Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் நாளை காணி விடுவிப்பு - மாவை சேனாதிராஜா

Featured Replies

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசத்தில் சில பிரதேசம் மக்கள் மீள் குடியேறுவதற்கு நாளை அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

மீள் குடியேற்ற அமைச்சு சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன்  வலி.வடக்கில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி இருந்தது.

அதனடிப்படையில்  நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலளார்கள் யாழில் விடுவிக்கப்படாத பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

வசாவிளான் தோலகட்டி பிரதேசம் ஏற்கனவே விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இராணுவத்தின் முள் வேலி அடைத்து அப்பிரதேசத்தில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கவில்லை. அந்த பகுதி விடுவிக்கப்படும் என எதிர்பார்கின்றோம்.

அதேபோன்று பலாலியில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் ஆலடி சந்தியில் இருந்து பலாலி பெரும் பிரிவுக்கு போகும் பாதை இராணுவத்தினர் முள் வேலி போட்டு மூடியுள்ளார்கள். அந்த பாதையும் அந்த மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் வறுத்தலை விளான் பகுதியில் விடுவிக்கபப்ட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளது. அந்த முகாம் அகற்றப்பட்டால் 46 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்.

வீமன் காமம் தையிட்டி மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் சில விடுவிக்கப்படாத பிரதேசம் உள்ளது அவையும் விடுவிக்கபப்டும் என எதிர்பார்க்கின்றோம். என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122068/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் மாவை என்ன சொல்ல எத்தனிக்கிறார்! நாளைக்கு வலிகாமத்தில் ஏதாவது ஒருபகுதியில் காணி விடுவிக்கப்படுமா? இல்லையா?

வலிகாமம் தோலகட்டி, பலாலி ஆலடிச்சந்தி, வறுத்தலைவிளான் போன்றபகுதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டதாகக்கூறி அங்குசென்ற மக்களை இராணுவம் விரட்டியடிச்சுப்போட்டுது அப்பிரதேசங்களை மீண்டும் விடுவிக்கப்போகிறார்களா?

அமைச்சன் சுவாமிநாதன்தானே மூன்றுவாரங்களுக்குமுன்பு கூறினார் காணிகளை விடுவிக்க இராணுவம் தடையாக இருக்குதெண்டு,

மாவை அண்ணர் இதுகளை எல்லாம் அறிந்தவர்தானே அதன்பிறகும் எந்தக்காணிகளை விடுவிப்பார்கள் எனக்கூறுகிறார்.

ஒரு வீட்டுக்கு எத்தனைதரம் பால்காச்சிக் புதுமனைப்புகுவிழா கொண்டடுகிறது அதுபோலத்தான் அண்ணரின்கதை இருக்கு. மாவை அண்ணர் புதுசா வீடுகட்டுங்கோ பாலை அங்க காச்சுங்கோ. பணச்சடங்குக்கு "அற்ஹோம்" நடாத்துறதுபோல தேர்த்தல் காலங்களில் வாக்குச்சடங்கிற்கு இப்படி விடுவிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் மீண்டும் விடுவிக்காதையுங்கோ.

அரசியல் மேடைகளில் அணிவித்த பூமாலையையே மீண்டும் மீண்டும் அணிவிக்குமாப்போல இருக்குது. 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நோக்கில் யாழ் நகரில்.. யாழ்ப்பாணத்தில்.. வீதி வீதியா.. காணி காணியா.. தேர்தலுக்கு தேர்தல் விடுவித்த.. டக்கிளசுக்கும்.. மாவைக்கும் என்ன வித்தியாசம்..??! :unsure::shocked:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புறது எங்களுக்குப் பிடிக்காதே! தேர்தல் இல்லாத காலத்திலேயே வடக்குக்கான தொடரூந்து சேவை ஆரம்பித்தபோது எதிர்த்தவத்கள் நாங்கள் இப்ப இதை விடுவமா என்ன? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் வந்ததில சனத்துக்கு விமோசனமும் வந்திட்டுது. அப்ப ஏனாம் ரயில் விட்ட மகிந்தரை சிலர் எதிர்க்கினம். அவைக்கே தெரியல்லப் போல.. ஏதோ எதிர்க்கினம்...!! ரயிலை எதிர்க்கல்ல... ரயில் விட்ட மகிந்தரை எதிர்க்கிறம். இதிலும் மகிந்தரையும் வாழ்த்தி வரவேற்கலாமே.  ஏன்னா தமிழ் மக்கள் ரயில் கேட்டுத்தானே போராட்டம் நடத்தினவை.

நாடு கேட்ட சனத்தை காணி விடுவிப்பைக் காட்டி வாக்கு வறுகிற நிலையில நிறுத்திட்டு.. ரயில்.. விடுகினம் சிலர் அவைக்கு போட்டியா பரப்பு பரப்பா விடுவிக்கிறது சம் சும் கும்பல். இன்னும் எத்தனை தேர்தலுக்கு இந்த காணி விடுவிப்போ..??! :grin::shocked:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க போனால் கூட்டமைப்புத்தான் இவ்வளவு காலமும் நிலங்களை விடக்கூடாது என்று வைத்திருந்தது போல இருக்கிறது... 

 
கள்ளப்பயலுகள்...இனிமேல் ஒருவருக்கும் இடம் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

அட.... மாவைக்கு, இவ்வளவு...." பவர்" இருக்குதா?
அதை.... ஏன், இவ்வளவு நாளும்.... ஒழிச்சு, வைத்திருந்தவர்.:grin:

அட காணி களை விடுவிக்கும் அதிகாரம் மாவையிடமா இருந்தது ..இது தெரியாம போச்சே 

  • தொடங்கியவர்

வலி.வடக்கு விடயம்; இராணுவத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம்

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட பாதைகளை விடுவிக்க மற்றும் எஞ்சிய காணிகளை விடுவித்தல் தெடர்பான விடயங்களில் இராணுவத்தினர் விடாப்பிடியான நிலைப்பாடு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்த குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி வரவேற்றார்.
இதன்பின்னர் முப்படைத்தளபதிகள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவினர் வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சில இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள பாதைகளுக்கு அருகில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தல்களில் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் 3 மணியளவில் முக்கிய உயர்மட்ட கூட்டம் பலாலி இராணுவத்தலைமையகத்தில் ஆரம்பமானது. இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை , அரச அதிபர் , பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் விடுவிக்க வேண்டிய பாடசாலைகள், வீதிகள் மற்றும் காணிகள் குறித்தும் கோரிக்கை விடுத்தார். வல்லை அராலி விதியில் சுமார் 2கி.மீ இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். என்று விடுவிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இராணுவ தளபதியை பதில் வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோரினார்.
இதன்போது .இராணுவத்தளபதி விமான நிலையத்தை குறித்த வீதி ஊடறுப்பதன் காரணமாக விடுவிக்க முடியாது என்று பதிலளித்தார்.

இதன் போது மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மாற்றுப் பாதை தொடர்பில் கேட்டபோதும் அதற்கும் இராணுவத்தளபதி இணங்கவில்லை. இதேபோன்று தொண்டமனாறு, பலாலி, காங்கேசன்துறை , கீரிமலை வரையிலான கடலோரப்பாதைகளை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்ட போதும் அதற்கும் இராணுவத்தளபதி சம்மதிக்கவில்லை.
அந்தபாதையை ஏன் விடுவிக்க வேண்டும் என இராணுவத்தளபதி கேள்வி எழுப்பிய போது போக்குவரத்திற்கான அவசியம் , நேரவிரையம் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டிய போதும் அதனை இராணுவ தளபதி கருத்தில் எடுக்கவில்லை.

வளலாயில் எஞ்சிய பகுதிகள் குறித்து கேள்வி எழுப்பியபோது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் குடியமரவில்லை. மேலும் காணிகள் ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மயிலிட்டிதுறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவிப்பது தொடர்பில் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு துறைமுகம் சுனாமியால் பாதிப்படைந்துள்ளது. அதனால் புதிய துறைமுகம் நிர்மானிக்கலாம் என்றும் இராணுவத்தளபதி பதில் வழங்கியுள்ளார்.
பலாலியில் இடம்பெற்ற நேற்றைய கூட்டத்தில் புதிய காணிகளை விடுவிப்பது சம்பந்தமான எந்த அறிவித்தலும் வெளியிடப்படவில்லை.
எனவே நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இராணுவ தரப்பினது பதில்கள் ஏமாற்றமாகவே இருந்தது என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தேர்தல் காலத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதால் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றும் பலாலி இராணுவ தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் மல்லவராட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.e-jaffna.com/archives/47070

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள்: நாளை காணி விடுவிப்பு என்று சொன்னீர்களே தலைவா...

மாவை: அது போன கிழமை..இது இந்தக் கிழமை..

மக்கள்: சும் நீங்கள் இதுக்கு என்ன சொல்லுறீங்க

சும்: வழக்குப் போட்டிருக்கமில்ல.. வாக்கப் போடுங்க.. நான் வழக்கை வென்று தாறன்.

மக்கள்: அட பாவிகளா. :grin::unsure:

  • தொடங்கியவர்

வலி.வடக்கில் முன்னரங்க வேலிகள் பலப்படுத்த படுகின்றன. மீள் குடியேற்றம் சாத்தியமற்று போகுமா ?

http://www.yarl.com/forum3/topic/160722-வலிவடக்கில்-முன்னரங்க-வேலிகள்-பலப்படுத்த-படுகின்றன-மீள்-குடியேற்றம்-சாத்தியமற்று-போகுமா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.