Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஸ்வர்யா ராய் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராய் திருமணம்

ஐஸ்வர்யா ராய் திருமாலின் அம்சத்தை மணக்கிறார்

newsly5.jpg

  • Replies 82
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
dn091206e112cn2yz3.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு முக்கிய விசயம் அந்தச் செய்தியில் சொல்லப்படல்ல....கடுப்பி அக்காதானாம் ஐஸ்வரியாக்கு பொம்பிளத் தோழி...! :P :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு முக்கிய விசயம் அந்தச் செய்தியில் சொல்லப்படல்ல....கடுப்பி அக்காதானாம் ஐஸ்வரியாக்கு பொம்பிளத் தோழி...! :P :icon_idea:

திருஷ்டி பொட்டு வைக்க வேண்டாம் எண்டு தான் என்னை நிற்கச் சொல்றிங்களாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

திருஷ்டி பொட்டு வைக்க வேண்டாம் எண்டு தான் என்னை நிற்கச் சொல்றிங்களாக்கும்

குங்குமப்பொட்டு சந்தனப்பொட்டு கேள்விப்பட்டது. அதென்ன திருஷ்டிப் பொட்டு. அது என்னத்தில செய்வது. ஐஸ்வரியாக்கு அந்தப் பொட்டெல்லாம் வேண்டாம். தோழியாத்தான் கூப்பிட்டிருக்கிறாங்க என்று பேச்சு கடுப்பி அக்கா. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மக்களிடம் கருத்துக்கணிப்பு"

என்னப்பா இதுக்கும் கருத்துக்கணிப்பா? எதெற்கு கருத்துக்கணிப்பென்று ஒரு விவஸ்த்தயே இல்லையா? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் சகல விடயங்களுக்கும் மக்களின் கணிப்பீடு எடுப்பார்களா?அப்படியென்றால் ந்fக்ச்த் க்ட்ழக்நொஃல் க்ட்ழ்த்ழ் விசயங்களுக்கெல்லாம் மக்களின் அபிப்பிராயம் எடுக்கத்தானே வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சகல விடயங்களுக்கும் மக்களின் கணிப்பீடு எடுப்பார்களா?அப்படியென்றால் ந்fக்ச்த் க்ட்ழக்நொஃல் க்ட்ழ்த்ழ் விசயங்களுக்கெல்லாம் மக்களின் அபிப்பிராயம் எடுக்கத்தானே வேண்டும்.

ந்fக்ச்த் க்ட்ழக்நொஃல் க்ட்ழ்த்ழ் புரியவில்லையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘அலைபாயுதே’ ஸ்டைலில் ஐஸ்வர்யா ராய் கல்யாணம்?!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் இப்போது சர்ச்சைகளின் நாயகி. முதலில் சல்மான்கான், பிறகு, விவேக் ஓபராய்... இப்போது அபிஷேக் பச்சன் என இவரது பாலிவுட் காதலர்கள் பட்டியல் உலகறிந்த ரகசியம்! நெதர்லாந்திலிருந்து வந்த பார்சல் விவகாரம், அப்புறம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரகசியத் திருமணம் எனச் செய்திகள்... இல்லவே இல்லை என மறுப்புகள்... இந்த நிலையில், அமிதாப்பச்சன் குடும்பத்தினருடன் வாரணாசிக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துவிட்டுப் போயிருக்கிறார் ஐஸ்.

‘அபிஷேக் பச்சனுடன் திருமணம் முடிந்ததா, இல்லையா?’& இதுதான் லேட்டஸ்ட் சர்ச்சை.

பொதுவாக ஐஸ்வர்யா ராய், வெளி உலகில் நிலவாகச் சிரிக்கும் முகத்துடன், உற்சாகமாகக் கை அசைத்தபடி வருவதுதான் வழக்கம். ஆனால், வாரணாசி சிறப்பு பூஜைக்கு வந்தபோது, யாரையும் பார்க் காமல், தலைகுனிந்து, புது மணப்பெண் போல் அவர் நடந்து கொண்ட பாங்கு... ‘நான் இப்போ பச்சன் வீட்டு மாட்டுப் பொண்ணாக்கும்!’ என்று சொல்வதுபோல்தான் இருந்தது.

அமிதாப் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா விசிட்டுக்காக வாரணாசியின் ‘தாஜ் கங்கேஜ்’ ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஏழு அறைகள் புக் செய்யப்பட்டு இருந்தன. இங்குள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில், விடியலில் வழக்கமாக நடக்கும் மங்கள ஆர்த்தி பூஜையில் கலந்து கொண்டவர்கள், அங்கு நடந்த ருத்ர அபிஷேகத்திலும் பங்கேற்றனர். அடுத்து, அருகிலிருந்த சங்கட மோட்சன் கோயிலின் மங்கள ஆர்த்தியிலும் ஆஜராகி, 70 பிராமணர்களை வைத்து நவக்கிரக ஹோமம் நடத்திவிட்டுக் கிளம்பினர்.

அமிதாப்பச்சன், வாரணாசியில் உள்ள இந்த இரண்டு கோயில்களுக்கும் அடிக்கடி வருவது உண்டு. இடையில் தனது ‘ஏபிசி’ நிறுவனம் பெரிய நஷ்டம் அடைந்தபோதும் தவறாமல் பூஜை செய்ய வந்துகொண்டு இருந்தார். அதன் பலனால்தான், தான் மீண்டுவந்ததாக உறுதியாக நம்புகிறார் அமிதாப்.

இந்த முறை அமிதாப் குடும்பம் வந்த நோக்கம்தான் என்ன என்று வாரணாசியின் பிரபல ஜோசியர் காமேஷ்வர் உபாத்யாவை அணுகினோம். இவர் வாரணாசியில் 80 வருடமாக வெளி வந்துகொண்டு இருக்கும் ‘திரிஷ்கந்த ஜோதிஷம்’ என்னும் ஜோதிடப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணி யாற்றியவர்.

‘ஐஸ்வர்யா ராய் பிறந்த நேரம் சரியாகத் தெரியாததால், அவருடைய முழு ஜாதகத்தையும் சொல்ல முடியவில்லை. அவர் பிறந்தது நவம்பர் முதல் தேதி, 1973. அதை மட்டுமே வைத்து அவர் ஜாதகம் எழுதப்பட்டு இருக்கிறது. விருச்சிக ராசியான ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் ஸ்ட்ராங்கான செவ்வாய் தோஷம் உள்ளது. இதனால் தான் உலகப் புகழ்பெற்ற அவருக்கு சொந்த வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள்.

செவ்வாய் தோஷத்தை நீக்க கும்ப விவாஹம், விஷ்ணு விவாஹம் மற்றும் அஷ்வத விவாஹம் ஆகிய மூன்றில் ஒன் றைச் செய்ய வேண்டும்.அப்போதுதான் இவரது மண வாழ்க்கை சிறப்பாக அமையும். இதெல்லாம் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், வாரணாசியில் அவர்கள் செய்த பூஜைகளில் எங்களுக்குப் பல கேள்விகள் உள்ளன.

காசி விஸ்வநாதர் கோயில் பூஜையில் அமிதாப்பின் இடது புறம் அவர் மனவி ஜெயா பச்சனும், அபி ஷேக்கின் இடது புறம் ஐஸ்வர்யா ராயும் அமர்ந்து இருந்தனர். சங்கட மோட்சன் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடத்திய போதும், இதே நிலையில் தான் ஐஸ்வர்யா & அபிஷேக் அமர்ந்தார்கள்.

பொதுவாக, இது போன்ற பூஜைகள் எல்லாம், மணமானவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்காகச் செய்வது. இன்னும் மணமாகாதவர்களாக இருந்தால், இப்படி அருகருகே அமர்ந்து செய்வதில்லை. தனித்தனியாக அமர்ந்து செய்வதுதான் முறை! அமிதாப் குடும்பத்துக்காக நடந்த பூஜையில், அந்தக் குடும்பத்தைச் சேராத ஒரு கன்னிப் பெண் கலந்துகொள்கிறார் என்றால், சாஸ்திரப்படி அந்தப் பெண் ணின் பெற்றோரும் உடன் இருக்க வேண்டும். ஆனால், ஐஸ்வர்யாவின் பெற்றோர் அங்கு இல்லை!

இன்னொரு முக்கியமான விஷயம், ஐஸ்வர்யாவின் கோத்திரமும், அபிஷேக்கின் கோத்திரமும் வேறு வேறு (வெவ்வேறு கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள முடியும்). ஒரே கோத்திரமாக இருந்தால்தான் இருவரும் ஒன்றாக அமர்ந்து இந்த பூஜைகளிலும், ஹோமங் களிலும் கலந்துகொள்ள முடியும். சாஸ்திரப்படி, மணமான பிறகு கணவ னின் கோத்திரம் எதுவோ அதுவே பெண்ணின் கோத்திரம். எனவே, அபிஷேக் & ஐஸ் இருவரும் ஒன்றாக அமர்ந்து பூஜையில் ஈடுபட்டதைப் பார்க்கும்போது, அமிதாப் வீட்டு மருமகளாக ஐஸ்வர்யா ஆகி விட்டாரோ என்றுதான் நினைக் கத் தோன்றுகிறது’’ என்று முடித்தார் காமேஷ்வர் உபாத்யா.

ஐஸ்வர்யா & அபிஷேக் ஜாதகங்களைப் பார்த்து தன் கருத்தைச் சொன்னவர் என்று பரபரப்பாகச் சுட்டிக் காட்டப்படுபவர், பெங்களூரில் இருக்கும் ஜோதிடரான சந்திரசேகர சுவாமி. இவரை அமிதாப்பின் ஆஸ்தான ஜோதிடர் என்றே பாலிவுட் ஏரியாவில் சுட்டிக் காட்டுகிறார்கள். இவர் என்ன சொல்கிறார்? சந்திரசேகர சுவாமியின் மிக நெருக்கமான வட்டாரங்கள் வழியாக அவரிடம் பேசினோம்.

‘‘பையனுக்கு தார (மனைவி) தோஷம் இருக்கிறதால ஒரு வாழை மரத்தை (மணப் பெண்ணாக உருவகித்து) மந்திரங்கள் ஓதி, அதற்கு அபிஷேக் தாலி கட்டினார். கல்யாணம் முடிந்ததும் அந்த வாழை மரத்தை வெட்டியாச்சு. அதன் மூலம் தார தோஷமும், நிஜமான மணப் பெண்ணின் தோஷமும் அடிபட்டுப் போயிடுச்சு.

இதெல்லாம் முடிச்சுட்டுதான் வாரணாசி கோயில்ல சாமி கும்பிட்டாங்க. ராமரையும் ஜானகியையும் வழிபட்டு வந்துட்டா வாழ்க்கையில பிரிவோ சங்கடங்களோ எப்பவும் இருக்காது. இதுக்காகத்தான் அவங்க வாரணாசி போயிருந்தாங்க. இப்போ செஞ்ச பரிகாரங்களால் தள்ளிப் போய்க்கிட்டே இருந்த அபிஷேக் கல்யாணம் கூடிய சீக்கிரம் நடக்கும். இது வரை அவர்கள் கல்யாணம் நடக்கவில்லை’’ என்கிறார் இந்த பெங்களூர் ஜோதிடர்.

"கல்யாணம் முடிந்துவிட்டது. ஏற்கெனவே ஐஸ்வர்யாராய் செய்துகொண்ட கமிட்மென்ட்டுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்றுதான் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்" என்று அடித்துச் சொல்பவர்களோ,

"பிப்ரவரி மாதம் அமிதாப் புக்கு ராசியானது. வருகிற பிப்ரவரியில், சுபமுகூர்த்த நாளான 22&ம் தேதி திருமணம் நடந்து முடிந்ததாக அறிவிப்பு வெளியாகும், பாருங்கள்" என்கிறார்கள்.

மேற்கு மும்பையின் கேர் பகுதியில் உள்ளது ஐஸ்வர்யாவின் ‘லக்ஷ்மி நிவாஸ்’ வீடு. அதில் தன் பெற்றோரை மட்டும் தங்கச் செய்துவிட்டு, பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பல பிரபலங்கள் தங்கி இருக்கும் பாந்த்ரா பகுதியில் உள்ள ‘லீ மெர்’ ஃபிளாட்டில்தான் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா. இதையே சுட்டிக் காட்டி,

"மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக மணமுடித்து, அவரவர் வீட்டிலேயே இருப்பார்கள். அதே மணிரத்னம் இயக்கத்தில் இப்போது குரு படத்தில் நடிக்கும் இந்த ஜோடி, ரசிக மகாஜனங்களுக்குத் தெரியாமல் ரகசிய மணமுடித்துவிட்டு, அவரவர் வீட்டிலேயே இப்போதைக்கு இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்!" என்கிறார்கள் இவர்கள்.

செவ்வாய் தோஷம்!

"செவ்வாய் தோஷத்தைக் கழிக்கத்தான் வாரணாசிக்கு வந்தார்கள்" என்று சிலர் சொல்லிக் கொண்டு இருக்க... பாலிவுட் வட்டாரத்தில், வேறொரு செவ்வாய் தோஷம் பற்றிச் சொல்கிறார்கள்.

"சமீபத்தில் வெளியான "தூம்&2" படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஹிரித்திக் ரோஷன் கொடுக்கும் உதட்டு முத்தம் இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சி ஏற்படுத்திய பரபரப்பு அமிதாப் வீட்டினரை சங்கடப்படுத்திவிட்டது. வாயோடு வாயாகக் கொடுத்த முத்தம் மீடியாக்களில் பெரிதாகாமல் திசை திருப்பவே இந்த திடீர் வாரணாசி விசிட் அடித்தார்கள்" என்கிறார்கள் இவர்கள்!

http://www.vikatan.com/av/index.html

என்னைக் கட்ட ஓம் எண்டிருந்தால் ஐஸ் ஏன் வாழைக்க தாலி கட்ட வேண்டிவரப்போகுது..

வாழை பரவாயில்லை சில ஜோசியர் கழுதைக்கு முதல் கட்டு எண்டினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் ஆயத்தமாதான் இருக்கிறிங்க விகடகவி சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஸ்சுக்கு கஷ்டகாலமெண்டால் கழுதையோட தான் முதல் கலியாணம் நடக்குதோ ஆருக்குத்தெரியும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டன் புலனாய்வு துறைக்கு ஒரு ஒரு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது,

சில யாழ்கள விஐபியள் ஐஸ்வர்யா ராயுக்கு மின்னஞ்சல் ஊடாக ஒரு வேண்டுள் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த தகவலின் பிரதி டன் புலனாய்வு துறை கையில் சிக்கியுள்ளது.

இதோ ஹிந்தியில் எழுதி அனுப்பப்பட்ட செய்தியின் தமிழாக்கம்... :P

--------------------------------------------------------------------------------------------------------------------

திகதி: உங்களை எப்பொழுதும் நினைத்துக்கொண்டு இருப்பதனால் என்ன திகதி என்றே தெரியவில்லை. :lol:

இடம்: திகதியே தெரியல்லை என்றுறன் இருக்கிற இடம் எப்படி தெரியும் ஆ? :angry:

வயசு: குத்துமதிப்பா நீங்களே நினைச்சுக்கொள்ளுங்கோ :D (அதுக்காக யாழ் களம் என்ற களத்தில் உலா வரும் சின்னப்பு என்ற முதியவரின் வயசையோ, வசி சுதா என்று வரும் சிறு பையனின் வயசையை தயவு செய்து நினைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.)

அன்புள்ள ஐஸ், "தட்ஸ் ஹிந்தி.கொம்" இணையத்தளத்தில் உங்களுக்கு எதோ துவசமாம் சாறி தோசம் என்று அறிந்து சந்தோசப்பட்ட முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் இந்திய கலாச்சாரத்தின் படி ஏதாவது தோசம் இருப்பின் வாழை மரத்துக்கோ அல்லது கழுதைக்கோ முதலில் தாலி கட்டிய பின் தான் நிஜமாக திருமணத்தை நடாத்துவார்கள், இதை எனக்கு அமெரிக்க புலனாய்வு துறை புரியவைக்கவில்லை, உங்களின் உதவாமல் போன சினிமாதான் புரிய வைத்தது, இப்பொழுது எனது விடயத்துக்கு வருகிறேன், உங்களுக்கு தோசம் இருக்கு என்று கண்போர்ம் பண்ணினால் அதற்காக முதலில் வாழை மரத்துக்கோ அல்லது கழுதைக்கோ திருமணம் செய்து வைத்து ஒரு வாழை மரத்தினோ அல்லது கழுதையின் வாழ்க்கையிலோ விளையாடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அதற்கு மாற்று வழி யோசனையாக என்னை ஒரு வாழை மரமாகவோ அல்லது கழு...:lol: நினைத்து பார்த்து எனது இவ் சிறு வேண்டுகோளை பூர்த்தி செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறேன்.

இப்படிக்கு

தங்கள் பதிலுக்காக ஏங்கி நிற்கும் கழு ச்சா வாலிபன்...:(

-----------------------------------------------------------------------------------------------------------

மு.கு: பிந்தி கிடைத்த தகவலின் படி இதை பலர் (யாழ்கள விஐபியள்) பிரதி செய்து ஐஸுக்கு அனுப்பி உள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. இதை காமெடி இணையத்தளங்களான தேனி நெருப்பு அதிரடி நிதர்சனம்.நெட் ஆகியன உறுதி செய்துள்ளது.. :(

யார் அந்த விஐபியள்???????? மில்லியன் டொலர் கேள்விக்கு பதில் விரைவில் புலனாய் வெளியிடும்... :lol:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்சுக்கு கஷ்டகாலமெண்டால் கழுதையோட தான் முதல் கலியாணம் நடக்குதோ ஆருக்குத்தெரியும் :lol:

அந்தக் கழுதைதான் யாருன்னு தெரியல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக் கழுதைதான் யாருன்னு தெரியல

அது சரி ஏதோ ஜஸ்வரியா தாலியை கழுதையின் கழுத்தில் கட்டுவதாக சில போதை எறிய போதகர்கள் ஊளறுகிறார்களே????????

அபிஷேக் தானே கழுதைக்கு தாலிகட்டி அறுக்கனும்???????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழியாக இந்த முதிர்கன்னிக்குக் கல்யாண்மாகப் போகுது. சந்தோசப்படுங்கப்பா.. :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக்&ஐஸ்வர்யா ராய் திருமண ஏற்பாடு தீவிரம்

மும்பை, டிச. 24: அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் காதலிக்கின்றனர். இவர்கள் திருமணம் பற்ற¤ அவ்வப்போது பரபரப்பு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மதுரையில் ரகசிய திருமணம் நடந்ததாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், "ஜாதகப்படி நேரம் நன்றாக இருப்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி, மும்பை கிராண்ட் ஹயத் ஓட்டலில் திருமணம் நடக்கிறது" என்று அமிதாப் குடும்ப ஜோசியர் கூறியதாக செய்திகள் வெளியாயின. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்பட்டாலும் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா குடும்பத்தினர் மவுனம் காக்கின்றனர்.

இந்நிலையில், அபிஷேக், ஐஸ்வர்யா ராய்க்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருமண ஆடைகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிஷேக்குக்கு 'ஷெர்வானி' ஆடையை பிரபல ஆடை வடிமைப்பாளர் அன்னா சிங் தயாரிக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுப் புடவை மற்றும் ஆடைகளை பிரபல ஆடை வடிமைப்பாளர் நீதா லுல்லா தயாரிக்கிறார் என்று தெரிகிறது.

dn241206e1140420cnivr3.jpg

http://www.dinakaran.co.in/

இதை காமெடி இணையத்தளங்களான தேனி நெருப்பு அதிரடி நிதர்சனம்.நெட் ஆகியன உறுதி செய்துள்ளது.. :):D:D

Edited by Snegethy

இதை காமெடி இணையத்தளங்களான தேனி நெருப்பு அதிரடி நிதர்சனம்.நெட் ஆகியன உறுதி செய்துள்ளது.. :):D:D

பல அரசியல் ஆய்வாளர்கள் உள்ள இணையத்தளங்கள் உறுதி செய்துள்ளதால் அது நிச்சயமாக உண்மையாகத்தான் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யாராய்க்கு விசேஷ திருமண ஆடை

aish261206mr5.jpg

எப்பவோ நடந்திருக்க வேண்டிய ஐஸ்வர்யாராய் -அபிஷேக் திருமணம் ஜோதிடத்தால் தள்ளி தள்ளிப்போய்

எப்பவோ நடந்திருக்க வேண்டிய ஐஸ்வர்யாராய் -அபிஷேக் திருமணம் ஜோதிடத்தால் தள்ளி தள்ளிப் போய் ஒருவழியாக வருகிற பிப்ரவரி 19-ந்தேதி நடைபெற உள்ளது.

இதை சம்பந்தப்பட்டவர்கள் முறைப்படி அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அதற்கான பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பை கூட்டு வார்கள் என்று நம்பப்படுகிறது.

அமிர்தாப் குடும்ப ஜோதிடர் குறித்துக்கொடுத்த நாள் பிப்ரவரி 19. அன்று தான் ஐஸ்வர்யாராயும்-அபிஷேக் பச்சனும் திருமணம் செய்து கொள்வதற்கு தோதாக கிரகநிலைகள் எல்லாம் வருகிறதாம்.

மண மக்கள் திருமணத்தன்று அணிய வேண்டிய முகூர்த்த ஆடை களை உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப் பாளர்களான நீதாலுல்லாவும் அன்னசிங்கும் கனகச்சிதமாக தயாரித்து வருகிறார்களாம்.

குறிப்பாக ஐஸ்வர்யாராய் திருமண மூகூர்த்தத்தன்று அணியும் ஆடை மிகவும் விசேஷமாக இருக்கும் என்கிறார்கள்.

http://www.maalaimalar.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
newssn9.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn5kw3.jpg

ஆமாம் அக்கி நீங்கள் நிச்சயார்த்ததுக்கு போகவில்லையா? :P :lol:

ஆமாம் அக்கி நீங்கள் நிச்சயார்த்ததுக்கு போகவில்லையா? :P :lol:

ஏன் அபிஷேக் திருமனம் செய்வது பிடிக்கவில்லையா? :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.