Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mena_map.jpg

தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள்.

அன்பான.... யாழ்கள உறவுகளே,
நான் சென்று வந்த துனீசியா... பயண அனுபவங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இது பயணக் கட்டுரை அல்ல, தனிப்பட்ட... நானும், எனது குடும்பத்தினரும்  சந்தித்த அனுபவங்கள் மட்டுமே.
பயணக் கட்டுரை என்பது, அந்த நாட்டைப் பற்றிய வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களுக்கானது.
இது, அது அல்ல.....எமது அனுபவம். 

காலமும், பயணக் களைப்பும் விடு பட்ட உடன்... உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அன்புடன்,
தமிழ் சிறி.:)

 

  • Replies 104
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம், ஒரு சுற்றுலா செய்ய வேண்டும் என்று... மனம் சொல்லிக் கொண்டே... இருந்தது.
எங்கே.... போகலாம் என்று, யோசித்த போது.... பல நாடுகள் கண் முன்னே.. தோன்றி, வா.... வா... என்று அழைத்தாலும்,
சிலோனுக்கு போகப் பயமாயிருந்தது. ஏனெண்டால்.... என்னை புலி என்று 4´ம் மாடிக்கு கூட்டிக் கொண்டு போனால்... வெளியிலை வர சான்சே... இல்லை.
அடுத்த தெரிவில்.... பல்கேரியா, எகிப்து, துனிசியா போன்ற நாடுகள் எனது விடுமுறைக்கு சாதகமாக இருந்த நாடுகள்.

ஐந்து நட்சத்திர விடுதியில், ஐந்து பேர் தங்குவதற்கு ஏற்ற வசதியுடன்.... துனிசியா நாட்டை தெரிவு செய்த போது....-
உள் வீட்டிலிருந்து, ஒரு எதிர்ப்பு குரல் கிளம்பியது.

எழுதுங்கள் அண்ணா எழுதுங்கள். வாசிக்கக் காத்திருகின்றோம் .....

  • கருத்துக்கள உறவுகள்

ஓடோடி வந்த எங்களை ஏமாத்தி போடாதீங்க

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம், ஒரு சுற்றுலா செய்ய வேண்டும் என்று... மனம் சொல்லிக் கொண்டே... இருந்தது.
எங்கே.... போகலாம் என்று, யோசித்த போது.... பல நாடுகள் கண் முன்னே.. தோன்றி, வா.... வா... என்று அழைத்தாலும்,
சிலோனுக்கு போகப் பயமாயிருந்தது. ஏனெண்டால்.... என்னை புலி என்று 4´ம் மாடிக்கு கூட்டிக் கொண்டு போனால்... வெளியிலை வர சான்சே... இல்லை.
அடுத்த தெரிவில்.... பல்கேரியா, எகிப்து, துனிசியா போன்ற நாடுகள் எனது விடுமுறைக்கு சாதகமாக இருந்த நாடுகள்.

ஐந்து நட்சத்திர விடுதியில், ஐந்து பேர் தங்குவதற்கு ஏற்ற வசதியுடன்.... துனிசியா நாட்டை தெரிவு செய்த போது....-
உள் வீட்டிலிருந்து, ஒரு எதிர்ப்பு குரல் கிளம்பியது.

அடுத்து...............................விரைவில் தொடருவீங்கள் என்று எதிர் பார்க்கிறோம்..

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் தமிழ் , உங்களின் அனுபவங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்...!

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயணங்களும்....,

புதிய அனுபவங்களும்..,

ஆகாயத்தில் நீந்தும் பறைவையாக,

உனை மாற்றிவிடுகின்றன!

அனுபவங்களின் தொகுப்புத் தானே..

வாழ்க்கையெனும் புத்தகமாகின்றது!

எம்முடனும் பகிர்ந்திடு...!

நாங்களும் பறவைகளாகுவோம்!<_<

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிா்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறொம். தொடருங்கள் தமிழ்சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐந்து நட்சத்திர விடுதியில், ஐந்து பேர் தங்குவதற்கு ஏற்ற வசதியுடன்.... துனிசியா நாட்டை தெரிவு செய்த போது....-
உள் வீட்டிலிருந்து, ஒரு எதிர்ப்பு குரல் கிளம்பியது.

அதாரப்பா வீட்டுக்குள்ளே இருந்து எதிர்ப்பைக் காட்டியது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.tw_blush:
தொடருங்கள் தமிழ் சிறி அண்ணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்விற்கும், ஊக்கம் தந்த.... மீரா, யாயினி, சேர்வயர், நிழலி, இசைக்கலைஞன், நந்தன், சுவி, புங்கையூரான், காவலூர் கண்மணி அக்கா, வாத்தியார் ஆகியோருக்கு நன்றி.  :) 

நாங்கள் போவதற்கு திட்டமிட்ட  இடத்திலிருந்து, 20 கிலோ மீற்றர் தொலைவில் தான்... இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த உல்லாசப் பிரயாணிகள் 40 பேரை, தீவிர வாதிகள் சுட்டுக் கொன்று இருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் இங்கிலாந்து, அமெரிக்க நாட்டவர்கள். இருவர் ஜெர்மன் நாட்டவர். அந்த குண்டுத் தாக்குதலின் அச்சம் காரணமாகவே... மனைவி அங்கு போவதை எதிர்த்தார். அத்துடன் கடந்த மார்ச் மாதமும், உல்லாசப் பயணிகள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில், 20 உல்லாசப் பிரயாணிகள் பலியானது சிறிது அச்சமாக இருந்தாலும், எங்கு தான்... பாதுகாப்பான நாடு என்று, சமாளித்து... அசட்டுத் துணிவுடன், விமான ரிக்கற்றை முற்பதிவு செய்து விட்டேன்.  இந்த தாக்குதலின் பின்... இங்கிலாந்து, அமெரிக்க அரசாங்கங்கள் தமது நாட்டு மக்களை துனிசியாவிற்கு போவது பாதுகாப்பற்றது என்று எச்சரித்த பின் அவர்கள் அங்கு போவதை நிறுத்தி விட்டதால், துனிசிய உல்லாசப் பிரயாணிகளின் வரவு மிகவும் குறைந்து விட்டதால்.... பல விமான நிறுவனங்கள், தமது சேவையை பாதியாக குறைத்து விட்டது. ஹோட்டல்களின் விலையும் அப்படியே.

சென்ற வருடம் இதே மாதத்தில்... ஒரு கிழமைக்கு, விமான ரிக்கற், ஹோட்டல் வசதி, மூன்று நேர உணவு வசதி, நீச்சல் குளம், கடற்கரைக்கு அருகில்  போன்ற வற்றுடன் 950€ வரை ஒருவருக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்த வருடம் 11 நாளுக்கு எல்லா வசதிகளுடனும், 420 € மட்டுமே. இந்தச் சான்சை விட்டால்.... திரும்ப கிடைக்காது என்று, ரிக்கற்றை பதிவு செய்து விட்டேன்.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உல்லாசப் பிரயாணம் மேற்கொள்ளும் தருணங்களில், குறைவாக எடையுள்ள சூட்கேசுடன்  போவது தான் எனக்குப் பிடித்ததும் சௌகரியமானதும். அதனால்.... சூட்கேஸ் அடுக்க முன்பே, இதனை கண்டிப்பாக வீட்டில் தெரிவித்து விட்டேன். ஒரு டெனிம் நீளக் கால்சட்டை. 2 அரை கால்சட்டை (பெர்முடா), 5 மெல்லிய பருத்தி ரீ சேட், மூன்று நீச்சல் உடை (எனக்கு நீந்தத் தெரியாவிட்டாலும், கடலுக்குள் இறங்க இது கட்டாயம் தேவை):) விமாத்தில்   பயணிக்கும் போது பாவிக்க  இரண்டு சோடி சொக்ஸ், இரண்டு சாரம் (சாரம் கட்டாமல் படுத்தால், எனக்கு நித்திரை வராது.) வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல மட்டும் ஒரு மொத்த சுவெற்றர். கடற்கரையில் விரித்துப் படுக்க  இரண்டு நீளமான துவாய்  இவற்றுடன் எனது பயணப் பொதி நிறைவு பெற்றது. மற்றவர்கள் ஆளுக்கு ஒரு சூட்கேசுடன் அதிக உடுப்புடன் இருந்ததை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து... மூன்று  சூட்கேசுடனும், ஆளுக்கு ஒரு Ruck Sack உடனும் எமது பயணம் ஆரம்பமாகியது. ரயில் நிலையம் 15 நிமிட நடை தூரம் என்ற படியால்... சில்லு பூட்டின   சூட் கேசை இழுத்துக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்து, அங்கிருந்து மெற்றோ ரயிலில்  விமான நிலையம் சென்றடைந்து எமது பொதிகளை கொடுத்து விட்டு எமது விமானத்தில் ஏறி அமர்ந்தோம். 

வட ஆபிரிக்காவில் உள்ள, துனிசியாவிற்கு இரண்டு மணித்தியால விமானப் பயணம் என்பதால்....  பிரயாணக் களைப்பு இருக்கவில்லை. அங்கு இறங்கியவுடன் எமது பிரயாண முகவர் ஒழுங்கு செய்த ஆள், எமது பெயரை எழுதிய மட்டையுடன், எம்மை விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதற்காக ஒரு பஸ்ஸுடன் காத்திருந்தார். விமான நிலையத்திலிருந்து எமது கொட்டல் இரண்டு மணித்தியால தூரம் என்று சொல்லிய போது, எனக்கு.... போகும் வழியில் நாட்டை பார்த்துக் கொண்டு செல்லலாம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. போகும் வழி எங்கும்... பொலிஸ், அதிரடிப் படை, இராணுவம் என்று செக் போஸ்ற்றுடன் காவல் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். எமது உல்லாசப் பிரயாண பேருந்து என்ற படியால்.... எம்மை மறிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் இதே மாதத்தில்... ஒரு கிழமைக்கு, விமான ரிக்கற், ஹோட்டல் வசதி, மூன்று நேர உணவு வசதி, நீச்சல் குளம், கடற்கரைக்கு அருகில்  போன்ற வற்றுடன் 950€ வரை ஒருவருக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்த வருடம் 11 நாளுக்கு எல்லா வசதிகளுடனும், 420 € மட்டுமே. இந்தச் சான்சை விட்டால்.... திரும்ப கிடைக்காது என்று, ரிக்கற்றை பதிவு செய்து விட்டேன்.:grin:

உங்கள் மனைவியாரின் அபிப்பிராயத்தை 'வீட்டோ' செய்யும் அதிகாரம் உங்களிடம் இன்னும் உள்ளது கண்டு மிகவும் பெருமையாக உள்ளது!:mellow:

மேலுள்ள கருத்து... நீங்கள் இரு மரபும் துய்ய, சைவ வேளாண்குடித் தமிழன் என்பதை, ஐயம் திரிபட உறுதிப்படுத்துகின்றது!:cool:

ம்ம்ம்... தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக தொடருங்கள் .....
துனிசியா போக இருப்பவர்கள் 
போக விரும்புகிறவர்களுக்கு கொஞ்சம் வசதியாக 
தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்வுடன், ஊக்கமும் தந்த... நுணாவிலான், அர்ஜுன், நந்தன், யாயினி, புங்கையூரான், மருதங்கேணி ஆகியோருக்கு நன்றி.:)

எமது பேரூந்து..... ஹோட்டல் வாசலை அடைந்த போது மாலை ஆறு மணியாகி விட்டது. இலங்கைப் போல காலை ஆறு மணிக்கு விடிந்து, மாலை ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனமாகி விடும். ஹோட்டல் வாசலிலும், இராணுவம் நிரந்தரமாக காவல் கடைமையில் இருந்ததால்... பயப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பேரூந்திலிருந்து எமது பொதிகளை இறக்கி, வரவேற்பாளர் வரை கொண்டு சென்று விட, அங்குள்ள ஊழியர் உதவி புரிந்தார். வரவேற்பாளரிடம் எமது அறைக்குரிய திறப்புக்ளை பெற்றுக் கொண்ட நேரத்தில்... 15 நிமிடம் அளவில் அவர் அங்குள்ள சில நடைமுறைகளை விளக்கினார். முக்கியமாக தனியே... வெளியே கடைகளுக்குப் போகும் போது..... அங்குள்ளவர்களிடம் அரசியல் கதைக்க வேண்டாம் என்றும் (நான்... யாழ் களத்தில், அரசியல் கதைப்பது அவருக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு......:grin:), கடையில் கூறிய விலையில்..... கால்வாசி  விலை கேட்டு பொருட்களை பேரம் பேசி வாங்கும் படி கூறியது பெரிதும் உதவியாக இருந்தது.

எமது அறையை காட்டுவதற்கும், பொருட்களை கொண்டு சென்று வைக்கவும்.... இன்னுமொரு ஊழியர் உதவி புரிந்தார். அவர்களுக்கு சிறிது பணத்தை கொடுத்த போது.... சந்தோசமாக ஏற்றுக் கொண்டார்கள். இப்போ பசி வயிற்றை கிள்ளியதால்..... முகத்தை கழுவிவிட்டு, கீழே அமைந்துள்ள  உணவுச் சாலையை  நோக்கி  சாப்பிட புறப்பட்டோம். போகும் வழியிலேயே.... பல முகவர்கள் எம்மை மடக்க காத்திருந்தார்கள். அதில் முதலாவதாக துனிசியா  மசாஜ்காரன் குறி வைத்து எம்மை பிடித்து விட்டான். நான், துருக்கி மசாஜ்க்குப் பிறகு.... இனி தாய்லாந்துப் பக்கம் போய் தான், மசாஜ் செய்யும் கடுமையான முடிவு எடுத்திருந்தது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால்.... அவனை காய் வெட்டிக் கொண்டு, போக.... மற்ற ஒருத்தன் எம்மை வழி மறித்து.... ஒட்டகச் சவாரி, குதிரை வண்டில் சவாரி, துனிசியா கிராமத்தில் பழைய முறையில்... பாண் (றொட்டி) தயாரிக்கும் முறையை நேரில் செய்து காட்டும் நிகழ்வுடன் ஒருவருக்கு 20 € என்பதால், அதற்கு சம்மதித்து ஒரு நாளை ஒதுக்கினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிா்வுக்காக ஆவலுடன் காத்திருகின்றேன்.

தொடருங்கள் தமிழ்சிறி.

நானும் துனிசியாவுக்கு போற எண்ணம் உள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிா்வுக்காக ஆவலுடன் காத்திருகின்றேன்.

தொடருங்கள் தமிழ்சிறி.

நானும் துனிசியாவுக்கு போற எண்ணம் உள்ளது . 

அவசரப் படாதீர்கள் தமிழரசு...!  துனிசிக்கு மனிசியோட போன தமிழ்சிறி இப்பத்தான் ஹோட்டலுக்க நுழைந்திருக்கிறார். இனித்தான் பிக்கல், பிடுங்கள் எல்லாம் இருக்கு. இதுக்குள்ள மசாஜ் பண்ணுறவர், ஒட்டகம், குதிரை எல்லாம் இப்பதான் என்ரர் ஆகியிருக்கு. எதுக்கும் இன்டவெல்லுக்குப் பின் துனிசியா,  காசியா திறம் என்டு பார்த்து டிக்கட் போடலாம்...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமும், கருத்தும் தெரிவித்த.... யாயினி, தமிழரசு, நந்தன், அன்புத் தம்பி, புங்கையூரான், ராசம்மா, காவலூர் கண்மணி அக்கா, தமிழினி, சுவி ஆகியோருக்கு நன்றி.:)

இரவு சாப்பாட்டிற்கு, உணவு சாலையை அடைந்த போது.... பிரமாண்ட உணவகமாக இருந்தும், அரைவாசி கதிரைகள் வெறுமையாகவே இருந்தன. அதிலும்.... பல நாடுகளிலும் பாடசாலை விடுமுறை முடிந்து, மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகி விட்டதால்... இளையோரை காண முடியவில்லை. பெரும் பாலானோர்  பிரான்ஸ், ஜெர்மன் நாட்டவர்களாகவே இருந்தனர். ஆங்கிலம்  பேசுபவர்களை மருந்துக்கும் காண முடியவில்லை. வழக்கமாக இப்படியான சுற்றுலா   பிரதேசங்களில்.... இங்கிலாந்து, அமெரிக்க நாட்டவர்களும் கணிசமாக இருப்பார்கள். தீவிர வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன். 

சாப்பாடு Buffet முறையில் நாமே தெரிந்து எடுத்து சாப்பிடும் வசதியுடன் அமைந்து இருந்தது. இறைச்சி, மீன் வகை, மரக்கறி, என்று பல வித தெரிவுகளுடன் இருந்தது. சாப்பாட்டில் அவர்களின் மசாலா கலந்து தயாரித்தமை மிக வித்தியாசமான சுவையுடன், வாய்க்கு ருசியாக  இருந்தது.  சாப்பாட்டின் பின் பல வித Dessert  இருந்தாலும், வட்டில் அப்பம் ஒன்றை எடுத்து சுவை பார்த்தேன். இலங்கையில் உண்ட வட்டிலப்பத்தை விட மிகவும் வித்தியாசமான சுவையுடன் அமைந்து இருந்தது. முஸ்லீம்கள் உணவு தயாரிப்பதில் கெட்டிக்காரர்கள் என்பதை துனிசீயாவிலும் நேரில் கண்டேன்.

உணவு முடிந்த பின்... ஹோட்டலில் உள்ள திறந்த வெளி மேடையில்... தினமும் ஒரு  துனிசிய கலை நிகழ்ச்சி, மந்திர வித்தை, நகைச்சுவை, இசை நிகழ்ச்சிகள் நடை பெறும் என்பதை அங்குள்ள அறிவித்தல் பலகையில் எழுதியிருந்ததை அறிந்து கொண்டு திறந்த வெளியில்.... கடல் காற்றுப் பட இருப்பது நல்ல சுகம் என்பதால்... அந்த இடத்தை நோக்கிச் சென்ற போது.... அங்கு துனிசியா வயிற்றை காட்டும் நடனத்தை அழகிய பெண்கள் ஆடிக் கொண்டு இருந்தார்கள். எம்மை அங்கு வேலை பார்க்கும்  ஒருவர் மேடைக்கு முன் உள்ள இருக்கையில் அமர்த்தி விட்டார். நிகழ்ச்சி நன்றாக இருந்ததால்.... நேரம் இரவு  11 மணியானது தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன்.... அங்கிருந்த அறிவிப்பாளர், தனது பாட்டிற்கு இந்தியாவில் இருந்து புதிதாக இன்று தமது ஹோட்டேலுக்கு வந்திருக்கும் எம் ஐந்து பேருக்கும் கரகோஷம் தெரிவித்து வரவேற்கும் படி மற்றைய சுற்றுலாப் பயணிகளை வேண்டிக் கொண்டவுடன்... இது என்ன கரைச்சலாய்க் கிடக்கு என்ற அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நன்றியை தெரிவித்தேன். இந்த, இந்தியா.... பிரச்சினை அடுத்த பல நாட்களும் தொடர்ந்து வரப் போகுது என்று அறியாதவராக படுக்கைக்கு சென்றோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் படங்களை பேஸ்புக்கில் ஏற்றிப் போட்டு பின் அங்கிருந்து இங்கு சுலபமாய் இறக்கலாம் என நினைக்கின்றேன்...!

நான் முந்தைய யாழில் img= எல்லாம் அடித்து பதியிறது, இப்ப சுலபமாய் சூரியின் வலது பட்டனில் கொப்பி  எடுத்து பின் நேரடியாய் இங்கு கொலியர் பண்ண சுகமாய் இருக்கு...!

நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் சிறி அண்ணா........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2dub975.jpg

28l8v7.jpg

o9fyna.jpg

2en6tfm.jpg

k2k6mq.jpg

avmnfp.jpg

25012z7.jpg

vn1kr5.jpg

2n19v09.jpg

ezeqlj.jpg

fjqm89.jpg

2e3afdd.jpg

mmy05z.jpg

j8z783.jpg

21dlc2b.jpg

15n6crn.jpg

2mcisz6.jpg

fo38sy.jpg

rh5og4.jpg

309828w.jpg

2vlsd90.jpg

25sa4vo.jpg

t55fmo.jpg

வாத்தியார் தந்த http://de.tinypic.com/ இந்த இணைப்பின் மூலம் படம் சுலபமாக இணைக்கக் கூடியதாக இருந்தது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றியண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நல்லா இருக்கு ....
கடற்கரை காட்சிகள் ஆதாரம் இல்லாமல் அநாதரவாக இருக்கிறது.

கொஞ்சம் குளிர்ச்சியா இணையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நல்லா இருக்கு ....
கடற்கரை காட்சிகள் ஆதாரம் இல்லாமல் அநாதரவாக இருக்கிறது.

கொஞ்சம் குளிர்ச்சியா இணையுங்கள். 

இந்தாங்கோ... மருது !

இப்ப கொஞ்சமாவது குளிர வேணுமே...!:mellow:

barbados-muslim-women-veil.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, ஊக்கம் தந்த உறவுகளான..... சபேஷ், யாயினி, தமிழினி, வாத்தியார், தமிழரசு, அர்ஜுன், நந்தன், புங்கையூரான், சுவி, மருதங்கேணி  ஆகியோருக்கு நன்றி.:)

அடுத்த நாள் காலை 6 மணிக்கு எழும்பி விடுதி பல்கனியிலிருந்து பார்க்க கடலும், சூரிய உதயமும் அழகான காட்சிகளாக தெரிந்தது. 7 மணியளவில்  உணவை அருந்தி விட்டு... வந்த முக்கியமான வேலையாக, கடலில் குளிக்க புறப் பட்டோம். ஹோட்டலில் இருந்து 5 நிமிட நடையில் கடற்கரை மிக அருகே இருந்தது இரட்டிப்பு சந்தோசம். கடற்கரையை அடைந்ததும்... கடல் மிக அமைதியாக, தெளிந்த தண்ணீருடன், அரை கிலோ மீற்றர் அளவுக்கு நடந்து போகும் இடுப்பளவு தண்ணீரில் இருந்தது. கடற்கரை மணலும், பவுடர் போல் கல்லுகள் அற்று காணப் பட்டது. அங்கும்.... இரு பொலிசார் காவலுக்கு இருந்தார்கள். எமது ஹோட்டலுக்கு ஒதுக்கப் பட்ட நீச்சல் பகுதியிலுள்ள காவலாளியிடம் சூரிய குளியல் எடுக்க, சாய் மனைக் கதிரையுடன், படுக்கக்  கூடிய வசதியுடன் கதிரைகளையும், ஒரு கொட்டிலையும் ஒழுங்கு படுத்திவிட்டு கடலில் இறங்கி விட்டோம். கடல் நீர் உடம்புக்கு இதமான சூடாக இருந்தது. பிள்ளைகளின் நீச்சலடிப்பையும், அவர்களின்  குதூகலத்தையும்  மனதில் ரசித்துக் கொண்டு.... நெஞ்சளவு  தண்ணீரில் நின்ற படி, எனது குளியல் இருந்தது. காலுக்கு அருகில்.... கையளவு பெரிய மீன்களும், நண்டுகளும் ஓடித் திரிந்தன. 

அது... சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கப் பட்ட பகுதி ஆகையால்.. ஊள்ளூர் மக்களை அதிகம் காண முடியாவிட்டாலும் , ஒரு சில உள்ளூர் வாசிகள், சிறிய தூண்டிலில் மீன்  பிடிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சிலர் கடலுக்கு அடியே பார்க்கும் கண்ணாடி, மூச்சு எடுக்க சிறிது நீளமான குழாய் போன்றவற்றுடன் கடலில் ஆழமான பகுதிக்குச்  சென்று, பெரிய கணவாயுடன் திரும்பி வந்தார்கள். நான் கடலில் குளிப்பதும், கரையில் வந்து சூரியக் குளியல் எடுத்து... உடம்பில் விற்றமின் "டி" ஏற்றுவதில் குறியாக இருந்தேன். :grin:

கடற்கரையில் இருக்கும் போது.... மாலை, கையிற்கு கட்டும் காப்பு, தலைக்கு கட்டும் துணி என்று சில வியாபாரிகள் தொல்லை கொடுப்பார்கள். அவர்களுடன் பேச்சு கொடுத்தால் கட்டாயம் வாங்க வைத்து விட்டுத்தான் அவ்விடத்தை விட்டு நகர்வார்கள். தெரியாத்தனமாக இப்பிடி  ஒருவன் ஹலோ... என்று சொன்ன போது... நான்... எனக்கு இது வேண்டாம் என்று சொல்லி தலையாட்டிய  போது.... நான் ஹலோ சொன்னதுக்கு, நீ ஹலோ சொல்லாமல் வேண்டாம் என்கிறாய் என்று பேச்சு தொடர்ந்து.... கடைசியில், எனக்கு  ஒன்றுக்கும் உதவாத தலைக்கு "சேக்"  கட்டும் வெள்ளை  துணியையும், அது  பறக்காமல் இருக்க கட்டும் மாலை போன்ற ஒன்றையும் எனது தலையில் கட்டி விட்டு 5 € வாங்கிக் கொண்டு போனது அவமானமாக இருந்தது. அதற்குப் பிறகு இப்படியான வியாபாரிகள் வந்தால்.... கவனிக்காமல் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டேன். ஹலோ... சொன்னால், 5 € நட்டம் ஏற்படும். மற்றவர்கள் கடலுக்குள்  நின்றதால்.... 20 € லாபம் என்று மனதை  திருப்திப் படுத்திக் கொண்டேன்.:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாங்கோ... மருது !

இப்ப கொஞ்சமாவது குளிர வேணுமே...!:mellow:

barbados-muslim-women-veil.jpg

அதுக்காக .... 
இப்படி ஐஸ் கட்டிகளையே தூக்கி தலையில் கொட்டுவதா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.