Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் அட்டகாசத்திற்கு தீர்வு கோரி யாழில் முற்றுகைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இன்று  நடைபெற்ற மீனவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும், இதுவரையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, மாற்றுத் தொழில்களைச் செய்வதாக இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தும், அது நடைமுறைப்படுத்தப்படாமல், தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருகின்றனர்’ எனச் சுட்டிக்காட்டினார்.

‘சுண்டிக்குளம், தாளையடி, மயிலிட்டி போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டு அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற கட்டாயம் உள்ளமையால், இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது. இது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                  

                                  

 

http://www.onlineuthayan.com/news/400

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களுக்கு முதுகில் குறிவைத்து குறைந்தது 10 வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டும்.

இது மிக பெரிய பிரச்சனை ஆக உருவெடுத்து உள்ளதை அண்மையில் சென்றபோது அறிந்து கொண்டேன். எல்லை தாண்டி ட்ரோலர் இல் வந்து அள்ளி செல்வதாக கூறுகிறார்கள்.

எம்மிடம் ட்ரோலர் இல்லாததும் அரசினால் பெர்மிட் வழங்காததும் குறையாக உள்ளது

 

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவுகளாக இருந்தாலும் பல தசாப்தங்களாக சிங்களவனின் அடக்கு முறைக்கு உள்ளாகி நலிந்த எமது மீனவர்களின் வைத்தில் அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து வடக்கு முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் ஐயாவை தமிழ் நாடு முதல்வருக்கு ஒரு கடிதம் இந்த பிரச்னை தொடர்பாக எழுத சொல்லுங்கள். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தீவிரமாக தமிழக அரசிடம் எடுத்து செல்ல சொல்லுங்கள். இந்த மீனவர் பிரச்சனையில் ஒரு தவறான புரிதல் தமிழகத்தில் நிலவுகிறது. அதை போக்க வேண்டும். அப்பொழுது  தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும். அதை விட்டு விட்டு பிரச்சனையை வேறு திசைக்கு எடுத்து  செல்ல வேண்டாம்.

Edited by kanna123

இவ்வாறு வரும் மீனவர்களுக்கு சொந்தகாரர்களாக இருப்பவர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு (திமுக) உட்பட்ட பெரும் அரசியல்வாதிகள். நிறைய மீன்களை ஒரே நேரத்தில் பிடிச்சு  ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கும்  பேராசை காரணமாக  மீன்வளத்தினை முற்றாக அழிக்கும்  இரட்டை மடி வலை, ட்ரோலர் படகு போன்றவற்றின் உதவியுடன்  மீன் பிடிக்கின்றனர். . சர்வதேச சட்டங்கள் எந்த வலைகளை கொண்டு மீன் பிடிக்க கூடாது என்கின்றனரோ அவற்றை கொண்டே இவர்கள் எம் கடலிலும் இன்று மீன் பிடிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் தமிழக கடற்கரைகளில் மீன் பிடித்தமையால்தான்  அங்கு மீன்வளம் மிகவும் அருகியது. இதே நிலையை எம் கடற்பரப்புகளிலும் கொண்டு வருகின்றனர். மீன்வளம் அற்ற கடல்வளம் என்பது நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு எம் மீனவர் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இவர்களை மீண்டும் இவ்வாறு செய்யாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதாகும் மீனவர்களை நீதிமன்றத்தின் மூலம்  விடுவித்து விட்டு, படகுகளையும் மீன்வலைகளையும் மீண்டும் ஒரு போதும் ஒப்படைக்க கூடாது.  நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கும் போதும் கூட, இந்திய அல்லது தமிழக அரசின் மூலம் குறைந்தது 5 இலட்சம் ரூபாவினையாவது தண்டமாக ஒவ்வொரு மீனவர்களையும் செலுத்த உத்தரவு விட வேண்டும்.

 

 

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மீன் வளம் அழிந்தால் அது திரும்ப வர பல தசாப்தங்கள் ஆகும். கண்ணா123 சொல்வதுபோல தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

600 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கூட தமிழகத்தில் அதற்கெதிரான விழிப்புணர்வு எழவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில எதிர்ப்புகள் தோன்றியதே தவிர அதற்கெதிரான  காத்திரமான போராட்டமோ விழிப்புணர்வோ எழவில்லை. அப்படி இருக்க, இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றது என்பதையிட்டு அங்கு விழிப்புணர்வு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

இதில் பெரும் பண முதலைகளும், வியாபாரிகளும்   மத்திய / தமிழக அரசுகளின் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டு இருப்பதால் வடக்கு மாகாணசபை தமிழக அரசிடம் இதை கொண்டு சென்றாலும் பயன் ஏற்படப் போவதில்லை. இது வரைக்கும் இது தொடர்பாக பல மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை. விக்கி ஐயா தமிழகம் சென்ற போது இது தொடர்பாக பேசியதாகவும் செய்தி வந்துள்ளது

--
இந்துப் பத்திரிகையின் தமிழ் பிரிவுக்கான செய்தி ஆசிரியர் தமஸ் அவர்கள் மீன்வளம் எப்படி தமிழகத்தில் சூரையாடப்படுகின்றது, அதில் சம்பந்தப்பட்டுள்ள வியாபாரிகள் / அரசியல்வாதிகள் பற்றி தொடர் ஒன்றை  எழுதி வந்தார். அதை யாழிலும் ஆதவன் தொடர்ந்து இணைத்து வந்தார். இத் தொடர் 'கடல்' என்ற பெயரில் புத்தகமாகவும் வந்துள்ளது  அதை வாசித்தவர்களுக்கு புரியும் கடல்வளம் எப்படி பேராசை காரணமாக  திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றது என்று. இதே நிலை தான் எம் கடற்பரப்புகளுக்கும் வரப்போகின்றது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மை.

ஆனால் மீனவர்களை பிடித்து தண்டிப்பதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமானால் எப்போதோ தீர்ந்திருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கும் செம்மர கடத்தல் பிரச்சினைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. பெரிய முதலாளிகள் கூலித் தொழிலாளர்களை வைத்து வியாபாரங்களை நடத்துகிறார்கள். கூலித் தொழிலாளர்கள் இறந்துபோனால் வேறு கூலித் தொழிலாளர்கள் அந்த இடத்தை நிரப்புவார்கள்.

யாழ்பாணத்தில் இன்று நடந்த மீனவர்களின் பேட்டி பார்த்தேன் .

இங்கு எழுதுபவர்களை நினைக்க ------ வேண்டாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

பருத்தித்துறை முனை பகுதில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்றைய தினம் காலை போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

 
இந்திய இழுவை படகுகள் அத்துமீறி உள்நுழைந்து பருத்தித்துறை மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும்,  வலைகளையும் அறுத்து நாசமாக்கியும் வருகின்றது.
 
இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை முனைப்பகுதி கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இழுவை படகுகள் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து நாசமாக்கி யுள்ளனர்.
 
அது தொடர்பில் உடனடியாக முனை பகுதியில் உள்ள கடற்படை முகாமில் மீனவர்கள் முறைப்பாடு செய்த போதும் அவர்கள் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவித்தே மீனவர்கள் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினார்கள்.
 
மீனவர்களின் முறைப்பாட்டை மேலிடத்திற்கு தெரியபடுத்திய போதும் மேலிடம் அனுமதி அளிக்காததால் தான் தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
 
கடற்படை முகாமை முற்றுகையிட்டு மீனவர்கள் நடாத்திய போராடத்தை அடுத்து அப்குதிக்கு வந்த பொலிசார் மீனவர்களுடன் சமரசம் பேசி போராட்டத்தை கைவிட கோரினார்கள்.
 
அதனை அடுத்து மீனவர்கள் கடற்படைக்கும் பருத்தித்துறை பொலிசாருக்கும் எழுத்து மூல முறைப்பாட்டை கொடுத்ததுடன், இந்திய இழுவை படகின் அத்துமீறல்களை கண்டித்து எதிர்வரும் 23ம் திகதி மாபெரும் கண்டன  போராட்டத்தை முன்னெடுப்பது என்ற முடிவுடன் போராட்டத்தை கைவிட்டனர்.
 
போராட்டம் தொடர்பில் பருத்தித்துறை கடற்தொழிலாளர் சமாச தலைவர் எஸ்.அருள்தாஸ் கருத்து தெரிவிக்கையில், 
 
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் இப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் 50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகின் அத்துமீறல்களால் அறுக்கப்பட்டு உள்ளது.
 
இதுவரை அதற்குரிய நஷ்டஈடு எதுவும் தரப்படவில்லை. இன்றைய தினம் அதிகாலை இந்திய இழுவை படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்புக்குள் மீன் பிடித்ததுடன் எமது மீனவர்களின் வலைகளை அறுத்தும் படகுகளை சேதப்படுத்தியும் உள்ளனர். அது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை அதனாலையே கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினோம்.
 
அத்துடன் எதிர்வரும்  23ம் திகதி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து உள்ளோம் என தெரிவித்தார்.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124077/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.