Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் - சுமந்திரன்

26 அக்டோபர் 2015

தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் - சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டமொன்றை நடாத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்த அரசியல் கைதிகளையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125257/language/ta-IN/article.aspx

ஐ...........சுமத்தி போராட்டம் என்கிறார்...............

  • கருத்துக்கள உறவுகள்

ஐ...........சுமத்தி போராட்டம் என்கிறார்...............

அவர் சொல்லுறதிலயும் விசயம் இருக்கு கண்டியளோ..........ஆனால் அதற்காக அவர் தான் "தல" என்று விழுந்து கும்பிடகூடாது ,அவரையும் விமர்சிக்க வேணும் அப்பதான் அவருக்கு ஒரு இது வரும்...

அவர் சொல்லுறதிலயும் விசயம் இருக்கு கண்டியளோ..........ஆனால் அதற்காக அவர் தான் "தல" என்று விழுந்து கும்பிடகூடாது ,அவரையும் விமர்சிக்க வேணும் அப்பதான் அவருக்கு ஒரு இது வரும்...

 

நிச்சயமாக, அவரில் எனக்கு பிடிக்காத விடயம் என்னவென்றால் ஈழஆதரவாளர்களை தூக்கிஎறிந்து நடப்பது.
எல்லாரும் ஈழவிடுதலைக்காக போராடுபவர்கள். படித்தவர், படிக்காதவர், பணக்காரர், பணமில்லாதவர் என பலதரப்பட்டவர்கள் தமது நேரத்தை இதற்கு ஒதுக்கும்போது அவர்களை மதித்து நடக்கவேண்டும் (இதில் தேசத்துரோகிகளை சேர்த்துப்பார்க்க வேண்டாம்).

இந்தா எல்லாத்தையும் தண்ட அறிவால பெற்றுதருவன் என்றார் இப்ப போராட்டம் என்கிறார்...இதையே தான் கேட்டுக்கேட்டு களைச்சு மற்றவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். போரட்டம் நடத்துவர்களை பார்த்து நெளித்தவர் குறுகியகாலத்திலே தான் செய்ய முயலுகின்றார்.

Edited by Surveyor
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

ஐ...........சுமத்தி போராட்டம் என்கிறார்...............

பாலுக்கும் கவலாக, பூனைக்கும் தோழனாக இருந்து, சிங்கக்கொடி பிடிப்பதும், அதே சிங்கத்தின் அரசுக்குக் காலக்கெடு விதிப்பதும், போராட்டம், உண்ணாவிரதம் என்று மிரட்டுவதும், எச்சரிக்கை விடுவதும், தந்தை செல்வாவின் பின்பு வந்த தமிழரசுக்கட்சியின் பிரதான அரசியல்வாதிகளின்  அடிப்படைக் கொள்கை.:grin: 

அதில்போய்க் கை வைக்கலாமா....? :shocked: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையள் கடைசியாய் ஒரு தவணை சொன்னவையள். அதுமட்டும் பொறுத்திருந்து பாப்பம்.:mellow:

அசரீதி:-  டாய் குமாரசாமி சொன்ன தவணைக்கு செய்யாட்டி என்னடா செய்வாய்?

குமாரசாமி:- அப்பவும் ஒரு தவணை சொல்லுவினம் அண்ணே

அசரீதி:- ?????????

  • கருத்துக்கள உறவுகள்


மனோ கணேசனுடனான பேச்சுவார்த்தையில் கைதிகளை விடுதலை செய்வதாக ரனில் சொல்லியுள்ளார், பார்க்கலாம்,

Edited by nunavilan
spelling

  • கருத்துக்கள உறவுகள்

Supermoon Oct. 26-27, 2015: Year's last supermoon, a Hunter's Moon, in tonight's sky

இந்த செய்தியை இன்னொரு தளத்தில் படித்துவிட்டு இங்கு வந்தேன் 
செய்தி இப்படி இருக்கிறது .....

தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் - சுமந்திரன்
இரண்டிற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.