Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி(ய)ராணி கதை 

02-1441177467-indrani-mukerjea234-600.jp

இந்தியாவின்  சகல டிவி, ரேடியோ, தின, வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் கல்லா கட்டும் இன்றைய ஒரே நட்சத்திரம் இந்திராணி.

இந்த ராணியின் தகிடு தத்தங்கள், கொலையினால் (சொந்த மகளையே ) இந்திய தாய்க்குலமே அரண்டு போய்  நிற்கின்றது.

தாய், பெத்த மகளைக் கொலை செய்வது புதிது இல்லை தான் அதுவும் இந்தியாவில். ஆனால், இங்கே அதற்கான காரணம், அய்யய்யோ ரகம்.

பணம், பதவி அந்தஸ்து காரணமாக செய்த ஜில்மார்ட் வேலைகளினால் நடந்த கொலை.  

இந்த ராணி இளவயதில் ஒருவருடன் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார். ஒரு ஆண் (மிகைல்) , ஒரு பெண் (ஷீனா) 

அந்த கணவரை பிரிந்து இரண்டாவது கலியாணம். அங்கேயும் ஒரு பெண் குழந்தை (விதி).

எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டார்கள்.

அழகிய ராணியும் வேலை தேடினார். கிடைத்தது.

ஸ்டார் இந்தியா என்னும் மிகப் பெரிய நிறுவனத்தின்  CEO பீட்டர் முகர்ஜி என்பவரின் பிரத்தியேக செயலாளர்.

அவ்வளவுதான்.

முகர்ஜியையே மடக்கி விட்டார். என்னத்தைக் செய்து தொலைத்தாரோ... 

ஆனால் தனக்கு இன்னும் கல்யாணமே நடக்கவில்லை என்று கதை சொல்லி இருப்பார் போல, பார்க்கும் போது இளமையாக தோன்றும் அம்மணி.

பெரும் பணக்கார வர்க்கத்தினை சேர்ந்த முகர்ஜியோ தனது முதல் மனைவியை விவாகரத்து பண்ணி, இவரை கட்டிக் கொண்டார்.

இந்திராணி முகர்ஜி ஆனார், நம்ம அம்மணி. பெரும் பணக்கரராகும் கனவுடன். 

முகர்ஜிக்கும் இரண்டு பிள்ளைகள்.  

ஒரு ஆண் (ராகுல் ), ஒரு பெண். 

இந்திராணியின் பிள்ளைகள் தாயை தேடி வருவார்கள் தானே. அதற்கு முதலே எச்சரிகை  செய்து விட்டார் அம்மணி: "பிள்ளைகளே அம்மா,  நம்ம எதிர்காலத்துக்கு நாலு காசு சேர்க்க, ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு அடிமாட்டு விலைக்கு 'ஒரு பொருளை' வாங்கிப் போட்டு இருக்கிறேன். கெடுத்துடாதீங்க செல்லங்கள். உங்களை என் தம்பி தங்கைங்க என்னு அவிங்க கிட்ட சொல்லி வைக்கிறேன். அப்படியே சூதனமா இருந்து, அதையே மைண்டைன் பண்ணனும், ஓகே" என்று சொல்லிவிட்டார்.

ஆனால்  விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருந்தது.

சித்தியின், தங்கை (?) மீது காதல் கொண்டார், முகர்ஜியின் மகன் ராகுல்.

பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் பட புதிர் போன்ற உறவு முறை.....

அப்படியே ஆடிப் போனார் ராணி. உண்மையை சொல்லி விலகிப் போயிருக்கலாம்.

ஆனால், ஆடம்பர வாழ்க்கை, பணம், அந்தஸ்த்து: விட முடியுமா?

மகளைக்.. ச.. தங்கையை கூப்பிட்டு, கத்தி துளைத்து விட்டார். உனக்கு சொல்லி வைத்தேனே, ஏன்  இப்படி செய்து தொலைத்தாய் என்று அழுதார்.

மகளில் பிழை தானே.

இருந்ததாலும், தாயே எட்டடி பாய்ந்தால், மோள் 16 அடி பாயாவிட்டால் எப்படி ?

02-1441177573-sheena-bora35-600.jpg

ஷீனா

ஆனால்  காதலுக்கு தான் கண் இல்லையே !    

அதற்குள் காதல் தொடர்பு எகிறி கட்டில் வரை போக, உன் தங்கை தானே, என் மகனும் விரும்புகிறானே, கட்டி வைச்சிரலாமே என்றார் முகர்ஜி.

அவ்வளவு தான். ஒரு முடிவு எடுத்து விட்டார் அம்மா ராணி.  

இவள் நம்ம ராணி வாழ்க்கைக்கே உலை வைத்து விடுவாள் போலிருக்கிறதே.

முடிவெடுத்தார் .... கொலை முடிவு... சொந்த மகளை....

இரண்டாவது கணவரை (முன்னால்) அழைத்தார்.

நம்ம மகள் விதியை ராகுலுக்கு கட்டி வைப்போம் என்றால், ஷீனா இடையிலே புகுந்து.....

சின்ன வயதில் இருந்து அவளை எனக்குத் தெரியும். தனக்குத் தேவையானதைப் பெற கொலையும் செய்வாள். விதியை அவளிடம் இருந்து காப்பாத்த  வேண்டும்...

தனது மகளுக்காக இணங்கினார் விதியின் தந்தை.

ஷீனாவை அழைத்தார் தாய், ஊருக்கு போய்  வருவோம் வா...

போகும் வழியில், இரண்டாவது கணவன் ஏறிக் கொண்டார். கழுத்தை நெரித்து கொலை செய்து, காட்டுக்குள் பெற்றோல்  ஊத்தி எரித்து விட்டனர்.

ஆனால், காரின் டிரைவர் கூட இருந்தார். பெரிய, மிகப் பெரிய இடம்..... வாயைத் திறந்தால் நமக்கும் இதே கதி தான்....

பணத்தினை வாங்கிக் கொண்டு கமுக்கமாக இருந்து விட்டார். இரண்டு.... மூன்று வருடங்கள் ஆகி விட்டன.

அதற்குள் பீட்டர் முகர்ஜியுடன் சேர்ந்து வேறு நிறுவனம் தொடங்கி, அதுவும் பணத்தைக் கொட்டியது. ராணி வந்த நேரம், நல்ல நேரம், அக மகிழ்ந்தார் முகர்ஜி.

தங்கை (மகள்) தன்னுடன் கோபித்துக் கொண்டு அமெரிக்கா  போய்  விட்டார் என்று சொல்லி விட்டார் அம்மா... ச.. சா ... அக்கா . 

இடையே, கொலை நடந்திருக்கும் என சந்தேகம் கொண்டு, மிகைல் பணம் கேட்டு 'அக்காவை' நச்சரிக்க, உன்னையும் போடுவது பெரிய வேலை இல்லை, ஓடிப் போடா 'தம்பி' என்று எச்சரிக்கை.

02-1441177487-mikhail-bora54-600.jpg

மிகைல்

எல்லாமே நல்லாத் தான் போய்க் கொண்டிருந்தது இந்திராணிக்கு.

டிரைவருக்கு அப்பப்போ பணம் வந்து கொண்டிருந்தது. அவர் நண்பர்களுக்கு அப்பப்போ பார்ட்டி வைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் பப்பில் நல்ல மப்பில், நண்பர்கள் கேட்டார்கள்... 'ஏதோ  பெரிய சுறா சிக்கி விட்டது என்று கதை விடாதே, தூள் பிசினஸ் ஏதாவது  செய்கிறாய் எண்டால் சொல்லுப்பா, இந்த மாதிரி காசு பிளங்குகிறதே '....

அவ்வளவு தான் வெகுண்டு போன டிரைவர்தம்பி, "யார் என்று கேட்காதீங்க, ஆனா... ஒரு பெரிய புள்ளி கொலை செய்த கதை"... இது என்று சொல்ல....

நம்ம ராணியின் துரதிஸ்டம், அங்கே அந்த டிரைவரின் கதிரைக்கு பின்னால் , வேறு ஒருவரை பின் தொடர்ந்து வந்து இருந்த, போலிஸ் உளவாளியின் காதில் இது விழுந்து விட்டது.

டிரைவரை பொலிசார் ரகசியமாக மோப்பம் பிடித்து, பின் தொடர்ந்து, யார் அவர் உடன் தொடர்பில் இருக்கும் பெரும் புள்ளி  என கண்டு கொண்டனர்.

அதே வேளை  இந்திராணி, கணவருடன் (மூன்றாவது) ஸ்பெயின் நாட்டில் விடுமுறை, வியாபார பயணத்தில் இருந்தார்.

திரும்பியதும் கைது செய்யப் பட்டு உள்ளார்.

தினம் ஒரு திருப்பங்களுடன் இந்த கொலைக் கதை இந்தியர்களை அதிர வைத்துக் கொண்டிருகிறது.

இந்த 'பெரும் பொய்' ஒன்றுடன் வாழ்ந்து இருக்கிறோமே என்று அதிர்ந்து போய் இருக்கிறார் அப்பாவி பீட்டர் முகர்ஜி. 

நல்ல காலம், அம்மணிக்கும், முகர்ஜிக்கும் பிள்ளைகள் இல்லை. :unsure:

பணத்துக்காக இந்திராணி செய்த செயல்களால், இந்திய பணக்கார வர்க்கமே அதிர்ந்து போய்  கிடக்கிறது.

அதே வேளை , மகள் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அவரது காதலுக்கு தடை செய்து, வேறு ஒருவரை கட்டி வைத்து, அமெரிக்கா  அனுப்பிய கோபத்தில், தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாய் சொல்லி தன்னைக் காப்பாத்த மறுக்கிறாள் என்று போலிசுக்கு 'வேறு கதை' விடுகிறாராம்.

ஆனால் , டிரைவரும், இரண்டாவது கணவரும் உள்ளுக்குள் இருப்பதால், இவரது கதை பொய் என்று பொலிசாருக்கு தெரிகிறது.

நாளை என்ன புதுக் கதை வருகிறதோ தெரிய வில்லை.

அழகு என்றுமே ஆபத்தானது என்று பீட்டர் முகர்ஜி அனுபவ பூர்வமாக அறிந்திருப்பார் .

Image result for peter mukherjee

picmonkey%20collage%20six_1441096110.jpg

பீட்டர் முகர்ஜி & இந்திராணி

Image result for peter mukherjee

மிகைல், இந்திராணி, பீட்டர் முகர்ஜி,  ராகுல் & ஷீனா

Edited by Nathamuni

எல்லாம் பணம் செய்யும் வேலை. 

நாதம் அண்ணோய் "இந்தி(ய)ராணி" என்னும் தலைப்புக்கு copy right வாங்கிவிடுங்கோ. அல்லது யாராவது இந்திய பிலிம் டைரக்டர் உந்த ராணியின் கதையை படமாக எடுக்கும்போது (இப்ப பெரும்பாலும் உப்பிடியான உண்மைச்சம்பவங்களை   படமாக எடுப்பது ஒரு பேஷன்) உங்கடை தலைப்பை பாவித்துவிடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகு பெட்டகத்தை அநியாயமாக கொன்றுவிட்டார்கள் ....

எதோ நடந்தது நடந்து விட்டது 
(வயது வந்தாலும் சும்மா ஓரளவு பராவயில்லை )
இனி மற்றதையும் நீதி என்று கூறி சிறையில் அடைக்காது 
வீதியில் விடவும் ...... 

  • கருத்துக்கள உறவுகள்

picmonkey%20collage%20six_1441096110.jpg

//முகர்ஜியையே மடக்கி விட்டார். என்னத்தைக் செய்து தொலைத்தாரோ... 
ஆனால் தனக்கு இன்னும் கல்யாணமே நடக்கவில்லை என்று கதை சொல்லி இருப்பார் போல, பார்க்கும் போது இளமையாக தோன்றும் அம்மணி.
பெரும் பணக்கார வர்க்கத்தினை சேர்ந்த முகர்ஜியோ தனது முதல் மனைவியை விவாகரத்து பண்ணி, இவரை கட்டிக் கொண்டார்.//

முகர்ஜி விடும், ஜொள்ளைப் பார்க்க.... முகர்ஜி தான், ராணியை... மடக்கியிருப்பார். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

picmonkey%20collage%20six_1441096110.jpg

//முகர்ஜியையே மடக்கி விட்டார். என்னத்தைக் செய்து தொலைத்தாரோ... 
ஆனால் தனக்கு இன்னும் கல்யாணமே நடக்கவில்லை என்று கதை சொல்லி இருப்பார் போல, பார்க்கும் போது இளமையாக தோன்றும் அம்மணி.
பெரும் பணக்கார வர்க்கத்தினை சேர்ந்த முகர்ஜியோ தனது முதல் மனைவியை விவாகரத்து பண்ணி, இவரை கட்டிக் கொண்டார்.//

முகர்ஜி விடும், ஜொள்ளைப் பார்க்க.... முகர்ஜி தான், ராணியை... மடக்கியிருப்பார். :grin:

 

மூன்று பிள்ளையளைப் பெத்த ஆன்டி மாதிரியா இருக்கிறா ? அந்தாள் லொள்ளு விடாமல் இருக்க ? :grin:

மகன் மிகைல், தடியடா சாமி போல இருக்கிறார். அக்கா இல்லை, அம்மா, என்று சொன்னால் அடிக்க வருவார்கள்...:innocent:

பீட்டர் வயது கூட தான்.... :(

Edited by Nathamuni

 

முகர்ஜி விடும், ஜொள்ளைப் பார்க்க.... முகர்ஜி தான், ராணியை... மடக்கியிருப்பார். :grin:

முகர்ஜி முகர்வதில் அதிகம் நேரத்தை செலவிடுவார் போலுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷீனாவைக் கொல்ல லண்டனில் இருந்தபடி சஞ்சீவுடன் போனில் "ஸ்கெட்ச்" போட்ட இந்திராணி

04-1441351054-indrani-mukerjea-600.jpg

ஷீனா போராவைக் கொலை செய்ய லண்டனில் இருந்தபடி, தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் இந்திராணி போனில் பேசி திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, அவரது 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 திருமணங்கள் செய்த டிவி அதிபரான இந்திராணி தனது முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனாவைக் கொலை செய்தது ஏன் என்பது பற்றி பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியின் மகனான ராகுலைக் காதலித்ததால் ஷீனா கவுரக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலைக்கான காரணம் என்ன? இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இப்போது இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிவதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காதல் விவகாரம் ஒருபக்கம் இருந்தாலும் பணப்பிரச்சினை தொடர்பாக ஷீனா கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இது தொடர்பாக இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் கடந்த 2 நாட்களாக போலீசார் விசாரித்தனர்.

ஏராளமான பணம்... டி.வி. அதிபராகவும், தொழில் அதிபராகவும் விளங்கும் பீட்டருக்கு ஏராளமான சொத்துக்கள், முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளது. அவற்றில் இருந்து அவர் தனது 2வது மனைவி இந்திராணிக்கு ஏராளமான பணம் கொடுத்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

வெளிநாட்டில் சதி... இதற்கிடையே ஷீனா கொலைக்கான சதித்திட்டம் வெளிநாட்டில் நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முதல் நாள் தான் இந்திராணி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார்.

04-1441350869-indrani525.jpg

செல்போன் பேச்சு... லண்டனில் இருந்த போது இந்திராணி, தனது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் செல்போன் மூலமும், நெட் போன் மூலமும் தொடர்ந்து பலமுறை பேசியிருக்கிறார். இந்த பேச்சுக்கள் ஷீனாவைக் கொலை செய்வது தொடர்பாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஷீனா கொலை... லண்டனில் இருந்தபடியே கொல்கத்தாவில் இருந்து சஞ்சீவ் கன்னாவை மும்பை வரவழைத்துள்ளார் இந்திராணி. அடுத்தநாள் மும்பை திரும்பிய இந்திராணி, சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து ஷீனாவைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்

04-1441351082-sheena456.jpg

ஷீனா

விசாரணை நிலவரம்... இது தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் காவல் நாளை முடிவடைகிறது. நாளை அவர்கள் மும்பை பாந்தரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போது விசாரணை நிலவரத்தை போலீசார் கோர்ட்டில் தெரிவிக்க இருக்கிறார்கள்.

 

02-1441193187-indrani-mukerjea-s10-600.j

http://tamil.oneindia.com/

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷீனாவின் இறந்த உடலை சீவி சிங்காரித்து, லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து எரித்த இந்திராணி!

06-1441527399-sheena-indranea.jpg

வாகனச் சோதனையின் போது போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக இந்திராணி, கொலை செய்யப்பட்ட ஷீனா போராவின் உடலுக்கு மேக்கப் போட்டு, காரில் அமர வைத்து கொண்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்ற மகளையே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர் தனது முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார். இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேக்கப்...

முறையற்ற காதலால் ஷீனா போரா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஷீனாவை எரிப்பதற்காக காரில் வைத்து கொண்டு சென்றுள்ளார் இந்திராணி. அப்போது, இடையில் வாகனச் சோதனையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, ஷீனாவின் உடலுக்கு அவர் மேக்கப் போட்டுள்ளார்.

தலைவாரி, லிப்ஸ்டிக் போட்டு...

ஷீனாவிற்கு தலை வாரி, லிப்ஸ்டிக் போட்டு விட்டு, அவரது உடலுக்கு பெர்ப்யூமும் போட்டுள்ளார் இந்திராணி. காரின் பின் இருக்கையில் அமர்ந்து, துவண்டு, தொங்கிக் கொண்டிருந்த ஷீனாவின் தலையை தனது தோளின் மீது சாத்திக் கொண்டு சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் இந்தத் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

உடல்நலம் சரியில்லை...

அப்படி ஏதேனும் நடந்தால், ஷீனாவுக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் தூங்கிக் கொண்டிருக்கிறார் எனக் கூறவும் இந்திராணி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

போலீஸ் விசாரணையில்... அதன்பிறகுதான், ஷீனா போராவின் உடல் பெட்ரோல் ஊற்றி, எரிக்கப்பட்டு, தனிமையான காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ளது. இதனை மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷீனாவைப் புதைக்க 3 நாட்கள் ஊர் பூராவும் சுற்றி 5 இடங்களைத் தேர்வு செய்த இந்திராணி

ஷீனா போராவைக் கொலை செய்து புதைக்க மும்பையைச் சுற்றியுள்ள இடங்களில் தனது கார் டிரைவருடன் மூன்று நாட்கள் சுற்றி இந்திராணி தேடுதல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்ற மகளையே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர் தனது முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார். இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திடுக்கிடும் தகவல்கள்...

முறையற்ற காதலால் இந்திராணி தன் மகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீசாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

திட்டமிட்ட கொலை...

நன்கு திட்டமிட்டு ஷீனாவை இந்திராணி கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பின்னர் ஷீனாவை எங்கு புதைப்பது என்பதைக் கூட தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டுள்ளார் அவர்.

ஆள்நடமாட்டமில்லாத பகுதி...

இதற்காக தன் டிரைவர் ஷியாம்வார் ராயுடன் மும்பையைச் சுற்றியுள்ள சில ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களை அவர் நோட்டமிட்டுள்ளார். லோனாவாலாவில் உள்ள மலைப்பகுதி, கர்னாலா சரணாலயம் அருகே உள்ள வனப்பகுதி, மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் இடைப்பட்ட பகுதி உட்பட பல இடங்களில் ஷீனாவைப் புதைக்க இடம் தேடியுள்ளார் இந்திராணி

ராய்காட் வனப்பகுதி...

இறுதியாக ராய்காட் வனப்பகுதியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ராய்காட் வனப்பகுதியிலும் ஷீனாவின் உடலைப் புதைக்க தகுந்த இடத்தை சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளார் இந்திராணி. ஆனால், எதன் அடிப்படையில் ராய்காட் வனப்பகுதியை அவர் தேர்வு செய்தார் என்ற விபரத்தை போலீஸ் விசாரணையில் கூற மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4வது நபர்...

இந்த கொலைக்கு இமெயில், இன்டர்நெட் போன்ற நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். மேலும், இந்த கொலையில் 4-வதாக ஒரு நபருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்

08-1441685065-sanjeev-khanna255-600.jpg

இந்திராணி தான் ஷீனாவை பெற்ற தாய்: மரபணு சோதனையில் உறுதி

மரபணு சோதனையில் இந்திராணி முகர்ஜி தான் ஷீனா போராவை பெற்றெடுத்த தாய் என்பது உறுதியாகியுள்ளது என மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். ஷீனா போரா கொலை வழக்கில் கைதான அவரது தாய் இந்திராணி முகர்ஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். போலீசார் என்ன கேட்டாலும் பதில் அளிக்காமல் அடம் பிடித்து வருகிறார் இந்திராணி. இந்நிலையில் ஷீனாவின் உடலை எரித்த ரைகாட் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிடைத்த மண்டை ஓடு ஷீனாவுடையது தானா என்று ஆய்வு நடந்து வந்தது.

தாய்

மரபணு சோதனையில் இந்திராணி முகர்ஜி ஷீனா போராவை பெற்றெடுத்த தாய் என்பது உறுதியாகியுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கன்னா

இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவை போலீசார் கொல்கத்தா அழைத்துச் சென்றனர். அவர் காண்பித்த இடத்தில் கொலையாளி அணிந்திருந்த ஷூ கிடைத்தது என்று மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

பணம்

இந்திராணியின் பண பரிவர்த்தனைகள் பற்றி சிறப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே ஷீனாவின் நகைகள் சிலவும் கிடைத்துள்ளன என மரியா கூறியுள்ளார்.
 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷீனா உடலை எரிக்க 10 லிட்டர் பெட்ரோலை விற்றவர் முக்கிய சாட்சியாகிறார்

ஷீனா போராவின் உடலை எரிக்கப் பயன்படுத்தப்பட்ட 10 லிட்டர் பெட்ரோலை விற்ற நபர் முக்கிய போலீஸ் தரப்பு சாட்சியாகிறார். அவரது வாக்குமூலத்தை வைத்து இந்திராணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை வலுவாக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஷீனா போரா கொலை வழக்கில் தொடர்ந்து இந்திராணி தரப்புக்கு எதிரான பிடி வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் ஷீனாவின உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய பெட்ரோல் பங்கின் ஊழியர், இந்திராணி உள்ளிட்டோருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்திராணியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சூட்கேஸ்களை விற்ற கடைக்காரரும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூட்கேஸ்கள்...

இதில் ஒரு சூட்கேஸில் ஷீனாவின் தம்பி மிக்கயிலைக் கொலை செய்து அதில் உடலை அடைக்க இந்திராணி குரூப் திட்டமிட்டிருந்தது. இன்னொரு சூட்கேஸில் ஷீனாவை எரித்து சாம்பலை அதில் அடைத்துக் கொண்டு போய் போடத் திட்டமிட்டிருந்தாராம் இந்திராணி.

கடைக்காரர் வாக்குமூலம்...

இந்திராணி மிகப் பெரிய சூட்கேஸாக வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டு வாங்கிச் சென்றதாக கடைக்காரர் தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால அவர் தற்போது முக்கிய சாட்சியாகியுள்ளரர்.

டிப்ஸ் வேறு...

மேலும் இந்த சூட்கேஸின் விலை ரூ. 700தானாம். ஆனால் இந்திராணி அதனை ரூ. 1500 கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார். மேலும் அந்த சூட்கேஸை காரில் கொண்டு வந்து வைக்கச் சொல்லிய பின்னர் கடைக்காரருக்கு ரூ. 300 டிப்ஸாகவும் கொடுத்துள்ளார் இந்திராணி.

பெரிய சூட்கேஸ்...

சூட்கேஸ் மிகப் பெரிதாக இருந்ததால் அதைத் தலை மீது தூக்க வைத்துக் கொண்டு போய் காரில் வைத்ததாக கடைக்காரர் கூறியுள்ளார். இந்திராணியே நேரில் வந்து சூட்கேஸை வாங்கியுள்ளார். அப்போது டிரைவர் ராய் காரில் இருந்துள்ளார்.

09-1441788201-indrani567.jpg

10 லிட்டர் பெட்ரோல்...

அதேபோல டிரைவர் ராய் வந்து 10 லிட்டர் பெட்ரோலை வாங்கியதை பெட்ரோல் பங்க் ஊழியர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால்தான் அங்கு சென்று பெட்ரோல் வாங்கியுள்ளார் ராய்.

மறக்க முடியுமா...

கேன் கேனாக பத்து லிட்டர் வாங்கியதால் ராயின் முகம் அந்த ஊழியருக்கு நன்றாக மனதில் பதிந்து போய் விட்டது. யாருமே இப்படி அதிக அளவில் பெட்ரோலை கேன்களில் வாங்க மாட்டார்கள் என்பதால் ராயின் முகத்தை மறக்க முடியவில்லை என போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த கதையில அடுத்த திருப்பம்.

இந்தி(ய)ராணி, இங்கிலாந்து ராணியான கதை.

அதாவது, இவ்வளவு விசயங்களுக்கு இடையிலும், இந்த மனிசி  இங்கிலாந்திலும் வாழ்ந்து அங்கு குடியுரிமை வேறு வைத்து வைத்திருக்கிறார்.

இவரைப் பார்க்க, பிரித்தானிய ராசதந்திரிகள் சிறைக்கு போய் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கதையில அடுத்த திருப்பம்.

இந்தி(ய)ராணி, இங்கிலாந்து ராணியான கதை.

அதாவது, இவ்வளவு விசயங்களுக்கு இடையிலும், இந்த மனிசி  இங்கிலாந்திலும் வாழ்ந்து அங்கு குடியுரிமை வேறு வைத்து வைத்திருக்கிறார்.

இவரைப் பார்க்க, பிரித்தானிய ராசதந்திரிகள் சிறைக்கு போய் இருக்கிறார்கள். 

ஆண் குலம் எவ்வளவு பலவீனமானது?tw_cookie:

உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி...நாதம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசதி எப்படி, ஏதாவது உதவி வேண்டுமா: சிறையில் இந்திராணியை சந்தித்து கேட்ட யு.கே. தூதரக குழு

ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணியை மும்பையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி முதலில் போலீஸ் காவலில் இருந்தார். அதன் பிறகு அவரை செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மும்பையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரக அதிகாரிகள் குழு சிறைக்கு சென்று இந்திராணியை சந்தித்து பேசியுள்ளது. சிறையில் இந்திராணிக்கு உள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்த குழுவினர் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளனர். இந்திராணி இங்கிலாந்து குடிமகள் என்பதால் அதிகாரிகள் குழு அவரை சந்தித்து பேசியுள்ளது. முன்னதாக இந்திராணியை சந்திக்க அந்த குழுவிற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுமாறு தெரிவித்தனர். இந்திராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து குடிமகள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு காலம் இவ லண்டனில் இருந்தவ விஸா இருப்பதற்கு? ...காசு கொடுத்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்...உண்மையா அகதிகளுக்கு விஸா இல்லை இப்படியான கேடிகள் பணத்தால் எல்லாத்தையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Investor visa 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Investor visa 

 

எவ்வளவு காலம் இவ லண்டனில் இருந்தவ விஸா இருப்பதற்கு? ...காசு கொடுத்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்...உண்மையா அகதிகளுக்கு விஸா இல்லை இப்படியான கேடிகள் பணத்தால் எல்லாத்தையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்

 

Investor visa ஆயினும் 5 வருடம் இருந்தால் தான் குடியுரிமை. குடியுரிமை இருந்தால் மட்டுமே ராசதந்திரிகள் உதவி.

எனது ஆச்சரியம் என்னவெனில், 3 கணவர்கள், 3 பிள்ளைகள் வளர்ப்பு. 3 வது கணவருடன் பெரும் வியாபாரம். இடையே இலண்டனில் வாழ்க்கை.

இவ்வளவு செய்ய (சாதிக்க ?) நேரம் கிடைத்த இவருக்கு வயது தான் என்ன?

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. பிரபல டிவி சேனல் அதிபர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது மகள்தான் ஷீனா போரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். ஆனால் அந்தக் கொலையை திறம்பட மறைத்ததோடு மிகப் பெரிய, சினிமாக்களையும் மிஞ்சும் விதமான கதைகளையும் புனைந்து தனது கணவர் பீட்டர் முகர்ஜி உள்பட உலகத்தையே நம்ப வைத்து பெரிய மோசடி செய்தார் இந்திராணி முகர்ஜி என்பது அம்பலமானது.

இந்தக் கொலையைச் செய்ததாக இந்திராணி முகர்ஜி, அவரது 2வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் நாளும் ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி அனைவரையும் அசர வைத்து வந்தது. இந்தக் கொலை வழக்கை மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் திடீரென ராகேஷ் மரியா மாற்றப்பட்டார். அதன் பின்னர் வழக்கும் பொலிவிழந்து போயுள்ளது. இந்த நிலையில்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது மகாராஷ்டிர அரசு. இதுகுறித்து மாநில உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கே.பி.பக்ஷி கூறுகையில், ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐயிடம் மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கதையில அடுத்த திருப்பம்.

இந்தி(ய)ராணி, இங்கிலாந்து ராணியான கதை.

அதாவது, இவ்வளவு விசயங்களுக்கு இடையிலும், இந்த மனிசி  இங்கிலாந்திலும் வாழ்ந்து அங்கு குடியுரிமை வேறு வைத்து வைத்திருக்கிறார்.

இவரைப் பார்க்க, பிரித்தானிய ராசதந்திரிகள் சிறைக்கு போய் இருக்கிறார்கள். 

உடல் பாசம் எவளவு சக்தி கூடியதாக இருக்கிறது ........?
இனி வேவு பார்த்துதான் குளங்களில் காலை விட வேண்டும். 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா இந்திராணி?... டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு!

அளவுக்கு அதிகமான வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயன்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்திராணி முகர்ஜி. கைதுக்கு பின்னரே ஷீனா போரா இந்திராணியின் தங்கை அல்ல, மகள் என்பது உட்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது மூன்றாவது கணவரின் மகனைக் காதலித்ததால் ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி...

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திராணி. ஆனால், இந்திராணி அளவுக்கு அதிகமான வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

48 மணி நேர கெடு...

தற்போது ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் இந்திராணி. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகமான மாத்திரைகள்...

இந்திராணி கடந்த மாதம் 11ம் தேதியிருந்து வலிப்பு நோயை குணப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள் உட்கொண்டுவருவதாக போலீஸார் அளித்த அவரது சிறை மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால். அவரது வயிற்றில் ஆய்வக பரிசோதனை மேற்கொண்டதில் அதில் மருந்துகள் உட்கொண்டதற்கான தடயம் எதுவும் இல்லை.

அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா இந்திராணி?... டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு!

எனினும், மருந்துகள் உட்கொண்டு அவை ரத்தத்துக்குள் கலந்து விட்டிருந்தால், அதனை அறியும் ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான ரத்தம், சிறுநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று மாலைதான் தெரிய வரும் என ஜே.ஜே. மருத்துவமனை தலைமை மருத்துவர் டி.பி.லஹானே.

சிக்கலான காலகட்டம்...

மேலும், அனுமதிக்கப்பட்டதில் இருந்தே இந்திராணி நினைவிழந்த நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அடுத்து வரும் 48மணி நேரம் மிகவும் சிக்கலான காலகட்டம் எனவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

குழப்பமான மனநிலை...

கடந்த வியாழக்கிழமை இந்திராணியின் தாயார் காலமானார். இந்தத் தகவல் கிடைத்தது முதல் குழப்பமான மனநிலையில் இருந்துள்ளார் இந்திராணி. அதனைத் தொடர்ந்தே, அவர் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில், அதிக அளவில் உட்கொண்டுள்ளார். அதனையடுத்து அவர் நினைவிழந்துள்ளார்

நீதிமன்றத்தில் மனு...

இதற்கிடையே, இந்திராணியின் நிலைமையை அறிய மருத்துவமனைக்குச் சென்ற அவரது வழக்குரைஞர் குஞ்சன் மங்களாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திராணியைக் காண, தனக்கு அனுமதி வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிடக்கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் குஞ்சன் மங்களா சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.

ஏற்கும்படி இல்லை...

மேலும், சிறையில் இந்திராணியை சந்தித்தபோது அவர் வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்வதாகவும், மனநல மருந்துகள் உட்கொள்வதாகவும் ஒருபோதும் கூறியதில்லை. இந்நிலையில் அவர் வலிப்பு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் நினைவிழந்தார் என்பது ஏற்கும்படியாக இல்லை என்றும் குஞ்சன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

உத்தரவு... இதனை விசாரித்த நீதிபதி ஆர்.வி. அதோன், இந்திராணியின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பரபரப்பு...

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷீனா கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்திராணியின் இந்த திடீர் உடல்நலக் குறைபாடும், அது தொடர்பாக வெளிவரும் மாறுபட்ட கருத்துகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தற்கொலை முயற்சி தன் மீது அனுதாபத்தை தேடுவதற்கான நடிப்பாக இருக்கலாம்.

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.