Jump to content

முருங்கைக்கீரை முட்டை பொரியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

1439801163-1794.jpg

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - 2 கப்
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3

செய்முறை:

முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ,  காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்தது வதக்கி பின் பூண்டு தட்டி போடவும். பின் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

கீரை நன்கு வெந்த நிலையில் தயாராக வைத்துள்ள முட்டையை ஊற்றி, மிதமான அனலில் வேகவிடவும்.

 

http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/drumstick-leaves-recipe-115081700015_1.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருங்கை இலைக்குள் ஏன் தேவையில்லாமல் முட்டையைக் கலப்பான்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வறுவலோ பொரியலோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வறுவலோ பொரியலோ?

இந்தியாவில் பொரியல் என்பார்கள் இலங்கையில் இதனை வறுவல் அல்லது சுண்டல் என்றும் சொல்வார்கள் சபேஷ் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருங்கை இலைக்குள் ஏன் தேவையில்லாமல் முட்டையைக் கலப்பான்?

முட்டை முருங்கை இலையின் வாசனையை அமுக்கி விடும்.
அதிலும் பார்க்க.... சிறிது மாசிக் கருவாடு தூள் போட்டால் அந்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உது ஏழையள் சாப்பிடுறது....kotzender_smilie_322.gif

என்னை மாதிரி ஆக்கள் சாப்பிடுற பீற்றூட் கரட் லீக்ஸ்  பொட்டாற்ரோஸ் அயிட்டங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ தமிழரசு...smiley_king.gif

Posted

இணைப்புக்கு நன்றி சகோ தமிழரசு! தொடர்ந்து இணையுங்கள்!! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் முருங்கை + முட்டை காம்பினேசன் பிடிக்க வில்லை.

நான் லிபியில் இருக்கும்போது முட்டையிடன் மிளகாய் இலை அரிந்து சேர்த்து பொரிப்பது நல்ல சுவையாய் இருக்கும்...!  :)

நன்றி தமிழரசு...!

Posted

முட்டை பொரிக்கும்போது 2 அல்லது 3 துளி விஸ்கி கலந்து பொரித்தால் அந்த மாதிரி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் முருங்கை + முட்டை காம்பினேசன் பிடிக்க வில்லை.

நான் லிபியில் இருக்கும்போது முட்டையிடன் மிளகாய் இலை அரிந்து சேர்த்து பொரிப்பது நல்ல சுவையாய் இருக்கும்...!  :)

நன்றி தமிழரசு...!

சுவி... உண்மையாக நன்றாக இருக்குமா? தமாசு பண்ணவில்லை தானே....
முட்டையுடன், மிளகாய் இலை சேர்த்து சமைப்பதை இப்போதான் கேள்விப் படுகின்றேன்.
அதனைப் பற்றிய செய்முறையை... கொஞ்சம் விபரமாக தாருங்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பெரிய விடயம் இல்லை சிறி...!

நான் லிபியாவில் வேலை செய்யும் போது பக்கத்து அறைகளில் சிங்குகள் இருந்தார்கள். பொதுவாக அவர்கள் தங்கட சமறி, நாங்கள் எங்கட சமறி. ஆனால் இந்த சில சிங்குகள் சாப்பாடு மற்றும்  சாராயங்கள் காச்சுவார்கள்.(அது பெரிய விஞ்ஞான செயல்முறை, கார் ரேடியேட்டர், செம்புப் பைப்பகளால் அறை முழுதும் சுற்றி வந்து கீழே ஒரு கானுக்குள் சொட்டுச் சொட்டாக இறங்கும்.) எமது காம்பைச் சுற்றி மிளகாய் , மூலோன் , பூசணி, சில பல மரக்கறிகள் எல்லாம் போட்டிருப்பார்கள்.நாங்கள் எல்லாம் ஒன்றாக வேலை செய்வதால் நல்ல சிநேகிதம். அவர்கள் இப்படி முட்டை பொரித்து எங்களுக்கும் தருவினம்.

ஒரு போலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது சிறிதாக மிளகாய் இலையை அரிந்து போட்டு சிறிது வெங்காயமும் உப்பும் கலந்து நல்லா அடிச்சுப் போட்டு சட்டியில் ஊற்றிப் பதமாகக் கிளறி எடுக்க வேண்டும்.

ரொட்டியை நடுவால் கீறி அதற்குள் வைத்துச் சாப்பிட செமையாய் இருக்கும். நான் இங்கும் அப்பப்ப செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கிறனான். வீட்டு பல்கனியில் சாடிக்குள் ஐஞ்சாறு மிளகாய் கண்டு, தக்காளி, பிள்ளைக் கத்தாழை, துளசி,மல்லி இலை, என்று இன்னும் பல வைத்துருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் நன்றாக இருக்கும் என்று சொன்ன படியால்... கட்டாயம் செய்து பார்ப்பேன்... சுவி. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை தான் தமிழ்சிறி முருங்கை இலைக்குள் மாசி போட்டால் சுப்பராய் இருக்கும்

Posted

எனக்கும் முருங்கை + முட்டை காம்பினேசன் பிடிக்க வில்லை.

நான் லிபியில் இருக்கும்போது முட்டையிடன் மிளகாய் இலை அரிந்து சேர்த்து பொரிப்பது நல்ல சுவையாய் இருக்கும்...!  :)

நன்றி தமிழரசு...!

மிளகாய் இலை சாப்பிடுவது என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.... ஆனால்  சாப்பிட மனம் வருகுது இல்லை.... நன்றி தகவலுக்கு :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இப்போதுதான் யோசிக்கின்றேன். ஊரில் மிளகாய்க் கண்டுகளுக்கு அடிக்கடி பவரான மருந்து அடிக்கிறவை. அது கூடாது. வீட்டுத் தோட்டங்கள், மற்றும் நச்சு மருந்துகள் தெளிக்காத கண்டுகளின் இலைகள்தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இப்போதுதான் யோசிக்கின்றேன். ஊரில் மிளகாய்க் கண்டுகளுக்கு அடிக்கடி பவரான மருந்து அடிக்கிறவை. அது கூடாது. வீட்டுத் தோட்டங்கள், மற்றும் நச்சு மருந்துகள் தெளிக்காத கண்டுகளின் இலைகள்தான் நல்லது.

ஊரிலை ஐயாயிரம் பத்தாயிரம் எண்டு மிளகாய்தோட்டம் வைச்சிருந்த எனக்கே இண்டைக்குத்தான் தெரியும் மிளகாய் இலையை சாப்பிடலாம் எண்டு :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் முருங்கை + முட்டை காம்பினேசன் பிடிக்க வில்லை.

நான் லிபியில் இருக்கும்போது முட்டையிடன் மிளகாய் இலை அரிந்து சேர்த்து பொரிப்பது நல்ல சுவையாய் இருக்கும்...!  :)

நன்றி தமிழரசு...!

என்னைப் போல.. இன்னுமொருவர் இருப்பது மிகவும் மகிழ்ச்சி..சுவியர்!

நானும் பாவற்காய் இலை போட்டு முட்டை பொரித்திருக்கிறேன்!

கொஞ்சம் பிஞ்சு மிளகாயும் போட்டுப் பொரிக்க... அந்த மாதிரி.. இருக்கும்!

பகிர்வுக்கு நன்றி..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ.....ஐயோ இனி என்னென்ன இலையெல்லாம் வரப்போகுதோ.....:shocked:

சூட்டை கொஞ்சம் தணிக்க இது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

P6160003_640x480(1).JPG

பீற்றுட் இலையில், மாசி போட்டு வறை செய்து பாருங்கள். அந்த மாதிரி இருக்கும்.
எனக்கும்.. இது கன நாள் தெரியாது.  ஒரு ஆன்ரி சொல்லி சமைத்துப் பார்த்தோம். நன்றாக இருந்தது. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ.....ஐயோ இனி என்னென்ன இலையெல்லாம் வரப்போகுதோ.....:shocked:

சூட்டை கொஞ்சம் தணிக்க இது :cool:

எதுக்கும்...நிழலி, ராசவன்னியன் .. வரும் வரையும் பொறுத்துப் பாப்பம்!

ஏதாவது 'ஒட்டகம் சாப்பிடுகிற' இலை.. குழை ஏதாவது வரும்!:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

P6160003_640x480(1).JPG

பீற்றுட் இலையில், மாசி போட்டு வறை செய்து பாருங்கள். அந்த மாதிரி இருக்கும்.
எனக்கும்.. இது கன நாள் தெரியாது.  ஒரு ஆன்ரி சொல்லி சமைத்துப் பார்த்தோம். நன்றாக இருந்தது. :)

முன்பு ஊரில் தேவையான மரக்கறிகள்,மற்றும் வறைக்கு முருங்கை,சன்டி,கோவா என்று நிறைய இருக்கும். அதனால் இவை அவசியமில்லை. ஆனால் பாலை வனங்கள் போன்ற இடங்களில் சாப்பிடக் கூடிய ஒரு புல்லு என்றாலும் அது அமிர்தம்தான்.

பீற்றூட் இலையில் இங்கு சாதாரனமாக சுண்டுகிறோம். ஆனால் ஊரில் அப்படியாரும் செய்ததாய் தெரியேல்ல. காக்கை தீவில் கடற்கரையில் காயும் அட்டைகளைத் திரும்பியும் பார்க்க மாட்டோம், இங்கு அட்டை, சிப்பி, தவளை, மட்டி எல்லாம் விலை கூடிய உணவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு போலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது சிறிதாக மிளகாய் இலையை அரிந்து போட்டு சிறிது வெங்காயமும் உப்பும் கலந்து நல்லா அடிச்சுப் போட்டு சட்டியில் ஊற்றிப் பதமாகக் கிளறி எடுக்க வேண்டும்.

ரொட்டியை நடுவால் கீறி அதற்குள் வைத்துச் சாப்பிட செமையாய் இருக்கும். நான் இங்கும் அப்பப்ப செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கிறனான். வீட்டு பல்கனியில் சாடிக்குள் ஐஞ்சாறு மிளகாய் கண்டு, தக்காளி, பிள்ளைக் கத்தாழை, துளசி,மல்லி இலை, என்று இன்னும் பல வைத்துருக்கிறேன்.

இந்த முறையில் செய்து சுவைப்பதற்கு ஆசையாக உள்ளது ..... மிளகாய் இலையை எங்கே பெற்றுக்கொள்ளலாம் .... ?

P6160003_640x480(1).JPG

பீற்றுட் இலையில், மாசி போட்டு வறை செய்து பாருங்கள். அந்த மாதிரி இருக்கும்.
எனக்கும்.. இது கன நாள் தெரியாது.  ஒரு ஆன்ரி சொல்லி சமைத்துப் பார்த்தோம். நன்றாக இருந்தது. :)

நன்றாகத்தான் இருக்கும் செய்து சுவைத்த பின்னர் எழுதுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னுமொரு விடயம்...! நான் இங்கிருக்கும் இடங்களில் சிறு தோட்டங்கள் உள்ளது. எம்மவர், ஆபிரிக்கன் , அல்ஜீரியன், சீனர் எல்லோரும் சிறிய நிலத் துண்டுகள் தோட்டமாக வைத்திருக்கினம்.

மூங்கில்கள் நிறைய உண்டு. அதன் குருத்துகளில் எல்லாம் சமைப்பினம், அதுபோல் பூசணிக் குருத்துகளையும் ஒடித்துக் கொண்டுபோய் சமைப்பினம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
    • ஊழல் என்பதை விட, அனுபவமின்மையே இது காட்டுகின்றது என்று சொல்லவே வந்தேன், அல்வாயன். முன்னைய ஆட்சியில் சீனி இறக்குமதியில் ஒரு ஊழல் நடந்ததே......... அது போல இந்த அரசில் நடவாது. பசில் போல எதிலும் பத்து வீதம் கமிஷனும் இங்கே கேட்கமாட்டார்கள், ஆனால் பொருள் வந்து இறங்குவதற்குள் மக்களின் சீவன்கள் போய்விடும்.....................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.