Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

Featured Replies

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.


141114171331_udaya_gammanpila_640x360_ud
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென உதய கம்மன்பில உள்ளிட்ட 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசுரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எதிர் கட்சியில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே இருப்பதால், தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வேல்கமவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாக உதய கம்மன்பில கூறினார்.

தற்போது, நாடாளுமன்ற சபாநாயகர் பதவி, பிரதமர் பதவி, ஆளும் கட்சியின் அமைப்பாளர் பதவி, எதிர் கட்சியின் அமைப்பாளர் பதவி ஆகிய சகல பதவிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உதவிய நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கோரப்பட்டதா?

141230100815_r_sampanthan_tna_leader_640
தங்களுடைய கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரானதல்ல என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் ஏதும் வைக்கப்படாத நிலையிலேயே எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தனை நியமித்ததாக முன்னதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்தார்.
இது குறித்து கேட்டபோது, எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு குமார வெல்கம நியமிக்கப் படவேண்டுமென்று தாங்கள் ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை அளித்ததாகவும் இருந்தபோதும், எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு தாங்கள் யார் பெயரையும் தெரிவிக்கப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் விஷ்வா வர்ணபால நாடாளுமன்றத்திற்கு தெரிவித்ததாகவும் கம்மன்பில கூறினார். இந்த பின்னணியில்தான் சபாநாயகர் கரு ஜெயசுரிய அந்தக் கருத்தைக் கூறியுள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதான் இந்த தவறைச் செய்ததாக உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.
தங்களுடைய கோரிக்கை, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரானதல்ல என்று கூறிய உதய கம்மன்பில அரசியல்யாப்பின் விதிமுறைகளை அமல்படுத்துமாறு கோரியே தாங்கள் இந்த வேண்டுகோளை வைப்பதாகக் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150910_opposition_sl

  • கருத்துக்கள உறவுகள்

சம் சந்திரிக்காவை வைச்சு.. தட்டிப் பறிச்சது.. விரைவில பறிபோகும் போல. இதுதான் சொல்லுறது எல்லாம் அதுவா வரணும். தட்டிப்பறிக்கக் கூடாதுன்னு. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சம் சந்திரிக்காவை வைச்சு.. தட்டிப் பறிச்சது.. விரைவில பறிபோகும் போல. இதுதான் சொல்லுறது எல்லாம் அதுவா வரணும். தட்டிப்பறிக்கக் கூடாதுன்னு. tw_blush::rolleyes:

சம்சின்... பதவி பறி போக முதல், ஏதாவது உருப்படியான வேலைகளையாவது செய்யலாம்.
அதுக்கும்...அந்த மனுசனுக்கு மனம் வருகுதில்லை. 
முதல்வர் விக்னேஸ்வரனுக்கு, ஆப்படிக்கத்தான்.... ஆர்வம் காட்டுகிறார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சம்சின்... பதவி பறி போக முதல், ஏதாவது உருப்படியான வேலைகளையாவது செய்யலாம்.அதுக்கும்...அந்த மனுசனுக்கு மனம் வருகுதில்லை. 
முதல்வர் விக்னேஸ்வரனுக்கு, ஆப்படிக்கத்தான்.... ஆர்வம் காட்டுகிறார்கள். 

தமிழனுக்கு நல்லது செய்ய எவர் முன்வந்தாலும், அவர்களுக்கு ஆப்படிக்கும் ஒரு கூட்டம் ஒன்று குருவிச்சைபோல் தமிழினத்தில் படர்ந்துள்ளது. சமீபகாலத்திற்குள் அந்தக் குருவிச்சையின் வேர் ஒன்று யாழ்களத்திலும் ஊண்றிவிட்டதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.:shocked:tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

இரவல் தந்தவன் கேட்கின்றான் ....
இல்லை என்றால் அவன் விடுவானா ?? 

  • கருத்துக்கள உறவுகள்

சமீபகாலத்திற்குள் அந்தக் குருவிச்சையின் வேர் ஒன்று யாழ்களத்திலும் ஊண்றிவிட்டதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.:shocked:tw_blush: 

அதை நான் ஆமோதிக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.