Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவு முழுவதும்... சுடுகாட்டில், உறங்கிய சகாயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sahyam(1).jpg

நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: உறங்காமல் காவல் காத்த சகாயம் டீம்!

துரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தததாக கூறப்படும் இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3.jpg

சுடுகாட்டில் தோண்டும் பணி

மலம்பட்டி சுடுகாட்டில்  ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில், இன்று காலை 9 மணி முதல் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்படி தோண்டும் போது சில தடையங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதால் மனிதர்களின் உதவியோடு அங்கு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை  5 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவற்றை மருத்துவ குழுவினர் சேகரித்து வருகின்றனர். நரபலி கொடுக்கபட்டதாக கூறப்பட்ட இடத்தில் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

sak.jpg

சுடுகாட்டில் தோண்டும் பணியின் போது...

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சில மாதங்களுக்கு முன் தைரியமாக வெளிக்கொண்டு வந்த கிரானைட் முறைகேடுகள், ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அதன்பின் பணிமாற்றம், அலைக்கழிப்பு,  என சகாயம் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயத்தின் விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.பி. நிறுவனம் மன நலம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை நரபலி கொடுத்து ஓலைப்பாயில் சுருட்டி புல்டோசரில் குழி தோண்டி சின்ன மலம்பட்டி சுடுகாட்டில் ஒரு பனை மரத்தின் கீழ் புதைத்ததை நேரில் பார்த்ததாக மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவை சேர்ந்த் சேவற்கொடியான் என்கிற பிரபு பகீர் புகாரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சகாயத்தை நேரில் சந்தித்து கொடுத்தார். முதலில் புகாரை வாங்கிய சகாயம், அந்த புகாரில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்று தனிப்படை அமைத்து விசாரித்து வந்தார்.

தற்போது, கிரானைட் விசாரனை இறுதிக்கட்டதை எட்டி, இன்னும் ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் சகாயம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிரடியாக மணிமுத்தாறு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சகாயம் குழுவினர் நேற்று காலை 10:00 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தனர். புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய 12 ஆம் தேதி காலையில் சகாயம் மாவட்ட நிர்வாகதிற்கும், காவல்துறைக்கும் முறைப்படி தகவலை அனுப்பிவிட்டு நரபலி கொடுத்து உடலை புதைத்த இடத்திற்க்கு சேவற்க்கொடியானுடன் அவர் வந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர், தாசில்தார் கிருஷ்ணண், ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு வேலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து போகச் சொல்லிவிட்டனர். அதேபோல், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவையும சம்பவ இடத்திற்க்கு அனுப்பாமல் இழுத்தடித்து. மதுரையில் இருந்து சென்ற 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவை, நான்கு மணி நேரமாக மேலூர் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மாலை ஆறு மணிக்கு மேல் மலம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடதிற்க்கு சென்ற மருத்துவக்குழுவினர், சூரியன் மறைந்துவிட்டதால் இனி பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால் பிணத்தை தொண்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

4.jpg

நண்பகல் இரண்டு மணிக்கு மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் உங்களை அனுப்பிவிட்டதாக தகவல் சொன்னார்கள். ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள் என்று சகாயம் கேட்டார். அதற்கு, இவ்வளவு நேரம் போலீஸ் என்கொயரி என்று சொன்னதோடு, மாவட்ட ஆட்சியர் சொன்னால்தான் வேலையை செய்வோம் என்று சகாயத்துடன் வாக்குவாதம் செய்தனர். சகாயம், ''இது உயர் நீதிமன்றம் அமைத்த சட்டப்பனிக்குழு. நான் அதன் ஆணையர் என்கிற முறையில் சொல்கிறேன் நீங்கள் பணியை தொடங்குங்கள்" என்றார். அதற்கு மருத்துவக்குழு, ''எங்களுக்கு ஆட்சியர் தான் எல்லாமே" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

petro.jpg

அதன் பிறகு ஏதோ சூழ்ச்சி நடப்பதை உனர்ந்த சகாயம், அந்த இடத்தைவிட்டு நகராமல் இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே இருக்கப்போவதாக கூறிவிட்டு, கீழே அட்டை, பேப்பர் போன்றவற்றை போட்டு அதில் அமர்ந்து விட்டார். அந்த சுடுக்காட்டில் மின்சார வசதி இல்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகத்திடம் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க சொல்லி கேட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால், அதிகாரி சகாயத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க பொது மக்கள் மேலூரில் இருந்து ஜெனரேட்டர் ஒன்றும் அதனை ஆப்ரேட்டிங் செய்ய ஆப்ரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியில் அந்த ஜெனரேட்டர் ஆபரேட்டரை மேலுர் காவல் உதவி ஆய்வாளர் அய்யனார் போகவிடாமல் தடுத்து அழைத்து சென்றதோடு, ஜெனரேட்டரில் இருந்த முக்கிய பாகம் ஒன்றையும் கழட்டி எடுத்து சென்று இருக்கிறார். 

அதனால், உணவை கூட சுடுகாட்டிற்கே வரவழைத்து உண்ட சகாயம் இரவு முழுவதும் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் கயிற்று கட்டிலில் சுடுகாட்டிலேயே படுத்து கிடந்தார். அவருடன், பொதுமக்களும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும், சட்டப் பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்களும் இரவு முழுவதும் சகாயம் குழுவினருக்கு பாதுகாப்பாக இருந்தனர்.

- சண்.சரவணக்குமார், சே.சின்ன துரை
படங்கள்: மோ.விஜயகுமார்  (தகவல்: விகடன் குழுமம்.)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி... உங்கள் பதிவை வாசித்ததும் இரண்டு விதமான உணர்வுகள் எனக்கு ஏற்பட்டது!

முதலாவது... நான் தமிழன் என்று கூறுவதை.. மிகவும் பெருமையாக உணர்வதுண்டு! ஆனால் உங்கள் பதிவைப் படித்த பின்னர் ,,, கூனிக் குறுகிப் போவது போன்று உணர்கிறேன்!

இரண்டாவது.. இந்தச் சகாயம் என்ற அற்புதமான மனிதனைப் பற்றி அறிந்து கொண்டது..!

மீண்டும் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்!

மேல்வரும் இணைப்பை வாசித்துப் பாருங்கள்!

https://ta.wikipedia.org/wiki/உ._சகாயம்

சகாயம் ஒரு நேர்மையான அதிகாரி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்ன அறிக்கை கொடுத்தாலும், கிந்திய நீதித்துறை குற்றவாளிகளை தண்டிக்கும் என்று நம்பவில்லை. கிந்திய நீதித்துறையும் அரசியல்வாதிகளின் தாளத்துக்கே ஆடும் என்பது வெளிப்படை. எல்லோரும் கூட்டுக் கொள்ளையர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி... உங்கள் பதிவை வாசித்ததும் இரண்டு விதமான உணர்வுகள் எனக்கு ஏற்பட்டது!

முதலாவது... நான் தமிழன் என்று கூறுவதை.. மிகவும் பெருமையாக உணர்வதுண்டு! ஆனால் உங்கள் பதிவைப் படித்த பின்னர் ,,, கூனிக் குறுகிப் போவது போன்று உணர்கிறேன்!

இரண்டாவது.. இந்தச் சகாயம் என்ற அற்புதமான மனிதனைப் பற்றி அறிந்து கொண்டது..!

மீண்டும் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்!

மேல்வரும் இணைப்பை வாசித்துப் பாருங்கள்!

https://ta.wikipedia.org/wiki/உ._சகாயம்

புங்கையூரான், சகாயத்தை பற்றிய உங்களது இணைப்பை பார்த்தேன்.
அவர் செய்த சாதனைகளும், சந்தித்த சவால்களும்... மற்றைய அரச அதிகாரிகளுக்கு, முன்னுதாரணமாக விளங்குபவர்.
இதில் மதுரை கல் குவாரியில் நடந்த முறைகேட்டை விசாரிக்க, இவரை விட வேறு தகுதியானவர் வேறு எவரும் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதே... என் கருத்து. எத்தனையோ... உயிர் ஆபத்துக்களுக்கும் அஞ்சாது, இவர் இந்தப் பணியில் மனமார்ந்த ஈடுபாட்டுடன் கடமை ஆற்றுவது பாராட்டத் தக்கது.

1) இதில் நடந்த முறைகேடு... பல வருடங்களாக, ரூ.16000 கோடிகள் வரையில்  அரசியல் வாதிகளின் துணையுடன் நடத்தப் பட்டது.
2) சமணர் காலத்து, புராதன  தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டெடுக்கப் பட்ட இடத்துக்கு அருகிலேயே வெடி வைத்து, கிரனைட் கல் தோண்டி எடுத்துள்ளார்கள்.
3) பல ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு செல்லும், ஆற்று நீரின் வழியை மூடி, கல் அகழ்ந்து எடுத்துள்ளார்கள்.

4) சிறிய குழந்தை உட்பட, நான்கு பேரை... நர பலி கொடுத்துள்ளார்கள்.

இப்படி.... மிகவும் பாரதூரமான குற்றங்களை செய்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் ஆனால்... சகாயம் போன்றவர்கள் தான் தேவை.
இவரின் அறிக்கை வரும் 15´ம் திகதி அளவில் வரலாம் என்று, எதிர் பார்க்கப் படுகின்றது.
இவ்வளவு சிரமப் பட்டு கொண்டு வரும் அறிக்கையை.... இந்திய நீதிமன்றம் சம்பந்தப் பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய நீதிமன்றம், பணக்காரர்களை சுலபமாக தப்ப வைத்து விடும் என்பதை... பல முறை பார்த்துள்ளோம்.

சகாயம் ஒரு நேர்மையான அதிகாரி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்ன அறிக்கை கொடுத்தாலும், கிந்திய நீதித்துறை குற்றவாளிகளை தண்டிக்கும் என்று நம்பவில்லை. கிந்திய நீதித்துறையும் அரசியல்வாதிகளின் தாளத்துக்கே ஆடும் என்பது வெளிப்படை. எல்லோரும் கூட்டுக் கொள்ளையர்கள்.

உண்மைதான்... சேர்வயர். 
ஆனால் சகாயத்தின் அயராத பெரும் முயற்சிக்கும், விவசாய நிலங்களின் பாதுகாப்பிற்கும், புராதன சின்னங்களை பாதுகாக்கவும்... 
இந்திய  நீதிமன்றம், காத்திரமான நடவடிக்கையை... மிக விரைந்து எடுக்க வேண்டும் என்பதே... எல்லோரது விருப்பம் அது நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர, எமக்கு வேறு வழி இல்லை. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தாம் அடிப்பது கோடியில்... மக்களை மயக்கத்தில் வைத்திருக்க இலவசமாக சில கோடிகள் அரச திறைசேரியில் இருந்து கொடுப்பது.

திருட்டு திராவிடக் கொள்ளையர்களிடம் இருந்து தமிழகத்தைக் காக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாயம் பார்க்காத உத்தமன்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாயம் அவர்கள் தனியாக மயானத்தில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் உடனடியாக களத்தில் இறங்கி இரவு முழுவதும் அவருடன் தங்கி இருந்த மதுரை நாம்தமிழர் உறவுகள்.

12003237_628020530672912_258228931644166

12032937_628020527339579_756962020991444

https://www.facebook.com/photo.php?fbid=628020530672912&set=pcb.628020874006211&type=1&theater

தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: அதிர்ந்து நிற்கும் சகாயம் குழு!:

மதுரையில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம் தலைமையிலான குழுவிடம் கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் கொடுத்த நரபலி புகாரைத் தொடர்ந்து, மேலூர் அடுத்த சின்னமலம்பட்டியில் உள்ள சுடுகாட்டில் உள்ள பகுதியில், கடந்த 13ஆம் தேதி 5 அடி அளவிற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது, 4 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், சகாயம் தலைமையிலான குழு இன்று சின்னமலம்பட்டியில் உள்ள சுடுக...ாட்டில் மீண்டும் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டது. அப்போது, முழு உருவம் கொண்ட எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்தும் அதே பகுதியில் தோண்டியபோது மேலும் ஒரு பெண்ணின் எலும்பு கூடு கிடைத்துள்ளது. இந்த இரு எலும்புக்கூடுகளையும் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் மதுரை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தோண்டிய குழியில் மேலும் ஒரு கால் தெரிந்திருக்கிறது. இன்று நேரமாகிவிட்டதால், நாளை மீண்டும் அந்த இடத்தை தோண்ட சகாயம் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

12042818_628008594007439_700800934185393

https://www.facebook.com/photo.php?fbid=628008594007439&set=a.277501782391457.1073741833.100003949126848&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒரு மாதிரி பிரச்சாரத்தை முடித்து விட்டார்:unsure: டெல்லி விளக்குமாறு கோஷ்டியும் அங்க இருந்ததா சொன்னாங்க அது உண்மையா ஜி:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.