Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை கண்டனம்!
[Monday 2015-11-09 19:00]
சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை அரசியல்பிரிவு தலைவர் எஸ். நிஷhந்தனின் பகிரங்கக் கண்டனமும் எதிர்ப்பும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்திய சுமந்திரன் அவர்களுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அரசியல்பிரிவு பகிரங்க கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் சுமூகமற்ற ஓர் உறவு நிலை நிலவுவதற்கும்இ கருத்துமோதல்கள் ஏற்படுவதற்கும்இ புலம்பெயர் வாழ் தமிழர்களின் அமைப்புக்கள்இ தமிழ் சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும்இ வடகிழக்கில் வாழும் தமிழ்இ முஸ்லீம் மக்களிடையே மீண்டும் ஒரு விரிசல் நிலை ஏற்படுவதற்கும்இ தமிழ்இ முஸ்லிம் மக்களிடையே குழப்பமான ஒரு சூழ்நிலை நிலவுவதற்கும் சுமந்திரனே மூலசூத்திரதாரியாவார்.

சுமந்திரன் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் கருத்துக்களை புறந்தள்ளி இலங்கை அரசுக்கு ஆதரவாக சர்வதேச விசாரணை தேவையில்லை உள்நாட்டு விசாரணையே விரும்புகின்றோம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப்பின் இலங்கை சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து சிறைச்சாலைகளிலும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தவேளையில் திடீரென சிறைச்சாலைக்குள் புகுந்த சுமந்திரன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறும் உங்களை அரசு விடுதலை செய்யும் எனவும் கூறி இப்போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்தார்.

அதன்பின் ஒருசில இலங்கைப் பாராளுமன்ற அமைச்சர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமுடியாது எனவும் நாட்டின் பிரதமர் அவர்கள் பல நிபந்தனைகளுடன் பிணையில்; செல்வது தொடர்பாக ஆலோசனைகள் நடத்துகின்றோம் என்றும் இன்னும் சிலர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருப்பவர்களை விடுவிக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த எட்டப்பனான சுமந்திரன் தற்போது வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனச்சுத்திகரிப்பு எனவும் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை எனவும் அரசுக்கு சார்பாக அரசின் தீவிர விசுவாசியாக உரையாற்றியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

எம்மக்களே! யார் இந்த சுமந்திரன்? கருணாஇ ஆனந்தசங்கரி போன்றவர்கள் துரோகி என்றால் சுமந்திரன் யார்? எட்டப்பன் சுமந்திரன் எமது விடுதலைப் போராட்ட காலத்தில் எமது தாயகப் பகுதியில் வாழ்ந்தவனா? தனது குடும்பத்தில் ஒருவரையாவது இழந்திருக்கின்றானா? எமது விடுதலைப்போராட்டம் தொடர்பாக இவனுக்கு என்ன தெரியும்? எதற்காக போராட்டம் நடைபெற்றது என்பது கூட இவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. எமது போரின் வடுக்கள் எம்மக்களின் இடப்பெயர்வுகள்இ மறக்கமுடியாத உயிரிழப்புக்கள்இ திரும்பக்கிடைக்காத சொத்து இழப்புக்கள்இ எமது காணிகள் அபகரிப்புக்கள்இ குடும்பங்களில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் கதறல்கள்இ பிள்ளைகளை இழந்த உறவுகளின் மனவேதனைகள்இ குமுறல்கள் போன்றவைகளை இவனால் உணர முடியுமா? இந்த சுமந்திரனுக்கு தமிழீழ போராட்ட வரலாறு தொடர்பாகவும் காலாதிகாலமாக தமிழ்மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பது பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு முஸ்லீம் சகோதரர்களை என்ன காரணத்திற்காக வெளியேற்றினார்கள் என்றும் அப்;போதிருந்த சூழ்நிலை தொடர்பாகவும் இந்த எட்டப்பன் சுமந்திரனுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை விட எதுவிதமான ஒரு சரியான தரவுகள் கூட இவனுக்கு தெரியாது என்பது எம்மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அப்பட்டமான உண்மை.

இதற்கு ஆதாரமாக கடந்த பாராளுமன்ற பிரச்சார காலத்தின் போது யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பில் வரலாற்று தரவுப்பிழை ஒன்றை கூறியது மட்டுமன்றி திரும்பத் திரும்ப தான் சொன்னது தான் சரி என்று வாதாடியிருக்கின்றார். உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர். குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிகூடிய வாக்குகளை (87563) பெற்றார். அதே நேரம் கொப்பேகடுவ அவர்கள் (77300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார். ஆனால் சுமந்திரனோ யாழில் கொப்பேகடுவ தான் முதலாவதாக வந்தார் குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக தான் வந்தார் என ஊடகவியலாளர்களுடன் வாதாடியிருந்தார். நீதிமன்றத்தில் தான் ஒரு வழக்கையேனும் எம்மக்களுக்காக வாதாடி வென்று கொடுக்கவில்லை எனின் இங்கு கூட இவரால் வெல்ல முடியவில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போலவே இன்றும் நாளுக்கு நாள் மாறிமாறி ஒவ்வொரு கதைகளை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எம்மக்களுக்கு உளறிக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லீம் சகோதர மக்களை இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை. இனப்பாதுகாப்பிற்காகவே அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதே உண்மை. முஸ்லீம்மக்கள் வெளியேற்றப்படுவதற்கு அக்கால கட்டத்தில் ஒரு காரணம் இருந்தது. கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு முஸ்லீம் இளைஞர்களால் பல நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களை அப்போதிருந்த அரசின் உதவியுடன் படுகொலை செய்திருந்தனர். குறிப்பாக கடந்த 20.06.1990 வளத்தாப்பிட்டி படுகொலைஇ 29.06.1990 வீரச்சோலை படுகொலைஇ 09.07.1990 மல்லிகைத்தீவு படுகொலைஇ 08.07.1990 சவளக்கடை படுகொலைஇ 12.08.1990 வீரமுனைப்படுகொலைஇ 09.08.1990 சத்துருக்கொண்டான் படுகொலைஇ 05.09.1990 வந்தாறுமூலைப்படுகொலைஇ 21.09.1990 புதுக்குடியிருப்பு படுகொலை மேலும் 1990 இல் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் இன்னும் பல படுகொலைகளும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் நடத்தப்பட்டது.

இவ்வாறான நடவடிக்கைகள் தான் விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது. இதனை இனச்சுத்திகரிப்பாக பார்க்க முடியாது. மாறாக இது ஒரு பாதுகாப்பான தற்காலிகமான வெளியேற்றம் என்பதே உண்மை. மேலும் எமது விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆரம்பகாலம் தொட்டு இறுதிவரையும் முஸ்லீம் சகோதரர்களும் இணைந்து போராடியுள்ளார்கள் என்பதோடு வடகிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவு இன்று வரை பல சிங்கள அரசின் சூழ்ச்சிகளையும் சதிகளையும் தாண்டி அன்பாகவும் அன்னியோன்னியமாகவும் இருந்து வருகிறது.

தற்போதைய இலங்கை அரசில் உயர்நிலைப்பதவியில் வகிக்கும் ஒரு சிலரின் கைக்கூலியாகவும்இ அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினருக்கு தமிழீழ பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் இன்றுவரை பணத்திற்காக தெரிவித்துக் கொண்டிருப்பவனும்இ புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின்; பலமான வலையமைப்பை உடைப்பதற்கு ஏவுகணையாகவும் விளங்கும் எட்டப்பன் சுமந்திரனை வைத்து நாட்டில் தமிழ்இ முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைத்து விரிசலை ஏற்படுத்துவதன் ஊடாக கலவரத்தை மீண்டும் உருவாக்குவதே இந்த அரசின் பிரதான நோக்கமாகும்.

சர்வதேச பொறிமுறையில் இருந்து போர்க்குற்றவாளிகளை தப்பிக்க வைத்துக் கொள்வதற்காகவும் சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காகவுமே இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை அரங்கேற்றுகின்றார்கள். மேலும் சுமந்திரன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்மக்களின் வாக்குகளை கபடத்தனமான முறையில் பெற்று வாக்குகள் போதாத காரணத்தினால் மற்றுமொரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குகளை பல அரசின் உதவியுடன் வாக்கு எண்ணும் நிலையத்தில் வைத்து களவாடி சூட்சுமமான முறையில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தான்.

மேலும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்திய அரசு வீசியெறியும் எலும்புத்துண்டுக்காக வரலாற்றில் மறக்கப்படவும் மன்னிக்கப்படவும் முடியாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதோடு மட்டுமன்றி முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிiயும் இராஜினாமா செய்து ஒதுங்கிக் கொள்ளுமாறும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் அரசியற்துறை தலைவரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான எஸ். நிஷhந்தன் அவர்கள் கூறிக் கொள்வதோடு இவ்வாறான எட்டப்பன் சுமந்திரனின் செயற்பாடுகளுக்குப் பகிரங்க கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்வதோடு விரைவில் சுமந்திரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார் நிலையில் உள்ளோம் என்பதையும் இவ் அறிக்கையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=144385&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவக யார்? எங்க இருக்கிறாக? ஒரு ஒழுங்கான  மின்னஞ்சல் முகவரியாவது இருக்கா? (அலுவலகம் இருக்காது எண்டு தெரியும்!, அதான் கேட்டேன்!:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிஞ்சு??????

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா விடுங்க அண்ணை, இப்படிப் பச்சையாக் கேட்டால் சிலருக்கு கோள்வம் வந்திடும் சிலருக்கு வெக்கம் வந்திடும் <_<

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தெரிஞ்சு??????

இல்ல, அந்தக் கடைசிப் பந்தியைப் பார்த்தீங்களா? "தமிழ்" பண்பாட்டுக் கழகம் எண்டு பெயரை வைச்சுக் கொண்டு தமிழை எப்பிடிச் சப்பித் துப்பியிருக்கெண்டு? அதான் பெயரை மாற்றித் தமிழின் மானத்தை விட்டு வைக்கச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்புவம் எண்டு கேட்டன்! இல்லாட்டிலும் பரவாயில்லை! "லூஸ் மோகன் ரசிகர் மன்றம்" மாதிரி உள்ளூரிலயே யாரும் அறியாத சங்கமாத் தான் இருக்கும்! ஏன் மெனக்கெடுவான்!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:
சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை கண்டனம்!
 
மேலும் சுமந்திரன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்மக்களின் வாக்குகளை கபடத்தனமான முறையில் பெற்று வாக்குகள் போதாத காரணத்தினால் மற்றுமொரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குகளை பல அரசின் உதவியுடன் வாக்கு எண்ணும் நிலையத்தில் வைத்து களவாடி சூட்சுமமான முறையில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். 

அட.... இது வேறை, நடந்திருக்கா.....
கடந்த தேர்தலில், சுமந்திரனை தமிழ் மக்கள் அமோக வாக்குகள் போட்டு, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்ததாக... சிலர் புளுகிக் கொண்டு திரிந்தது எல்லாம்... கப்ஸாவா? Smiley  
சென்ற முறை.... பின் கதவு சுமந்திரன், 
இந்த முறை... கள்ள ஓட்டு சுமந்திரனா?  Smiley

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன,  பின்கதவு சுமந்திரன் என்று அடிக்கடி நீங்கள் எல்லோரும் சப்பித்துப்ப அந்தாள் என்ன செய்யும் பாவம், சரியாக வோட்டு வாங்கி வென்றிருந்தா கூச்ச நாச்சமில்லாமல் உப்பிடி கதைப்பாரா? சிங்கள அரசுகள் அடிக்கடி புலம்பும் வார்த்தை "புலம் பெயர்ந்தவர்களால் பெரிய தலையிடி." அந்தத் தலையிடிக்கு பனடோல் தான் இந்த சுமந்திரன். ஒரு தடவை புலம் பெயர்ந்தவர்களின் சொற்படி எல்லாம் செய்யேலாது என்ற சாரப்பட கதைத்தவர், ஏன் அடிக்கடி அவர்களிடம் போறார்? அவரை வரவேற்பானேன்,  ஆர்ப்பாட்டம் செய்வானேன்? "துட்டரைக்கண்டால் தூரத் தூர,"

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சாத்தான், சும் வருவது அந்தந்த நாடுகளில் உள்ள த.தே.கூ நாட்டுக் கிளைகள் அல்லது வேறு கட்சி சார் அமைப்புகளின் அழைப்பில்! இந்த வெளிநாட்டுப் பயணங்கள் பு.பெ தமிழரிடம் உள்ள சந்தேகங்களை நேரடியாகத் தீர்க்கவும் மேலும் அந்தந்த நாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கவும் சும்மின் முதல் பாராளுமன்றப் பதவிக்காலத்தில் இருந்தே நடந்து வருவது! உங்க தமிழ் நாட்டில இருந்து உணர்ச்சிப் பேச்சாளர்களை நாலு நட்டுக் கழண்ட பு.பெ. த.தே தூண்கள் காசு கொடுத்துக் கூப்பிட்டு உருவேற்றுவது போன்றது அல்ல சும் மின் பயணங்கள்! எனவே கொஞ்சம் ஏமாற்றமாத் தான் இருக்கும்! இதுக்கு ஒரே மருந்து, சும் வருகிற அதே நாட்களில் நீங்கள் சீமான் மாதிரி யாரையாவது அழைத்து உணர்ச்சிப் பேச்சு ஏற்பாடு செய்ய வேணும். அப்ப தெரியும் எங்க சனம் போகுது எண்டு!  

11 hours ago, தமிழ் சிறி said:

அட.... இது வேறை, நடந்திருக்கா.....
கடந்த தேர்தலில், சுமந்திரனை தமிழ் மக்கள் அமோக வாக்குகள் போட்டு, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்ததாக... சிலர் புளுகிக் கொண்டு திரிந்தது எல்லாம்... கப்ஸாவா? Smiley  
சென்ற முறை.... பின் கதவு சுமந்திரன், 
இந்த முறை... கள்ள ஓட்டு சுமந்திரனா?  Smiley

8 hours ago, satan said:

பின்ன,  பின்கதவு சுமந்திரன் என்று அடிக்கடி நீங்கள் எல்லோரும் சப்பித்துப்ப அந்தாள் என்ன செய்யும் பாவம், சரியாக வோட்டு வாங்கி வென்றிருந்தா கூச்ச நாச்சமில்லாமல் உப்பிடி கதைப்பாரா? சிங்கள அரசுகள் அடிக்கடி புலம்பும் வார்த்தை "புலம் பெயர்ந்தவர்களால் பெரிய தலையிடி." அந்தத் தலையிடிக்கு பனடோல் தான் இந்த சுமந்திரன். ஒரு தடவை புலம் பெயர்ந்தவர்களின் சொற்படி எல்லாம் செய்யேலாது என்ற சாரப்பட கதைத்தவர், ஏன் அடிக்கடி அவர்களிடம் போறார்? அவரை வரவேற்பானேன்,  ஆர்ப்பாட்டம் செய்வானேன்? "துட்டரைக்கண்டால் தூரத் தூர,"

உங்களுக்கெல்லாம் யதார்த்தம் புரியவேமாட்டுதா. யாழில் சும்மிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் மாங்காய் மடையர்களா? பின்கதவு என்று கத்தினீர்கள், தேர்தலில் வென்று வந்தால் கள்ள வோட்டு என்பீர்கள். உங்களுக்கு பிடிக்காவிட்டால் கம்முனு இருங்கோ எனது மக்களுக்கு பிடித்திருக்கு. அம்மக்கள் முடிவு பண்ணுவார்கள் (ஏற்கனவே பலர் முகத்தில் கரி பூசியவர்கள்).

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

"சும்" அடுத்த தேர்தலில் முதலாவதாக விருப்பு வாக்கோடு வென்றாலும் இவர்கள் நிலை இது தான்! தாங்கள் நிற்கிற மேடையின் அத்திவாரமே புட்டுக் கொண்டு விட்டதெண்ட பயத்தைத் தவிர வேறெதுவும் இப்போது இவர்களிடம் இல்லை! :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சுமந்திரனின் கூட்டத்தினை குழப்பியவர்களை கண்டித்து அல்லவா அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும்.

எல்லாம் கலி முத்திடுச்சு.

சிறிலங்காவில் கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறி புலம்பெயர் நாடுகளுக்கு வந்தவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் வழியையே பின்பற்றுகின்றனர்.

2009-க்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் மக்களை திரட்டி ஒழுங்காக போராட்டமே நடத்த முடியவில்லை.

மக்கள் அதிகளவில் வருவதில்லை என்பதனால்தான் தற்போது Rockwood சுடலைக்குள் கொண்டு கரும்புலிகள் தினம், திலீபனின் நினைவு தினம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துகின்றனர். அதிலும் 10-15 பேர்தான் கலந்து கொள்கின்றனர். அதுவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்களே கலந்து கொள்கின்றனர். மக்கள் வருவதே இல்லை. சும்மாவே சுடலை என்றால் எங்கள் சனம் பயப்படும். இதில் சுடலைக்குள் நிகழ்வு என்றால் யோசித்து பார்க்க வேண்டும்.

விரைவில் மாவீரர் தினமும் சுடலைக்குள்தான் வைப்பார்கள். அதனையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nirmalan said:

 அப்ப மாவீரர் தினத்தை எங்க வைக்கலாம் என்கிறீங்க? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுமந்திரன்  தமிழ் அரசியலில் அறியப்பட்டதிலிருந்து வெளி நாடுகளில் தான்  அதிகம் தங்குகிறார். உள்நாட்டில் இருக்கும்போது தன் இனத்தின் முன்னேற்றத்திட்கு ஏதாது செய்கிறாரா? முஸ்லிம்களை வெளிஏற்றினத்துக்கு வெட்கித் தலை குனிகிறாராம். அவ்வளவு வெக்கம் உள்ளவரு பொறுப்பேற்று பதவியை விட்டு விலகட்டுமேன். நாட்டில ஒரு கதை. உங்க உள்ளவ சிலபேர் தங்கட முதலீடுகளை தடையில்லாமல் இங்க செய்வதற்கு அவரை பயன்படுத்துகிறார்கள். அரசாங்கம் அவரை தன் வலி நிவாரணியாய் பயன்படுத்துது. பல பேர் உன்கிருக்குமட்டும் நியாயமாய் கதைப்பார்கள். ஒரு தடவை இங்கு வந்தவுடன் அவர்களுடைய நியாயம் மாறிவிடும். எல்லாம் தங்களுக்கு லாபம் பார்த்துத்தான் கதைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nirmalan said:

விரைவில் மாவீரர் தினமும் சுடலைக்குள்தான் வைப்பார்கள். அதனையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அதில் தப்பேதுமில்லை....ஈழத்தில் சுடலையில் தான் நடந்தது. புலம்பெயர் நாடுகளிலும் அப்படியே நடக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

மேற்கத்தைய நாடுகளில் பொது மயானங்கள் பல இருக்கின்றன. . அங்கே மாவீரர்தினங்களை நடாத்தினால் இன்னும் விழிப்புணர்ச்சிகள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கெல்லாம் யதார்த்தம் புரியவேமாட்டுதா. யாழில் சும்மிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் மாங்காய் மடையர்களா? பின்கதவு என்று கத்தினீர்கள், தேர்தலில் வென்று வந்தால் கள்ள வோட்டு என்பீர்கள். உங்களுக்கு பிடிக்காவிட்டால் கம்முனு இருங்கோ எனது மக்களுக்கு பிடித்திருக்கு. அம்மக்கள் முடிவு பண்ணுவார்கள் (ஏற்கனவே பலர் முகத்தில் கரி பூசியவர்கள்).

சுமந்திரன், தாயக மக்களுக்கு அரசியல் செய்வது என்றால்.... தாயகத்தில் இருந்து அரசியல் செய்ய வேண்டும்.
புலம் பெயர் மக்களை திட்டிவிட்டு, பிறகென்னத்துக்கு.... மாதத்துக்கு ஒருக்கா... கனடாவுக்கும், இங்கிலாந்துக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் பயணம் வெளிக்கிட்டுக் கொண்டு திரியுறார். அதுகும்..... கடந்த 7´ம் திகதி அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் சொல்லளவில் தெரிவித்து இருந்தும்... அந்தக் காலகட்டத்தில் அவர் ஊரில் இருப்பது தானே... முறை.

சுமந்திரன், சுற்றுலா... பிரியர் என்றால், போன இடங்களில் அரசியல் மேடைகளில் ஏறாமல்,
cn_tower-4159.gif  CN ரவரை பார்த்தமா... நயாகரா வீழ்ச்சிக்குப் போனமா.... அங்கு நாலு படத்தை எடுத்து விட்டு... நாலுபேருக்குத் தெரியாமல், ஊருக்குத் திரும்பி விட வேண்டும். அதனையும் மிஞ்சி....  மேடையில் ஏறி அரசியல் கதைத்தால்... அவுஸ்திரேலிய மக்களின் தலை விறைக்கும் தானே.....

சுமந்திரன்... எப்ப, ஜேர்மனி, பிரான்ஸ் பக்கம் வாறார்?  Smiley 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.