Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை தடைசெய்ய சிறீலங்கா அரசு நடவடிக்கை

Featured Replies

சனி 02-12-2006 01:38 மணி தமிழீழம் [மயூரன்]

விடுதலைப்புலிகளை தடைசெய்ய சிறீலங்கா அரசு நடவடிக்கை

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதுஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தடை செய்யுமாறு கோரும் பிரேணை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது

வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமா, சமாதான செயல பதில் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்ச ஆகியோர் மீதான தற்கொலை தாக்குதல் மற்றும் கெப்பிடிகொலாவ கிளைமோர் தாக்குதல் ஹபரணியில் கடற்படை மீதான தாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலைப்புலிகளை தடை செய்ய வேண்டும் என்று அந்த பிரேரணiயில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு கோரும் இந்த பிரேணைக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கையின் அமைதி முயற்ச்சிகளை முற்றிலும் பாதிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

நோர்வே உட்பட எந்த ஒரு வெளிநாடும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது என்பதுடன் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் விடுதலைப்புலிகளை சந்திப்பதற்கோ அவர்களது கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்கோ அனுமதி மறுக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://pathivu.com/

தலைவர் சொன்னதை சரியானதுதான் எண்று நிறூபிக்கிறார்களாம்...

அரசாங்கம் தடை செய்தால் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதற்கு பிறகு வெளி நாட்டு அரசியல் வாதிகளையோ அல்லது NGOs உள்ளே போக விடமாட்டார்கள்.

***A lie gets halfway around the world before the truth has a chance to get its pants on***

:unsure: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....

எது நடகின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது....

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...

நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய் அதனை இழப்பதற்கு....

தேரையை கல்லுக்குள் வைத்த அந்த ஒரு இயற்கை எமக்கு என்று ஒன்றும் செய்யாமலா போய் விடும்....கவலை வேண்டாம்

தடை வரினும் தலைவர் அதை எதிர் பார்த்திருப்பார்...அப்படி வந்தால் தான்

ஒரு பண்டியும் கதை விட்டு நேரத்தை வீணாக்கமாட்டார்கள்.....

இம்முறை இலங்கை ஆடி அடங்கும் அனுபவம் உரைக்கும்...அப்போது கதவு திறக்கும்

:unsure::unsure:

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....

எது நடகின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது....

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...

நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கெ

மறுபடியும் பழைய குருடி கதவைத் திறடியா??

ஈழத்திலிருந்து

ஜானா

இலங்கை அரசாங்கத்தின் மீது தடை விதிப்பதற்கு ஐ-நா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன ஆலோசனை செய்து வருகின்றன இதை திசை திருப்பும் நோக்கில் தான் மகிந்தர் தன்னுடைய சகோதரனுடைய குண்டு தொலைக்காத காருக்கு 10 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய குண்டை வெடிக்க வைத்துவிட்டு அந்தப் பழியை புலிகள் மேல் சுமத்திவிட்டு இந்த புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா இப்பிடியாவது எமக்கு பிடித்த சனியன் போய்தெலைந்து நாம் எமது விடுதலைப் போராட்டத்தை தொடர வழிவகுக்கட்டும்..

இவை தடைசெய்தும் அல்லாமல் தடை செய்யாமல் விடுவதற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே ஒன்றுதான்.. தற்பொழுது ஒரு வேறுபாடும் இல்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடை செய்வதும் ஒன்றுக்கு நல்லதுதான். இரண்டுபேரும் பேசுங்கோ பேசுங்கோ எண்டு ஜெனீவா அங்க இங்க எண்டு அலைக்களிச்சு வாய்க்குவந்தபடி குளறுகிறவங்கள் இதுக்குப்பின் வாயை மூடுவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏ9 பாதையை திறந்துவிட மறுத்த அரசு,

தமிழீழ தனி அரசை நிறுவதற்கான பாதையை தானாகவே திறந்து விடுகிறது. :unsure::unsure::unsure:

"No government will surrender to a terrorist leader"

Sri Lankan President Mahinda Rajapaksa pulls no punches when speaking about the difficult situation in his country. Excerpts from an interview to The Hindu:

Have you issued instructions to your security forces to avoid excesses against civilians?

Yes, we have said that. In the Jaffna peninsula, food is taken by the Army and the Navy. They are guarding it; the food is distributed by the Army and the Navy. Do you know that on some days, Army rations have been distributed among the civilians?

Now, shops have opened [in Jaffna] - after the LTTE [Liberation Tigers of Tamil Eelam] had asked that all the 4,000 outlets close down. The Sri Lankan Army had opened some boutiques and distributed food. You must remember that they [the soldiers] are also human beings. They are not someone from somewhere else. No one knows that even the commander, who is in charge in the Jaffna peninsula, is a Tamilian. He's very concerned, he's from that area.

The LTTE wants to create an issue over this [food shortages]. The A 9 [highway] is open. Anybody can go from the Vanni side, from the south. There is no problem in Kilinochchi or Mullaithivu - the food items are going.

Recently, when there was a shortage of milk food for children, we airlifted milk food. Medicines are airlifted. So, the [armed] forces are doing what is possible.

Sometimes, we get complaints that there are excesses. The international community, NGOs or the LTTE accuse the Army or paramilitary groups of abduction. Now it has become a practice - some parents go and make complaints in the police station just to get refugee status in Western countries.

One day, when many MPs came and complained to me about abductions, we were really worried. A young girl had been abducted from Colombo itself and after two-three weeks we traced this girl and found she had eloped with her boyfriend.

What's your response to Velupillai Prabakaran's assertion in his "heroes day" speech that the ceasefire agreement is buried, defunct?

On his birthdays, he comes out with various statements. This is another statement on his birthday. Even last year, they said the fourth Eelam war would start - this would be the last war and we are going to take over Jaffna in a week's time or something like that. Boasting. But it didn't happen.

For me, he can say anything he wants. Our position is that we will go for a political solution. We believe in a political solution, not a military solution.

But would you agree with his categorisation of the ceasefire agreement?

He says it is defunct. So what can I do about it? I have said that we will not start an offensive against the LTTE.

Mr. Prabakaran has been very scathing about both the southern parties - your Sri Lanka Freedom Party and the United National Party. Is it because of the agreement the two parties signed to make progress on the ethnic issue?

In [the] Geneva [talks], he [read the LTTE] praised this. Now, he says this. He [Mr. Prabakaran] must realise that we are ready to talk to him, that weapons won't answer this, killings won't answer this.

He can kill some Presidents, presidential candidates, he tried to kill Chandrika Kumaratunga. But do you think any Government will surrender to a terrorist leader or terrorist organisation in this world? No government will do that and no government will ask me to surrender myself to a terrorist.

We see the example of Nepal - where a Maoist group is making peace. But it seems to me Mr. Prabakaran feels that he can't live like a peacetime leader. Is it possible you might give him some incentives to feel secure?

This is why I have asked him: come and talk to me. You are right, you have understood the problem because he can't face peace. He's a misfit there. What he must do is to realise this and try to change. We are ready to help him in that.

Does Mr. Prabakaran get inputs other than those from within his organisation?

This is the whole trouble. This is what some of his own leaders have mentioned. He's not getting any outside views since he's living in the jungle and depends on a few people around him like Pottu Aman or other military leaders.

Is the Government using Karuna and his group against the LTTE?

Why should I use them when I have an Army? Why should I use someone who hasbroken away from the LTTE? You think I don't know these people. How can I trust an LTTEr [person from the LTTE], who had been very active in the LTTE?

I don't think the Government wants to use him as any ... but if he's ... anybody can come and do politics. Now, you take Douglas Devananda, he was a fighter earlier. He's one person who has changed from military to democratic politics. Now he's a Minister, but the LTTE is after him. They want to kill him.

Most of the people who were against Prabakaran, he has killed. He has killed more Tamils than Sri Lankan Army [personnel].

How would you describe the military situation in Sri Lanka?

Whenever the LTTE attacks a village or a military position, we have reacted, retaliated. Other than that, our Army has not gone for any offensive acts. When the Sea Tigers put their boats and try to advance to some spot, the Air Force will go and attack. We have found military targets. We know where these camps are. When we are 100 per cent sure [of their location], we will go and attack. Otherwise we won't.

After Mr. Prabakaran spoke again of a separate state in his "heroes day" speech, your spokesman in Colombo made a reference to the role of Norway. What is Norway's role today?

That I must find out from Norway. I cannot understand their ... what they will come out with. We must thank Norway for trying to facilitate this peace process. They also have tried to settle this for so many years, but they have failed miserably.

What is the status of the devolution package that you have promised?

They [the panel of experts] are going to give me the first report in the middle of December. After that, we'll put that to the all-party committee and we'll continue with that.

Courtesy : The Hindu

http://defence.lk/new.asp?fname=20061202_03

  • கருத்துக்கள உறவுகள்

எப்பப்பா தடை செய்வாங்கள்? சீக்கிறமா பன்ன சொல்லுங்க.. :unsure::unsure:

விடுதலைப் புலிகளை தடைசெய்ய வேண்டும் - ஜாதிக ஹெலஉறுமய.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளை தடை செய்யவெண்டும் என ஜாதிக ஹெல உறுமய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

இதனை வலியுறுத்தி ஜாதிக ஹெலஉறுமய இன்று மாலை விகாரமகா பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகலிய றம்புக் வெல கருத்துத் தெரிவிக்கையில் இந்த வருடத்திற்குள் கனடா ஐரோப்பிய ஒன்றியம் என்பன விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என தடைசெய்துள்ளன.

இதேபோல் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண சர்வதேச சமூகம் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

www.pathivu.com

ஞாயிறு 03-12-2006 05:54 மணி (தமிழீழம்,மயூரன்)

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செயற்படுத்த சிறீலங்கா அரசாங்கம் முடிவு

கடந்த வெள்ளி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீண்டும் செயற்படுத்த சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா அரசுத் தலைவரின் சகோரதரும் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான லெப்.கேணல் கோத்தபாய ராஐபக்ஸ மீதான தாக்குதலையடுத்துஇ பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயங்கரவாத நிறுவனம் ஒன்றுக்குஇ துணைபுரியும் ஒருவரை கைதுசெய்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் சட்டமா அதிபர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

2002 ம் ஆண்டில் சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்படுதலை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இச்சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை மற்றும் காணாமல் போதல்களுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

விடுதலைப்புலிகள் இயக்கத்தை நேரடியாக இச்சட்டம் குறிப்பிடிருக்காத போதும் தமிழ்மக்களையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக கருதப்படுகிறது

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிராந்தியத்

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செயற்படுத்த சிறீலங்கா அரசாங்கம் முடிவு.

கடந்த வெள்ளி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீண்டும் செயற்படுத்த சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா அரசுத் தலைவரின் சகோரதரும் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான லெப்.கேணல் கோத்தபாய ராஐபக்ஸ மீதான தாக்குதலையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயங்கரவாத நிறுவனம் ஒன்றுக்கு, துணைபுரியும் ஒருவரை கைதுசெய்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் சட்டமா அதிபர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

2002 ம் ஆண்டில் சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்படுதலை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இச்சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை மற்றும் காணாமல் போதல்களுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

விடுதலைப்புலிகள் இயக்கத்தை நேரடியாக இச்சட்டம் குறிப்பிடிருக்காத போதும் தமிழ்மக்களையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக கருதப்படுகிறது

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிராந்தியத்

Edited by YARLVINO

புலிகளை உடனடியாக தடை செய்து யுத்த நிறுத்த உடன்படிக்கையை முறித்துக் கொள்ள வேண்டும் - ஜே.வி.பி., ஹெல உறுமய, தேசப்பற்று தேசிய இயக்கம்.

இந்த நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்து யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், வெளிநாட்டு பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்வதற்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது.

உடனடியாக புலிகள் இயக்கத்தை சிறிலங்காவில் மீண்டும் தடை செய்து நடைமுறை ரீதியில் மரணித்து விட்ட யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் வெளியேற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் ரீதியாக புலிகளை கட்டுப்படுத்தி தோல்வியடையச் செய்வதற்கான இது போன்ற சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை

மீண்டும் அமுல்படுத்த அரசு முடிவு

அமைச்சர்கள், சட்டநிபுணர்களுடன்

ஜனாதிபதி நீண்ட ஆலோசனை கலப்பு

புதிய அவசரகாலச் சட்ட விதிகளையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் மீண்டும் அமுலுக் குக் கொண்டுவர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்க வசதியாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமுல் செய்வது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கின்ற வேளையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து சிரேஷ்ட அமைச்சர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அதன் பிறகு சனிக்கிழமை கூட்டப்பட்ட விசேட கூட் டம் ஒன்றிலும் அமைச்சர்கள், சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், சட்ட வரைஞர்களுடன் ஜனாதிபதி இது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை கலந்தார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் தமிழ் மக் கள் மிகவும் துன்புறுத்தப்படவும், அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மீறப்படுவதற்கும் அடிப்படையாக விளங் கியது இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட் டம். அந்தச் சட்டம் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது வரை அமுலில் இருந்தது.

தற்போது மீண்டும் அந்தச் சட்டத்தை அமுல் செய்வதற்கு அரசு முடிவு செய்தி ருக்கிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை செத்துப் போய்விட்டது என்றும், தமிழ் மக்களுக் குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபா கரன் தனது மாவீரர் தின உரையில் கூறியி ருப்பதும்

ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரு மாகிய கோட்டபாய ராஜபக்ஷ மீது கொள்ளுப் பிட்டியில் கடந்த வெள்ளியன்று நடத்தப் பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவமுமே அரசு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரு வது என்ற தீர்மானத்தை எடுக்கக் காரணங் களாய் அமைந்தன என்று கூறப்படு கிறது.

போர்நிறுத்தம் செல்லுபடியற்றதாகி விட்டது என்று புலிகளின் தலைவர் அறி வித்திருப்பது நாடு முழுவதையும் அச்சு றுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாக அரசு கூறுகிறது. புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கும், பாது காப்புப் படையினருக்கும் மேலும் அதிகாரங்களும், சட்ட ரீதியான ஏற்பாடுகளும் அவசியமாகின்றன. அவசரகாலச் சட்டம், தற்போது அமுலில் இருந்தாலும் அதன் கீழ் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் புலிகளை ஒடுக்குவதற்குப் போதா என்று கடும் போக்குச் சிங்களக் கட்சிகள் அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

சிரேஷ்ட அமைச்சர்கள்

மாறுபட்ட கருத்து

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. தாக்குத லில் உயிர்தப்பிய கோட்டபாய ராஜபக்ஷ வும் அதில் கலந்து கொண்டார்.

தலைநகரில் புலிகளின் தாக்குதல்கள் கட்டுமீறி பாதுகாப்பு உத்தரவாதமற்ற சூழ் நிலை உருவாகி இருப்பது குறித்து கூட் டத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட அமைச் சர்கள் சிலர் சீற்றத்துடன் கருத்து வெளியிட்டனர் என்று கூறப்படுகிறது.

சகோதரர் கோட்டபாய மீதான தாக்கு தல் காரணமாக ஜனாதிபதி ராஜபக்ஷம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப் பட்டார் என்று கூறப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை அடியோடு ஒடுக்குவது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

1998இல் தலதா மாளிகை மீது நடத்தப் பட்ட தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தமை பற்றியும் அமைச்சர்கள் விவாதித்தனர். மீண்டும் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கருத்தும் கூட்டத்தில் மோலோங்கியது.

எனினும், கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில சிரேஷ்ட அமைச்சர்கள், சமாதா னப் பேச்சுகளுக்கான முயற்சிகளை அடி யோடு இல்லாமற் செய்து விடும் என்று கூறி வாதிட்டனர் எனவும் அறிய வருகிறது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டதாகப் புலிகள் இன் னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வில்லை. நோர்வேயும் அதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. நாட்டில் சமாதா னத்தை உருவாக்குமாறு இந்தியாவும், சர்வ தேச சமூகமும் வற்புறுத்துகின்றன. இந் தக் கட்டத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல் செய்வதும், புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை நாட்டில் தடை செய்வதும் சமாதானத்துக்காக எஞ்சியிருக்கும் அற்ப சொற்ப வாய்ப்புகளையும் அடியோடு இழக்கச் செய்துவிடும் என்று சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கருத்து வெளியிட்ட னர் என்று தெரி கிறது.

எனினும், கோட்டபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஏற் படுத்திய அதிர்ச்சியும், ஆத்திரமும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரிடமும் மேலோங்கிக் காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

அமைச்சரவைச்

செயலாளரின் கருத்து

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும், புலிகள் அமைப்பு மீதான தடையையும் இப்போது உடனடியாக அமுலுக்குக் கொண்டுவந்தால், அது ஜனாதிபதி தனது சகோதரர் தாக்குதலுக்கு இலக்காகியதற்காக தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து இந்நடவடிக்கைகளைச் செய்கி றார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று இந்தக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலாளர் கருத்துத் தெரிவித்தார் எனவும் அறியவந்தது.

வெள்ளியன்று மாலை நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மறுநாள் சனிக்கிழமை சிரேஷ்ட அமைச்சர்களுடன் ஜனாதிபதி மற்றொரு விசேட கூட்டத்தை நடத்தினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங் கையில் பெருமளவில் மனித உரிமைகள் மீது மீறப்படுவதற்கும், பாதுகாப்புப் படைகளின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கும் காரணமாய் அமைந் தது என்று சர்வதேச அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

எனவே, தற்போது அதனை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வரும் நிலையில் அதில் செய்யக்கூடிய திருத்தங்கள், நீக் கங்கள் என்பன குறித்து சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனும், சட்ட வரைஞர் திணைக்கள ஆலோசகர்களு டனும் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களு ட னும் ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவது சம்பந்த மான முதற்கட்ட நடவடிக்கை பெரும்பா லும் இந்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது

-உதயன்

புலிகளைத் தடை செய்வதாயின்

பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்

சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கருத்து.

""தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டுமெனில் அரசு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு யுத்தத்திற்கே செல்ல வேண்டும். அவ்வாறு யுத்தத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித் தொழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண் டால் அது முழு நாட்டுக்குமே அழிவையும், ஆபத்தையும் ஏற்படுத்தும்.''

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது:

""தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டுமெனத் தென் னிலங்கை யில் வாதங்கள் தோன்றியுள்ளன. அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும் என்று தீர்மானித்தால் சமாதானப் பேச்சைத் தவிர்த்து யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அப்படி யுத்தத்தின் மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென் பது முடியாத காரியம்.

இந்நிலையில் அரசு பேச்சின் மூலம் தீர்வு காணாது யுத்தத்தைக் கையாண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு அழித்தொழிக்க நடவடிக்கை மேற்கொண் டால் அது இலங்கைக்குப் பாரிய அச்சுறுத் தல்களையும், பின்விளைவையும் ஏற்படுத் தும்.'' என்று அவர் தெரிவித்தார்.

www.uthayan.com

சமாதான விரும்பிகளே, என் செய்வீர்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது குறித்து அரசாங்க உயர்மட்டங்களில் ஆராயப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து மிகத் தீவிரமாக ஆராயப்பட்டிருக்கிறது. வன்முறைகளைக் கைவிடுமாறு நிபந்தனை விதித்துத் தடையைக் கொண்டுவருவதில் அரசு முனைப்பாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உடனடியாக அவ்வாறு செய்வதில்லை என்று முடிவாகியதாக அறியப்படுகின்றது.

ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய பேரினவாதக் கடுங்கோட்பாட்டுக் கொள்கைக் கட்சிகள், விடுதலைப் புலிகளை உடனடியாகவே தடைசெய்யவேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஜாதிக ஹெல உறுமய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடத்தியது.

அரசாங்கத்தின் முடிவு உடனடியாக வெளிப்படுத்தப்படுமா அல்லது தாமதித்து வருமா என்பதல்ல முக்கியம். விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது குறித்து அது பரிசீலனை செய்கிறது என்பதே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின்மீது தடை விதிப்பது என்பது, இப்போது சிறுகிக் குறுகி, நொறுங்கியுள்ள கதவுடன் உள்ள சமாதானப் பாதையை, ஒரேயடியாகப் பூட்டிட்டு மூடிவிடுவது என்பதே ஆகும். அதன் பின்னர் போரை முழு அளவில் நடத்தி ஒரு "முடிவு' கண்டாக வேண்டும் என்ற மூர்க்கத்துடன், ஆவேசத்துடன் எடுக்கப்படும் தீர்மானம் அது.

விடுதலைப் புலிகளைத் தடை செய்தால் அவர்களுடன் எப்படிப் பேசுவது? பயங்கரச் சண்டையிடும் எதிரிகள் இருவர் மேசையில் அமர்ந்து பேசுவதற்கான சூழல் அறவே இருக்கமாட்டாது. அதுவும் அடுத்தவர் தீண்டத்தகாதவர், பொல்லாதவர் என்று முத்திரை குத்திய நிலையில் இருவரும் நேருக்குநேர் முகம் பார்த்துப் பேச இயலுமா? அது அசாத்தியமானது.

1988ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது அப்போதைய அரசாங்கம் தடை விதித்தது. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்புமுனையை உண்டாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தடை நீக்கப்பட்டது.

அவ்வாறு செய்யப்பட்டதாலேயே அரசும் புலிகளும் சமதரப்பாக இருந்து கடந்த நான்கு வருடங்களாகப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிந்தது.

பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்பட்ட பலனை விளைவை தரவில்லையெனினும் அவை உத்தியோக பூர்வமாகவும் ஒரு தரப்புக்கு அடுத்த தரப்பு மதிப்பளிக்கும் பண்புடனும் நடைபெற்றன.

தடைசெய்யப்பட்ட நிலையில் இருந்துகொண்டு சமாதானப் பேச்சு மேசைக்கு விடுதலைப் புலிகள் செல்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

தடையின் விளைவாக நாடு முழுவதிலும் மக்கள் அழிவும் உடைமை அழிவும் உண்டாகி அது சீரழியும் என்பது எவருக்குமே எல்லேõருக்குமே தெரிந்ததே.

அரசும் விடுதலைப் புலிகளும் எதிரும் புதிருமாகக் கடுப்பான முகங்களைக் காட்டிக்கொண்டு பேசுவது துர்லாபம். இரு தரப்புகளும் தனித்துப் பேசித் தீர்வு ஒன்றைக் காணமுடியாது. முந்தைய அனுபவம் அதுவே. இதனை உணர்ந்தே நோர்வேயை அனுசரணையாளராக அழைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் சந்திரிகா.

ஆனால், சந்திரிகாவும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்காகச் சமாதான வேடம் பூண்டவரே.

இடையில் ரணில் வந்தார். போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை விடுதலைப் புலிகளுடன் செய்ய விரும்பினார். அதற்கு ஏதுவாக அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சமாதானப் பேச்சுக்கான சுமுகமான பின்புலத்தையும் மேடையையும் அமைத்தார்.

எனினும், அவரது சில தந்திரங்களும் குள்ளநரித் தனங்களும் பேச்சு விரைந்து ஆக்கபூர்வமான முடிவை எட்டுவதற்குத் தடைக்கல் போட்டன.

இவை தற்கால வரலாறாகிவிட்டவை.

இவ்வாறிருக்க

விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதற்கு அரசு தயாராகிறது என்ற தகவல்

"சமாதானத்துக்கான யுத்தம்' என்ற சந்திரிக்காவின் உளுத்துப்போன, "சித்தாந்தத்'தை அடியொற்றியே, மஹிந்தரும் நாட்டை மேலும் சீர்கெடுத்தப்போகிறார் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக உள்ளது.

இப்போது தான் பரிசீலனை செய்து வருவதை அரசாங்கம் முடிவாக்கி, அமுலாக்கும்போது போர்நிறுத்த ஒப்பந்தம் அர்த்தமற்றதாகி விடும்; செத்துப்போய்விடும்.

அதன் பின்னர் முழு அளவிலான போர்மூண்டு எல்லா வகைகளாலும் பேரழிவுகள் உண்டாகும். சமாதானப் புறா கொல்லப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்படும்.

நாட்டின் சமாதான விரும்பிகள் அதன் பிற்பாடு என்ன செய்யமுடியும்? ஆபத்து வருமுன் தடுப்பதே சிறந்தது.

அதனைச் செய்ய வேண்டியவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சமாதான விரும்பிகளே. வெளிநாடுகளுக்கு இதில் முக்கிய பெரிய பங்குண்டு. அந்தப் பங்கினை ஆற்றுவார்களா அவர்கள்?

உதயனின் ஆசிரியத்தலையங்கத்தில் குறிப்பிட்டபடி வெளிநாட்டிலுள்ள நாம் என்ன செய்யலாம் ?

:rolleyes: களத்தின் கண்மணிகளே...... கருத்துரைப்பீர்களா????? :lol:

அன்பான தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மனமுவந்து தர இருக்கும் நிலையை நாம் வரவேற்பதில் நமக்கு திருப்தியே காரணம் தலைவர் தாரல மனத்தோடு மாவீரர் தினத்தில் நிறையவே சொல்லிவிட்டார் எனவே விடுதலைப்புலிகளைத் தடை செய்த அமெரிக்கா அரசு இப்போது வெளியாகி இருக்கும் சட்ட சிக்களில் தவிக்கின்றது காரணம் அவர்தான் தான் உலகத்திற்கே பொலிஸ்காரன் என்ற நிலையோடு திரிந்தவர் இப்போது தனது நாட்டு சட்டச் சிக்கலில் தவிக்க வேண்டிய நிலையில் அவர் ( ஆழும் வர்க்கம்) இருக்கின்றது இன்று எனவே நாளைய இலங்கை அரசு இன்றைய அரசாங்கத்தை நாளை கவனிக்கும் இதற்கு ஆனால் எமக்கு இலங்கை அரசு இன்றே இந்த கனத்தில் எமது விடுதலை அமைப்பை தடைசெய்தாள் உங்கள் கால்களில் நான் விழுந்து நன்றி தெரிவித்து கொள்வேன் காரணம் அப்படியாவது தமிழன் மீது சுமத்தப்படும் குற்றம் மாற்றப்பட்டு தமிழன் மீட்சி பெறுவான் விடைபெறுவான் உங்களினத்தில் இருந்து ஆகவே விரைவில் உங்களுக்கு தமிழீழத்திடம் கடன் வாங்கி உங்கள் நாட்டை அபிவிருத்தி செய்யலாம் பாருங்கோ சிங்களத்தை அப்போ மீண்டும் பேச்சு மேசைக்கு வருவீர்கள் என்று நினைக்கின்றேன்!!!!!!!!!!!!!!!!!!!!!! :P !!!! :lol:!!!!! :P!!!!!! :rolleyes:!!!!!!! :lol: ;) !!!!!!!!

இந்த விடையத்துக்கு ஏன் இத்தனை முன்னுரிமை தமிழ் ஊடகங்களிலும் கருத்து எழுதுபவர்கள் மத்தியிலும்?

யாழ்பாணத்து பட்டினி அவலம் தேசிய தலைவரின் பிறந்த நாளுக்கு செய்து வெட்டின கேக்கோடு போய்விட்டதா?

மூதூர் பட்டினி அவலம் சிறீலங்கா கொண்டு போக விட்ட கூடாரங்களை வெட்டி அவித்து தின்னுவதால் போய்விட்டதா?

சில நாட்களிற்கு முன்னர் கண்காணிப்பு குழு வன்னியில் சிறுவர்கள் போசாக்கு இன்மையால் விரைவில் பாதிக்கப்படப் போகின்றனர் என்று அறிக்கை விட்டது. இதன் உள்நோக்கம் என்ன? உண்மை நிலை என்ன?

சிறீலங்கா தமிழீழத்தை தடை செய்வதாலோ இல்லை செய்யாது விடுவதாலோ மக்களின் அவலத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?

சுதந்திர தமிழீழத்தில் நம்பிக்கை உள்ளவர்களிற்கு ஏன்ற சிறீலங்காவின் தடை பற்றி இவ்வளவு அலட்டல்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையத்துக்கு ஏன் இத்தனை முன்னுரிமை தமிழ் ஊடகங்களிலும் கருத்து எழுதுபவர்கள் மத்தியிலும்?

யாழ்பாணத்து பட்டினி அவலம் தேசிய தலைவரின் பிறந்த நாளுக்கு செய்து வெட்டின கேக்கோடு போய்விட்டதா?

மூதூர் பட்டினி அவலம் சிறீலங்கா கொண்டு போக விட்ட கூடாரங்களை வெட்டி அவித்து தின்னுவதால் போய்விட்டதா?

சில நாட்களிற்கு முன்னர் கண்காணிப்பு குழு வன்னியில் சிறுவர்கள் போசாக்கு இன்மையால் விரைவில் பாதிக்கப்படப் போகின்றனர் என்று அறிக்கை விட்டது. இதன் உள்நோக்கம் என்ன? உண்மை நிலை என்ன?

சிறீலங்கா தமிழீழத்தை தடை செய்வதாலோ இல்லை செய்யாது விடுவதாலோ மக்களின் அவலத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?

சுதந்திர தமிழீழத்தில் நம்பிக்கை உள்ளவர்களிற்கு ஏன்ற சிறீலங்காவின் தடை பற்றி இவ்வளவு அலட்டல்?

ஏன் சார் விளங்காத்தானமா இருக்கிறீங்களா அல்லது இதிலும் ஏதாவது குழப்பம் பண்ண வேணும் என்று நினைக்கிறீங்களா?

விடுதலைப்புலிகளைத் தடை செய்வதானது மீண்டும் இறுக்கமான பொருளாதாரத்தடைகளையும் கைதுகளையும் மேற்கொள்ள அரச படைகளுக்கு தன்னிச்சை சுதந்திரம் அளிக்கும் அதேவேளை பேச்சுவார்த்தைகளின் அடிப்படையே விடுதலைப்புலிகளை சமதரப்பு நிலையில் வைத்துத்தான் நகர்ந்து செல்கிறது. தடையின் பின்னரான பயங்கரவாத அமைப்புடனான பேச்சுவார்த்தை என்பது அரசின் இழுபறிகளுக்கு ஏற்ப வெளிநாட்டு ராஜதந்திரிகளும் இழுபடவும் போர் பிராந்தியங்களில் அதாவது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கான அனுமதியையும் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேண அரசின் அனுமதியையும் அனைவரும் வேண்டி நிற்க வேண்டி எழும். இது மீண்டும் 1998 இல் வன்னியில் எழுந்த சர்வதேச கவனிப்பாரற்ற பட்டினி நிலையையே தோற்றிவிக்கப் போகின்றது. அந்த வகையில் பட்டினி இன்னும் பரவப் போகிறதே அன்றி குறையப் போவதில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் எழுகிறது.

புகலிடத்தில் இருந்து கொண்டு போர் போர்... பட்டினி பட்டினி என்று முழக்கமிடுவது மிக இலகு. போரின் அழிவுகளையும் பட்டினியின் விளைவுகளையும் சந்திக்கும் மக்களின் கருத்துக்கள் என்பது சமாதான அடிப்படைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் இருக்கும். அந்த வகையில் பேகர் சாப்பிட்டுவிட்டு கணணியில் குந்தி இருந்து குதர்க்கம் பேசுவது போன்றதல்ல இந்த தடை செய்யும் முடிவுகள் பற்றிய விமர்சனம். உண்மையில் தடைகள் பேச்சு வார்த்தைகளின் அடிப்படைகளையே தகர்த்து மீண்டும் பாரிய அழிவுகளையும் பட்டினியையும் தரப்போகும் யுத்தத்துக்கான நகர்வுகளாகவே கணிக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் எடுத்த தவறான சில முடிவுகளே சிறீலங்கா அரசின் தாந்தோன்றித்தனமான முடிவுகளுக்குக் காரணம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய புகலிடத்தமிழர்கள்..இந்தத் தடைக்கு என்ன முக்கியம் என்று கேட்பது அறியாமையா அல்லது விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பின் இன்னொரு மறைமுக வெளிப்பாடா?

ஆக உள்ளதை விட நிலமை அதிகம் தமிழர்களுக்குப் பாதகமாகும் என்பதே இப்போது கவனிக்க வேண்டிய விடயம். மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது இராணுவ அழுத்தங்களோடு பொருளாதார அழுத்தங்களும் அதிகரிக்கப் போகின்றது. இது வழமையை விட அதிக அளவில் இருக்கும். ஏற்கனவே அரசு பொருளாதாரத் தடைகள் இராணுவ நெருக்குவாரங்கள் மூலம் மக்களை தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மக்களை இழுக்க நினைக்கிறது. வாகரையில் புலிகள் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவிடாமல் கண்ணிவெடி வைத்திருப்பதாக உலக அளவில் பிரச்சாரம் செய்யும் அரசு ஏ9 பாதையை திறந்து யாழ் மக்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்காததை எவராவது முக்கியப்படுத்துகின்றனரா? ஆக அரசின் பிரச்சாரங்களே அதிகம் சர்வதேச கவனம் எடுக்கின்றன, உதவி வழங்கும் நாடுகள் கூட புலிகள் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் இருந்து தாக்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியது. நடப்பதோ.. அரச படைகள் புலிகள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களை கேடயமாக்கி அழிவுப் பொருளாக்கி வருகிறது. இந்த உண்மை நிலையைக் கூட இன்றைய சூழலில் தனினும் சுட்டிக்காட்டி சர்வதேசத்துக்கு விளக்க முடியவில்லை. இது தமிழர்களின் பக்கமுள்ள பலவீனமான நிலை.

எனி தடைகளின் பின்னர் எழப்போகும் சூழலில் அரச தடைகளினால் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் பெரும்பாலும் அரச சொற்களுக்குள் நின்றுவிடப் போகின்ற நிலையில் தமிழ மக்களின் உண்மை நிலையை வெளிக்கொணரவே அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கப் போகிறது. மீண்டும் ஜெயசுக்குறு காலத்தில் வன்னி எப்படி சர்வதேசத் தொடர்புகள் இழந்து இருந்ததோ மக்களின் துன்பங்கள் சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டிருந்ததோ அந்த நிலை மிகவும் மோசமாக எழப்போகிறது.

பிள்ளை பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கதிர்காமர் எழுப்பியதும் இந்த 1998 காலத்தில் தான். ஆனால் இன்று அதே அரசின் மீதும் திரும்பியுள்ளது.இராணுவமும் பிள்ளை பிடிச்சுக் கொடுக்கிறது என்ற ஐநாவின் குற்றச்சாட்டை அரசால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த உண்மையை வெளிக்கொணர எவ்வளவு காலம் பிடித்துள்ளது. ஐநா பிரதிநிதிகள் அங்கீகரிக்கப்பட்ட தரப்புடன் சான்றுகளுக்காக இன்று வருகின்றனர். அன்றெல்லாம் புலிகளுக்கு ஆலோசனை வழங்க வந்தவர்கள் இன்று புலிகளிடம் சான்றுகளைப் பெற்று அறிக்கைகளை தயாரிக்கின்ற அளவுக்கு முன்னேறி உள்ளது நிலை. இதை அரசு அனுமதிக்கப் போவதில்லை. புலிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி சர்வதேசத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புலிகளையும் சம்பந்தப்படுத்தி அதில் தமிழர்களின் அழிவை காணத்துடிக்கிறது சிங்களப் பேரினவாதம். அதை தமிழர்களுக்குள் உள்ள புல்லுருவிகளும் தரிசிக்க இந்தத் தடைகள் முக்கியமானவையா என்று கேள்வி எழுப்பி அவற்றின் முக்கியத்துவத்தை அழிக்க நினைக்கின்றன. நிச்சயம் இந்தத் தடைகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்ற வகையில் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தும் மேற்குலக ஏகாதபத்தியத்தினதும் பேரினவாதத்தினதும் கூட்டுச் சதி.

வரப்போகும் தடை நிச்சயம் இராணுவ அழுத்தங்களையும் பொருளாதார அழுத்தங்களையும் தமிழ் மக்கள் மீது அதிகரிக்கும். இது புலிகளுக்கும் நன்மை பயக்காது தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்காது. :rolleyes:

Edited by nedukkalapoovan

போர் நடந்த காலங்களிலும் பார்க்க போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலங்களில் தான் தமிழினத்துக்கு அதிக பின்னடைவுகள் ஏற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. தொலை நோக்கில் பார்க்கும்போது போர் நிறுத்த உடன்படிக்கையைத் துக்கியெறியும் எந்த வித நகர்வுகளும், அது சிங்கள அரசாங்கத்திடமிருந்து வந்தாலோ அல்லது விடுதலைப்புலிகளிடமிருந்து வந்தாலோ இறுதியில் பயனடையப்போவது தமிழினம்தான். போர்நிறுத்தத்தால் ஏற்பட்ட மிகப் பாரதுரமான விளைவு விடுதலைப்போரை தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசங்களின் எல்லைக்குள் அதாவது தமிழீழ எல்லைக்குள் மட்டும்தான் எனக் காலப்போக்கில் அது மட்டுப்படுத்தப்பட்டுவிட்டத

கனிந்து வந்த அமைதி முயற்சிகளை தவறான முறையில் கையாண்டு கொலைகாரனுக்கு மேலும் கொலை செய்ய அனுமதி வழங்கி நாடுகளுக்கு எதிராக கண்டனத்தை தெரிவிப்பதே, தற்போதைய நிலையில் இலங்கை பயங்கரவாத அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவதை விட சிறந்தது என கொள்ளளாமா?

புலிகள் வலுவான நிலையிலோ அல்லது சமவலுவான நிலையிலோ கூட அமைதி பேச்சுக்களில் ஈடுபடுவதை சர்வதேசமும் இந்தியாவும் எப்போதும் விரும்பிருக்கவில்லை. அதனால் தான் சமாதானத்தீர்வு, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்று கூறிக் கூறியே அதனை குழப்பும் அனைத்து வழிகளிலும் முயன்று இன்று அவை வெற்றி கண்டுள்ளன. இனி அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை இலங்கை இராணுவத்தை கொண்டு புலிகளை அழிப்பது, அல்லது பலவீனப்படுத்தி பின் மீண்டும் தாம் விரும்பும் ஒரு தீர்வுத் திட்டத்தை (இலங்கை அரசின் கீழ் தமிழரின் வாழ்வு இருக்கக் கூடிய) திணித்து விடுவதாகவே அமையும். அதை சரியாக புரிந்து கொண்ட இலங்கையும் மிக்க மகிழ்ச்சியுடன் பயங்கரவாதத்திற்க்கு எதிரான போர் என்ற போர்வையில் எஞ்சியுள்ள தமிழினத்தை முடியுமானவரை கொண்றொழிக்கப் போகிறது.

புலிகளும் தமது பலமனைத்தையும் ஒன்று திரட்டி அனைத்து வழிகளிலும் போராடுவார்கள். மக்களும் படுகொலைகள், பட்டினி, நோய், ஈவு இரக்கமற்ற தாக்குதல்கள் என்பவற்றால் கொல்லப்படப் போகின்றனர். இது இவ்வாறே நீண்ட காலம் ஒரு தரப்பு தோல்வியடையும் வரை அல்லது களைப்படையும் வரை தொடர்ந்து நடைபெறும். பின்னர் மீண்டும் சர்வதேச அனுசரனையாளர்கள்.......!!!!!

ஷ்ஷ்ஷ்ஷ் யாப்பா....இப்பவே கண்ணக் கட்டுதே???

Edited by saanakiyan

அமைதி முயற்சி, போர் நிறுத்த ஒப்பந்தம் எனச் சொல்லப்பட்ட அனைத்துமே மாறி மாறி ஆட்சிக்குவந்த சிங்கள அரசுகள் நேரத்தை வாங்குவதற்காக சுருக்கமாகச் சொல்லப்போனால் காலத்தைக் கடத்துவதற்காகச் செய்துகொண்ட தந்திரவேலைகள். அவர்களுக்கு வேண்டியது நிரந்தரத் தீர்வல்ல, போர் நிறுத்தமும் அமைதியும் மட்டுமே. இனப்பிரச்சினையை ஏதாவது ஒரு வழியில் அமைதியான வழியில் புறந்தள்ளிவைத்து தமது ஆட்சிக்காலத்தை முடித்துக்கொள்ளுதலும் தமிழினத்துக்காக குரல்கொடுக்கும் சக்திகளை நசுக்கி அழிப்பதுமாகும். தமிழருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அதிகாரங்களையும் உரிமைகளையும் சிங்களவன் தானாக வழங்க முன்வருவான் என்று கனவில்கூட நினைக்கமுடியாது. அப்படியொரு நிலை வந்தாலும் அதைத் தடுப்பதற்கு பல இனவாத சக்திகளும் முன்னின்று தடைசெய்வதும் சாத்தியமே.

கடந்த முப்பது கால அரசியல் வரலாற்றிலிருந்து சிங்கள அரசியல்வாதிகள் எதையும் புரிந்து கொள்ளவில்லை என்பதை மட்டுமே இது தெளிவுபடக்கூறுகிறது. இலங்கை எனும் நாடு இரண்டு தேசியங்களுக்குரித்தானது எனும் எண்ணம் கூட இல்லாத சிங்கள அரசியல் வாதிகளுக்கும் அவர்களுக்கு வாக்களித்து ஊக்கமளிக்கும் சிங்கள வாக்காளர்களுக்கும் இவற்றையெல்லாம் கண்டும் எவ்வித அசைவும் இல்லாமல் வாளாவிருக்கும் சிங்களப் புத்திஜீவிகளும் நாட்டில் நாளை நடக்கவிருக்கும் பேரழிவுகளுக்குப் பொறுப்பானவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.