Jump to content

திருமண மந்திரங்கள்!


Recommended Posts

Posted

வெற்றிவேல் மந்திரங்களை சரியான உச்சரிப்பையும் சரியான பொருளையும் தந்தது அருமை.

தேவப்பிரியா

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெற்றிவேல் உங்கட விளக்கம் ரெம்ப அருமை. நானும் உந்தக் கட்டுரைகளைப் பார்த்து ஏதோ தப்பாகத் தான் நடந்து கொள்ளுறமோ எண்டு நினைச்சுக் கொண்டிருந்தேன்.

ஒரு சமுதாயத்தை ஆழுகின்ற எதுவுமே தப்பான எண்ணத்தோட செய்ய முடியாது எண்டதும், அப்படித் தப்பாகச் செய்ய முனைஞ்சா அது நிலைச்சு நிற்காது எண்டதும் நிலையான உண்மை. என்ன நான் சொல்லுறது?? சரியோ

தொடர்ந்து இதர பிழையான விளக்கங்களுக்கு உங்களின் சரியான பதில்களை எதிர்பார்க்கின்றன். அது எத்தனை காலம் எண்டாலும் பரவாயில்லை. பொறுமையோட காத்திருக்க நான் தயார்

Posted

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்

பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்

மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்

நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

சோமன், கந்தர்வன், அக்னி காத்தார்கள் என்பதெல்லாம் முடிந்துபோன தேவயற்ற கதைகள். கடைசி வசனம் ஆண் பெண்ணிடம் கூறுவதாக அமைகிறது. பெரும்பாலான மந்திரங்களும் இப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்.

ஆனால் திருமணத்தில் கூறப்படும் மந்திரங்களைக் கேட்டு சோமனோ கந்தர்வனோ அக்னியோ வரப்போவதில்லை என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். கடவுளையும் மந்திரங்களையும் நம்புபவர்கள், நாத்தீகவாதிகளுக்கு எதிராக பெரும்பாலும் முன்வைக்கும் வாதம், இவற்றில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துக்களும் அர்த்தங்களும் மனிதனை நெறிப்படுத்துவன என்பதாகும்.

அப்படி 'ஆழமான கருத்துக்களை' புரியாத முறையில் மணமக்களுக்கு உரைப்பதால் எந்தவிதப் பயனும் இல்லாமல் போகின்றதல்லவா ?

Posted

நான் இங்கே மந்திரங்களை தரும் பொழுது, நான் முதலாவதாக இணைத்த மந்திரத்திற்கு சில பார்ப்பனர்கள் "அவள் அவர்களுக்கு மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறேன்.

ஏறக்குறைய அதையே வெற்றிவேலும் இங்கே தந்திருக்கிறார். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சிலரைப் போலன்றி இப்படியான மந்திரங்கள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டது நல்ல விடயம்.

ஒன்றை இதில் சொல்ல விரும்புகிறேன். இவைகளை எமக்கு சொல்லித் தந்தவர் தந்தை பெரியார் அல்ல. சமஸ்கிருதம் கற்ற பார்ப்பனர்கள்தான் இவைகளின் அர்த்தங்களைக் கூறுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலான பார்ப்பனர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தங்களுடைய பிழைப்புக் கெட்டுவிடும் என்பதற்காக வேறு அர்த்தங்களை சொல்கிறார்கள்.

"பதி" என்று பொதுவாக கணவனைத்தான் சொல்வார்கள். அதற்கு தலைவன், பாதுகாவலன் என்று நிறைய அர்த்தங்கள் உண்டு.

ஆனால் மந்திரம் தெளிவாக சொல்கிறது. இத்தனை காலமும் இவர்கள் பதிகளாக இருந்தார்கள். இப்பொழுது ஒரு மானிடன் பதியாக வருகிறான் என்று. இங்கே பதி என்று குறிக்கப்படுவது கணவனைத்தான்.

ஆனாலும் பாதுகாவலன், தந்தை என்று சொல்கின்ற விளக்கங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது போன்று இருப்பதை மறுப்பதற்கில்லை.

அதே வேளை இந்து மத மந்திரங்கள் பொதுவாக ஒரு பெண்ணை எவ்வகையில் நோக்குகிறது என்பதையும் இங்கே வைத்தே இவைகளை அணுக வேண்டும்.

பெண்களை இந்து மதத்தின் மந்திரங்கள் எப்படி அணுகுகிறது என்பதை விளக்க இன்னும் ஒரு மந்திரத்தை தருகிறேன்

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.

இந்த மந்திரம் தந்தைக்கு செய்யப்படுகின்ற ஈமக்கிரியையில் சொல்லப்படுவதாகும்.

அதாவது அவிபாகங்களை பெறுவதற்கு தந்தை அழைக்கப்படுகிறான். எப்படித் தெரியுமா? "என்னுடைய தந்தை இந்த அவிபாகங்களை பெறட்டும். நான் அழைப்பவர் என்னுடைய தந்தை இல்லையென்றால், என்னுடைய உண்மையான தந்தை வந்து இந்த அவிபாகத்தை பெறட்டும்" என்பது இதில் சொல்லப்படும் பொருளாகம்.

பொதுவாக மதநம்பிக்கை கொண்டவர்கள் மதம் தாய் போன்றது என்றும், தாயையும் மதத்தையும் சந்தேகிக்கப்படக் கூடாது என்றும் வாதிடுவார்கள்.

ஆனால் ஒரு ஈமைச் சடங்கிலேயே உண்மையான அப்பனை இந்து மதம் வரச் சொல்கிறது.

இது குறித்து இந்துக்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்து மதத்தில் பெரும்பாலும் பெண் காமப் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறாள்.

திருமண மந்திரங்களும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்றை இதில் சொல்ல விரும்புகிறேன். இவைகளை எமக்கு சொல்லித் தந்தவர் தந்தை பெரியார் அல்ல. சமஸ்கிருதம் கற்ற பார்ப்பனர்கள்தான் இவைகளின் அர்த்தங்களைக் கூறுகிறார்கள்.

இதுக்கும் அந்தப் புண்ணியவான் விளக்கம் சொல்லி இருந்தா எல்லாரும் நிர்வாணமாக ஒண்டுக்கு சா ஒன்றா இருங்கோ என்றிருப்பார்..! கும்பல்ல கோவிந்தா..! :):huh:

இந்து மதத்தில் பெரும்பாலும் பெண் காமப் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறாள்.

உங்களுக்கு இந்து மதம் என்றாலே என்னென்று தெரியுமோ தெரியல்ல. அது கிடக்கட்டும்.. நீங்கள் மட்டும் உங்கள் பெண்ணை தங்கப் பவுணா நினைச்சே கலியாணம் கட்டினீங்கள்..! :o:D

Posted

இங்கும் சம்பந்தம் இல்லாமல் பெரியாரை யாரும் இழுத்து விவாதத்தை திசை திருப்பிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான் பெரியாருக்கும் இங்கு நான் சொல்கின்ற மந்திர அர்த்தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை வலியுறுத்தினேன்.

அத்துடன் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்கள்தான் இந்தக் கருத்தை சொல்லித் தந்துள்ளார்கள் என்பதையும் முக்கியமாக தெரிவித்தேன்.

"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இப்படி மந்திரங்கள் எல்லாமே பெண்களை பல ஆடவர்களோடுதான் தொடர்பு படுத்தி பேசுகிறது. அது திருமணம் என்றாலும் சரி, கோயில் என்றாலும் சரி, சாவு வீடு என்றாலும் சரி, பெண்ணுக்கு அங்கே பல புருசர்கள்தான்.

ஆனால் சிலர் பிழைப்பு நாறிப் போய்விடும் என்ற அச்சத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.

எங்கள் தமிழர்களும் மதத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையில் மாடு மாதிர தலையாட்டுவார்கள்.

Posted

"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இதை உங்களுக்கு பார்ப்பணன் ஒருவன்தான் கருத்தோடு சொல்லி வைத்தானா..??? சூத்திரரும் ஆரியர்தானுங்கோ....!! அவர்களும் சமஸ்கிர்தம் படிப்பவர்கள்தான்...

"ஏக" எண்றால் ஒண்று எண்று மட்டும் தான் என்பது இல்லை அது முதலில் என்பதுக்கும் வரும்... (( சமஸ்கிருத விசயம் அது)) "பகு" என்பது பின்னர் எண்று அர்த்தம் வரும்... அதிலும் சத்சூத்திராய என்பது " ஆசிரியர்"

அதாவது " முதலில் தாய்க்கும் பின்னர் தந்தை குருவிற்கு வணக்கம்" என்பதுதான் கருத்து..

Posted

என்னய்யா சக்கீலா படத்தின்ர விமர்சனம் எழுதுறியளா??

என்ன கொடுமை சார்.. அட அதுதான் 2,3 நாளா ஜம்மு பேபியை யாழில காணல்லையோ??? :)

Posted

இந்து மதம் பொதுவாகவே பெண்களை பல ஆடவர்களேர்டு தொடர்பு படுத்துகின்ற ஒரு மதம்.

அதனுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என்று அனைத்திலும் வெகு சாதாரணமாக பெண்களை பல ஆண்களுடன் இணைத்து விடும். அதை ஒரு பிரச்சனையாகக் கூடப் பார்க்காது.

பொதுவாக கற்பு என்பதை ஒரு சாதரண விடயமாக இந்து மதம் பார்ப்பதில்லை. அதைக் கடைப்பிடிக்க முடியாத ஒரு விடயம் போன்றும், அப்படிக் கடைப்பிடிப்பது ஒரு அதிசய விசயம் போன்றும், அங்கே கடவுள்கள் எல்லாம் வந்து அந்தப் பெண்ணை அம்மணமாக்கி பரிசோதனை செய்வது போன்றும்தான் கற்பு பற்றி இந்து மதம் பேசும்

நீங்கள் ஊன்றிக் கவனித்தீர்கள் என்றால், அப்படிக் கற்புக்கரசிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஒரு சில பெண்கள் கூட கடவுளுடைய அவதாரங்களின் மனைவிகளாகவும், வேதங்கள் கடவுளிற்கு சமன் என்று சொல்கின்ற பார்ப்பனர்களின் மனைவிகளுமாகத்தான் இருப்பார்கள்.

அத்துடன் பார்ப்பனர்களின் மனைவி யாராவது வேறு ஆடவருடன் கூடினாலும், அவளுக்கு சாப விமோசனம் கிடைப்பதாக காட்டப்பட்டிருக்கும்

ஆனால் சாதாரண மன்னர்களின் மனைவிகள் பல ஆண்களுடன், அதுவும் பார்ப்பனர்களுடன் கூடுவது போன்று காட்டப்பட்டிருப்பார்கள். இதற்கு பல உதாரணங்கள் காட்ட முடியும்

(தமிழ் இலக்கியங்கள் பெண்களை அப்படிச் சித்தரித்திருக்காது)

ஆகவே புராணங்களில் வருகின்ற பாத்திரங்களை எல்லாம் அழைத்து ஒரு பெண்ணை நோக்கி சொல்லப்படுகின்ற மந்திரங்களை ஆராய்கின்ற போது, உண்மை வெளிப்படுகிறது.

(புராணங்களில் கந்தர்வன், சோமன், அக்கினி போன்றவர்களின் "வேலைகள்" தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அறிவுள்ள இவனும் இவர்களுடைய பாதுகாப்பில் எந்தப் பெண்ணையும் விட மாட்டார்கள். அப்படி மந்திரமும் சொல்ல மாட்டார்கள்)

அத்துடன் அந்தப் பெண்களை நோக்கி தொடர்ந்து சொல்லப்படுகின்ற மந்திரங்களையும் பார்க்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியத் துணைக் கண்டத்தில் பல இடங்களில் திருமணமான பெண் முதல் இரவை திருமணத்தை நடத்தி வைத்த பார்ப்பானோடு கழிக்கின்ற வழமை இருந்தது. இன்றைக்கும் ஒரு சில கிராமங்களில் இருக்கின்றது.

ஆனால் இவைகள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால் மந்திரங்களில் தொடர்ந்தும் வைத்திருக்கிறார்கள்.

பால்ய விவாகம் ஒழிக்கப்பட்ட பின்பும் பார்ப்பனர்கள் தமது வீட்டு திருமணங்களை பால்ய விவாகங்களை நடத்திய முறையில் இன்றைக்கும் தொடர்ந்து நடத்துவது போல், சில விடயங்கள் ஒழிந்தாலும் அதனுடைய அடையாளங்களை பேணிக் காக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழர்களுக்கு தன்மானம் ஏற்பட்டு, தமிழில் திருமணம் செய்வதுதான்.

Posted

நாய் வால்களை நிமிர்த்துவது நம் வேலை இல்லையென்றாலும் நல்லோர் நலன் கருதி விளக்கம் தர வேண்டிய கடமையும் உள்ளது. இங்கே உள்ள கேள்விகளுக்கு இயன்றவரை ஒவ்வொன்றாக பதில் தருவேன்

தமிழ் கூறும் நல்லுலகை

தவறாக வழிநடத்த

சிலர் செய்யும் சேட்டைகளை

சிதறடிக்கும் திருப்பணிகள்

சிலநாட்கள் தடை படலாம்

சிலம்பாட பொய் வரலாம்

சிலர் மூக்கு அதன் பின்னர்

சீக்கிரமே உடைபடலாம்

பலவேறு வேலைகளும்

பலமாக அழுத்துவதால்

இதமான பதில் தரவே

ஈரொரு நாள் ஆகிடலாம்

அதுவரையில் பகுத்தறிவே

ஆயிரம் பொய் சொல்லிவிடு :)

ஆறுதலாய் நாம் ரசிக்க

ஆயிரம் பொய் சொல்லி விடு :o

Posted

நீங்கள் சொன்ன அர்ந்தங்கள் எல்லாம் தவறு என்று நீருபித்தால் உங்கள் தளத்தை மூட நீங்கள் தயாரா?

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, நன்றாக தெரிந்த ஒர் நன்பர் மூலம் நீங்கள் எழுதியது எல்லாம் தவறு என்று நீருபீக்க நான் தயார் நீங்கள் தயாரா?

கருத்துக்கள் எழுதவோ வாசிக்கவோ சுகந்திரம் உள்ளது அதற்காக இப்படியான இயலாமையின் வெளிப்பாட்டுக்கேள்விகள் கேட்பது அபர்த்தமானது. எழுதாளன் என்பவன் தீர ஆராய்ந்து கருத்துக்கள் தருபவர்

ஆலய சிற்பங்களிலே இப்படியான விடயங்கள் தான் உள்ளன என்கிற போது அந்த மந்திரங்களில் இப்படியான பிரயோகங்கள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

*** படம் நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Posted

கருத்துக்கள் எழுதவோ வாசிக்கவோ சுகந்திரம் உள்ளது அதற்காக இப்படியான இயலாமையின் வெளிப்பாட்டுக்கேள்விகள் கேட்பது அபர்த்தமானது. எழுதாளன் என்பவன் தீர ஆராய்ந்து கருத்துக்கள் தருபவர்

ஆலய சிற்பங்களிலே இப்படியான விடயங்கள் தான் உள்ளன என்கிற போது அந்த மந்திரங்களில் இப்படியான பிரயோகங்கள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும்.???!!!

ஆமாம் INTERNET இல் ஆயிரம் ஆயிரம் ஆபாச (Pornography) பக்கங்கள் இருக்கிறது (அது ஒவ்வொருவரின் படைப்பு திறனையும் அங்கீகரிக்கும் ஊடக சுதந்திரம்?!) அதற்காக எவரும் INTERNET முழுவதும் அப்படியான பக்கங்களே உள்ளது என்று சொல்ல முனைந்தால் அவர்களின் அறிவுத்திறனை பார்த்து மெய்சிலிர்க்காமல் என்ன செய்யும்?! :P

Posted

என்ன சபேசனுக்கு கற்பின் மீது அவ்வளவு அக்கறை..??? (இங்கே பெரியாரின் சீடனாக பேசவில்லை போல) புராணங்கள் பெண்களுக்கு பல ஆடவர் தொடர்பை சொன்னதோ இல்லையோ.... ஆடவர்களுக்கு பல துணைவிகள் இருந்ததாக சொன்னது உண்மை... அவை தோண்றிய காலத்து மக்கள் எப்படி இருந்தார்களோ அதைதானே எழுத்துக்கள் பிரதிபலித்து இருக்கும்... இருபத்து ஓராம் நூற்றாண்டு மனிதன் எப்படி இருக்க போகிறான் என்பதை கற்பனை செய்தா எழுதி இருப்பார்கள்... ???

Posted

ஆமாம் INTERNET இல் ஆயிரம் ஆயிரம் ஆபாச (Pornography) பக்கங்கள் இருக்கிறது (அது ஒவ்வொருவரின் படைப்பு திறனையும் அங்கீகரிக்கும் ஊடக சுதந்திரம்?!) அதற்காக எவரும் INTERNET முழுவதும் அப்படியான பக்கங்களே உள்ளது என்று சொல்ல முனைந்தால் அவர்களின் அறிவுத்திறனை பார்த்து மெய்சிலிர்க்காமல் என்ன செய்யும்?!

உங்கள் கருத்து விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கின்ற கருத்தாக உள்ளது சமயத்துடன் இணையத்தை ஒப்பிட முடியாது சமயம் என்பது மனிதனை நல் வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆலயத்துக்கு வரும் பத்தரின் உணர்வுகளை தூண்டவைக்கும் இப்படியான கடவுள் சிலைகளை வைப்பது சரியாக எனக்கு தோன்றவில்லை. படைப்பு திறன்களில் இப்படியான சிற்பங்கள் திணிப்பது நியாயமானதா? ஆலயம் என்பது என்ன ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தும் இடம் ஆலயம் என்பதாகும் அப்படிப்பட்ட ஆலயத்தில் இந்த சிற்பங்கள் எமக்குப்புரியாத சமஸ்கிருத மந்திரங்கள் தேவைதானா? B) B) B)

Posted

ஆலய சிற்பங்களிலே இப்படியான விடயங்கள் தான் உள்ளன என்கிற போது அந்த மந்திரங்களில் இப்படியான பிரயோகங்கள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

ஆலய சிற்பங்கள் எண்று பொதுப்படாக சொன்னால் எப்படி ஆலய சுற்றாடலின் வெளிப்பகுதியில் எண்று சொல்ல வேண்டும்... அவை எதுக்காக நிறுவ பட்டன என்பதை நீங்கள் விசாரிப்பது இல்லையா..??

ஆலயத்தின் வெளிபகுதியில் (உள்வீதியில்) இந்த சிலைகள் அமைந்து இருக்கும், அதாவது போகம், யோகம்.. என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள்... போகியாக இருக்கும் மனிதன் யோகத்தை அடையும் வளியை ஆலயம் சொல்கிறது.. அதில் சிற்றின்ப சுகங்களை கடந்து பேரின்பமாகிய யோகத்துக்குள் புகுதல்(ஆலயத்துக்குள்) என்பதை அர்த்த படுத்துகிறது...

Posted

ஆலய சிற்பங்கள் எண்று பொதுப்படாக சொன்னால் எப்படி ஆலய சுற்றாடலின் வெளிப்பகுதியில் எண்று சொல்ல வேண்டும்... அவை எதுக்காக நிறுவ பட்டன என்பதை நீங்கள் விசாரிப்பது இல்லையா..??

ஆலயத்தின் வெளிபகுதியில் (உள்வீதியில்) இந்த சிலைகள் அமைந்து இருக்கும், அதாவது போகம், யோகம்.. என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள்... போகியாக இருக்கும் மனிதன் யோகத்தை அடையும் வளியை ஆலயம் சொல்கிறது.. அதில் சிற்றின்ப சுகங்களை கடந்து பேரின்பமாகிய யோகத்துக்குள் புகுதல்(ஆலயத்துக்குள்) என்பதை அர்த்த படுத்துகிறது...

சிற்றின்பங்கள் பற்றி அறியாத திருமணமாகதவர்களுக்கு அந்த விதி விளங்குமா? அப்படியானால் சிற்றின்ப சுகங்கள் அனுபவித்து வாழ்வியம் வெறுப்புகளின் பின் தான் ஆலய தரிசனம் செய்வதா B)

Posted

உங்கள் கருத்து விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கின்ற கருத்தாக உள்ளது சமயத்துடன் இணையத்தை ஒப்பிட முடியாது சமயம் என்பது மனிதனை நல் வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆலயத்துக்கு வரும் பத்தரின் உணர்வுகளை தூண்டவைக்கும் இப்படியான கடவுள் சிலைகளை வைப்பது சரியாக எனக்கு தோன்றவில்லை. படைப்பு திறன்களில் இப்படியான சிற்பங்கள் திணிப்பது நியாயமானதா? ஆலயம் என்பது என்ன ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தும் இடம் ஆலயம் என்பதாகும் அப்படிப்பட்ட ஆலயத்தில் இந்த சிற்பங்கள் எமக்குப்புரியாத சமஸ்கிருத மந்திரங்கள் தேவைதானா? B) B) B)

புரியாதனவற்றை எல்லாம் எறிந்து விட வேண்டும் என்றால் உலகம் இத்தனை வளர்ச்சி

கண்டிருக்காது. ஆராய்ச்சி என்ற சொல்லே தேவைப்பட்டிருக்காது . நீங்களே சொல்லி விட்டீர்கள் "புரியாத மந்திரங்கள்" என்று. அப்படியானால் சரிவர புரிந்து கொண்ட பிறகு அல்லவா அவை சரியானவையா பிழையானவையா என்று தீர்மனிக்க வேண்டும்?!!!

INTERNET போல் கோவில்களும் பலர் கூடி தேடுதல் செய்யும் இடங்கள். வடிவங்கள் வேறு படலாம். தேடல்களின் தன்மை வேறுபடலாம். அத்தோடு கோவில் என்பது பிற்காலத்தில் உருவானது. வேதங்களில் கோவில்கள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை என்பதை அறிவீர்களா? கலாரசனை என்பது காலத்திற்கு காலம் வேறுபடக் கூடியது. அதற்கேற்ப கலைகளும் வளர்வது தவிர்க்கப்பட முடியாதது.

அத்தோடு காமம் என்பது தீண்டத்தகாததல்ல. உண்மையே உரைப்பதாக சொல்லிக் கொள்ளும் மதம் மனிதர்களிடையே நிலவும் பல்வேறு காமம் சம்பந்தப்பட்ட எண்ண ஓட்டங்களை உள்ளது உள்ளபடி விளக்கி அதில் உள்ள நன்மை தீமைகளை வெளிப்படையாக விளக்க ஏன் தயங்க வேண்டும்? காமத்தை கண்டு ஓடுவதை விட, காமம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் மனது கட்டுக்குள் இருக்கும் என்றால் அதுவே உயர்ந்த நிலை.

நீங்கள் தந்திருப்பது மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுரோ கோவில் சிற்பங்கள். இந்த கோவில் பற்றியும் அதன் சிற்பங்கள் பற்றியும், அவற்றில் மறைந்துள்ள தத்துவங்கள் பற்றியும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்துள்ளன. ஆர்வம் இருந்தால் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதும் சந்தேகம் இருந்தால் வாருங்கள் நம் சிற்றறிவுக்கு இயன்றவரை விளக்கம் தருகிறோம்

Posted

சிற்றின்பங்கள் பற்றி அறியாத திருமணமாகதவர்களுக்கு அந்த விதி விளங்குமா? அப்படியானால் சிற்றின்ப சுகங்கள் அனுபவித்து வாழ்வியம் வெறுப்புகளின் பின் தான் ஆலய தரிசனம் செய்வதா B)

திருமணமாகாதவர்களுக்கு விளங்காதா... ??? என்ன நெக்கலா..? அப்பிடி உங்களுக்கு விளங்கவில்லை எண்டால் உங்களின் உடற் தொகுதியிலை குறை இருக்க வேண்டும்... நல்ல வைத்தியராக பார்ப்பது நல்லது... B) B) B)

பதினைந்து வயது வரும் முன்னமே பலருக்கு பாலியல் உணர்வுகள் வர ஆரம்பித்து விடுகிறது...

சிற்றின்பம் என்பது போகம் என்பது பாலியல் என்பது மட்டும் அல்ல நிலையில்லாத எல்லாமே....!

அப்ப சிறுவர்களுக்கு... ?? அவை வெறும் சிலைகள்தான்... அவர்களாக தெரிந்து கொள்ள பட வேண்டியது.. அதுவரை அவை சிலைகள்...!

Posted

தமிழ் கூறும் நல்லுலகை

தவறாக வழிநடத்த

சிலர் செய்யும் சேட்டைகளை

சிதறடிக்கும் திருப்பணிகள்

சிலநாட்கள் தடை படலாம்

சிலம்பாட பொய் வரலாம்

சிலர் மூக்கு அதன் பின்னர்

சீக்கிரமே உடைபடலாம்

பலவேறு வேலைகளும்

பலமாக அழுத்துவதால்

இதமான பதில் தரவே

ஈரொரு நாள் ஆகிடலாம்

அதுவரையில் பகுத்தறிவே

ஆயிரம் பொய் சொல்லிவிடு :)

ஆறுதலாய் நாம் ரசிக்க

ஆயிரம் பொய் சொல்லி விடு :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

"பதி" என்று பொதுவாக கணவனைத்தான் சொல்வார்கள். அதற்கு தலைவன், பாதுகாவலன் என்று நிறைய அர்த்தங்கள் உண்டு.

பதி, பசு, பாசம் எண்ட ஒரு விளக்கம் இந்து மதத்தில் இருக்குது எண்டு நினைக்கின்றன். அதில் பதி என்றது தலைவன், அல்லது வழிகாட்டி என்ற அர்த்தம் வரும். நீங்கள் பிடிச்ச முயலுக்கு 3 எண்டு நிற்காதிங்கோ தம்பி.

மற்றது சபேசன் அவர்கள், வெற்றிவேல், தல போன்றவை மந்திரங்களுக்கு விளக்கம் தந்தப்புறம் தான் தான் முதலில் மந்திரங்களைப் பற்றிச் சொன்னது தவறு என்று ஒத்துக் கொள்ளாமல், பிற விடயங்களில் இந்துமதம் கற்பைக் குறைக்குது எண்டு இழுப்பது என்ன அர்த்தத்தில்? .யலாமை தானோ? அல்லது மந்திரங்களைப் பற்றித் தெரியாமல் ஏனோ தானோ என்று வாயைக் கொடுத்திட்டீங்களா?

Posted

மதனராசா!

நான் மந்திரங்களை இங்கே இணைக்கம் போNது, முதலாவது மந்திரத்திற்கு சிலர் "தந்தை" போன்ற அர்த்தங்களை சொல்லி சமாளிக்கிறார்கள் என்பதைக் கூறி இருக்கிறேன்.

வெற்றிவேல் தந்த விளக்கம் போன்று இந்த மந்திரத்திற்கு சிலர் விளக்கம் தருவதை அறிந்திருந்தனாலேயே முன்னெச்சரிக்கையோடு "அவர்கள் கணவர்கள் அல்ல, அவர்கள் தந்தைகள்" என்று சொல்வார்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

தற்பொழுது நான் புதிதாக ஒன்றும் கூறிவிடவில்லை.

பதி என்பதற்கு நிறைய விளக்கங்களை சொல்ல முடியும்.

ஜனாதிபதி, தளபதி, அதிபதி அப்படியே நீங்கள் சொன்ன பதி, பசு, பாசம் என்று பதி நிறைய அர்த்தங்களைக் கொடுக்கும். பொதுவாக தலைவன், பொறுப்பானவன் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு பெண்ணை நோக்கி "இவன் உன்னிடைய பதி" என்று சொல்கின்ற போது என்ன அர்த்தம் வரும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த பெண்ணைப் பார்த்து, இதுவரை நீ பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தாய், இனி உன்னுடைய புருசனின் பாதுகாப்பில் இருப்பாய் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு.

இங்கே புராணங்களில் காமக்கேளிக்கைகளுக்கு பெயர் போன கந்தர்வன், சந்தின், அக்னி போன்றவர்களுக்கு உரியவளாய் நீ இருந்தாய் என்று சொல்வதில் உள்ள அர்த்தம் என்ன?

ஒரு சொல்லை ஒரு ஆணைப் பார்த்து சொல்வதற்கும், ஒரு பெண்ணை நோக்கிச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு.

வெற்றிவேல் தந்த விளக்கம் இதைக் கருத்தில் எடுக்காமல், ஒரு சமாளிப்பாக மட்டுமே அமைகிறது.

இந்த மந்திரத்திற்கு நான் ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறேன். வெற்றிவேல் ஒரு கருத்துச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் இருவரும் சமஸ்கிருதம் கற்றவர்கள் அல்ல. சமஸ்கிருதம் கற்றவர்கள் சொன்ன விளக்கங்களையே இங்கே தருகிறோம்

இப்பொழுது யாருடைய விளக்கம் சரி என்ற கேள்வி வருகிறது.

அப்பொழுது நான் இந்து மதம் பெண்களை எப்படி நோக்குகிறது என்பதைக் கூறி, அதன் காரணமாக என்னுடைய விளக்கம் சரியாக இருக்கம் என்று தர்க்கிக்கிறேன். இதில் என்ன தவறு?

அன்றைய சூழல்களுக்கு ஏற்றபடி இந்துமதம் பெண்களை சித்தரித்தது என்ற கருத்தை தயா கூறியிருந்தார். இப்படியும் சமாளிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

ஆனால் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் எதுவும் பெண்களை இப்படிச் சித்தரிக்கவில்லையே! வடமொழி இந்து மதப் புராணங்கள்தானே பெண்களை இப்படிச் சித்தரிக்கிறது.

தமிழுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதிலிருந்தாவது விளங்குகிறதா?

ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் அசிங்கங்களை புனித மந்திரங்கள் என்ற பெயரில் எம்மீது திணிக்கின்றார்கள்.

தமிழில் திருமணம் செய்வதே இதற்கு ஒரே தீர்வு

Posted

என்னய்யா சக்கீலா படத்தின்ர விமர்சனம் எழுதுறியளா??

என்ன கொடுமை சார்.. அட அதுதான் 2,3 நாளா ஜம்மு பேபியை யாழில காணல்லையோ??? :D

டங்கு அண்ணா நான் வந்துட்டேன் யார் இந்த சகிலா மடம் எனக்கு தெரியாம.......யார் என்று சொன்னா நான் அவாவையும் பேட்டி எடுப்பேன் தானே டங்கு அண்ணா...... :P ;)

(என்ன இதில இருகிற படங்களையும் விடவா நாம தப்பா கதைத்க்டு போட்டோம் டங்கு அண்ணா)

Posted

இந்திய நம்பிக்கைகளை தரமற்று விமர்சிப்பது எனத் தீர்மானித்துள்ளீர்.

சரஸ்வதி நதி காயுமுன் இயற்றப்பட்ட வேதங்கள்(வ.கா.மு.1900)

பானினி இலக்கணம் அமைத்தது (வ.கா.மு.500).

ஆனால் ஏதங்களை இலக்கண வரம்பில் கொணர இயலாததால் அவை குரு பரப்பரையாய் மட்டுமே பரவ வேண்டும் என்பது நியதி. அதனாலே அது ஸ்ருதி.

சாயனர் உரையிலே மிக அதிகமான பிழை இருப்பதையையும் அதைப் பயன்படுத்தி மேலும் வேண்டுமென்றே பல முறையற்ற மொழி பெயர்ப்பும் வெளிநாட்டவர் செய்ததை சுவாமி.தயானந்தர் 19.ம் நூற்றாண்டிலேயே எழுதியுள்ளார்.

ஆனால் இன்றும் இவ்விளையாட்டு தொடர்கிறது.

ஐயா, கந்தசஷ்டிக் கவசம் பாட்டில் கூட ஆபாசம் தேடலாம்.

திருக்குறளுக்கும் உரை இருந்தாலே தான் புரியும். 50 ஆண்டு முன் எழுதிய தமிழ் இன்றையவருக்கு புரியாது. பக்தர்கள் தமிழில் நிறைய பாட தேவாரம், திவ்விய பிரபந்தம், திருப்புகழ் எனப் பாட கருவறயும் தமிழ் பெறும்.

திராவிட ஆசுரம நிலை என கலைஞர், ராமதாஸ், பரம்பரை அறங்காவலர் என வீரமணி பின்பற்றும் அரசியல் விமர்சனம் பெராது.

ஆனால் இந்திய நம்பிக்கைகளை தரமற்று விமர்சிப்பது எனத் தீர்மானித்துள்ளீர், ஈவேரா. வழியில் உளரல்கள் தொடரட்டும்.

//

ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

விஸ்வாமித்ரா

இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய 'அனுமன் ' புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார்.

நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத்தை, அதுவும் நன்றாகத் தமிழ் கற்றதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்பகுத்தறிவுக் கூட்டத்தை, இணையத்தில் தொடரும் அதன் விஷமப்பிரச்சாரத்தைக் காண நேர்ந்ததால் இதைப் பதிவு செய்கிறேன்.

இனி இராமாயணத்தைக் குறித்து ஈவேரா உதிர்த்த சில முத்துக்கள்:

“இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வமாக்க உருவானது.” (விடுதலை - 26.1.1943)

அதே ஈவேரா சில வருடங்கள் சென்றபின் சொன்னது:

“இராமாயணம் - வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூதுவாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக் காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பாகும்.” (விடுதலை - 17.10.1954)

இந்த முரண்பாட்டைப் பாருங்கள்.

முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார். இரண்டாவது, திராவிடர்களை மெத்த நாகரிகமுள்ள மேன்மக்களாகக் காட்ட உருவானது என்று கூறுகிறார். என்ன பிதற்றல் இது!

மேலும் பார்ப்போம்.

“இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்தராமாயணம், சமணராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப் பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரசகுடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.” (விடுதலை - 25.5.1961)

ஈவேராவின் கருத்துப்படி பெளத்தரும், சமணரும் முதலில் சொன்ன இந்த ஆபாசக் கதையை வால்மீகி மாற்றி விட்டான் என்றாகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான்.

ஈவேராவின் இந்த இதிகாசப்பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆசிரியர் ம.வெ. பல இடங்களில் அலைந்து தேடி சமணராமாயணத்தைக் கண்டுபிடித்து எழுதுகிறார்:

எனக்கு புத்தராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமணராமாயணம் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர் பற்றியும் கவுசலையின் பெற்றோர் பற்றியும் என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா ?

தசரதன் தந்தை அரண்யன்.

கவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.

இதில் எங்குமே ஈவேரா சொல்லும் ஆபாசப் பொய்த்தகவல் இல்லை.

(ஆதாரம்: நூல் - ஜைனராமாயணம், மூலம் ரவிசேனாச்சாரியார், தமிழில் தத்துவமேதை கஜபதி ஜைன், வெளியீடு - ஜைன இளைஞர் மன்றம்)

ஆகவே சமண ராமாயணத்தைப் பார்த்தால் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருப்பது தெரியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் 'இராமாயணக்குறிப்புகள் ' என்ற நூலில் ஈவேரா அடுக்கியிருக்கும் பொய்கள் ஒன்றிரண்டல்ல.

“பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர், நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.” (இராமாயணக் குறிப்புகள் - பக்கம்-3)

அதே புத்தகத்தில் மேலும் சொல்வது.

“தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.” (பக்கம்-5)

தேவர்கள் தன்மை என்ன ? ராட்சதர்கள் தன்மை என்ன ? மனிதர்கள் தன்மை என்ன ? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன ? இவையெல்லாம் இராமாயணத்தில் வரையறுக்கப் படவில்லை.” (பக்கம்-5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமே இல்லை என்கையில், பொதுவில் திராவிட மக்களைத்தான் அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இது ஈவேராவின் கண்டுபிடிப்பே அல்லாமல் வேறில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு ' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.

முனைவர் ப.கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஃ பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது.

ஃ பெரியார் பேச்சுவழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வைத்தவைகளை, 'இராமாயணப் பாத்திரங்கள் ' என்ற தலைப்பில் (திக வெளியீடு) தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் ' இராவணைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.

ஃ 'இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் ' என்று கூறும் பெரியார், இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. இராவணன் ஒரு திராவிடன் என்று கூறிவிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக் காட்டுகிறார்.

ஃ இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்தாலேயே அப்பாத்திரத்தைப் பற்றிப் பெரியார் கண்டு கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர்.

ஃ வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார், புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார். இராமாயணத்திலே இவர் பிரமனை நிகர்த்தவர் என்று அறிமுகப்படுத்தப் படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார், வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்று பெரியார் கருதியதால் இந்தக் கருத்து நடுநிலை தவறி விட்டதாகவே எண்ணலாம்.

ஃ இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படை அற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார்.

ஃ எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை.

ஃ இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காண முடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது.

இதற்கு மேலும் 'தந்தை பெரியாரின் சில சொந்தக் குழந்தைகள் ' செய்துவரும் விஷமப்பிரச்சாரத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.

குறிப்புகள் தந்துதவிய தலித் அறிஞர் ம.வெங்கடேசனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக

**

திண்ணையில் விஸ்வாமித்ரா //

Posted

புரியாதனவற்றை எல்லாம் எறிந்து விட வேண்டும் என்றால் உலகம் இத்தனை வளர்ச்சி

கண்டிருக்காது. ஆராய்ச்சி என்ற சொல்லே தேவைப்பட்டிருக்காது . நீங்களே சொல்லி விட்டீர்கள் "புரியாத மந்திரங்கள்" என்று. அப்படியானால் சரிவர புரிந்து கொண்ட பிறகு அல்லவா அவை சரியானவையா பிழையானவையா என்று தீர்மனிக்க வேண்டும்?!!!

புரியாதவற்றை எறிய நான் சொல்லவில்லை. இந்து சமயத்தை சேர்ந்த எத்னை பேருக்கு பூசகரின் மந்திரம் புரிந்து வழிபடுகிறீர்கள்.உங்கள் கருத்தின்படி சமஸ்கிருதம் தெரிந்த அனைவரும்தான் ஆலய தரிசனம் செய்ய முடியும். படிக்காத பாமரர்கள் இந்து சமயத்தை அறிய முடியாது. அப்படியான சம்கிருத மொழியில் வழிபாடு தேவைதானா. நாங்கள் தமிழர்கள் தெரிந்த மொழியில் அறிந்து கொள்வதை விடுத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது ஏற்க முடியாதது. புரியாத மந்திரமாயினும் அதன் உட் பொருள் தெரிந்தவர்கள் மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் அறிய முடிகிறது B)

INTERNET போல் கோவில்களும் பலர் கூடி தேடுதல் செய்யும் இடங்கள். வடிவங்கள் வேறு படலாம். தேடல்களின் தன்மை வேறுபடலாம். அத்தோடு கோவில் என்பது பிற்காலத்தில் உருவானது. வேதங்களில் கோவில்கள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை என்பதை அறிவீர்களா? கலாரசனை என்பது காலத்திற்கு காலம் வேறுபடக் கூடியது. அதற்கேற்ப கலைகளும் வளர்வது தவிர்க்கப்பட முடியாதது.

ஆகம விதிகளுக்கு அமையத்தான் ஆலயம் கட்டப்படுகின்றது B) நான் கூறவில்லையே வேதங்களை மையமாக கொண்டு ஆலயம் கட்டப்பட்டதாக

அத்தோடு காமம் என்பது தீண்டத்தகாததல்ல. உண்மையே உரைப்பதாக சொல்லிக் கொள்ளும் மதம் மனிதர்களிடையே நிலவும் பல்வேறு காமம் சம்பந்தப்பட்ட எண்ண ஓட்டங்களை உள்ளது உள்ளபடி விளக்கி அதில் உள்ள நன்மை தீமைகளை வெளிப்படையாக விளக்க ஏன் தயங்க வேண்டும்? காமத்தை கண்டு ஓடுவதை விட, காமம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் மனது கட்டுக்குள் இருக்கும் என்றால் அதுவே உயர்ந்த நிலை.

காமம் தீண்டத்தகாதது அல்ல என்று கூறும் நீங்கள் இந்தக்களத்தில் நான் இணைத்த படம் தணிக்கை செயப்பட்டதன் மூலம் இந்தகளத்திலே அனுமதிக்காத சிலையை கோவிலில் வைப்பது தவறு என்பதை உங்களுக்கு உனர்த்தியிருக்கும்

நீங்கள் தந்திருப்பது மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுரோ கோவில் சிற்பங்கள். இந்த கோவில் பற்றியும் அதன் சிற்பங்கள் பற்றியும், அவற்றில் மறைந்துள்ள தத்துவங்கள் பற்றியும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்துள்ளன. ஆர்வம் இருந்தால் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதும் சந்தேகம் இருந்தால் வாருங்கள் நம் சிற்றறிவுக்கு இயன்றவரை விளக்கம் தருகிறோம்

அதைப்பற்றி அறிந்தபடியால்த்தான் அந்தப்படம் இணைத்திருந்தேன் B)

உங்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெற வேண்டிய நிலை எனக்கு இல்லை B)

முட நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகி விட்டேன் B)

Posted

திருமணமாகாதவர்களுக்கு விளங்காதா... ??? என்ன நெக்கலா..? அப்பிடி உங்களுக்கு விளங்கவில்லை எண்டால் உங்களின் உடற் தொகுதியிலை குறை இருக்க வேண்டும்... நல்ல வைத்தியராக பார்ப்பது நல்லது... B) B) B)

நாகரிகமான முறையில் மற்றவர்களுடன் கருத்துப்பகிர பழகிக்கொள்ளவும்

நான் கூறியது சிறுவர்கள் சிறுமியர்களைக்குறிப்பிட்டே

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.