கு யாரை வரவேற்றாலும் இந்தியனாக என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறர் அதென்ன மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா இல்லை இந்தக் களத்திலை இவர் மட்டும் தானா? தமிழகத் தமிழர். இங்கு இவரை மாதிரி நிறையப் பேர் உள்ளார்கள் அவர்களும் இவரைமாதிரி கருத்து வைக்க வெளிக்கிட்டால் தமிழர் என்ற ஒன்றே தேவையில்லை

[/ஃஉஒடெ]

ஏற்க்கெனவே நேரடியாக எந்த பதிப்புக் பதிக்கமுடியாமல் இருகிறேன் இதில் நீங்க வேற , தயவு செய்து வாயை புடுங்காதிங்கம்மா

இங்கு சாதீயம் கதைக்கும் அன்பர்கள் எத்தினை பேர் சாதி பார்க்காமல் கலியாணம் செய்தீர்கள் அல்லது அதுக்கு தயாராக இருகிறீர்கள் சும்மா வாய் கிழிய கத்திவிட்டு செய்வதோ ஒன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.