Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

Featured Replies

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

 
 
start_2501789f.jpg
 

விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவைத்துத் தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகினார்கள். பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் எனப் பாராட்டப்படும் விண்டோஸுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்ததில் ஸ்டார்ட் மெனு அம்சத்துக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.

1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாகப் புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியைக் கொண்டு வந்தபோது பயனாளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம்.

இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது.

விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட் போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.

22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட் மெனுவை விண்டோஸில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம்.

இங்குதான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட் மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

விண்டோஸ் மென்பொருள் வடிவமைப்பில் இது சின்ன விஷயம்தான்; ஆனால் இந்தச் சின்ன விஷயத்துக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா?

அந்தக் கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன். முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர்தான் ஸ்டார்ட் மெனுவின் பிரம்மா. 1993-ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்குச் சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுநராகப் பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளத்தை அமைக்க வேண்டிய பணி இது.

ஆரன் ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளுக்குப் பேசும் திறன் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பன்சிகளுடன் தொடர்புகொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பன்சி களுக்கு அவரால் எதையும் கற்றுத் தர முடியவில்லை என்றாலும், இந்த, முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத் தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளைத் தெரிந்துகொண்டிருந்தார்.

விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் பாடம்தான் அவருக்குக் கைகொடுத்தது.

அவருக்குக் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அநேகமாக எல்லாப் பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கைக்கூட செய்து முடிக்க முடியாமல் திணறினர். அதாவது அவர்களால் விண்டோஸில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாகச் சென்றடைய முடியவில்லை. இந்தத் தடுமாற்றத்தைப் பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இப்படி இருக்கிறார்களே எனக் கோபம் அடைந்தனர்.

ஆனால் ஆரன் மட்டும் பிரச்சினை பயனாளிகளிடம் அல்ல; விண்டோஸில் எனப் புரிந்துகொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்தபோது அவர் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் எனத் தெரிந்துகொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எப்படிப் பயனாளிகள் கைகளில் எளிதாகக் கிடைக்கச்செய்வது எனத் தீவிரமாக யோசித்தார். விண்டோஸில் வடிவமைப்புக் கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.

இந்த யோசனையின் பயனாகத்தான், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாகத் தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோகிராமையும் எளிதாகச் சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட் மெனுவை வைத்தார். அவ்வளவுதான்; வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோஸின் இடது மூலையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோஸுக்குள் சென்றுவிடலாம்.

இப்படித் தான் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் அறிமுகமானது.

ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்தச் சின்ன கண்டுபிடிப்புக்கான காப்புரிமை அவரிடம்தான் இன்னமும் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளைச் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்கக்கூடிய அந்தக் குறிப்பைக் காண: https://goo.gl/7e5cHl

http://tamil.thehindu.com/general/technology/விண்டோஸில்-ஸ்டார்ட்-மெனு-பிறந்த-கதை/article7512004.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி.

கல்லூரியில் படிக்கும்போது பன்ச் கார்ட்(Punch Card) மூலம் கணணியை இயக்கக் கற்று பின்னர் தாஸ்(DOS), யுனிக்ஸ்(Unix), ஐரிக்ஸ்(IRIX), ட்ரூ 64 (True 64) போன்ற இயங்குதளங்களை, வேலையின் திட்டப்பணிகளுக்கான கணணியின் கட்டளைகளை(Commands) மனப்பாடம் செய்து அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டிவரும்..
 
ஆனால் 90 களின் ஆரம்பத்தில் விண்டோஸ் வந்தபோது தனிக் கணணிக்கான(Standalone OS) இயங்குதளமாகவே இருந்தது.. பின்னர் யுனிக்ஸ், நாவல் நெட்வேர்(Nowell Netware) போன்ற இயங்குதளத்தின் கூட்டுக் கட்டமைப்பு(Networking) அம்ச வெற்றியை கண்டு, அவற்றிற்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் உருவாக்கியதுதான் விண்டோஸ் என்.டி(Windows NT) மற்றும் விண்டோஸ் வொர்க் குரூப்..(Windows Work Group).

விண்ட்டோஸ் 3.0 விலிருந்து விண்டோஸின் மறுபதிப்பான விண்டோஸ் 95 வந்தவுடன் கணணியில் அதன் முகப்பு கவர்ச்சி(GUI) பயனாளிகளை ஈர்த்தது.. அப்பொழுது ஆரம்பித்தது மைக்ரோசாஃப்டின் ஏறுமுகம். அதில் பயனாளிகள் கணணியின் கட்டளைகளை நினைவிற்கொள்ள அவசியமில்லாமல் வெறும் சுட்டியைக்கொண்டே நமக்குத் தேவையான அனைத்து கட்டளைகளை 'கிளிக்' செய்யவந்த வரப்பிரசாதத்தால், விண்டோஸ் மாபெரும் வெற்றியை ஈட்டியது..

இயங்குதள சந்தையில் அப்பொழுது மைக்ரோசாஃப்ட் பதித்த வெற்றியின் அடித்தளத்தை இன்றுவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியவில்லை..

இடையில் ஆப்பிள்(Apple Mac), லினக்ஸ்(Linux) என லொட்டு,லொசுக்கு வந்தாலும், பயனாளிகளுக்கு விண்டோஸின் முகப்பும்(GUI), இயக்க எளிதான வசதியும்(Plug and Play) மிக சிறப்பனவை. 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி ராசவன்னியன்.

விண்டோஸ் 10வது பதிப்பு ஜூலை 29 ல் வெளியாகிவிட்டது.

விண்டோஸ் 7, 8, 8.1 இன் பாவனையாளர்கள் இலவசமாக விண்டோஸ் 10 யை தரவிறக்கம் செய்யலாம்.

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு  நவீனன்.

ராசவன்னியரின் விளக்கம் அந்தக்காலத்துக்கு அழைத்துச்சென்றது

பயன்பாட்டை செயலில் தந்த நிழலிக்கும் நன் றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு தகவல்:

விண்டோஸ் 3.0 மற்றும், விண்டோஸ் வொர்க் குரூப் 3.11 வெளிவந்தபொழுது அது முழுமையான இயங்குதள மென்பொருளாக இல்லை.. அவை தாஸ்(DOS) இயங்குதளத்தின் மேலேயே ஒரு கூடுதல் அம்சமாக செயல்பட்டது..

அதாவது கணணியை தாஸ் 6.22 மூலம் பூட்(Boot) செய்து C:\ என்று 'ப்ராம்ப்ட்' வந்தவுடன் win என தட்டச்சு செய்தால் மட்டுமே விண்டோஸ் 3,11 உயிர்பித்து இயங்கும்..

இந்த குறைபாட்டை நீக்கி, தாஸ் 6.22 மற்றும் விண்டோஸ் 3.11 இரண்டையும் ஒருங்கிணைத்து, முழு இயங்குதளமாக விண்டோஸ் 95 முதன் முதலில் வெளிவந்தது.

இதன்மூலம் விண்டோஸ் 95 கணணி, விண்டோஸ் என்.டி கூட்டுக்கட்டமைப்பில்(Network Domain) ஒரு அங்கமாக(Client) செயல்பட ஏதுவானது.

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

 

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

சில நாட்களாக புதிய யாழிணையம் வேகமாகத்தான் வேலை செய்கின்றது.


எனது கணணியை பொறுத்தவரைக்கும் வேகம் என்று பார்க்கும் போது இதற்கு முந்திய யாழ் இணையம் வேகமாகவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

வன்னியனுக்கு காட்டப் படும்.....  flood control here to wait for say 6 or 10 secs.. முன்பு எனக்கு காட்டியது.
இப்போ.... அது தெரிவதில்லை.

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

  • தொடங்கியவர்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

கடந்த 3 நாட்களாக வேகமாகத்தான் வேலை செய்கின்றது.:)

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

நான் பொதுவாக கூகிள் chrome பாவிப்பது இல்லை. ஆனால் நீங்கள் இங்கு எழுதியபின் முயற்சித்து பார்த்தேன் எனது கணணியில் தமிழ் எழுத்து மற்றைய இணணய உலாவிகளில் வருவது போலவே வருகிறது கூகிள் chrome இலும்.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.