Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழி!

Featured Replies

தமிழ்த்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்வழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவனுக்கும் இடையிலான போரட்டமே இன விடுதலைப் போராட்டம். எனவே தேசத்தை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Gajendrakumar-Ponnambalam.jpg

வடமராட்சி குடத்தனையில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்இ

இதுவரை கால இன விடுதலைப் போராட்டம் தமிழ்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்ழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவர்களுக்கும் இடையிலான போரட்டமே. எனவே தேசத்தை அங்கிகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய வேண்டும் .

இனப் பிரச்சினையென்பது தமிழ்த்தேசம் அழிக்கப்பட்டுவருவதனால் ஏற்பட்ட பிரச்சனையே. தமிழ் தேசத்தை தாங்கும் தூண்களான நிலம்இமொழிஇபொருளாதாரம்இ கலாசாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சினையே. 

இந்தியாவும் மேற்குலகும் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை அரசியல் தீர்வாக திணிக்க முயற்சிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்கேற்ப தாயகம்இதேசியம்இசுயநிர்ணையம் என்கின்ற தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாட்டையும் கைவிட்டுள்ளனர்.

இந்த செயற்பாடு தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழ் இறக்குகின்றது. 13 ஆவது திருத்தமும் அதன் அடிப்படையிலான மாகாண சபை முறையும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கப் போவதில்லை. 
வரதராஜப்பெருமாளின் வடஇகிழக்கு மாகணசபையும் பிள்ளையானின் கிழக்கு மாகாணசபையும் விக்னேஸ்வரனின் வடமாகாண சபையும் அதனை தெளிவாக நிரூபித்துள்ளது.

வரதராஜப்பெருமாள் மாகண சபை முறையில் எந்தவித பயனும் இல்லை எனக்கூறி ஈழ பிரகடனம் செய்தார். பிள்ளையான் ஒரு அலுவலக உதவியாளரை  நியமிக்கும் அதிகாரம் கூட தனக்கு இருந்திருக்கவில்லை ஏன கூறினார். 
விக்னேஸ்வரனின் ஓலம் ஆளுநரை மாற்றிய பின்னரும் கூட குறையவில்லை. இவ்வளவு அனுபவத்தின் பின்னரும் கூட மாகணசபை முறையினை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொண்டால் அவர்களை துரோகிகளாகவே கருதவேண்டும்.

இந்த தேர்தலில் மக்கள் அவர்களை இனங்கண்டு புறக்கணிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/07/21/தேசத்தை-அங்கீகரிப்பதுதான்-இனப்பிரச்சினைக்கு-தீர்வு-கஜேந்திரகுமார்

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 1 மாதத்துக்கு இந்தக் கடித் தொல்லை தொடரப்போகிது!  நாய் வாலைக் கூட கம்பியை இல்லாட்டி தடியைக் கிடியை வச்சு நிமித்திப் போடலாம் இவங்களைத் திருத்தவே ஏலாது! எலக்சனுக்குப் பிறகு தம்பியவைக்கு தெரியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 1 மாதத்துக்கு இந்தக் கடித் தொல்லை தொடரப்போகிது!  நாய் வாலைக் கூட கம்பியை இல்லாட்டி தடியைக் கிடியை வச்சு நிமித்திப் போடலாம் இவங்களைத் திருத்தவே ஏலாது! எலக்சனுக்குப் பிறகு தம்பியவைக்கு தெரியும்!

இது கடித் தொல்லை என்றால்; சர்வதேச விசாரணை, பேரம் பேசுதல், 2016 இல் தீர்வு என்பனவெல்லாம் என்னவென்றாவது சொல்லுங்கோவன் அப்பு. 

இன்னும் 1 மாதத்துக்கு இந்தக் கடித் தொல்லை தொடரப்போகிது!  நாய் வாலைக் கூட கம்பியை இல்லாட்டி தடியைக் கிடியை வச்சு நிமித்திப் போடலாம் இவங்களைத் திருத்தவே ஏலாது! எலக்சனுக்குப் பிறகு தம்பியவைக்கு தெரியும்!

சம்பந்தன் விட்டால் இவர்களுக்கு மணக்காது .....மற்றவர்கள் என்றால் தான் அது நாற்றம் 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழரது பிரதேசம்

உரிமை சம்பந்தமாகப்பேசுகின்றார்

அதில் சம்பந்தப்படாதவர்கள் கத்துவதேன்.....??

இப்பத்தான் "அ " சொல்ல தொடங்குகின்றார் .

நாட்டில இதுவரை என்ன நடந்தது என்றே தெரியாது போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு குப்பையைக் குழப்பி விட்டால் ஊரில மிச்சம் இருக்கிற சொந்தக்காரங்களையும் கூப்பிட்டுவிடலாம் என்றா ஆசை. ஆனால் அது நடக்கப்போவதில்லை. விண்ண்ணியினரின் கட்டுக்காசு தேறுவதே கஸ்டம். டக்கிளஸ் அங்கிளுக்கு கிடைக்கும் வாக்குகள் கூட விண்ணர்களுக்கு கிட்டாது! புலிவால்கள் அண்ணாந்து கொட்டாவி விட வேண்டியதுதான்!

சிலருக்கு குப்பையைக் குழப்பி விட்டால் ஊரில மிச்சம் இருக்கிற சொந்தக்காரங்களையும் கூப்பிட்டுவிடலாம் என்றா ஆசை. 

எதோ நீங்கள் தாயகத்தில் நிண்டு வெட்டி புடுங்கின மாதிரி கதைகிறியள். நீங்களும் எதோ ஒரு நாடில்லை கையை தூக்கின ஆள் என்பதினை மறக்க வேண்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி, என்ன சொல்லவருகிறார் எண்டால் இப்போ இணக்க அரசியலில் டங்கியை விட, சம்பந்தன் ஐயாவும் சுமந்திரன் அண்ணரும்தான் முண்ணியில் நிற்கிறார்கள் என, இப்படித்தான் வரும் தேர்தலில ஒரு தொகுதியிலாவது வென்றுபாருங்கோ என யாழ்கள அன்பான உறவு ஒருவர் கருத்தெழுதினார், ஆனால் புலத்தின் நிலை கூட்டமைப்புக்கு மிக மோசமாகப் போகுது, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை வெல்லுவார்கள் என அவதானிக்கமுடிகிறது. புலம்பெயர் புலிவால்கள் என சும்மா இருக்கப்பட்டவர்களையேல்லம் சுமந்திரன் அண்ணர் வாயால் வாழ்த்துங்கோ உள்ளதும் இல்லாமல்போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.