Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முச்சக்கர வாகனமும் குண்டுத் தாக்குதலும் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச உளவு நிறுவனங்களின் முக்கிய வேவு மற்றும் கொலைத் தாக்குதல்களைப் பரீட்சிக்கும் ஒரு யதாhத்தமான களமாக கொழும்பு நகரம் மாறியுள்ளது.

இன்று (1-12-2006) ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்று.

எனினும், பாரம்பரியமாகவும், ஏற்கனவே தமது அதிகார வர்க்கத்தினரால் வெற்றிடங்கள் இடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளுக்கு தேவையான எழுத்துக்களையிட்டு, புலிகள் மீது ஸ்ரீலங்கா அரசு உட்பட உலகக்கனவானும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட மௌனமாக இந்தத் தாக்குதலை புலிகள் செய்திருப்பார்கள் என்று முணுமுணுப்பது இங்கு தெரிகிறது.

எனினும், கொழும்பின் புலனாய்வுச் செய்தியாளர்களின் தகவலின்படி, இந்தத் தாக்குதல் சர்வதேச புலனாய்வு மற்றும் உள்ள+ர் இராணுவஃஅரச அதிகாரிகள் ஆகியோரின் திட்டமிட்ட ஒரு உளவு ரீதியிலான தாக்குதலாகவே கருதக்கூடியதாகவுள்ளது.

புலிகள்தான் தாக்குதலைச் செய்தார்கள் என்று வைத்துக்கொண்டால், குறி தப்புவது கடினமாக இருந்திருக்கும். ஆனால், இன்றைய தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவித சிராய்வுகளும் இன்றி தப்பியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ மிக முக்கிய இலக்குகள் இருக்கும் பட்சத்தில் இந்த மென்மையான இலக்கு மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதே இந்தப் பத்தியை எழுதுபவரின் எண்ணம்.

புலிகளின் நகர்வுகளை நோக்குமிடத்து, அவர்கள் தொலை நோக்கான பார்வையுடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

இதற்குச் சான்றாக விடுதலைப் புலிகளின் வருடாந்த கொள்கை விளக்க உரை அமைந்துள்ளது. இந்த விளக்கவுரையை அமைதியாகவும,; ஆழமாகவும் ஒருவர் படித்து நோக்கினால் - அவர்கள் தமது இலக்கு நோக்கி நகரும் விதங்கள் கடந்த காலப் பாதையிலிருந்து வேறுபட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இந்தத் தாக்குதல் போன்ற, காலத்தை விரயமாக்கும் தாக்குதல்களிலிருந்தும் இலக்குகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் சற்று விலகி, வித்தியாசமான அதுவும் சர்வதேசமே வியக்கும் வகையிலான சில நகர்வுகளையே மேற்கொள்வர்.

இந்த வியத்தகு தாக்குதலுக்கான ஒரு முன்னோடிப் பயிற்சித் தாக்குதல்களே அண்மைய நாட்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், மூதூர் பகுதியிலும், கடற்பிரதேசங்களிலும் நடத்தப்பட்டவை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய உண்மை.

இனி, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை உற்று நோக்கின், இது ஒரு உயர் பாதுகாப்பு வலயப் பகுதி - பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மிகவும் நுண்ணிய கண்காணிப்பு வலயமாக ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சகத்தினால் பிரகடனப்பட்டுள்ளது.

‘அரலியக மடிரய’ (Araliyagaha Madiraya – Temple Trees), பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய தூதுவரலாயங்களைக் கொண்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், அரசுக்கான உலக ஆதரவினைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் தூதுவர் மீதும் இதே பிரதேசமொன்றில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முச்சக்கர வாகனம் பயன்படுத்தப்படிருப்பதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பினர் கூறியதை இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்;.

இப்போதும் முச்சக்கர வண்டியிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்ததத் தாக்கதல் மூலம், தற்கொலைத் தாக்குதல் என்ற பதத்தினை ஊடகங்கள் மூலம் கசியவிட்டு, பயங்கராவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு மீண்டும் முனைந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால், தனியரசுக்கான போராட்டம் தொடரப்படவுள்ளதாக வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையினையடுத்து, கொழும்பு நகரின் பாதுகாப்ப ஏற்பாடுகள் பாக்கிஸ்தான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உதவியுடன் நவீன தொழில்நுட்ப ரீதியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வகையில், பாதுகாப்புச் செயலாளரின் வாகனப் பயணத்தின்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் எந்தவொரு வாகனமும் இந்தப்பாதையில் சென்றிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அரிது!.

இராணுவத் தொடர்வண்டிகள் செல்லும்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் முச்சக்கர வாகனம் (Auto) இந்தப் பகுதியில் சென்றிருப்பது பெரும் சந்தேகத்தை தருகின்றது.

ஏனெனில், அண்மைய நாட்களில் முச்சக்கர வண்டிகளிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்திகளை வெளியிட்ட்ட வண்ணம் இருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

சர்வதேச ரீதியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான மனிதவுரிமை விடயத்திலும், வடக்கிற்கான தரைப்பாதையை திறந்துவிடுவது குறித்து, பல்வேறு அமைப்புக்கள் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த அழுத்தங்களை திசை திருப்புவதற்கும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுந்துள்ள நிலையினை சிதைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு சதித் தாக்குதல் இதுவென்பது கண்கூடு.

எனவே, கொழும்பில் மேற்கொள்ளப்படும் மென்மையான இலக்குகள் மீதான தாக்குதல்களின் பழி விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டால் ஆச்சரியபபடுவதற்கு ஒன்றுமில்லை.

http://www.nerudal.com/content/view/3332/38/

நேரத்திற்கு பொருத்தமான கண்ணோட்டம் நன்றியும் வாழ்த்துக்களும்.

இதை இங்கு ஆர்ப்பரிக்கும் பன்னாடைகள் கவனத்தில் எடுக்குமா? கூடவே பதிவு போன்றதுகளும்

வெற்றுக்கருத்து.... உண்மையான களநிலவரம் தெரியாத கற்பனை!

Useless & Meaningless coloumn. He is not a soft target. He is the main person for responsible for mass killing in N&E and he is the one highly involving in the Colombo abductions (Anyone can ask Colombo Tamils about this)

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் மகிந்த அரசுக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கும் இடையில் மறுபக்கம் ஊடல் நடக்கின்றது. மகிந்த அரசு பதவியேற்றவுடன், லண்டனுக்கு ஓடிய, சந்திரிக்கா அம்மையார் இப்போது திரும்பி வந்திருக்கின்றார் என்றால் அது காரணமில்லாமல் இருக்காது.

பதவியற்ற நிலையில் மகிந்த அரசால் சந்திரிக்காவை விசாரணையின்றி உள்ளே தூக்கிப் போட முடியும் என்பதால் கெஞ்சிக் கூத்தாடி சர்வதேசப் பதவி ஒன்றோடு தான் சந்திரிக்கா அம்மையார் இலங்கை போயிலுக்கின்றார் என்பதைக் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவகாசம் கேட்டும், சந்திரிக்காவை கழுத்தைப் பிடித்து தள்ளிய மகிந்தவை, தயாசந்தகிரியோடு இவரையும் ஊழல் வழக்கில் மாட்ட வைத்து அமத்த முனைந்த மகிந்தாவை, கொழும்பு திரும்பி வந்தபோது, சாதாரண பயணிகள் போல நடத்திய மகிந்தாவை சந்திரிக்கா இலகுவில் மன்னிக்க மாட்டார் என்பது உண்மை.

ஏற்கனவே சந்திரிக்காவுக்கு ஆதரவாக உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்காரர், ஒரு தாழ்நிலச் சிங்களவனுக்கு கீழ் இருந்து பணி புரிய விரும்பமாட்டார்கள். மகிந்தாவின் கைகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனரோ என்ற சந்தேகத்தையும் இது கிளப்பி விடுகின்றது.

வழியில் தற்கொலைத் தாக்குதலாளி என்று சிறிலங்காப் பொலிஸ் குறிப்பிடும் உடல் உண்மையிலேயே சிதைவடையாமலே ஈருப்பது கூட இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. அது ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருந்தால், சுத்திவர எல்லாம் எரியும்போது அந்த உடல்மட்டும் பாதுகாப்பாக இருக்காது. இடையில் மாட்டுப்பட்ட ஒருவராக இருக்க கூடும்.

செஞ்சோல மீதான குண்டு வீச்சுக்கும். மூதூர் தாக்குதல் சம்பவங்களில் தமிழர்கள் பெருமளவில் இடம்பெயர்வுக்கும் காரணமானவர் இந்த கோத்தபாய தான்... அமெரிக்க குடியான இவர் செய்தகொலைகள் வெளித்தெரியப்படாம கிடக்கிறது...

அவர் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் கவலை இல்லை... அவர் மீது தாக்குதல் நடத்த யார் முனைந்தாலும் அவரின் கொலைகளுக்கு பழிவாங்கும் தன்மைதான் எண்று அடித்து சொல்லி பிரச்சாரம் செய்ய எங்கட ஆக்களுக்கு மனதில் தில் இல்லை... அப்படி செய்வதை விமர்சிப்பதும் தடுப்பதும்தானே சிலர் வேலையே.....!

ஒரு இனமே ஒருவனின் அளிவில் மகிழ்கிறது எண்றால் அவன் எத்தினை கொடூரனாக இருக்க வேண்டும்...?? ( சா தப்பீட்டான் எண்று, அங்கலாய்க்கிறது இனம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதி முக்கியமான விடயத்தை இங்கே சுட்டிக்காட்டியுள்ளீர்கள்... நானும் இது தொடர்பாக யோசித்தேன்...

தற்கொலைத்தாக்குதல் என்பது வெடிகுண்டை கையில் கொண்டுசென்று வீசிவிட்டு வருவதில்லை.. அது உடலிலே மறைத்து கட்டுவது.. மற்றய சேதங்களுக்கு முன்னர் அவரின் உடல்தான் முதலில் சிதறும் அதன்பின்னர்தான் மற்றய சேதங்கள்..

இவர்கள் காட்டிய படத்தில் உடலில் சிறு எரிகாயங்கள் மட்டுமே தென்படுகின்றன.. வெடிகுண்டையை கட்டிக்கொண்டு வந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை..

வெடிகுண்டு கட்டுகிறவர் என்ன வெறும் t-shirt மட்டுமா அணிந்திருப்பார்..?

பெரிய வெடிகுண்டை எவ்வாறு அப்படி சந்தேகம் வராமல் t.shirt இல் மறைத்து வைப்பது போன்ற பல கேள்விகள் இன்னும் அரசாங்கத்திடம் கேட்கப்படாதவையாகவே இருக்கின்றன..

இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்று இல்லை..

வழியில் தற்கொலைத் தாக்குதலாளி என்று சிறிலங்காப் பொலிஸ் குறிப்பிடும் உடல் உண்மையிலேயே சிதைவடையாமலே ஈருப்பது கூட இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. அது ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருந்தால், சுத்திவர எல்லாம் எரியும்போது அந்த உடல்மட்டும் பாதுகாப்பாக இருக்காது. இடையில் மாட்டுப்பட்ட ஒருவராக இருக்க கூடும்.

இதுதான் மிகவும் வேதனையான விடயம்.. எதிரியின் அழிவில்கூட மகிழ்ச்சி கொண்டாட முடியவில்லை.. நம்முள் சிலரே தனிமனித தாக்குதலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் எல்லோருக்கும்..

எது எவ்வாறு இருப்பினும்.. அவன் அழிந்தால் தமிழினத்திற்கே மகிழ்ச்சிதான்...

அவர் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் கவலை இல்லை... அவர் மீது தாக்குதல் நடத்த யார் முனைந்தாலும் அவரின் கொலைகளுக்கு பழிவாங்கும் தன்மைதான் எண்று அடித்து சொல்லி பிரச்சாரம் செய்ய எங்கட ஆக்களுக்கு மனதில் தில் இல்லை... அப்படி செய்வதை விமர்சிப்பதும் தடுப்பதும்தானே சிலர் வேலையே.....!

"We have tracked down the owner of the vehicle used in the bombing," a police official said. "Two are being questioned."

He said forensic experts suggested that the three-wheel rickshaw had been fitted with eight to 10 kilos of plastic explosives and packed with ball bearings which acted as pellets.

Two army bodyguards of Rajapakse were killed while another 15 people, including five civilians, were wounded.

Rajapakse's bullet-proof limousine was also hit, but he escaped with only a minor graze above his right eye.

Rajapakse, the younger brother of President Mahinda Rajapakse, later showed photographers blood stains on both sleeves of his white shirt. The blood had come from his guards who were wounded.

http://au.news.yahoo.com/061202/19/11n7c.html

Edited by saanakiyan

:unsure: கிளைமோர் கொண்டு இப்படி செய்யமுடியும்.

புலிகள் தான் செய்தார்களா அல்லது மகிந்தாவா என்பது ஒருபுறமிருக்க

அமெரிக்கா பிரஜை நம்ம மவன் கொல்லப்பட்டிருந்தல் உன்டாகும்

விளைவுகள் அதனை விட பெரிய தாக்கம் இருந்திருக்கும்.....அமெரிக்கமக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருடல் விமர்சனக் கட்டுரை ஆழமாக சிந்திக்க வைக்கிறது. மேலோட்டமாக தற்கொலைத் தாக்குதல் என்று தெரிந்தாலும் உள்வீட்டிற்குள் புதைந்துள்ள இரகசியங்கள் வெளிவராது. சிறிலங்காவில் ஒரு சிங்களவர் தடுக்கி விழுந்தால் அதற்குக் காரணம் புலி என்பதுதான் அவர்கள் வாதம். இதை விட்டு அடுத்த விடயத்துக்கு வருவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கட்டுரை இப்படியும் சிந்தித்து பார்க வேண்டும்.

ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது!!! கணிதம் தெரியுமா? கூட்டி கழித்து பார் கணக்கு சரியாக வரும். திட்டம் என்ன? லாபம் யாருக்கு?

ஐயா இது அரசகட்டளை!!!

வணக்கம் வெற்றிவெல்,

உங்கள் கருதுக்கள் மதிகப்படவேண்டியயை.....தலைவணங்க

007 கடைசி 3 சொற்களில் பதில் உள்ளதே.

கொழும்பில் நடைபெற்ற தாக்குதல் இலக்கு இறுதி நூல் இடையில் சற்று தவறியுள்ளது குறித்த இலக்கு உரியமுறையில் தாக்கப்பட்டிருந்தால் இலங்கையின் சரித்திரம் வேறாகமாறியிருக்கும் என்றும் மகிந்தவின் 370 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 1 இலட்சம் வாக்குகளால் தமிழ் மக்களின் தாருணியத்தில் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச தனது 1 வருட ஆட்சியில் அதிக கொலைகளை செய்த பெருமைக்குரியவராகிறார். நேற்றயை தற்கொடைத்தாக்குதலில் பல வெளிவராத உண்மைகள் மறைந்திருக்கின்றன. முன்னைநாள் இராணுவ அதிகாரியான கோதபாய ராஜபக்ச இந்த குண்டு தாக்குதலில் தப்பினார் என்ற செய்திகளே வெளிவந்தன. ஏனினும் தாக்குதலில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஏச்.எம்.ஜி.எஸ்.பலிகஹார கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் இந்த தகவல் மறைக்கப்பட்டுள்ளது இவர் இலங்கையின் வெளியுறவுத்துறையில் நீண்ட நெடுங்கால அனுபவம் உடையவர். முன்னைநாள் நிதி அமைச்சின் செயலாளரும் திறைசேரியின் தலைவருமான சரித்த ரத்வத்தை படுகாயமடைந்தள்ளார் இந்த தகவலும் உடகங்களில் வெளிவராமல் மறைக்கபட்டுள்ளது. குண்டு தாக்குதல் நடைபெற்ற சத்தத்தை ராஜபக்ச கேட்டள்ளார் உடனடியாக தனது சகோதரன் தன்னை சந்திக்க வருவதாகவும் அவரை உடனடியாக தேடி பிடிக்குமாறும் மகிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு பிரிவினரிடம் உத்தரவிட்டுள்ளார். மிகவும் ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் அழுதுகொண்டும் இருந்த மகிந்த ராஜபக்ச அறையில் இருந்து குளறிக்கொண்டு ஓடிவெளியே வந்தார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காருக்குள் இறுகி இருந்த கோதபாய ராஜபக்சவை அலவாங்கால் காரை கொத்தியே வெளியே மீட்டதாக பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் நடைபெற்றபோது கோதபாயவின் மனைவி இலங்கை விமானப்படையினரின் விசேட பெண்கள் பிரிவின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதாகவும் தெரியவருகிறது.+

http://nitharsanam.com/?art=21645

??????????????????///

தாக்குதல் இலக்கு தவறவில்லை மிகச்சரியாக தாக்கப்பட்டுள்ளது. தப்பியதற்கு காரணம் குண்டு துளைக்காத BMW, அணிந்திருந்த குண்டு துளைக்காத மேற்சட்டை. காருக்கு முன்னால் மிகச் சமீபமாக குண்டு வெடிக்கவைக்கப்பட்டும் அந்த காருக்கு சேதம் அதிகமில்லை. அதற்கு பாதுகாப்பாக வந்த Defender மற்றும் பின்னால் வந்த இரண்டு சாதாரண கார்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதுவே முதன்முறையாக குண்டு துளைக்காத காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். எனவே தாக்குதல் நடத்தியவர்களுக்கு இது ஒரு படிப்பினையாகும். டாங்கிகள் போன்ற இவற்றுக்கான மாற்று வழிகள் இல்லாமலில்லை!

கோத்தபாய சென்ற காரிற்கு கிட்டவாக முச்சக்கரவண்டி மோதப்படவில்லை. சற்றுத் தூரத்திலேயே அது வெடித்துள்ளது என்ற தெரிகிறது.

காரிற்கு அருகே குண்டு வெடித்திருந்தால் கோத்தபாயவின் கதை முடிந்திருக்கும். குண்டு துழைக்காத கார் துப்பாக்கி ரவைகள் உட்செல்வதையே தடுப்பதற்கு உகந்தன. ஆனால் குண்டுகள் அருகே வெடிக்கும்போது அவற்றை அதனால் தாக்குப்பிடிக்க முடியாது.

எனினும், கொழும்பின் புலனாய்வுச் செய்தியாளர்களின் தகவலின்படி, இந்தத் தாக்குதல் சர்வதேச புலனாய்வு மற்றும் உள்ள+ர் இராணுவஃஅரச அதிகாரிகள் ஆகியோரின் திட்டமிட்ட ஒரு உளவு ரீதியிலான தாக்குதலாகவே கருதக்கூடியதாகவுள்ளது.

இந்த தமிழ் இணையத் தளங்களிற்கு கொழும்பில் புலனாய்வுச் செய்தியாளர்கள், இராணுவச் செய்தியாளர்கள், வெள்ளையினச் செய்தியாளர்கள் என்று பெரிய செய்தியாளர் பட்டாளமே இருக்கிறது போல.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ மிக முக்கிய இலக்குகள் இருக்கும் பட்சத்தில் இந்த மென்மையான இலக்கு மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதே இந்தப் பத்தியை எழுதுபவரின் எண்ணம்.

கோத்தபாய ராஜபக்ச ஒன்றும் முக்கியமற்ற இலக்கு என்று கூறமுடியாது. இன்று பல்வேறு பட்ட முறைகளில் தமிழ் மக்கள் மீது நெருக்கடிகளை ஏற்படுத்து வருபவர் இவர். நீதிக்குப் புறம்பான கொலைகள், உணவுப் பொருட்களுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளிற்குப் பின்னால் இருப்பவர் அல்லது திட்டமிட்டு செயற்படுத்துபவராக இருப்பவர் இவரே. எனவே சரத் பொன்சேகா, பரமி குலதுங்க வரிசையில் இவரும் ஒரு முக்கிய இலக்கே.

புலிகள்தான் தாக்குதலைச் செய்தார்கள் என்று வைத்துக்கொண்டால், குறி தப்புவது கடினமாக இருந்திருக்கும். ஆனால், இன்றைய தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவித சிராய்வுகளும் இன்றி தப்பியுள்ளார்.

இலக்குகள் சிலவேளைகளில் எம்மவர்களின் தாக்குதல்களிலிருந்து சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தப்பியிருக்கின்றன. 1999ல் அம்மையாருக்கு நடந்தபோது, அருகே நெருங்க முடியாததால் இலக்கு தவறியது. அதேபோன்று சரத் பொன்சேகாவிற்கு நடந்தபோது, அவரது மெய்பாதுகாப்பாளர் இலக்கை அடைய வந்தவரை காலால் உதைத்தபோது இலக்கு தவறியது. எனவே இந்தத் தாக்குதலிலும் அவ்வாறு ஏதாவது இடையூறுகளால் இலக்கு தவறியிருக்கலாம்.

இப்பத்திnழுத்தாளரின் ஊகிப்புக்கள் முற்று முழுதாக நிராகரிக்கப்படக் கூடியவையல்ல. ஆனால் சிலது ஏற்றுக்கொள்ள முடியாதவை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் விட புத்திசாலித்தனமானவர் நீங்கள் மின்னல்!

ரவிராஜ்சைக் கொன்றபேர்து சிறிலங்கா அரசு தான் என உரிமை கோரவில்லை. அல்லது கேணல் ரமணனைக் கொன்றபோது கருணாக்கும்பல் மீது பழியைப் போட்டது. அவ்வறே உடுருவல் தாக்குதல் அணிகளில் கொலைகள் செய்தபோதும் அவ்வாறு உரிமை கோரவில்லை. ஆனால் எங்களுக்கு கட்டாயம் உரிமை கோரவும் வேண்டும். நாங்கள் தான் அடிச்சம் என்று பெருமையடிக்கவும் வேணும்.

எதிரி நினைக்கின்றான். இலக்கை அழிச்சால் போதும் என்று. எங்கட சனத்துக்குத் தேவை, எது நடந்தாலும் நாங்கள் தான் பின்னினம் என்று சொல்ல வேண்டும் என்று.

உரிமை கோரப்படதா எந்த விடயத்தையும் முந்திக் கொட்டை மாதிரிப் புறப்பட்டு, தமிழீழத்துக்கு அங்கிகாரம் கிடைப்பதைத் தடுத்துப் போட வேண்டும். எதையும் நாங்கள் தான் என்று சொல்லித் திருப்திப்பட வேணும்.

சிங்களவனுக்கு மேல் மண்டை கழண்டது என்று சொல்லிக் கொண்டு பார்த்தால், எங்கட சனத்துக்கு தான் கழண்டு போச்சு!

இதுதான் புதிய ரகமான BMW குண்டுதூலைக்காத கார்.இவை அனைத்தும் துப்பாகி ரவைகளுக்கே சக்திவாய்ந்த குண்டுகளால் இவற்றை செயலிழக்கச்செய்ய முடியும் ஈராக்கில் கவச வாகங்கள் மீது கார்குண்டுதாக்குதல் நடாத்தி தகர்கிண்றனர் கம்மர் வாகனத்தையே தகர்கமுடியுமாயின் இதனையும் தகர்கலாம்

bmwh.jpg

year-2006

make:BMW

Model745LI

Doors-4

Engine8 cylinder

Transmission automatic

Body Type:Armored

Miles:New

bmwg.jpg

bmwh.jpg

</FONT>

</FONT>

bmwe.JPG

LEVEL V

COST TO ARMOR ALL LEVEL 5
(high power rifle
Armor Piercing
protection) SUV TYPE VEHICLES

USD $85,000 plus cost of armoring options and cost of vehicle.

COST TO ARMOR ALL LEVEL 5
high power rifle
Armor Piercing
protection) MERCEDES OR BMW OR ANY LUXURY FOREIGN TYPE VEHICLES

USD $90,000 plus cost of armoring options and cost of vehicle.

COST TO ARMOR ALL LEVEL 5
</SPAN>
(high power rifle
Armor Piercing
protection) SEDAN OR SALOON TYPE VEHICLES

USD $80,000 plus cost of armoring options and cost of vehicle.

LEVEL IV

COST TO ARMOR ALL LEVEL 4
high power rifle protection) SUV TYPE VEHICLES

USD $70,000 plus cost of armoring options and cost of vehicle.

COST TO ARMOR ALL LEVEL 4
(high power rifle protection) MERCEDES OR BMW OR ANY LUXURY FOREIGN TYPE VEHICLES

USD $75,000 plus cost of armoring options and cost of vehicle.

COST TO ARMOR ALL LEVEL 4
(high power rifle protection) SEDAN OR SALOON TYPE VEHICLES

USD $65,000 plus cost of armoring options and cost of vehicle.</SPAN></SPAN>
LEVEL III

COST TO ARMOR ALL LEVEL 3
(All handgun/pistol type protection) SUV TYPE VEHICLES

USD $55,000 plus cost of armoring options and cost of vehicle.

COST TO ARMOR ALL LEVEL 3
(All handgun/pistol type protection) MERCEDES OR BMW OR ANY LUXURY FOREIGN TYPE VEHICLES

USD $60,000 plus cost of armoring options and cost of vehicle.

COST TO ARMOR ALL LEVEL 3
(All handgun/pistol type protection) SEDAN OR SALOON TYPE VEHICLES

USD $50,000 plus cost of armoring options and cost of vehicle.

Protection Levels

http://www.alpinesurvival.com/bullet-proof...d-vehicles.html

Edited by ஈழவன்85

எல்லோரையும் விட புத்திசாலித்தனமானவர் நீங்கள் மின்னல்!

ரவிராஜ்சைக் கொன்றபேர்து சிறிலங்கா அரசு தான் என உரிமை கோரவில்லை. அல்லது கேணல் ரமணனைக் கொன்றபோது கருணாக்கும்பல் மீது பழியைப் போட்டது. அவ்வறே உடுருவல் தாக்குதல் அணிகளில் கொலைகள் செய்தபோதும் அவ்வாறு உரிமை கோரவில்லை. ஆனால் எங்களுக்கு கட்டாயம் உரிமை கோரவும் வேண்டும். நாங்கள் தான் அடிச்சம் என்று பெருமையடிக்கவும் வேணும்.

எதிரி நினைக்கின்றான். இலக்கை அழிச்சால் போதும் என்று. எங்கட சனத்துக்குத் தேவை, எது நடந்தாலும் நாங்கள் தான் பின்னினம் என்று சொல்ல வேண்டும் என்று.

உரிமை கோரப்படதா எந்த விடயத்தையும் முந்திக் கொட்டை மாதிரிப் புறப்பட்டு, தமிழீழத்துக்கு அங்கிகாரம் கிடைப்பதைத் தடுத்துப் போட வேண்டும். எதையும் நாங்கள் தான் என்று சொல்லித் திருப்திப்பட வேணும்.

சிங்களவனுக்கு மேல் மண்டை கழண்டது என்று சொல்லிக் கொண்டு பார்த்தால், எங்கட சனத்துக்கு தான் கழண்டு போச்சு!

தூயவன் இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அதை புலிகள் உரிமை கோரவேண்டும் என்றும் கூறவில்லை.

குறித்த பத்தி எழுத்தாளர் கூறுவதுபோன்று நம்மவர் தவிர்ந்த வேறு யாராவது செய்திருக்கலாம்.

குறிப்பாக மட்டக்களப்பில் அப்பாவிகளைக் கடத்தி அவர்களின் வாகனத்தில் குண்டுகளைப் பொருத்தி விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளில் வெடிக்க வைக்க கருணா குழு மற்றும் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் போன்று இந்த முயற்சி கூட நடத்திருக்கலாம்.

ஆனால் குறித்த பத்தி எழுத்தாளர் தனது கருத்தை நிறுவுவதற்காக சில ஏற்க முடியாத விடயங்களை ஆதாராமாகச் சேர்த்திருக்கிறார். அதையே சுட்டிக்காட்டினேன்.

குறித்த பத்தியெழுத்தாளரின் தவறை மின்னல் சுட்டிக்காட்டியது தமிழீழத்திற்கான உலக நாடுகளின் அங்கிகாரத்தை தடுத்துவிடுமா...?

தமிழனை அடக்குவதில் ஒடுக்குவதில் சிங்களவனின் மேல் வீடு எப்படி சமார்த்தியமாக விளையாடியது என்பதை இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னான காலப்பகுதியைப் பகுதியைப் பார்;த்தால் புரியும். யாரின் மேல்வீடு கழன்று இருக்கிறதென்று.

ரவிராஜ்சைக் கொன்றபேர்து சிறிலங்கா அரசு தான் என உரிமை கோரவில்லை. அல்லது கேணல் ரமணனைக் கொன்றபோது கருணாக்கும்பல் மீது பழியைப் போட்டது. அவ்வறே உடுருவல் தாக்குதல் அணிகளில் கொலைகள் செய்தபோதும் அவ்வாறு உரிமை கோரவில்லை. ஆனால் எங்களுக்கு கட்டாயம் உரிமை கோரவும் வேண்டும். நாங்கள் தான் அடிச்சம் என்று பெருமையடிக்கவும் வேணும்.

எதிரி நினைக்கின்றான். இலக்கை அழிச்சால் போதும் என்று. எங்கட சனத்துக்குத் தேவை, எது நடந்தாலும் நாங்கள் தான் பின்னினம் என்று சொல்ல வேண்டும் என்று.

உரிமை கோரப்படதா எந்த விடயத்தையும் முந்திக் கொட்டை மாதிரிப் புறப்பட்டு, தமிழீழத்துக்கு அங்கிகாரம் கிடைப்பதைத் தடுத்துப் போட வேண்டும். எதையும் நாங்கள் தான் என்று சொல்லித் திருப்திப்பட வேணும்.

சிங்களவனுக்கு மேல் மண்டை கழண்டது என்று சொல்லிக் கொண்டு பார்த்தால், எங்கட சனத்துக்கு தான் கழண்டு போச்சு!

மாமனிதர் ரவிராJ கொல்லப்பட்டபோது அரசியல்வாதிகள் அவருக்காய் இரங்கல்களை சொன்ன செய்திகளோடு சிங்கள நாளோடுகள் அவரின் இருப்பு எவ்வளவுக்கு சிங்களத்துக்கு தேவை இல்லாதது எண்ற செய்தியையும் சொல்லிக்கொண்டுதான் இருந்தது....

என்னதான் புலிகள் கோத்தபாய மீதுதாக்குதல் நடத்தவில்லை எண்றாலும் தமிழர்களின் உண்மையான மனநிலை பிரதிபலிக்க படாத்து எப்போதும் எங்களுக்கு சிக்கலைத்தான் கொண்டு வரும்... கோத்தபாய செய்த கொடுரங்களும் அதனால் மக்கள் பட்ட கஸ்ரங்களும் கண்டு கொள்ளப்படாமல் அவர்மீதான பச்சாபாதங்களும்தான் மிஞ்சி போய் இருக்கிறது...

இதுவே எங்களது ஊடகங்கள் கொலைத்தாக்குதல் மீது வருத்தத்தையும்.... ஆனால் அந்த கொலைகாறனின் அளிவில் தமிழர் அடையும் மகிழ்ச்சியையும் வெளிக்கொணரவேண்டாமா...?? இப்படி தமிழர் மௌனியாக இருப்பதால்த்தான் சிங்களவன் எங்களுக்கு கொடுமைகளே செய்வதில்லை எண்று அவர்களோடு நாங்கள் சேர்ந்து வாழலாம் எண்றும் போறவன் வாறவன் எல்லாம் அறிவுரை சொல்கிறான்...

உதாரணத்துக்கு அல்ஜசீரா தொலைக்காட்ச்சியை எடுத்துக்கொள்ளுங்கள்... அமெரிக்கர், பிரித்தானியர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அது எப்போதும் வருத்தம் தெரிவித்தது கிடையாது... இண்றும் அவற்றி நியாயப்படுத்தும் இஸ்லாமிய முதன்மை ஊடகமாக இருக்கின்றது...

எங்களின் எதிர்மறையான ஊடக தற்காப்பு போர் என்பது எப்போதும் எங்களை எதிரி துரத்தி துரத்தி அடிக்கும் நிலைக்குத்தான் தள்ளிவிடும்... ஓடுற நாயை துரத்துற நாய் போல... எங்களின் மனநிலையை சரியாக பிரதிபலியுங்கள்... அவர்கள் அதுக்கு காரணம் எல்லாம் சொல்ல வேண்டிவரும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் சொன்னது,

சிங்களவனுக்கு மேல் மண்டை கழண்டது என்று சொல்லிக் கொண்டு பார்த்தால், எங்கட சனத்துக்கு தான் கழண்டு போச்சு!

:huh::huh::lol:

______________________________

யார்யார் எந்தெந்த இடங்களுக்கு வரவேண்டுமென்று புலிகள் விரும்பினார்களோ அவர்கள் அந்தந்த இடங்களுக்கு வந்துவிட்டார்கள்.

குறுகிய காலத்திலேயே அவர்களை அகற்றவேண்டிய தேவையோ காலமோ வந்துவிட்டதாக 'நான்' கருதவில்லை.

தாக்குதல் தொடர்பில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. யாருடைய வாகனம் வெகு அருகில் தாக்கப்பட்டது? படங்களில் எரிந்துகொண்டிருப்பதாகக் காட்டப்பட்ட வாகனம் எது? அதில்தான் கொத்தாபாய வந்தாரா? சிறுகீறல்கூட இல்லாமல் தப்பினாரா?

இவர்கள் சொல்லும் உடல் தற்கொலைதாரியுடையதென்று நம்புவது மிகமிகக் கடினம். உடலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருந்ததாகக்கூட எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.

[முன்பு வவுனியாவில் சைக்கிள் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்டு வெடித்த கிளைமோரில் படையினரின் வாகனம் மாட்டுப்பட்டது. கூடவே ஒரு பெண்ணின் உடலும் கிடந்தது. பெண்தற்கொலைதாரியின் தாக்குதல் என்று பாதுகாப்பு அமைச்சு சொன்னது, எல்லா ஊடகங்களும் -தமிழ் ஊடகங்கள்உட்பட - அவ்வாறே எழுதினார்கள்.

இரண்டாம்நாள்தான் தெரியவந்தது, அப்பெண் வீதியால் வந்கொண்டிருந்த ஒரு வயோதிபரென்று.]

மற்றும்படி புலிகள் இலக்குவைத்தால் தப்பாது என்பது விதண்டாவாதம்தான். வெற்றிகரமாக நடத்தப்பட்டவற்றைவிட தோல்வியில் முடிந்த முயற்சிகள்தாம் மிகஅதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையில் சொல்ல பட்ட அவர் ஒரு soft target என்றத ஏற்றுக்க முடியாதுங்க..

attacksbodyjq1.jpg

attcksvehicleatk5.jpg

sec11mv0.jpg

sec110mz4.jpg

தாக்குதலின் பின்னான தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு.

http://www.youtube.com/watch?v=nZEFcKzlG5U&eurl=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.