Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா!

Featured Replies

ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா!

 
europe_2533713f.jpg
 

இந்தக் கோடைக்காலத்தில், பிரான்ஸின் கலாய்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஐரோப்பிய நிலத்தை பிரிட்டனுடன் இணைக்கும் சுரங்கப் பாதையின் முகப்பில் ஒரு சோக நாடகம் தன்னைத்தானே நிகழ்த்திக்காட்டியது. ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அந்தச் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் தொற்றிக்கொள்ள முயற்சிசெய்துகொண்டிருந்தனர். கம்பி வேலிகளை வெட்டியெடுத்த அவர்கள், போலீஸுக்குத் தப்பி உள்ளே ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், கணிசமானோர் பல முயற்சிகளுக்குப் பின்னர் அதில் வெற்றியடைந்தனர். இருநாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர்.

அமெரிக்கா ஐரோப்பா: ஓர் ஒப்பீடு

இந்தப் பிரச்சினை, கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் அமெரிக்க எல்லையில் இளம் அகதிகளின் அலை ஒன்று எல்லைக் காவல் படையின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்த சம்பவத்தை நினைவுபடுத்து கிறது. எனினும் குடியேற்றப் பிரச்சினையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகளை கலாய்ஸ் சம்பவம் முன்னிறுத்துகிறது. ஆப்பிரிக்காவி லிருந்து ஐரோப்பாவுக்குள் அகதிகளின் பிரவேசம் ஐரோப்பா கண்டத்துக்குள் பிரிவை ஏற்படுத்துவதுடன், அக்கண்டத்தை மாற்றியமைக்கவும் கூடியது. அமெரிக்கா சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளையெல்லாம்விட பெரிய பிரச்சினை இது.

முதல் வேறுபாடு இதுதான். ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவது மட்டுமே அகதிகளின் விருப்பம் அல்ல. அவர்களது முக்கியத் தேர்வு பிரிட்டன்தான். ஏனெனில், பிரிட்டன் பொருளாதாரரீதியாக வலிமையான நாடு. ஏனெனில், அகதிகள் ஆங்கிலம் பேசுபவர்கள். ஏனெனில், பிரிட்டனில் தேசிய அடையாள அட்டை கிடையாது. அல்லது வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

குடியேறி ஒருவர் மேலும் மேலும் உள்ளே செல்ல விரும்புவது இயல்பான ஒன்றுதான். (மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகள் எல்லோரும் எல் பஸோவிலோ அல்லது டஸ்கனிலோ நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை.) ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உள் எல்லைக்குள் எளிதாகச் சென்றுவர அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ்விஷயம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடியேற்றக் கொள்கைகளைவிடவும் தங்கள் இறையாண்மையை முக்கியமாகக் கருதும் நாடுகளைக் கொண்டது ஐரோப்பா.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தப் பதற்றம் சற்றுக் குறைவுதான். அமெரிக்காவில் ‘அடைக்கலம் தரும் நகரங்கள்’ தொடர்பான விவாதங்களை அல்லது குடியேற்ற அமலாக்கம் தொடர்பாக மாகாண அரசுகளுக்கும் பெடரல் அரசுக்கும் இடையிலான மோதல்களைப் பாருங்கள். எனினும், குடியேற்றக் கொள்கை என்பது தேசிய அளவில் ஒரே மாதிரியானதுதான். குடியேறிகளின் அடையாள அட்டைகளைச் சோதனை செய்வதற்காக என்று மிச்சிகன் மாகாணம் தன்னுடைய எல்லைகளை மூடிவிடப்போவதில்லை. குடியேற்றப் பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயத்தில் மேய்ன் மாகாணம் உடைந்து விடப்போவதில்லை.

கூடுதல் பிரச்சினை

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா வேண்டாமா எனும் கருத்து வாக்கெடுப்புக்கு (‘பிரெக்ஸிட்’) வாய்ப்பிருக்கும் பிரிட்டனிடம் ஏற்கெனவே குடியேற்ற இறையாண்மை குறித்த ஆவல் இருக்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டை மீண்டும் அமல்படுத்தும் பரிசோதனையில் இறங்கியிருக்கும் டென்மார்க்குக்கும் இந்த விருப்பம் இருக்கிறது. பிரான்ஸில் தேசிய முன்னணிக் கட்சியின் எழுச்சிக்குப் பின்னால் இந்த நோக்கம் இருக்கிறது. ஐரோப்பாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிக்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டுடன் இப்பிரச்சினையும் கூடுதலாகச் சேர்ந்திருக்கிறது.

ஏழ்மையான தென் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏராளமான அகதிகள் குடியேறி வரும் நிலையில், புதிதாக வரும் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் இத்தாலி அல்லது ஸ்பெயினில் நிறுத்திவைக்கவே வட ஐரோப்பாவின் பணக்கார நாடுகள் விரும்புகின்றன.

அத்துடன் குடியேற்றப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கும் மற்றொரு வேறுபாட்டைப் பார்க்கும் போது, இந்தப் பிரச்சினையின் அழுத்தம் ஐரோப்பாவைப் பொறுத்தவரை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, அடுத்த 50 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்படப்போகும் குடியேற்றங்களின் அளவை எடுத்துக்கொள்ளலாம்.

அபரிமிதமாக அதிகரிக்கவிருக்கும் ஆப்பிரிக்க மக்கள்தொகையையும், ஐரோப்பாவின் மக்கள்தொகையில் ஏற்படப்போகும் சரிவையும் பொறுத்து இந்த அளவு அமையும். தென்அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நிகழ்ந்த குடியேற்றங்கள் அமெரிக்க அரசியலில் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 300 மில்லியனுக்கும் சற்றே அதிகமான மக்கள் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் 600 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். வரப்போகும் சில தலைமுறைகளில் இந்த விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.

ஆனால், இதைப் பாருங்கள்: இன்று சுமார் 738 மில்லியன் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள் (அவர்களில் 500 மில்லியன் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள்). ஆப்பிரிக்காவிலோ சுமார் 1.2 பில்லியன் பேர் இருக்கிறார்கள். ஐ.நா-வின் தற்போதைய மதிப்பீட்டின்படி 2050-ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 707 மில்லியனாகக் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சமயத்தில், ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை 2.4 பில்லியனாக இருக்கும். 2100-ல் 4.4 பில்லியன் ஆப்பிரிக்கர்கள் இருப்பார்கள். அதாவது, உலக அளவில் ஒவ்வொரு ஐந்து பேரில் இருவர் ஆப்பிரிக்கர்களாக இருப்பார்கள். அந்தச் சமயத்தில் ஐரோப்பாவின் மக்கள்தொகை வெறும் 646 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் ஊடுருவல்

சமீபத்தில் ‘பொலிட்டிகோ’ இதழில் நோவா மில்மேன் குறிப்பிட்டிருப்பதைப் போல், இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள் வளம் பெற்றாலும் வீழ்ச்சியடைந் தாலும் ஐரோப்பாவை நோக்கிய ஆப்பிரிக்க மக்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது. அம்மக்களின் பரிதவிப்பு அதைத் தூண்டிவிடலாம். ஆனால், ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் உலக மயமாக்கல் தொடர்பாக உருவான தவறான பார்வைக்கும் இதில் தொடர்புண்டு. (ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து துணிச்சலாக மத்தியத் தரைக்கடல் வழியாக வருபவர்களில் பலர் அகதிகள் மட்டும் அல்ல என்று தோன்றுகிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்த நன்கு படித்த, லட்சியம் கொண்ட குடிமக்களும் இவர்களில் அடக்கம்.)

1970-ல் இருந்து மெக்சிக்கர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததைப் போன்ற அதே விகிதத்தில் ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பாவில் குடிபெயர்வார்கள் எனில், 2050-ம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் கால் பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் என்று மில்மேன் குறிப்பிடுகிறார். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை. பிறப்பு விகிதம் தொடர்பான கணிப்புகள் மாறலாம். குடியேற்றத்தின் வழிமுறைகள் மாற்றமடையலாம். குடியேறிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவரலாம்.

எனினும், குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு விஷயம் நடக்கப்போகிறது. ஏதோ ஒரு வகையில் ‘யூராப்ரிக்கன்’ எதிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. கலாய்ஸில் சில ஆயிரம் அகதிகள் குவிந்த விஷயத்தில் ஐரோப்பாவின் குழப்பமான எதிர்வினையை வைத்துப் பார்க்கும்போது, இவ்விஷயத்தை எதிர்கொள்ள அந்த கண்டம் முற்றிலும் தயார் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

http://tamil.thehindu.com/opinion/columns/ஐரோப்பாவுக்குப்-படையெடுக்கும்-ஆப்பிரிக்கா/article7610796.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

லட்சக்கணக்கில் புகலிடம் தேடி வரும் அகதிகள்: பிரிட்டன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிடிவாதம்

 
  • சிரியா நாட்டு அகதிகள். மேசிடோனியாவில் உள்ள ஜெவ்ஜீலிஜாவிலிருந்து செர்பிய எல்லை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். | படம்: ஏ.எஃப்.பி.
    சிரியா நாட்டு அகதிகள். மேசிடோனியாவில் உள்ள ஜெவ்ஜீலிஜாவிலிருந்து செர்பிய எல்லை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். | படம்: ஏ.எஃப்.பி.
  • ஹங்கேரி, புதாபெஸ்ட்டில் ரயில் நிலையத்துக்கு வெளியே கோஷம் எழுப்பும் அகதிகள். | படம்: ஏ.பி.
    ஹங்கேரி, புதாபெஸ்ட்டில் ரயில் நிலையத்துக்கு வெளியே கோஷம் எழுப்பும் அகதிகள். | படம்: ஏ.பி.

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின் உடலும், அதை கையிலேந்திச் சென்ற போலீஸும் அடங்கிய புகைப்படம், இணைய உலக மக்களின் கண்ணீருக்கு காரணமாகியிருக்கிறது.

வாழ்க்கைப் பயணத்தை ஏதேனும் ஒரு நாட்டில் தொடர சிரியாவிலிருந்து கடல் வழியாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று கிரீஸ் தீவு அருகே கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர், இது பற்றிய சமூக வலைத்தள புகைப்படங்கள் உலக அளவில் மனிதர்களை மனம் கனக்கச் செய்துள்ளது.

இதனையடுத்து #refugeeswelcome என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஐரோப்பாவுக்கு புலம் பெயர்வோர் எண்ணிக்கை 2-ம் உலகப் போர் காலக்கட்டத்துக்குப் பிறகு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 3 வயது குழந்தையின் உடல் ஒன்று குப்புற படுத்த நிலையில் துருக்கி கடற்கடையில் ஒதுங்கியதன் புகைப்படம் காரணமாக அகதிகளை ஏற்காத ஐரோப்பிய அரசுகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல், பசி, வறுமை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளின் கதவுகளை உரக்கத் தட்டி வருகின்றனர், ஆனால் அரசுகளோ அபாயகரமான எல்லை வேலிகளை அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அன்று ஆஸ்திரிய-ஹங்கேரி எல்லைப் பகுதியில் 70க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்களுடன் லாரி ஒன்றைக் கண்டுபிடித்தனர். இவர்கள் அகதிகளே என்று தற்போது தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி சீரழிகின்றனர். பலர் அபாயகரமான கடல் மார்க்கமாக போதிய பாதுகாப்பின்றி பயணித்து ஐரோப்பாவுக்குள் நுழைய முற்படும் முயற்சியில் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.

இத்தனை குழப்பங்களுக்கும், மனிதார்த்த நெருக்கடிகளுக்கும் நடுவே பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அகதிகளை ஏற்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து மனமிரங்கவில்லை. 110,000 கையெழுத்துகளுடன் தற்போது புகலிடம் தேடி வருவோரை அரவணைக்க அவருக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் திங்களன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரிய அளவில் தலைதூக்கும் என்று தெரிகிறது.

தற்போது மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற தாய், சகோதரன் மற்றும் 3 வயது குழந்தை கடலில் மரணமடைந்த விவகாரம் அவர் மனதை மாற்றும் என்று பலரும் நம்பினர், ஆனால் இதுவரை அவர் வாயைத் திறக்கவில்லை. அவர் சமீபத்தில்தான் தெரிவித்திருந்தார், “அதிக அளவில் அகதிகளை வரவேற்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குக் தீர்வு காண முடியாது, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை உருவாக்குவதன் மூலமே இதற்குத் தீர்வு” என்று கூறினார்.

ஜெர்மனியும் ஐரோப்பிய யூனியனும் மற்ற உறுப்பு நாடுகளை புலம் பெயர்வோரை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரிட்டனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் உறுதியாக மறுத்து விட்டன. ஹங்கேரியின் வலது சாரி பிரதமர் விக்டர் ஆர்பான், யாரும் ஹங்கேரிக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவிப்பே வெளியிட்டு விட்டார். ஹங்கேரி, பல்கேரியா போன்ற நாடுகள் எல்லையில் அபாயகரமான வேலிகளை அமைத்துள்ளது.

இவ்வாறாக அகதிகள் நெருக்கடி கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையே கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்க வைத்து விட்டது. ஜெர்மனி அதிபர் அஞ்சேலா மெர்கெல் அகதிகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதை கிழக்கு ஐரோப்பிய நாடான செக். குடியரசின் மூத்த தலைவர் ஒருவர் “புதிய பாசிசத்தை உருவாக்குகிறார்” என்று மெர்கெலை சாடியுள்ளார். இதனையடுத்து ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, செக்.குடியரசு, ஆகிய நாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து ஜெர்மனியின் கோரிக்கைக்கு பதிலடி தரப்போவதாக முடிவு செய்துள்ளன. ஆனால் ஐரோப்பிய யூனியனோ, அகதிகள் வரவை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் இந்நாடுகளுக்கு அளித்து வரும் மானியத்தை நிறுத்தும் சாத்தியமும் உள்ளது.

ஜெர்மனி இந்த ஆண்டு 8 லட்சம் புகலிட கோரிக்கையை புரோசஸ் செய்யவுள்ளது. ஜூலை மாதம் மட்டும் ஐரோப்பிய யூனியன் எல்லைகளை 107,500 அகதிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் கத்தோலிக்க திருக்கோயிலின் தலைமை மதகுருவான கார்டினல் வின்செண்ட் நிகல்ஸ், பிரிட்டனின் நிலைப்பாடு, “இழிவானது” என்றும், அவமானகரமானது என்றும் “நாம் மனிதர்களை சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கடற்கரைகளில் பிணங்கள் ஒதுங்குகின்றன, சேர்ந்திருக்கும் போது ஐரோப்பா ஒரு செல்வச் செழிப்பான பகுதி” என்றார்.

http://tamil.thehindu.com/world/லட்சக்கணக்கில்-புகலிடம்-தேடி-வரும்-அகதிகள்-பிரிட்டன்-கிழக்கு-ஐரோப்பிய-நாடுகளின்-பிடிவாதம்/article7612262.ece

  • தொடங்கியவர்

இந்தக் குழந்தைக்கு உலகில் இடமில்லாமல் போனதே!

 
 
 
ட்விட்டரில் பகிரப்பட்ட படங்கள்.
ட்விட்டரில் பகிரப்பட்ட படங்கள்.

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின் உடலும், அதை கையிலேந்திச் சென்ற போலீஸும் அடங்கிய புகைப்படம், இணைய உலக மக்களின் கண்ணீருக்கு காரணமாகியிருக்கிறது.

வாழ்க்கைப் பயணத்தை ஏதேனும் ஒரு நாட்டில் தொடர சிரியாவிலிருந்து கடல் வழியாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று கிரீஸ் தீவு அருகே கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர்.

அந்த 5 குழந்தைகளில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவனின் உடலை ஐரோப்பிய கடற்படை போலீஸார் மீட்டனர். அப்போது அங்கிருந்த மனித உரிமை கண்காணிப்புக் குழு அதிகாரி அந்தச் சிறுவனின் உடலை படம் எடுத்தார். படத்தை எடுத்தது தனது பணியின் ஒரு பகுதிதான் என்றாலும், அந்தப் படம் அவரது மனதை கணக்கச் செய்தது. இந்தப் படத்தை ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகே அந்த அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஐரோப்பிய எல்லையையும் தாண்டி, மக்களின் மனதை கசியச் செய்த 2-ம் உலகப் போரில் பெரிய அளவில் மனித உயிர்கள் இழக்கநேர்ந்த அதே உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும் என அந்த அதிகாரி நினைத்தார்.

மிகவும் பிரபலமான துருக்கி கடற்கரையின் மண்ணில் முகத்தை புதைத்த அந்த இறந்த குழந்தையின் படம், இந்த உலகில் அந்த குழந்தைக்கு இடமில்லாமல் போனது என்பதை குறிப்பிடவே நினைத்தார் அவர்.

தற்போது இந்தப் புகைப்படம் வாழ்வற்றுப்போனதின் அடையாளமாக சர்வதேச அளவில் பகிரப்பட்டு #Syrianlivesmatter என்ற ட்ரெண்டிங்கில் நிற்கிறது. பல நாட்டு பத்திரிகைகளும் இந்தப் படத்தை தங்களது அட்டைப் படமாக வைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திற்கு பாதுகாவலன் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா இந்த விடயத்தில் மட்டும் மௌனம் சாதிப்பார்.


உலக வரலாறே திரும்புமளவிற்கு அகதிகள் படையெடுப்பு நகர்கின்றது...கிரேக்க அரசின் கொள்கை தடுமாற்றத்தின் பின்னர் நிலமை உச்சக்கட்டம் அடைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில இருக்கிற பிரச்னை என்ன வெனில், ஒரு தொகுதியினை அகதிகளாக ஏற்றுக் கொண்டால், உலகமே வெளிக்கிட்டு வந்து நிக்கும்.

நாம் சரியான கராணத்துக்காக, பிழையான வேலையினைசெய்யக் கூடாது என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத பிரித்தானிய அமைச்சர். 

இந்த புடபெஸ்ட் அகதி கூட்டத்தில். பாகிஸ்தான், பங்களாதேஷ் காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே அகதிகளா அல்லது, இஸ்லாமிய அரசு இயக்கத்தில் சேர வந்து, அல்லது சேர்ந்த பின், இங்கே வருகிறார்களா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

அடுத்த விடயம் என்னவெனில், அனைவருமே துருக்கியின், ஐ. நா முகாம்களில் இருந்து கிளம்பி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை இல்லையே என்பது தான் வாதம்.

மேலும் அவர்கள் பெரும் பணம் கொடுத்தே வருகிறனர்.அப்படியானால் அவர்கள் அகதிகளா என்று கேள்வி வருகிறது. உயிருக்கு பயம், அடைக்கலம் என்பது வேறு, ஜெர்மனி தான் போக வேண்டும் என்று அடம் பிடிப்பது வேறு என்கிறார்கள் இன்னுமொரு சாரார்.

முன்னால் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர், டேவிட் மிலிபண்ட், இது குறித்து சொல்லும் போது, நாம் கட்டாயமாக உதவ வேண்டும், அதேவேளை அகதிகள் யார் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். வட ஆபிரிக்காவில் இருந்து வரும் நைஜீரியர்கள், கானா போன்ற நாட்டவர்கள் அகதிகாளாக இருக்க முடியாது,  அவர்கள் பொருளாதார குடியேறிகள் என்கிறார் அவர்.

அனேகமாக, ஐரொபிய ஒன்றியத்தினுள் இணைய விரும்பும் துருக்கி மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியேறுவது தடுக்கப்படலாம். 

அதற்காக பணம் கொடுக்கப்படலாம். அகதிகள், ஹங்கேரி நாட்டில் முகாமில் வைக்கப் பட நடவடிக்கை மேற்கு நாடுகள் எடுக்கும். தத்தமது நாட்டு பெயரில் முகாம்களை அங்கேய திறந்து, அதற்கான பணத்தினை செலவிடலாம். இதே போல் துருக்கியிலும் நடக்கலாம்.

அதே போல், சிரிய பஷீர் அரசின் மீதும், IS அமைப்பின் மீதும் மேற்கு நாடுகள் தாக்குதல் நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வந்து, அகதிகளை திரும்பி போக வைக்கலாம் என்ற எண்ணமும் உள்ளது.

அகதிகளுக்கு உதவுவது வேறு. அகதிகள் என்ற பெயரில் உள்ளே வரும் பயங்கரவாத ஓனான்களை தூக்கி சட்டைப் பையில் போடுவது வேறு என்பதே இன்றுள்ள பிரச்னை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்ட........... கொசொவோ,சேர்பியா,சிக்கோயினார் என்று பலரும் படையெடுத்து ஜேர்மனியை மட்டும் நோக்கி வருகின்றனர்.
இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் செக் குடியரசு தாங்கள் முஸ்லீம் அகதிகளை எவ்விதத்திலும் பொறுப்பேற்க மாட்டோம் என பகிரங்கமாகவே கூறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த சிரியாவில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்தான் அகதிகள் பாவம் எனவும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா  குழந்தையின் மரணம், உலகத்தை உலுக்கியது என்றால்....
என் நாட்டில், சிங்கள ராணுவம் ஒரு   கர்ப்பிணித் தாயை கொன்ற பின், தாய் இறந்து விட்டாள். 
அந்த வயிற்றில், இருந்த சிசு துடித்துக் கொண்டு இறந்த காணொளியையும் பார்த்தேன். 
அது.... இந்த உலகத்தை உலுக்க வில்லையா?
தமிழன் என்றால்.... சோத்து மாடுகள் என்று, உலகம் நினைத்து விட்டதா?

சிரியா  குழந்தையின் மரணம், உலகத்தை உலுக்கியது என்றால்....
என் நாட்டில், சிங்கள ராணுவம் ஒரு   கர்ப்பிணித் தாயை கொன்ற பின், தாய் இறந்து விட்டாள். 
அந்த வயிற்றில், இருந்த சிசு துடித்துக் கொண்டு இறந்த காணொளியையும் பார்த்தேன். 
அது.... இந்த உலகத்தை உலுக்க வில்லையா?
தமிழன் என்றால்.... சோத்து மாடுகள் என்று, உலகம் நினைத்து விட்டதா?

இங்கு விடயங்கள் சொல்லப்படும் விதம்  முக்கியமானது உலக அரசியல் போக்குகளை அறிந்த நிருபரால் மிக நேர்தியாக எடுக்கபட்ட படம் வேறு கோணம்களில் எடுக்கபட்டால் இவ்வளவு காட்டம் இருந்திருக்காது ஆனாலும் இது எல்லாம் செட்அப்  என்று சொல்லும் கூட்டங்களும் உண்டு . நாங்கள் நஞ்சு என எழதிய போத்தலை வாயில் கவுட்டால் தான் எங்களுக்கு கதை விளங்கும் நல்லகாலம்  எங்களின் அடுத்த தலைமுறை பிள்ளைகள் சர்வதேச  அரசியல் ஊடக அரசியல் என பல்வேறு துறைகளில் வளர்து வருவது உங்களின் ஆதங்கத்தை தீர்க்கும் என் நம்பலாம் இதை உணர்தே தலவரும் அன்றே சொல்லிவிட்டு போய் விட்டார்  விரைவில் அந்த  காலம்கள் வரும் மீண்டும் தலை நிமிர்வோம் .

  • தொடங்கியவர்

சிரியா நாட்டு அகதிகளுக்கு அர்ஜென்டினா அழைப்பு

 
சுமார் 40 லட்சம் சிரிய நாட்டவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைவதற்காக காத்திருக்கின்றனர்.| கோப்புப் படம்: ஏபி.
சுமார் 40 லட்சம் சிரிய நாட்டவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைவதற்காக காத்திருக்கின்றனர்.| கோப்புப் படம்: ஏபி.

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

இதனிடையே இதுவரை 100க்கும் குறைவானோரையே அகதிகளாக தென் அமெரிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர் அனிபெல் ஃபெர்னாண்டர்ஸ் கூறும்போது, "கடந்த ஆண்டு முதல் சிரிய நாட்டு அகதிகள் இங்கு வருவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டது. சிரியர்களை நாங்கள் எங்கள் நாட்டு கலாசாரத்தின்படி வரவேற்போம்" என்றார். ஆனால் இதுவரை அவர்களது நாட்டில் குடிபுகுந்த சிரிய அகதிகளின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.

இதனிடையே மொத்த தென் அமெரிக்க நாடுகளிலும் 100-க்கும் குறைவான சிரிய நாட்டு அகதிகளே முறையாக அனுமதிக்கப்பட்டதாக அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டு சிறுவன் ஆய்லான் இறந்த புகைப்படக் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கி நிலையில் சில நாடுகள் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அகதிகள் குடியேற்றத்தை தவிர்த்து வந்த இங்கிலாந்தும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. “நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து மக்களின் துயரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு நான் இன்று அறிவிக்கிறேன், ஆயிரக்கணக்கான சிரியா நாட்டு அகதிகளை வரவேற்க முடிவெடுத்துள்ளோம்.

இன்னும் அதிகமாகக் கூட நாங்கள் செய்வோம். ஏற்கெனவே உள்ள திட்டங்களின் படி ஆயிரம் அகதிகளை முதற்கட்டமாக வரவேற்கிறோம்” என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

http://tamil.thehindu.com/world/சிரியா-நாட்டு-அகதிகளுக்கு-அர்ஜென்டினா-அழைப்பு/article7619125.ece

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஷிர் அல்-அசாத்துக்கு இனித்தான் அடியெண்டால் என்னெண்டு தெரியப்போகுது...இவங்களும் ஏதோ பிளானோடைதான் எல்லாரையும் உள்ளுக்கு எடுக்கிறாங்கள்.:grin:

syrias_president_bashar_1427451443.jpg

புட்டின் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

Wladimir Putin zündelt weiterhin ungehemmt in der Ukraine

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பஷார் அல் ஆசாத் ரஷ்ய ஆதரவாளர் என்பதுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம். குறிப்பாக இந்த அகதிகளை உருவாக்கி வைப்பது மேற்குலகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருசத்துக்கு முன்னம்,அமெரிக்காவோட சேந்து சாத்துவம், அனுமதியுங்கோ  எண்டு டேவிட் கமேரோன் பார்லிமேண்டைக் கேட்டவர். 

அவை வேணாம் எண்டு போட்டினம்.

இப்ப அகதியள் வந்தோன, அட, அடிச்சு விசயத்தை அப்பவே முடிசிருக்கலமே எண்டு வேணாம் என்டவயல் நெளியினம்.

இப்ப கமரோன், மட்டும் இல்லை. எல்லா ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து மொத்தப் போறான்கள். 

பசீரும், ஐ எஸ் எல்லாருக்கும், கோத்தா ஸ்டைல் அடி தான்.

வெள்ளம் வீட்டுக்குள்ள வந்தோன்ன, ஓடி முழிக்கினம். வேற யாரும் எண்டால் பரவாயில்லை. முஸ்லிம்கள் எண்டது தான் பயம் அவயளுக்கு.

பெனிபிட்டையும்  வாங்க்கிக் கொண்டு, பிள்ளையளையும் பெத்து, குண்டுகளையும் போடுவினமோ எண்ட பயம் தான். அகதியா குவைத்தில இருந்து வந்த ஆள் தான், ஜிஹாதி ஜான், அங்க, சிரியாவில நிண்டு கழுத்த வெட்டிக் கொண்டு திரியுது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

ஐரோப்பாவின் சிரியா அகதிகள் நெருக்கடிக்கான 7 காரணங்கள்

 
சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகள் பற்றி ஐரோப்பா கவலை. | படம்: ராய்ட்டர்ஸ்.
சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகள் பற்றி ஐரோப்பா கவலை. | படம்: ராய்ட்டர்ஸ்.

சிரியாவில் 4 ஆண்டுகளாக போர்ச்சூழல் நிலவுகிறது. ஆனால் 2015-ல் தான் ஐரோப்பா தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் பற்றி விழிப்படைந்துள்ளது.

ஆகவே, இப்போது ஐரோப்பா விழித்துக் கொண்டது ஏன்? என்பதற்கான நிச்சயமான விளக்கங்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால் புலம் பெயர்ந்த சிரியா அகதிகளிடம் உரையாடியது மற்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கலப்பான காரணங்களை முன்வைக்கிறது.

முதல் காரணம்: போர் என்பது முடிவடையும் வழியாகத் தெரியவில்லை. இதனால் சிரியா நாட்டுக்காரர்கள் வாழ்க்கையை தேடி புலம் பெயர நேரிட்டதோடு, துருக்கியில் உள்ள சிரியா நாட்டுக்காரர்கள் தங்கள் சொந்த நாடு திரும்பும் நம்பிக்கையை கைவிட்டு விட்டனர்.

2-வதாக, துருக்கியில் நீண்ட காலம் தங்கிவிட முடியாத நிலை உள்ளது. துருக்கி அகதிகளை வரவேற்பதில் பெரிய அளவுக்கு பெருந்தன்மை காட்டினாலும், 20 லட்சம் சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டாலும், சிரியா நாட்டு மக்கள் அங்கு சட்ட ரீதியாக பணியில் சேரும் உரிமையற்றவர்கள். எனவே அங்கு அவர்கள் நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது.

மேலும், ஏகேபி கட்சிக்கு சமீபத்திய தேர்தல்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, சிரியா அகதிகளுக்கு அவர்கள் சார்பாக இருந்ததே என்பதால் துருக்கியின் எதிர்கால அரசியல் பற்றி அங்குள்ள சிரியா நாட்டு அகதிகளுக்கு பதட்டத்தையே ஏற்படுத்துகிறது.

3-வது காரணம், ஜோர்டான், துருக்கி, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகள் சார்பாக பணிவிடையாற்றும் ஐ.நா. அமைப்புகள் தங்களிடம் பணம் குறைந்து வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். இதனால் முகாம்களில் வாழ்க்கை நரகமாகி வருகிறது. இன்னும் சிரியா அகதிகள் ஐ.நா. மனிதார்த்த உதவிகளின் மூலமே ஓரளவுக்கு வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். பணம் எப்போதுமே போதாமையாகவே வந்து சேர்கிறது. பணக்கார நாடுகள் செய்யும் உதவி கூட தேவைக்கு 40% குறைவாகவே உள்ளது.

இந்த புள்ளிவிவரம் சிரியா பகுதிக்கு மட்டுமானதே. கிழக்கு ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சமடைந்துள்ள வேளையில் நிதிநிலைகள் இன்னும் கூட மோசமாகவே உள்ளது. யு.என்.எச்.சி.ஆர். 14 மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை கேட்டாலும், இலக்கை 9 சதவீதமே எட்ட முடிந்தது.

4வதாக, மக்கள் போதுமான பணத்தை சேமித்துள்ளனர். கிரீஸைக் கடந்து ஐரோப்பாவுக்குள் செல்வது என்பது செலவு பிடிக்கும் ஒரு திட்டம். எவ்வளவு கடத்தல் காரர்களை ஒரு குடும்பம் நம்பியிருக்கிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தனிநபருக்கும் ஜெர்மனியில் தஞ்சமடைய 3,000 டாலர்கள் செலவாகிறது.

5-வதாக இப்போது தெரிந்த வழி கிடைத்துவிட்டது. மக்கள் பால்கனிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவது வழக்கம், ஆனால் சிரியா நாட்டு அகதிகள் அந்த வழியை பயன்படுத்துவதில்லை. அவர்கள் இதனை மாற்றிவிட்டனர்.

6-வதாக இது ஏன் நெருக்கடி என்றால், ஐரோப்பா அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தினால் நெருக்கடியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அகதிகள் வரத்து குறித்து ஆரோக்கியமான எந்த முடிவையும் எடுக்காமல் விவாதித்து, ஒத்திப் போட்டு வந்துள்ளனர்.

கடைசியாக, எவ்வளவு பேர் ஐரோப்பாவுக்குள் வருகின்றனர் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர் ஐரோப்பிய அரசுகள். இந்த எண்ணிக்கை சிரியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை என்பதுதான் நிதர்சனம்.

(கார்டியன் நியூஸ்பேப்பர் லிட்., 2015)

http://tamil.thehindu.com/world/ஐரோப்பாவின்-சிரியா-அகதிகள்-நெருக்கடிக்கான-7-காரணங்கள்/article7621999.ece

  • தொடங்கியவர்

அகதிகளுக்காக ரூ.74,336 கோடி சுமையை ஏற்கிறது ஜெர்மனி

 
ஜெர்மனின் பிராங்க்பர்ட் ரயில் நிலையத்தில் நேற்று வந்திறங்கிய சிரியா குழந்தைகளுக்கு தன்னார்வ ஆர்வலர்கள் பொம்மைகளை பரிசாக வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தைகள். படம்: ராய்ட்டர்ஸ்
ஜெர்மனின் பிராங்க்பர்ட் ரயில் நிலையத்தில் நேற்று வந்திறங்கிய சிரியா குழந்தைகளுக்கு தன்னார்வ ஆர்வலர்கள் பொம்மைகளை பரிசாக வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தைகள். படம்: ராய்ட்டர்ஸ்

ஜெர்மனியில் குவிந்து வரும் அகதிகளைப் பராமரிக்க அந்த நாட்டு அரசுக்கு நடப்பாண்டில் ரூ.74,336 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதிகளுக்காக ஜெர்மனி அரசு ரூ.17,844 கோடியை செலவிட்டுள்ளது.

சிரியா, இராக், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். கடல் மார்க்கமாக கிரீஸ், துருக்கி, இத்தாலி நாடுகளில் கரையேறும் அவர்கள் அங்கிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகி வருகின்றனர்.

இப்போதைய நிலையில் ஜெர்மனி மட்டுமே அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இருந்து மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியை சென்றடைகின்றனர்.

இதில் மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அகதிகள் விவகாரத்தில் கடும் கெடுபிடியை கடைப்பிடித்து வருகின்றன. இந்த நாடுகள் தங்கள் எல்லைகளில் அபாயகரமான வேலியை அமைத்து அகதிகளை விரட்டுகின்றன. ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியபோது, முஸ்லிம்களை அனுமதித்தால் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ கலாச்சாரம் அழிந்துவிடும் என்று பகிரங்கமாக வெறுப்புணர்வை கொட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில் சிரியாவைச் சேர்ந்த அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில் கரைஒதுங்கிய புகைப்படம் உலகை புரட்டிப் போட்டது. இதனால் அகதிகள் விவகாரத்தில் பிடிவாதமாக இருந்த ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், சொந்த நாட்டு மக்களின் நெருக்கடியால் தங்களது எல்லைகளை திறந்துவிட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து பல நாட்களாக ஹங்கேரியில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான அகதிகள் நேற்று முன்தினம் பாதுகாப்பாக ஆஸ்திரியா நாட்டின் எல்லையான நிக்கல்டோர்ப் நகருக்கு சென்றடைந்தனர். அங்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் அகதிகளுக்கு உணவுப் பண்டங்கள், உடைகள், காலணிகள் வழங்கப்பட்டன.

ஆஸ்திரியா அரசு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க முன்வந்தாலும் வெகுசிலரே அந்த நாட்டில் தங்கியுள்ளனர். பெரும்பான்மை அகதிகள் அங்கிருந்து ஜெர்மனி சென்றுள்ளனர். நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஜெர்மனியின் முனிச், பிராங்க்பர்ட் நகரங்களை சென்ற டைகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் ஜெர்மனி அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஜெர்மனிக்கு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் ஜெர்மனி அரசுக்கு ரூ.74,336 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 3 ஆயிரம் அகதிகளை ஜெர்மனி ஏற்றுக் கொண்டது. இதனால் அந்த நாட்டு அரசுக்கு ரூ.17844 கோடி செலவானது.

ஜெர்மனி மக்களில் 88 சதவீதம் பேர், அகதிகளுக்காக உணவுப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தாராளமாக தானம் வழங்கி வருகின்றனர். 67 சதவீத மக்கள் மொழி புரியாமல் தவிக்கும் அகதிகளுக்கு வழிகாட்டியாக உதவி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவும் ஆதரவு கரம்

இதனிடையே ஆஸ்திரேலியாவும் அகதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வந்துள்ளது. அந்த நாட்டு பிரதமர் டோனி அபோட் கூறியபோது, 3 வயது சிறுவன் அய்லானின் புகைப்படம் எனது மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் 13,750 அகதிகளுக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கிறது. இந்த ஆண்டு சிரியா மக்களுக்காக கூடுதலாக அகதிகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளோம், இதில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/அகதிகளுக்காக-ரூ74336-கோடி-சுமையை-ஏற்கிறது-ஜெர்மனி/article7624589.ece

  • தொடங்கியவர்

24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு

 
 
கிரீஸ் எல்லையில் இருந்து மாசிடோனியாவின் கெவ்ஜிலிஜா நகருக்குள் நுழைய நூற்றுக்கணக்கான அகதிகள் காத்திருக்கின்றனர். அவர்களில் ஒரு சிறுமி கம்பி வேலிக்குள் புகுந்து எல்லையை தாண்டுகிறார். படம்: ஏஎப்பி
கிரீஸ் எல்லையில் இருந்து மாசிடோனியாவின் கெவ்ஜிலிஜா நகருக்குள் நுழைய நூற்றுக்கணக்கான அகதிகள் காத்திருக்கின்றனர். அவர்களில் ஒரு சிறுமி கம்பி வேலிக்குள் புகுந்து எல்லையை தாண்டுகிறார். படம்: ஏஎப்பி

‘‘சிரியா அகதிகள் பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஐரோப்பிய யூனியன் திட்டத்தின்படி 24 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொள்வோம்’’ என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஹோலந்த் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதி களின் தாக்குதலுக்குப் பயந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப் பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். சட்டவிரோதமாக பல நாடுகளுக்குள் நுழை வதற்காக கடல் வழி பயணம் மேற் கொள்கின்றனர். அப்படி கடலில் செல்லும்போது, படகுகள் கவிழ்ந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அயலான் என்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந் தான். அவனது சடலம் துருக்கி கடற்கரையோரம் ஒதுங்கியது.

அந்தப் புகைப்படம் உலகையே உலுக்கியது. இதையடுத்து பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிரியாவில் இருந்து வருபவர்களை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் ஹோலந்த் கூறுகையில், ‘‘அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஐரோப்பிய யூனியன் திட்டத்தின்படி 24 ஆயிரம் பேரை பிரான்ஸ் ஏற்றுக் கொள்ளும். மேலும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் தொடங்கும். சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தவும் திட்ட மிட்டுள்ளோம்’’ என்று நேற்று அறிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ‘‘சிரியாவில் இருந்து வரும் அகதிகள் பிரச்சினையை சமாளிக்க திட்டம் வகுத்து வருகிறோம்’’ என்று கூறியிருந்தார். இவரது அறிவிப்பை தொடர்ந்து ஹோலந்த் இந்த தகவலை வெளி யிட்டுள்ளார்.

ஹோலந்த் மேலும் கூறுகை யில், ‘‘நானும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் சிரியா அகதி கள் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி னோம். சிரியாவில் இருந்து வரும் அகதிகளை ஐரோப்பிய யூனி யனை சேர்ந்த நாடுகள் சேர்த்து கொள்ள நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று கூறுகை யில், ‘‘சிரியாவில் இருந்து வந்து கொண்டிருக்கும் அகதிகளுக்கு பல நாடுகளிலும் தஞ்சம் அளிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. 10 ஆயிரம் அகதிகளை ஜெர்மனி சேர்த்துக் கொள்ளும்’’ என்றார்.

தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பல நாடுகளின் எல்லையில் உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டு வரு கின்றனர். அவர்களை சட்டப்பூர்வ மாக சேர்த்துக் கொள்ளும் அறிவிப்பை ஐரோப்பிய நாடுகள் நாளை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சிரியா அகதி களை பங்கிட்டு கொள்ளும் திட் டத்தை ஹங்கேரி பிரதமர் விக்டர் நிராகரித்துவிட்டார்.

http://tamil.thehindu.com/world/24000-அகதிகளை-ஏற்க-பிரான்ஸ்-முடிவு/article7628204.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்
குடியேறிகளுக்காக ஜேர்மனி 600 கோடி டொலர் திட்டம்
2015-09-08 11:38:26

ஜேர்­ம­னிக்கு செல்லும் அதி­க­ள­வி­லான குடி­யே­றி­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு அறு­நூறு கோடி அமெ­ரிக்க டொலர் மதிப்­பீட்­டி­லான செயற்­றிட்டம் ஒன்றை ஜேர்­மனி அறி­வித்­துள்­ளது.

 

119714077650.jpg

 

அகதி தஞ்சக் கோரிக்­கை­களை வேகப்­ப­டுத்­து­வது மற்றும் புதிய குடி­யே­றி­க­ளுக்­கான வீடு­களை கட்­டு­வது ஆகி­ய­வையும் இந்த திட்­டங்­க­ளுக்குள் அடங்கும்.

 

மேலும் குடி­யே­றி­க­ளுக்கு மொழிப­யிற்சி கொடுப்­பது, மேல­திக பொலி­ஸாரை கட­மையில் அமர்த்­து­வதும் உள்­ள­டங்கும்.

 

119712C09F44400000578-3224896-Austria_su

 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் குடி­வ­ரவு சட்­டங்­களை கடந்த வார இறு­தியில் தற்­கா­லி­க­மாக தளர்த்­தி­யதன் மூலம் மிகப்­பெ­ரிய மனிதப் பேர­வ­லத்தைத் தான் தடுத்­தி­ருப்­ப­தா­கவும் ஜேர்மன் அரசு தெரி­வித்­துள்­ளது.

 

இதே­வேளை ஜேர்­ம­னிய சான்­சலர் ஏஞ்­சலா மெர்க்கல் ஆபத்­தான முன்­னு­தா­ர­ணத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அவ­ரது கட்­சி­யினர் கூறி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

கடந்த வார இறு­தியில் மட்டும் சுமார் 20,000 குடி­யே­றிகள் ஜேர்­ம­னிக்குள் வந்து சேர்ந்­தி­ருப்­ப­தா­கவும், நேற்றைய தினமும் சுமார் 16,000  பேர்  வரக்­கூடும் என தெரி­விக்­கப்­பட்டது. 

 

­அக­திகள் விஷ­யத்தில், தாராள மனப்­பான்­மை­யோடு நடந்து கொள்­வ­தாக, ஜேர்­மனி மீது ஹங்­கேரி பிர­தமர், விக்டர் ஆர்பன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

 

இதே­வேளை ஆஸ்­தி­ரியப் பிர­தமர் வெர்னர் பேமேன்,  தளர்த்­தப்­பட்ட எல்லைக் கட்­டுப்­பா­டு­களை, மீட்­டுக்­கொள்ள வேண்­டிய நேரம் வந்­து­விட்­ட­தாகக் கூறி­யுள்ளார்.

 

கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டது தற்­கா­லிக நல்­லெண்ண நட­வ­டிக்கை என்றும், அது குடி­யே­றிகள் விவ­கா­ரத்­துக்­கான தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

12-,000 பேருக்கு உத­விய பின்னர் தற்­போது வழக்­க­நி­லைக்குத் திரும்ப வேண்டும். சட்­டத்­தையும் கண்­ணி­யத்­தையும் கட்­டிக்­காக்க வேண்டும் என்று ஆஸ்­தி­ரியப் பிர­தமர் கூறியுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=11971#sthash.gmzswCtb.dpuf
  • தொடங்கியவர்

12,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு

 
 
 
டோனி அபோட்
டோனி அபோட்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சிக்கல் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் சிரியா, இராக் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12,000 அகதிகளுக்கு தங்கள் நாட்டில் புகலிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதி செய்தார்.

அதேவேளையில் சிரியாவில் ஐ.எஸ். படைகள் மீது வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என ஆஸ்திரேலியா உறுதிபட தெரிவித்துள்ளது.

கான்பராவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் டோனி அபோட், "சிரியா மற்றும் இராக்கிலிருந்து புலம்பெயர்ந்த 12,000 அகதிகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் அளிக்கும்.

மேலும், சிரியாவின் அண்டை நாடுகளில் அகதிகளாக வாழும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.

மனித உயிர்களை துச்சமாக மதித்து கொலைகளை அரங்கேற்றும் ஐ.எஸ். ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். அது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துக்குமான பாதுகாப்பாக அமையும்" என்றார்.

http://tamil.thehindu.com/world/12000-அகதிகளுக்கு-புகலிடம்-அளிக்க-ஆஸ்திரேலியா-முடிவு/article7632538.ece

  • தொடங்கியவர்

அகதிகள் பிரச்சினை: ஐரோப்பிய ஆணையத் தலைவர் கவலை

 

 

 
ஐரோப்பிய ஆணயத் தலைவர் ழான் க்ளாட் யங்கர்
 

அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மனிதாபிமானம், கண்ணியம் மற்றும் நேர்மையுடன் அணுக வேண்டும் என ஐரோப்பிய மக்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மனிதாபிமானம், கண்ணியம் மற்றும் நேர்மையுடன் அணுக வேண்டும் என ஐரோப்பிய மக்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஜான் க்ளாட் யங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஐரோப்பிய ஒன்றியம் வலுவான நிலையில் இல்லை என்றாலும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் நிலவும் சூழல்கள் காரணமாக, ஐரோப்பா நம்பிக்கையின் ஒளிவிளக்காக பார்க்கப்படுகிறது என அவர் கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உருக்கமான உரையிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.

கட்டாயமாக அகதிகளைப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியம் 1,60,000 மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் எளிமையான வகையில் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு உறுப்பு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

புதிய பிரேரணை இப்போது எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்.

http://tamil.thehindu.com/bbc-tamil/அகதிகள்-பிரச்சினை-ஐரோப்பிய-ஆணையத்-தலைவர்-கவலை/article7633972.ece

  • தொடங்கியவர்

அய்லான் புகைப்படத்தைக் காட்டி ஐ.எஸ். எச்சரிக்கை பிரச்சாரம்

 
 
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லான் குர்தியின் உடல் குறித்த புகைப்படம் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி வரும் நிலையில், அதே புகைப்படத்தைக் காட்டி அகதிகளை எச்சரித்து வருகிறது இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பு.

அண்மையில் சிரியாவின் கொபானி நகரில் இருந்து 23 பேர் இரண்டு படகுகளில் கிரீஸுக்கு புறப்பட்டனர். துருக்கி அருகே அவர்கள் வந்தபோது படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் துருக்கியின் சுற்றுலா தலமான கோஸ் கடற்கரையில் ஒதுங்கின.

இதில் அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் கரை ஒதுங்கி கிடக்கும் காட்சி கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. சிறுவனின் தாய் ரேஹன் (35), சகோதரன் காலிப் (5) ஆகியோரும் கரையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். தந்தை அப்துல்லா மட்டும் உயிர் பிழைத்துள்ளார். மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்ட அவர், குழந்தைகளோடு சேர்த்து தன்னையும் புதைத்துவிடுமாறு கதறி அழுதகாட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய சிறுவனின் புகைப்படத்தைக் கொண்டு தற்போது இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு அகதிகளை எச்சரித்துள்ளது, அதாவது, மேற்கு நாடுகளுக்குச் செல்வது இத்தகைய பாவத்தில் போய் முடியும் என்று தொனிக்கும் வாசகத்துடன் அகதிகளை எச்சரித்துள்ளது.

இது பற்றி, ஐ.எஸ். நடத்தும், ஆங்கில மொழி இதழான தாபிக்கில் அய்லான் குர்தியின் புகைப்படத்தை வெளியிட்டு, “தாருல்-இஸ்லாமை கைவிடுவதன் அபாயம்” என்று தலைப்பிட்டுள்ளது.

“சிரியா நாட்டினரும், லிபியா நாட்டினரும், தாங்கள் வளர்த்து ஆளாக்க வேண்டியவர்களின் வாழ்க்கையை இத்தகைய அபாயத்துக்கு ஆட்படுத்துவது வருத்தம் ஏற்படுத்துகிறது. சிலுவைப்போர் நடத்தும் அபாய நிலங்களுக்கு இவர்கள் பெயர்வதன் மூலம் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் அபாயகரமான மிகப்பெரிய பாவகாரியத்தைச் செய்கின்றனர். மேற்கு நாடுகளுக்கு குழந்தைகளைக் கொண்டு செல்வதன் மூலம் மதுப்பழக்கம், தகாத பாலுறவு உள்ளிட்ட தீமைகளுக்கு இவர்கள் ஆளாகிவிடுவர்” என்று எச்சரித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/அய்லான்-புகைப்படத்தைக்-காட்டி-ஐஎஸ்-எச்சரிக்கை-பிரச்சாரம்/article7637313.ece

இதில ரஸ்யாவின் கைவிளையாட்டும் இருக்கு... சேர்பியாவின்  ஒரு பிரச்சனையும் இல்லாது  மக்கள்   ஜேர்மனிக்கான பயணத்தை தொடரக்க கூடியதாக இருந்து இருக்கு.

 

  • தொடங்கியவர்

10,000 சிரிய அகதிகளை அமெரிக்கா ஏற்கும்: ஒபாமா

 
கோப்புப் படம்: ஏபி.
கோப்புப் படம்: ஏபி.

அடுத்த ஆண்டில் குறைந்தது 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவினுள் அனுமதிக்க அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அகதிகள் விவகாரத்தில் உதவும் பான்மையில் அமெரிக்காவின் பங்கு கூறும் அளவுக்கு இல்லை என்று விமர்சனம் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் கூறும்போது, "சிரியா நாட்டு அகதிகளின் அனுமதிக்கான எண்ணிக்கையை அதிபர் கணக்கிட உத்தரவிட்டுள்ளார். அந்த எண்ணிக்கை 1800ஐ எட்டுகிறது. இம்மாத இறுதிக்குள் இவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்த ஆண்டில் குறைந்தது 10 ஆயிரம் பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.

இந்தப் பிரச்சினையின் தன்மையை அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது. போர்ச் சூழலில் இருக்கும் மக்களின் வலியை அமெரிக்கா அறியும். அவர்களுக்கான அடிப்படை தேவையிலிருந்து அனைத்து விவகாரங்களை நாங்கள் கவனித்துக் கொள்வோம். மனித உரிமை பிரச்சினைகளுக்கு அமெரிக்கா என்றென்றும் முன்னுரிமை அளிக்கும்" என்றார்.

சிரிய அகதிகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி புரிவதில் மெத்தனம் காட்டுவதாக சர்வதேச அளவில் கேள்வி எழுந்தது. இதனையடுத்து அவர்களுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

இதில், அமெரிக்கா வருடந்தோறும் சுமார் 70,000 அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறது. ஆனால் சிரிய நாட்டு அகதிகள் விவகாரத்தில் அக்கறை காட்டாதது குறித்து கேள்வி எழுந்த நிலையில அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிரிய அகதிகளை அனுமதிக்காததற்கு தீவிரவாத அச்சுறுத்தலை மிகப் பெரிய இடையூறாக அமெரிக்கா கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகதிகள் பெயரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவலாம்

சிரிய நாட்டு அகதிகளுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருப்பது குறித்து பெரிய அளவில் முன்னெச்சரிக்கையை அமெரிக்கா எடுத்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கோமே கூறும்போது, "ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரிய அகதிகளுடன் நுழைய பெரிய அளவில் வாய்ப்பு உள்ளது. யார் உள்ளே வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஐ.நா. குழு மூலம் அல்லாமல் வேறு வழியில் வரும் அகதிகளை கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே இங்கு பல அபாயங்கள் உள்ளது." என்றார்.

http://tamil.thehindu.com/world/10000-சிரிய-அகதிகளை-அமெரிக்கா-ஏற்கும்-ஒபாமா/article7640943.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரேக்கம் கடனாய் கேட்ட காசை ஒழுங்காய் குடுத்திருந்தால் உந்தளவுக்கு நிலமை மோசமாயிருக்காது. :grin:

ஒருதடவை கதையோடு கதையாய் சொல்லியுமிருந்தார்கள். :innocent:

இனியென்னத்தை செய்யிறது பாவம் சிரியா.உள்ள கோபத்தையெல்லாம் வெளியே தெரியாமல் சாம்பலாக்கிப்போட்டுத்தான் விடுவார்கள் போலை கிடக்கு....tw_astonished:

மதரீதியாக கிரேக்கம்,சேர்பியா,ரஷ்யா சகோதரர்கள்.  கூட்டிக்கழிச்சு கணக்கு பார்த்தால் உள்விசயத்தை நல்லவடிவாய் அனுமானிக்கலாம்.:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

An estimated 9 million Syrians have fled their homes since the outbreak of civil war in March 2011, taking refuge in neighbouring countries or within Syria itself. According to the United Nations High Commissioner for Refugees (UNHCR), over 3 million have fled to Syria's immediate neighbours Turkey, Lebanon, Jordan and Iraq. 6.5 million are internally displaced within Syria. Meanwhile, under 150,000 Syrians have declared asylum in the European Union, while member states have pledged to resettle a further 33,000 Syrians. The vast majority of these resettlement spots – 28,500 or 85% – are pledged by Germany.

This website offers a snapshot of the repercussions of this refugee crisis for both Syria’s neighbours and the European Union. It is a project of the Migration Policy Centre at the European University Institute, based on a series of studies conducted by local researchers on behalf of the MPC at the end of 2012 and an update carried out in 2014. This website is the result of close collaboration between a team of journalists and these local researchers, under the auspices of the MPC, to paint a broad picture of the worst refugee crisis to affect the region in years.

This website also examines the role played by the European Union, both as a provider of humanitarian aid and as a home for refugees. While it is true that the EU is a leading contributor of humanitarian aid to the region, the amount donated by each of its 28 member states has varied greatly. Furthermore, while the EU has accepted the vast majority of Syrians who have applied for asylum, it has to date received relatively few requests. Its response to a UNHCR call for more than 130,000 resettlement spots for Syrian refugees between 2013-2016 has also been tepid.

In contrast, absorbing the influx of refugees has been an enormous challenge for Syria’s neighbours, with strong implications for the stability of the entire region. We hope this website is an accessible way to better understand the crisis .

Created in January 2013
Updated in February and October 2014

http://syrianrefugees.eu/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.