Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருக்கான தீர்வே எனது முதல் இலக்கு! எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

Featured Replies

தமிழருக்கான தீர்வே எனது முதல் இலக்கு! எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்!!

"நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனது சேவை இரு கோணங்களில் தொடரும். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற மற்றொரு கோணத்திலும் இந்தச் சேவை தொடரும். நாட்டுக்காகக் குரல் கொடுப்பது எனது பொதுக் கடமையாகும். தமிழ் மக்களுக்கு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனது முக்கிய கடமையாகும்.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

"இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்குக் கிடைப்பதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த எனது உயிரிலும் மேலான தமிழ் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் முதலில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்குக் கிடைத்த இந்தப் பதவி மூலம் முழுநாட்டுக்கும் நான் சேவையாற்ற வேண்டும். எனது குரல் முழு நாட்டுக்கும் ஒலிக்கவேண்டும். அதேவேளை, என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனது தலைமைப் பொறுப்பையும் நான் மறந்துவிடலாகாது.

நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்திருக்கும் தமிழ் மக்களின் குரலாகவும் எனது குரல் நாடாளுமன்றில் ஓயாமல் ஒலிக்கவேண்டும். இந்நிலையில், நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான எனது சேவையை இரு கோணங்களில் தொடரவுள்ளேன். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற மற்றொரு கோணத்திலும் இந்தச் சேவையைத் தொடரவுள்ளேன். நாட்டுக்காகக் குரல் கொடுப்பது எனது பொதுக் கடமையாகும். அதாவது, அரசை எதிர்க்கவேண்டிய வேளையில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்ப்பேன். அதேவேளை, அரசு எடுக்கும் தீர்மானங்கள் நாட்டின் மூவின மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்தால் அதனை ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து ஆதரிப்பேன். இது எனது பொதுக் கடமையாகும்.

தமிழ் மக்களுக்கு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனது முக்கிய கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். வடக்கு, கிழக்கைப் பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட எமது தமிழ் மக்கள் கொடூர போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நாம் வெறுமனவே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும். இதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதேவேளை, நீண்டகாலமாகத் தொடரும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு - தமிழரின் பிரச்சினைக்கு கெளரவமான - நியாயமான - உண்மையான - நிரந்தரமான அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கவேண்டும். இதனைப் பெற்றுக்கொடுக்க என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் - நடவடிக்கைகளையும் எடுப்பேன். இனப்பிரச்சினைக்கு - தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் கிடைப்பது எமக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்கும் நல்லது. அப்போதுதான் நாட்டில் நல்லாட்சி தொடரும்; சமாதானம் நீடிக்கும்" - என்று தெரிவித்துள்ளார்

 http://www.malarum.com/article/tam/2015/09/05/11654/தமிழருக்கான-தீர்வே-எனது-முதல்-இலக்கு-எதிர்க்கட்சித்-தலைவர்-சம்பந்தன்-.html#sthash.AnumieaF.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும்... வடிவாய், நோட் பண்ணி வையுங்கோ... :grin:
அடுத்த மாசம்... தான், அப்படிச் சொல்லவில்லை என்று, மறுப்பு  அறிக்கை விட்டிடும், இந்த ஆள்.spointing_above_100-100.gif?w=47&h=34

தீர்வு ... சேர்ந்து (இப்ப பகிரங்கமாகவும் சேர்ந்தச்சு) தீர்த்துக் கட்டுவதுதான்!

 

ஆமா. அங்காலை சும்சம்மாவை ரணிலுடன் சேர்ந்து விக்கிக்கு ஆப்படிக்க தொடங்கியாச்சாம்! ... 

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் அனைவருக்கும் அனைத்தும் சிங்களத்தினதும் இந்தியாவினதும் மேற்குலக அமெரிக்க நாடுகளது நிகழ்ச்சி நிரல்படி நல்லபடியாகப்போகின்றது, இம்முறை ஐ நாவில் தமிழர்க்கு ஏமாற்றமே மிஞ்சும் அதற்காக எல்லாம் முடிந்துவிட்ட்டது எனத் துவளவேண்டாம் எமது விடுதலைநோக்கிய பயணத்தைத் தொடர்வோம், தாயக அரசியல்வாதிகளால் எமக்கோ எமது உறவுகளுக்கொ தற்போதைய சூழலில் எதுவித நன்மையும் இல்லை.

இம்முறை ஐநாவில் ஏற்படும் தோல்வியில் எவரும் மனம்துவளவேண்டாம் குறிப்பாக நிழலி நெடுக்கர் விசுகர் அகோதா போன்ற அனைத்து அன்புள்ளங்களுக்குமான வேண்டுதல் வல்வை சாகராவுக்குமே அத்டுடன் தாயக விடுதலையை  நேசிப்பவர்கள் அனைவர்க்குமே அனைவரது பெயர்களையும் குறிப்பிடமுடியாததுக்கு மன்னிக்கவும். மனம் தளராதையுங்கோ. தொடர்ந்து உங்களது வேலைத்திட்டங்களைச் செய்யுங்கோ. இன்று இல்லையேல் நாளையாவது நல்லசெய்திவரும் அந்த நாளைக்கு எனப்படுவது பலவருடங்களுமாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் அனைவருக்கும் அனைத்தும் சிங்களத்தினதும் இந்தியாவினதும் மேற்குலக அமெரிக்க நாடுகளது நிகழ்ச்சி நிரல்படி நல்லபடியாகப்போகின்றது, இம்முறை ஐ நாவில் தமிழர்க்கு ஏமாற்றமே மிஞ்சும் அதற்காக எல்லாம் முடிந்துவிட்ட்டது எனத் துவளவேண்டாம் எமது விடுதலைநோக்கிய பயணத்தைத் தொடர்வோம், தாயக அரசியல்வாதிகளால் எமக்கோ எமது உறவுகளுக்கொ தற்போதைய சூழலில் எதுவித நன்மையும் இல்லை.

இம்முறை ஐநாவில் ஏற்படும் தோல்வியில் எவரும் மனம்துவளவேண்டாம் குறிப்பாக நிழலி நெடுக்கர் விசுகர் அகோதா போன்ற அனைத்து அன்புள்ளங்களுக்குமான வேண்டுதல் வல்வை சாகராவுக்குமே அத்டுடன் தாயக விடுதலையை  நேசிப்பவர்கள் அனைவர்க்குமே அனைவரது பெயர்களையும் குறிப்பிடமுடியாததுக்கு மன்னிக்கவும். மனம் தளராதையுங்கோ. தொடர்ந்து உங்களது வேலைத்திட்டங்களைச் செய்யுங்கோ. இன்று இல்லையேல் நாளையாவது நல்லசெய்திவரும் அந்த நாளைக்கு எனப்படுவது பலவருடங்களுமாகலாம்.

நன்றி  சகோதரா..

அண்மைய தங்களது எழுத்துக்களில் நீங்கள் சோர்ந்து விட்டீர்களோ என திடுக்கிட்டேன்...

ஆனால் பின்னர் தெளிவடைந்தேன்..

இந்தமுறையும் யெனீவா செல்வேன்....

தாயகம் ,இந்தியா ,மேற்குலகம் தாண்டி வீர வரலாறு படைக்க வாழ்த்துக்கள் .

உண்டியலை துடைக்க சொல்லுகின்றார் என்று ஒருவருக்கு பேய் சந்தோசம் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் ,இந்தியா ,மேற்குலகம் தாண்டி வீர வரலாறு படைக்க வாழ்த்துக்கள் .

உண்டியலை துடைக்க சொல்லுகின்றார் என்று ஒருவருக்கு பேய் சந்தோசம் .:grin:

இது உங்கட வக்ரபுத்தியின் வெளிப்பாடு..

ஆகக்குறைந்தது

கூட்டமைப்பின் இறுதி அறிக்கையையாவது விளங்கிக்கொள்ளணும்

ஐநாவின் அறிக்கையைப்பொறுத்தே

எமது அடுத்த நடவடிக்கைகள் அமையும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சம்பந்தன் சொல்லி இருக்கிறார் இதுதான் தமிழ் கூட்டமைப்பின் கடைசிப் பயணம் ( கனபேர் இதை மறந்திட்டினம். பொயிண்டை எடுத்து குடுத்து இருக்கு அவர்களுக்கு) என்பதாக. எனவே அடுத்த தேர்தலில் சுமந்திரன் தலைமையில் தமிழரசு கட்சியாகப் போட்டியிட வேண்டிய தேவை உண்டு. அதனால் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்க கடும் முயற்சி செய்வார்கள். அப்படிச் செய்வதன் மூலம் புலத்து மக்கள் நிரந்தரமாக "புலம்பெயர் அவர்களை" வெட்டிவிடுவார்கள். ஆனால் வழமை போலவே புலம்பெயர் அவர்கள் குழப்பும் முயற்சியில் பகீரதப் பிராயத்தனம் செய்வார்கள். இனி அவர்களால் வெட்டிப் பேச்சைத் தவிர ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் புலத்து மக்களுக்கு ஒரு ஆறுதலான தீர்வு கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே, எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை, சிலர் எங்களில் தேடுகிறார்கள். காரணம் புலிஎதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதற்குப் புலி இருந்தேயாகவேண்டும், இல்லையேல் பிழைப்புக்கெட்டுடும். 

இரண்டொரு நாட்களுக்குமுன்பு ஒரு கலந்துரையாடலும் முக்கியமானவர்களுடனான சந்திப்பும், அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் தொண்ணூறுகளில் சிங்களத்துடனான நல்லூரடிப் பேச்சுவார்த்தையில் புலிகள்சார்பில் அங்கம்வகித்த முக்கியஸ்தர் பின்பு முரண்பாடுகாரணமாக சுப தமிழ்ச்செல்வனது உள்ளடி வேலையால் ஒரே நாளில் உயர் பொறுப்பிலிருந்து தரையிறக்க்ம் செய்யப்பட்டவர், அவர் அண்மைய சந்திப்பில் போர்க்குற்றம் இனவழிப்பு அதாரங்களைத் தேடல் இவைபற்றியே மூச்சுக்கு முண்ணூறு தடவை கூறிக்கொண்டிருந்தார் தாயக அரசியல்பற்றியோ கூட்டமைப்புபற்றியோ கஜேந்திரனது முண்ணனியின் தோல்விபற்றியோ வாய் திறக்கவே இல்லை. நானும் காராசாரமான கருத்துக்களை முன்வைப்பம் எண்டுதான் போயிருந்தன் பொத்திக்கொண்டு வந்திட்டன். புலிகள் இயக்கத்தில் தானிருந்த காலத்தின் வீரப்பிரதாபங்களையோ அன்றேல் தான் செய்ததாகக் கூறிக்கொள்ளும் சம்பவங்களைப்பற்றியோ இம்மியளவும் வாய் திறக்கவில்லை.

நாங்கள் சந்தித்தவர்கள் நான் வாழும்நாட்டில் அரசியலிலும் வெளியுறவு விடையத்திலும் முகவும் சக்திமிக்கவர்கள், ஆனால் அவர்களுக்கு எம்மேல் கரிசனை இருக்கின்றது உலக ஒழுங்கு எமது எதிர்பார்புக்களை நிறைவேற்றக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்பதை கூறினாலும் நீங்கள் ஓய்துவிடாதீர்கள் எல்லாக்கதவுகளையும் தட்டுங்கள் அது தவறான கதவாகவிருந்தாலும் உங்களுக்கு அதன்மூலம் அனுபவம் கிடைக்கும் ஆனால் சங்கிலித்தொடர்போன்று உங்கள் முயற்சியில் இடைவெளி விடாதீர்கள் அப்படி விட்டால் பின்பு ஆரம்பத்திலிருந்து தொடங்கவேண்டிவரும்.

என்றோ ஒரு நாள் உங்களுக்கான நீதி கிடைத்தேயாகும் என்று அவர்கள் கூறும்போது உண்டியலைத் துடைக்காது இருந்திடல் கூடாதுதானே!

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியலை துடைக்க என்னாமா கதை அளக்க வேண்டி இருக்கு :)

யாரந்த முக்கியஸ்தர்கள் - முள்ளிவாய்க்காலுக்கு பிரபாவை காபாத்த கப்பல் கொண்டு போன ஆக்களோ?

புலிகள் எப்பவோ அழிந்து விட்டார்கள் இப்போ அவர்களை வைத்து உண்டியல் குலுக்க முனைவோர் இப்படி 90 களிலே பிரபாவால் துண்டு கிழிக்கப் பட்ட ஆக்கள்தான்.

என்ன செய்வது சாப்பிட்டு ஆகணுமே?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்.. தீர்வு..தீர்வுன்னு சொல்லுறாரே அதென்ன தீர்வென்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. ஏன்னா.. உந்ததாள் நாளுக்கு ஒரு தீர்வை மனசில வைச்சிட்டு கதைக்குது.. ச்சா உளறுது. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழருக்கான தீர்வே எனது முதல் இலக்கு! எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

இதுக்குத்தானே குப்பன், சுப்பன் ,அப்பன் எல்லாரும் 60வது வருசமாய் உங்கடை கூட்டுவளுக்கு வோட்பண்னி அனுப்புறாங்கள்!!!!!

கோஷ்டியளுக்கு சூடு சுரணையே வரதா?

ஈழத்தமிழருக்கு வசந்தம் வராதா?????

தமிழருக்கான தீர்வே எனது முதல் இலக்கு! எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

இதுக்குத்தானே குப்பன், சுப்பன் ,அப்பன் எல்லாரும் 60வது வருசமாய் உங்கடை கூட்டுவளுக்கு வோட்பண்னி அனுப்புறாங்கள்!!!!!

கோஷ்டியளுக்கு சூடு சுரணையே வரதா?

ஈழத்தமிழருக்கு வசந்தம் வராதா?????

11917477_1632079393730453_70245639719420

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.