Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைவம்

அன்பே சிவம்

என்கின்றன

கழுவேற்றப் பட்ட

எண்ணாயிரம்

சமணர்களின் உடல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எந்தக் கவிதை எழுதினாலும் முதல் வாழ்த்து கறுப்பியக்கவிடம் இருந்துதான் வருகிறது. மனமார்ந்த நன்றிகள் அக்கா. ஆனால் ஒரு சந்தேகம்

உண்மையாகவே இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ சார் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டிங்களே.

கவிதை பிடித்ததால் பிடிப்போடு பதித்தேன் கருத்தை.

சைவர்களுக்கும் சமணத் துறவிகளுக்கும் ஏற்பட்ட வாதங்களில் சமணர்கள் தோற்றதனால் கழுவேற்றப் பட்டு கொலை செய்யப்பட்டதை அழகாய் சொல்கிறது உங்கள் சின்னஞ்சிறு கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவம்

அன்பே சிவம்

என்கின்றன

கழுவேற்றப் பட்ட

எண்ணாயிரம்

சமணர்களின் உடல்கள்.

தட்டுங்கள் திறக்கப்படும்..

உடல்களே

உங்களின் குரல்

சிவன் காதில்...

அன்பே உருவானவன்

அன்பை அளிப்பான்

உயிரைப் படைப்பான்.

பிழையறிந்து

கழுவில் ஏறியதற்காக. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தர்களையும், முனிகளையும் கொன்ற பாவம்,

கழுவேறிக் கழித்துக் கொண்டார்கள்.

அன்பே சிவம் என்பது உண்மை தான்!

அது நாயவஞ்சகர்களுக்கல்ல!

Link to comment
Share on other sites

உயிர்களைக் கொல்லாதீர்

என்றார் கொவுத்தமர்

'தமிழர்களை' அல்ல.

-ஒரு 'இன' வெறியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமெல்லாரும் இந்து சமயத்துக்கு மதம் மாற்றப்பட்டோம் என்று கேள்விப்பட்டனே.. அதற்கு முதல் தமிழர்கள் தழுவியிருந்த மதம் எது..? இயற்கை வழிபாடா..? அல்லது மாடாசாமி வைரவ சாமி இது போன்ற சிறு தெய்வ வழிபாடா..

தமிழருக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத சமஸ்கிருதம் எப்படி வந்து குந்தியது.. கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தங்களது மத அனுட்டானங்களை நல்ல தமிழில் மாற்றி அதுவும் அழகான தமிழில் செய்கிறார்கள்..

சைவர்களும் ஏன் சிலமாற்றங்களை தமது மதத்தில் செய்ய முடியாது. முக்கியமாக வழிபாடுகளை தமிழில் செய்வதும் வேண்டுதல்களை தமிழிலும் செய்து இறை வழிபாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியவாறு..

Link to comment
Share on other sites

வீட்டுக்குள் கறையான் புற்று

புற்றை இடித்துவிட்டேன்

அறிவு

வீட்டுக்குள் கறையான் புற்று

நான் வெளியேறிவிட்டேன்

பகுத்தறிவு

Link to comment
Share on other sites

வீடு குடியிருக்க,

சைவம், புற்று?

அறிவு

தேடல்,

தேடிய அறிவை,

பகுப்பது பகுத்து அறிவது.

பகுத்து அறிவது

சிந்தனை சிறக்க.

சிந்தனை சிறப்பதால்

சிறக்கும் மானிடம்.

பகுத்தறிவற்றவன்

மூடன் ஆவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறிச் சிந்தனைக்கும்,

வெட்டி வீழ்த்தும் வார்த்தைகளுக்கும்,

படிப்பறிவில்லாதவன் பகுத்தறிவு என்றான்.

பாய்ந்தடித்து,

பக்குவமைந்தனரம் நம்மவர்!- பகிடியாக இல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு வாழ்த்துச்சொல்ல வந்தேன்

கடிபடும் மனிதர்களின்(?) கருத்துக்களின்

இரத்த துளியோடு திரும்பி செல்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குள் கறையான் புற்று

புற்றை இடித்துவிட்டேன்

அறிவு

வீட்டுக்குள் கறையான் புற்று

நான் வெளியேறிவிட்டேன்

பகுத்தறிவு

சபாஸ்!

நல்லா இருக்கே சோதரா! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.