Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம்

Featured Replies

புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம்

Published on September 1, 2015-1:28 pm   ·   No Comments

Jaffna_Trip_3_001புலம்பெயர் தமிழர்கள் என்ற அடைமொழியுடன் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை பலம்மிக்க சக்தியாகவும், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் மேய்ப்பர்கள் தாமே என்றும் ஒரு கற்பனை உலகிலேயே வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

உதாரணமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கடந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்து விட்டனர்.
யார் இந்த புலம்பெயர் தமிழர்கள் என்பதை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

1980களின் பின் யுத்தம் ஆரம்பித்த போது அதை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகளுக்கு பிழைப்புக்காக வந்தவர்கள் தான் இவர்களில் பெரும்பாலானவர்கள். ( புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களில் 20வீதமானவர்கள் மட்டுமே உயிராபத்தால் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள். மிகுதி 80வீதமானவர்கள் சொத்து சேர்ப்பதற்காக மேற்குலக நாடுகளை நாடி வந்தனர்)
இந்த புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் மேற்குலக நாடுகளில் பொய் வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல, விடுமுறை என தமது சொந்த ஊருக்கு சென்றும் அங்கும் பொய்யான பகட்டை காட்;டிவிட்டே வருகின்றனர்.

சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், வயோதிபர் இல்லங்களிலும் வேலைபார்த்து கொண்டு வட்டிக்கு பணம் எடுத்து பிறந்தநாளை கொண்டாடும் முட்டாள் சமூகமாகவே புலம்பெயர் தமிழர் சமூகம் காணப்படுகிறது.

வெளிஉலகிற்கு தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என காட்டிக்கொள்வதற்காக வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் போன்றவற்றைக் கொண்டாடுகின்றனர். பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.

பெண் பிள்ளைகள் பூப்பெய்துவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. மேற்குலக மக்கள் இதனை அடுத்த வீட்டில் உள்ளவர்களுக்கு கூட வெளிப்படுத்துவதில்லை. ஆனால் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தனது பிள்ளை பூப்பெய்தி 6மாதம் அல்லது ஒரு வருடம் இரண்டு வருடம் கடந்து விட்டபின் பெரிய மண்டபம் எடுத்து விழாக்கொண்டாடுகின்றனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் பெரும் பணச்செலவில் ஹெலிகொப்டரில் அல்லது குதிரை வட்டியில் பெண்பிள்ளையை அழைத்து வரும் வெடிக்கைகளும் நிகழ்வதுண்டு.

ஒரு வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வங்கியில் கடன்பட்டோ அல்லது அயலவரிகளிடம் கடன்பட்டோ இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்கின்றனர்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்ட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

அண்மையில் இலங்கைக்கு சென்று திரும்பிய நண்பர் ஒருவர் சொன்னார். இலங்கையில் இப்போது மிக விலைஉயர்ந்த கைத்தொலைபேசிகள் தான் அனைவரிடமும் காணப்படுகிறது. மோட்டார் சைக்கிள் இல்லாத வீடுகளை காணமுடியாது. அங்கு சென்றால் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்கவேண்டும், 10ஆயிரத்திற்கு குறைவாக ஒருவருக்கும் கொடுக்கமுடியாது. நான்கு இலட்சம் ரூபா இதற்கே செலவாகிவிட்டதாக கவலையோடு சொன்னார். அவர் இங்கு கடன் எடுத்தே இலங்கைக்கு சென்றிருந்தார்.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.
இலங்கைக்கு செல்லும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ( இவர்களை புலன்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் ) அரைகுறை ஆடைகளுடன் செல்கின்றனர். முக்கியமாக பெண்பிள்ளைகள் மிக மோசமான அரைநிர்வாண உடையுடனேயே செல்கின்றனர். இதனை பெற்றோர் பெருமையாக கருதுகின்றனர்.

அண்மையில் சுவிட்சர்லாந்து லவுசான் மாநிலத்தில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது மகளை இலங்கைக்கு அழைத்து சென்றிருந்தார். அவரின் வயதுக்கு வந்த அந்த மகள் மார்புகச்சையும் யங்கியும் மட்டுமே அணிந்து கொண்டு இலங்கையில் எடுத்த படங்களை முகநூலில் வெளியிட்டிருந்தார். உங்கள் மகளுக்கு ஆடைவாங்கி கொடுக்க பணம் இல்லையா என ஒருவர் முகநூலி;ல் கேட்டிருந்தார்.
இத்தனைக்கும் அப்பெண் தமிழ் தேசியம் பேசும் வீரமங்கை,

இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்பவர்களால் உள்ளுரில் பொருட்களின் விலை அதிகரித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. வெளிநாடுகளிலிருந்து செல்பவர்கள் உள்ளுர் சந்தைக்கு செல்லும் போது தாங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறோம் என காட்டிக்கொள்ளும் வகையில் ஆடைகளையும் அணிகலன்களையும் போட்டுக்கொள்கின்றனர்.

500ரூபா விற்கும் மீனுக்கு ஆயிரம் ரூபாவை கொடுத்து விட்டு மிகுதியை வைத்துக்கொள்ளுங்கள் என கூறிச்செல்லும் நபர்களும் உள்ளனர். இதனால் இந்த கோடைகால விடுமுறையின் போது இறால் மீன் கணவாய் மரக்கறி என அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்திருந்தன. இதற்கு காரணம் இந்த புலன்பெயர்ந்தவர்கள் தான் என உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்.

மரக்கறி மீன்கடைகளில் மட்டுமல்ல உடுப்புகடை மற்றும் மளிகைகடைகளிலும் வெளிநாட்டிலிருந்து வரும் புலன்பெயர்;ந்தவர்களை கண்டவுடன் கடைக்காரர்கள் விலைகளை உயர்ந்தி விடுகின்றனர். இதனால் உள்ளுர் மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இரண்டு மூன்று கிழமைகள் ஊரில் நின்று கலர் காட்டிவிட்டு வரும் புலன்பெயர்ந்தவர்கள் இங்கு வந்ததும் தங்கள் கடன்களை அடைப்பதற்காக போராடுவதும் இதனால் குடும்பங்களுக்குள் ஏற்படும் சண்டைகளும் பொலிஸ்வரை சென்றிருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து செல்பவர்கள் போடும் ஆட்டங்களால் மேற்குலக நாடுகளில் வாழ்பவர்கள் சொர்க்கபுரியில் வாழ்கின்றனர் என எண்ணிக்கொண்டு அங்குள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலையும் விட்டு வெளிநாடுகளுக்கு வர துடிக்கின்றனர்.

இளம்பெண்கள் கட்டினால் வெளிநாட்டு மாப்பிள்ளையைதான் கட்டுவேன் என தவம் கிடக்கின்றனர். ஆனால் இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற மோகத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு கண்ணீருடன் வாழ்வது ஊரில் யாருக்கும் தெரியாது.

மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும் சரி, சில தனிநபர்களும் சரி இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும், 5ஆம் கட்ட ஈழப்போர் மீண்டும் ஆரம்பமாக வேண்டும், என்றே விரும்புகின்றனர்.

இதன் மூலமே எஞ்சி இருக்கும் தங்களின் உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து கொள்ள முடியும் என்றும் மக்களிடம் பணங்களை அறவிட முடியும் என்று நம்புகின்றனர்.

இத்தகைய போலிகள் தான் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்களின் சொற்படி நடக்க வேண்டும் என சன்னதம் ஆடுகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களின் இத்தகைய போலித்தனங்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை உருவாக்கியிருக்கிறது.

இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் நடந்த பொதுத்தேர்தலாகும். இந்த தேர்தலில் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும், சில புலன்பெயர்ந்தவர்களும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என்றும் மிகப்பெரும் பிரசாரத்தை மேற்கொண்டனர். அதற்காக பெருந்தொகை பணத்தையும் அள்ளி வீசினர்.

ஆனால் மக்கள் இவர்களை முற்றாக நிராகரித்து விட்டனர். புலம்பெயர்ந்தவர்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என கோரினார்களோ அவர்களை தாயகத்தில் உள்ள மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றி பெற வைத்திருக்கின்றனர்.

இந்த பாடங்களிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இதனை கற்றுக்கொள்ளவில்லை என்றால் புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கவே செய்யும்.

மூலம் -தினக்கதிர் 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் உண்மைகள் இல்லாமலில்லை

 இந்தவகையான பொய்யான பகட்டுவாழ்க்கையை தமிழர்கள் உதறவேண்டும் என்பதே எல்லோரதும்  வேண்டுதல்

 

அதேநேரம்

வெளிநாடுகளிலுள்ள சாமத்தியவீடுகள் பற்றி பேசும்போது

ஐரோப்பியர்கள் பக்கத்த வீட்டுக்காறனுக்கே அதைத்தெரியப்படுத்தவதில்லை என்பதை அறிந்திருக்கும் கட்டுரையாளர்

புலம் பெயர்ந்தவர்கள் செய்யும  தொழில்கள் சார்ந்து அடிக்கடி பேசுகின்றார்

ஐரோப்பியர்கள் செய்யும் தொழிலை கணக்கெடுப்பதில்லை என்பதை இவரும் படிக்கணும்

அந்தவகையில் இவரும் புலன் பெயர்ந்தவரே...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிடக்கட்டும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதுக்கு வெளிநாட்டுக் கிளைகள் என்று இவர் விளக்கம் தருவாரா..??! அவைக்கு எங்க இருந்து பணம் போகுது...?! tw_blush::rolleyes:

மேலும் இவர் புலம்பெயர் மக்கள் என்று தாயகத்தில் இருந்து வந்த தலைமுறையை தான் பார்க்கிறார். அதற்கு பிந்தைய தலைமுறை பல்வேறு உயர்தர தொழில்களில் இருப்பதை இவர் அறியவில்லைப் போலும். :rolleyes:

ஒரு சில யதார்த்தங்களை தவிர்த்தால்.. மிச்சம் எல்லாம்.. ஒரு வகையில்.. கிணற்றுத் தவளை கத்தல்.. என்று எடுக்கலாம்.. இக்கட்டுரையை பொறுத்த வரை. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம்

Published on September 1, 2015-1:28 pm   ·   No Comments

Jaffna_Trip_3_001

 

1980களின் பின் யுத்தம் ஆரம்பித்த போது அதை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகளுக்கு பிழைப்புக்காக வந்தவர்கள் தான் இவர்களில் பெரும்பாலானவர்கள். ( புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களில் 20வீதமானவர்கள் மட்டுமே உயிராபத்தால் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள். மிகுதி 80வீதமானவர்கள் சொத்து சேர்ப்பதற்காக மேற்குலக நாடுகளை நாடி வந்தனர்)
 

மூலம் -தினக்கதிர் 

கட்டுரையாளர் 20 க்குள்ளா? அல்லது 80 க்குள்ளா? அடங்குகின்றார் எனத் தெளிவு படுத்தினால் மிகுதியைப்பற்றிக் கருத்துக்கூறலாம்.
ஏனென்றால் அவரும் புல(ன்) ம் பெயர்ந்தவர் தானே:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளருக்கு புலன் பெயர்ந்தவர்களின் போக்குகளும் தெரியாது.....புலம் பெயர்ந்தவர்களின் போக்கும் ஒழுங்காய் தெரியேல்லை எண்டது நல்லவடிவாய்த்தெரியுது...tw_angry:

ஐ மீன் புலிக்காய்ச்சலை வேறொரு வடிவத்தில் அவிய விட்டிருக்கிறார்.:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

"சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், வயோதிபர் இல்லங்களிலும் வேலைபார்த்து கொண்டு வட்டிக்கு பணம் எடுத்து பிறந்தநாளை கொண்டாடும் முட்டாள் சமூகமாகவே புலம்பெயர் தமிழர் சமூகம் காணப்படுகிறது" 

புல(ம்)ன் பெயர்ந்த இரா. துரைரத்தினம் ஒரு முட்டாளாகவே இருக்கின்றார். பன்னாடை மாதிரி சில முட்டாள்களை வைத்து இதை எழுதியிருக்கிறார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

----

அண்மையில் சுவிட்சர்லாந்து லவுசான் மாநிலத்தில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது மகளை இலங்கைக்கு அழைத்து சென்றிருந்தார். அவரின் வயதுக்கு வந்த அந்த மகள் மார்புகச்சையும் யங்கியும் மட்டுமே அணிந்து கொண்டு இலங்கையில் எடுத்த படங்களை முகநூலில் வெளியிட்டிருந்தார். உங்கள் மகளுக்கு ஆடைவாங்கி கொடுக்க பணம் இல்லையா என ஒருவர் முகநூலி;ல் கேட்டிருந்தார்.
இத்தனைக்கும் அப்பெண் தமிழ் தேசியம் பேசும் வீரமங்கை,

------

இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் நடந்த பொதுத்தேர்தலாகும். இந்த தேர்தலில் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும், சில புலன்பெயர்ந்தவர்களும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என்றும் மிகப்பெரும் பிரசாரத்தை மேற்கொண்டனர். அதற்காக பெருந்தொகை பணத்தையும் அள்ளி வீசினர்.

மூலம் -தினக்கதிர் 

கட்டுரையாளர், மல்லாக்கப் படுத்திருந்து கொண்டு... வாந்தி எடுத்துள்ளார். 
இவர், சம்சும் கொம்பனியின்... அல்லக்ககைகளில் ஒருவர் என்பதை தனது வாந்தியின் மூலம் நிரூபித்துள்ளார். 
சுவிசில் உள்ள... தமிழ் தேசியம் பேசும் அப் பெண் ஊருக்குப் போய்.... கடற்கரையில் குளித்தால், 
பிகினி போடாமல், குறுக்குப் பாவாடை கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும் சொல்வது இவரின் முட்டாள் தனத்தையே காட்டுகின்றது. :grin:

இப்படியான கட்டுரைகளின் நோக்கமும், அதைப்பிரசுரிப்பவர்களின் நோக்கமும் என்னவெனில் புலத்து மக்களை ஈழத்து மக்களிடம் இருந்து பிரித்துவைப்பதுதான். நெடுக்கண்ணா கூறியுள்ளது போல் இவர் கிணத்துதவளையாகவே இருக்கின்றார். இது தமிழக மக்களையும் ஈழத்து மக்களையும் பிரித்துவைக்க எடுக்கும் முயற்சிபோன்றதே தவிர வேற ஒரு உருப்படியான ஒண்டும் இல்லை.  

இதில் பரிதாப நிலை என்னவென்றால் இவையெல்லாம் இலவுகாத்த கிளியாகத்தான் முடியும் என்பது அம்பை எய்தவருக்கு நல்லாவே தெரிந்தும் சும்மா ஒரு முயற்சிதான் பாருங்கோ.  

இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சிங்களவனுக்கு சேவகம் செய்கிறார்கள் என்பதே வெளிச்சம்.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.