Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தீரா வலி தரும் தீபாவளி"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று "தீரா வலி தரும் தீபாவளி" என்று சிறிய கவிதை எழுதியதை 54 பேர் முகநூலில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரிலும் எத்தனை பேர் அக்கவிதையை விளங்கிக்கொண்டனர் ???

சிறு வயதில் நானும் மற்றவர்போல் புது ஆடை உடுத்தி கோயிலுக்குச் சென்றுவந்து ஆட்டிறைச்சிக் கறியுடன் அம்மா பரிமாறும் உணவை ஆவலுடன் உண்டவள் தான். புதிய ஆடை வாங்குவது மகிழ்வான விடயம் தான். ஆயினும் அதைவிட வேறு எந்த விளக்கமும் சிறுவயதில் தேவையாக இருக்கவில்லை. நரகாசுரன் அசுரன். அவன் அழிவது நல்லது தான் என்பதுடன் விடயம் முடிந்துவிடும்.

கொஞ்சம் வளர்ந்தவுடன் நண்பிகளின், கூடப்படிப்பவரின் உடையுடன் போட்டிபோடுமளவு எமது தீபாவளி ஆடைத் தெரிவு அவ்வளவே. புலம்பெயர்ந்து சென்ற பின் எமக்கு நினைத்த நேரத்தில் ஆடைகள் வாங்க முடியும் என்பதால் தீபாவளி என்ற ஒன்றின் தேவை இருக்கவில்லை கடந்த முப்பது ஆண்டுகளாக.

பாடசாலையில் பிள்ளைகளுக்குக் கற்பிக்க ஆரம்பித்த பின் பிள்ளைகளுக்கு விளக்குவதற்காக ஆரம்பத்தில் நரகாசுரன் கதை சொல்லி எமக்கே அதில் நம்பிக்கை வராததனாலும் புலம்பெயர்ந்த பிள்ளைகளும் தீபாவளி கொண்டாடாடதனாலும் தற்காலிகமாக அந்தப் பிரச்சனை தீர்ந்தது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் மீண்டும் லண்டனுக்கு இடம்பெயர்ந்தபோது மீண்டும் அந்தத் தீராத தலைவலி எட்டிப் பார்த்தது.

லண்டனில் துவேசம் இல்லாமல் அனைத்து இனத்தவரின் மதத்தவரின் விழாக்களும் மற்றைய பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து தாம் அனைவரையும் மதிக்கிறோம் என்று காட்டுவர். சிறுவர் பாடசாலைகளில் விளக்குகள் செய்து, நிறம் தீட்டி, தீபாவளி ஏன் கொண்டாடுவது என்று விளக்கம் கூறிப் பிள்ளைகளும் ஆர்வமாகக் கேட்டு உள்வாங்குவர். அப்படியோரு பொழுதில் தான் உதவி ஆசிரியையாக நானொரு பள்ளியில் வேலை செய்தபோது தீபாவளி நாளில் ஒரு புத்தகத்தை எடுத்து ஆசிரியை மாணவர்களுக்கு வாசித்து விளக்கம் கூறினார். அசுரன் ராவணணை  கிங் ராமர் கொண்ட நாள்த்தான் இதுஎன்று தான் நேரில் பார்த்தது போல் பத்துத் தலை அவனுக்கு. இருபது கை என்றெல்லாம்  ஆசிரியர் கூற எனக்கு வந்த கோபத்தில் ராவணன் கெட்ட மன்னன் இல்லை. ராமன் தான் கெட்டவன் என்று கூறி பிள்ளைகளுக்கு முன்னர் ஆசிரியருடன் தர்க்கம் செய்ததில் வேலை போனது வேறுகதை.

அதன் பின் பல நூலகங்களிலும் பார்த்தால் ராவணணை மிகக் கேவலமாகச் சித்தரித்து ராமனை நல்லவனாக்கி அவனை கொன்ற தினம் தான் தீபாவளி என்று எத்தனையோ வாடஇந்தியர்கள் தயாரித்த ஆங்கில நூல்கள். லண்டனில் கற்கும் அனைத்துப் பிள்ளைகளையும் கேட்டால் ராவணன் கதையைத் தீபாவளியுடன் தொடர்புபடுத்தி மிக அழகாகச் சொல்வார்கள்.எமது தமிழ் பிள்ளைகள் உட்பட.

ஆனால் எமக்கு கொண்டாடும் தீபாவளி எதற்கு என்று தெரியாது. எதோ மற்றவர்கள் கொண்டாடுகிறார்கள் நாமும் கொண்டாடுகிறோம். ஏன் கொண்டாடுவது??? அதுவும் எதோ நரகாசுரனைக் கொண்டமைக்காக. மற்றப்படி கோயிலுக்கு ஆடை அணிந்து நகை அடுக்கிப் போவோம். அதுவும் மற்றவருக்காக. முகநூலிலும் வாழ்த்துச் சொல்வோம் மற்றவருக்காக. இப்பிடி மற்றவர்களுக்காக எல்லாம் செய்யும் நாம் தமிழுக்காக தமிழருக்காக என்ன செய்தோம்?? செய்யப்போகிறோம் ???

இப்படியே போனால் முகநூலில் சிலர் எழுதியதுபோல பிரபாகரன் என்ற அசுரனை மகிந்த என்னும் மன்னன் கொன்றான் என்று அதைக் கொண்டாடுவோம் என்றால் அதனால் எமக்கு என்ன நட்டம் என்று அதையும் கொண்டாடலாம் எம் அடுத்த தலைமுறை.

தமிழரை அழிப்பதற்கு மற்றவர் தேவையில்லை.தமிழரே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தீபாவளியைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு!

பாதித் தேங்காயில், கொஞ்சம் பழைய துணியைப் போட்டுப் பின்னர் கொஞ்சம்  தேங்காய் எண்ணெய் விட்டு...தென்னம் மட்டை அல்லது வாழைத் தண்டில், வீட்டுப் படலைக்கு முன்னால் விளக்கேற்றுவது ஒரு இனியையான அனுபவம்! பக்கத்துக்கு வீடுகளுடன் ஆருடைய விளக்குப் பெரியது என்று ஒரு ஆரோக்கியமான போட்டி...! புத்தாடைகள் அணிவதில், எதிர்பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம்..அத்துடன் உறவினர்கள் வாங்கி வருவது.. ஒரு மறக்க முடியாத அனுபவம்..! அண்மையில் ஒரு உறவனர் மரணமடைந்த போது...அவர் தீபாவளிக்கு வாங்கித் தந்த ஒரு 'ரீ' சேட்டைத் தவிர அவரைப் பற்றிய வேறு  எந்த நினைவும் எனக்கு இருக்கவில்லை!  பண்டிகைகள் என்பவை உறவுகளை இணைக்கும் பாலம் என்றே கருதுகின்றேன்! அத்துடன் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்காக விசேட சமையல் செய்வதால்... மரக்கறி வியாபாரி...ஆட்டிறைச்சி வியாபாரி... புடவை வியாபாரி... உடை தைப்பவர் என்று பலரது தொழில்கள் பெருக வாய்ப்பும் உண்டு! அத்துடன் எனது பெற்றோர் ஒரு வித்தியாசமான பழக்கத்தை வைத்திருந்தார்கள்! ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர்களது பெற்றோர்களுக்குப் புது வேட்டியும், புது சேலையும் எடுத்துக் கொடுப்பார்கள்! பொருளாதார நிலைகள் மாறிய பொழுதுகளில்.. புடவைகளின் தரம் ஏறி இறங்கியதே தவிர... புடவை வாங்குவது மட்டும் இறுதி வரை நிற்கவே இல்லை!

அதனால் எனக்கு.. நரகாசுரனைப் பற்றியோ அல்லது இராவணனைப் பற்றியோ எந்தக் கவலையும் உண்டாவதில்லை! அந்த இனிமையான பண்டிகையின் இனிய நினைவுகள் மட்டுமே இதயம் முழுவதும் நிறைந்திருக்கின்றது! அந்த நினைவுகளைப் பத்திரமாகப் பொத்தி வைத்திருக்கவே விரும்புகின்றேன்!

தைப்பொங்கல், தீபாவளி என்று ஒவ்வொன்றாக இழந்து கொண்டே போனால்... எங்கே போய் எமது இனம், எமது குழந்தைகள் நிற்கப் போகின்றன?

அவர்களுக்கென்று எதனை விட்டுச் செல்லப் போகின்றோம்?

கிறிஸ்துவின் பிறப்பில் கூட, அவரது வாழ்வில் கூட...ஆயிரம் முரண்பாடுகள் இருக்கின்றன!

அதற்காக அவர்கள் கிறிஸ்மஸ்  கொண்டாடுவதை விட்டு விடுவார்களா என்ன?

முள்ளி வாய்க்கால் என்பது ஒரு 'சூர சம்ஹாரம்' என்பதில் எனக்கு இரு கருத்துக்கள் இருந்தது கிடையாது!

இராவணன் எவ்வளவு பெரியவன் என்பதற்கு... ஒரு சின்ன உதாரணம்!

திருஞான சம்பந்தன் என்ற நாயனார்.. திருநீற்றின் மகிமையை ஒப்பிடுவதற்கு.. உயர்வான பொருள் ஒன்றைத் தேடிக் களைத்துக் கடைசியாக ...

இராவணன் மேலது நீறு...என்று தான் முடிக்கிறார்! இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமணன்!

எனவே.. சுமே... உண்மைகளை ஒரு போதும் குழி தோண்டி...நிரந்தரமாகப் புதைத்து விட முடியாது!

என்றோ ஒரு நாள் ..அவை நிமிர்ந்தே நடை பயிலும்!

உங்கள் பகிர்வுக்கு நன்றி!

19 minutes ago, புங்கையூரன் said:

எனக்கும் தீபாவளியைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு!

தைப்பொங்கல், தீபாவளி என்று ஒவ்வொன்றாக இழந்து கொண்டே போனால்... எங்கே போய் எமது இனம், எமது குழந்தைகள் நிற்கப் போகின்றன?

அவர்களுக்கென்று எதனை விட்டுச் செல்லப் போகின்றோம்?

கிறிஸ்துவின் பிறப்பில் கூட, அவரது வாழ்வில் கூட...ஆயிரம் முரண்பாடுகள் இருக்கின்றன!

அதற்காக அவர்கள் கிறிஸ்மஸ்  கொண்டாடுவதை விட்டு விடுவார்களா என்ன?

அருமை. மேலே உள்ள கருத்துக்குதான் பச்சை

6 hours ago, புங்கையூரன் said:

எனக்கும் தீபாவளியைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு!

பாதித் தேங்காயில், கொஞ்சம் பழைய துணியைப் போட்டுப் பின்னர் கொஞ்சம்  தேங்காய் எண்ணெய் விட்டு...தென்னம் மட்டை அல்லது வாழைத் தண்டில், வீட்டுப் படலைக்கு முன்னால் விளக்கேற்றுவது ஒரு இனியையான அனுபவம்! பக்கத்துக்கு வீடுகளுடன் ஆருடைய விளக்குப் பெரியது என்று ஒரு ஆரோக்கியமான போட்டி...! 

புங்கை
நீங்கள் தீபாவளியையும் கார்த்திகை விளக்கீட்டையும் போட்டு குழப்பி விட்டீர்கள். படலைக்கு வெளியே விளக்கேற்றுவது கார்த்திகை விளக்கீட்டிற்குத்தான். தீபாவளிக்கு வெடி, புதுஉடை, ஆட்டிறச்சி போன்ற சமாச்சாரங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

புங்கை
நீங்கள் தீபாவளியையும் கார்த்திகை விளக்கீட்டையும் போட்டு குழப்பி விட்டீர்கள். படலைக்கு வெளியே விளக்கேற்றுவது கார்த்திகை விளக்கீட்டிற்குத்தான். தீபாவளிக்கு வெடி, புதுஉடை, ஆட்டிறச்சி போன்ற சமாச்சாரங்கள்தான்.

வணக்கம், ஜீவா! கொஞ்சம் குழம்பித் தான் போய் விட்டேன் போல உள்ளது!

தீபாவளி, விளக்கீடு இரண்டும் கார்த்திகை மாதத்தில்..அடுத்தடுத்து வருகின்றன என்று நினைக்கிறேன்!

தீபாவளி என்பது  தீப + ஆவளி என்று இரு வார்த்தைகள் சேர்ந்தது..அதாவது தீபங்களின் வரிசை என்று பொருள்படும்!

அதனால் தான்... இந்தக் குளறுபடி ஏற்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

புங்கை
நீங்கள் தீபாவளியையும் கார்த்திகை விளக்கீட்டையும் போட்டு குழப்பி விட்டீர்கள். படலைக்கு வெளியே விளக்கேற்றுவது கார்த்திகை விளக்கீட்டிற்குத்தான். தீபாவளிக்கு வெடி, புதுஉடை, ஆட்டிறச்சி போன்ற சமாச்சாரங்கள்தான்.

தியேட்டருக்கு வரும், புது சினிமாப் படங்களை சேர்க்க மறந்திட்டீங்க ஜீவா.  Smiley

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை தங்களின் கருத்து அருமையானது....!

கச்சியப்பருக்கு திதி ,அதிதி என இரு மனைவியர். அதில் ஒருவரின் பிள்ளைகள்  சுரர்கள் (தேவர்கள்) என்றும், மற்றவரின் பிள்ளைகள் அசுரர் எனவும் கூறுவர். ஆகவே சுரருக்கும் அசுரருக்கும் கச்சியப்பர்தான் தந்தையாவார். (கிருத , திரேதா யுகங்கள்)

இராமன் மஹா விஷ்னுவின்  அவதாரம். சும்மா ஆரியம் திராவிடம் என்று மதவாதிகள் பிரித்தாள நினைத்தால் அதுக்கேன் விலை போறீங்கள். அவை வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தின் குறியீடுகள் அவ்வளவுதான்.

ஈழத்திலும் யாழ்ப்பாணத்தார்/ மட்டக்களப்பார்.  யாழ்ப்பாணத்தார் / வன்னியார், நகரத்தார்/ தீவார். ( இந்த லட்சணத்தில் இலங்கையே ஒரு உசுக்குட்டித் தீவுதான்) இப்படி எத்தனை வேறுபாடுகள் அதுவும் பத்து மைலுக்குள்.

விஷ்னு வாமன அவதாரத்தில் அசுரச் சக்கரவர்த்தி மாபலியிடம் பிச்சை எடுத்து மூன்றடி மண் கேட்கிறார்.

மீனாக , பண்றியாக, நரசிங்கமாக இப்படிப் பல....!

தீபாவளிக்கு காரணமான நரகாசுர வதம்கூட அவர் விருப்பபபடிதான் நடந்தது. தாய்தந்தையரான பூமாதேவி விஷ்னுவால்தான் நிகழ்ந்தது.

எமது மூதாதையர் தொன்று தொட்டு செய்து வந்திருக்கின்றார்கள் , அதை நாமும் செய்கின்றோம்,வருசதில் ஒருநாள் யாரையும் நோகடிக்காமல் சந்தோசமாக இருக்கின்றோம்.

இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்துவிட்டு அடுத்து உங்களிடம் ஒரு தீர்வோ, தெரிவோ இருக்குதா என்டால் எதுவுமில்லை. சும்மா சகட்டு மேனிக்கு யானை வாழைத் தோட்டத்துக்க புகுந்தமாதிரி போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்.

புங்கை, சுவி... உங்கள் இருவரதும் கருத்துக்கள்  மிக அருமை!.... :)

இப்ப சித்திரைப் புத்தாண்டைத் தைப் பொங்கலுடன் சேர்த்திட்டார்கள் ஒரு கூட்டத்தினர் ....ஒரு கொண்டாட்டம் குறைந்திட்டுது சிலருக்கு... தீபாவளிக்கும் ஆப்பு வைத்தால்..

சொந்த நாடும் இல்லை கொண்டாட்டங்களும் இல்லை......

ஆண்டவா கண் திறக்கமாட்டாயா???

:)

இந்தக் கொண்டாட்டங்கள் புலத்தில் முதற் சந்ததியினரான நாம் இருக்கும் வரைதான். அடுத்த சந்ததியினர் நிச்சயமாக இவ்வாறான கொண்டாட்டங்களில் விருப்பு காட்டமாட்டார்கள். அவர்கள் வளரும் சூழல், கலாச்சாரம் போன்ற காரணிகளால் அவர்கள் சிலவேளைகளில் மாறுபட்ட முறையில் கொண்டாடத் தொடங்கலாம்.

இருந்தாலும் அம்மா தேய்த்துவிட்ட எண்ணெய்,கண் எரிய எரிய தலையில் தப்பிய சீயாக்காய் அரப்பு, புது உடையுடன் ஒரு ஊர்சுற்றல், குடும்பமாக அடித்த ஆட்டின் இரத்த வறை, மூளைப் பொரியல், அடுப்புக்குள் சுட்டுத் தின்னும் ஆட்டின் இன்னொரு உறுப்பு (பெயர் மறந்து விட்டது) அப்புறம் மதியம் ஆட்டிறைச்சியுடன் சாப்பாடு + சூப்பு (தீபாவளிக்கும் காய்ச்சலுக்கும்தான் சூப்பு கிடைக்கும்). மறுபடியும் அடுத்த செற் உடுப்புடன் ஊர் வலம். ஆ புதுப்பட ரிலீஸ் (குறிப்பிடாவிட்டால் தமிழ்சிறீ கோவிப்பார்).

இப்படி அனுபவித்த தீபாவளியை, யாழில் தற்காலிகமாக வசித்தாலும் பார்க்க முடியவில்லை. எனது சொந்த ஊர் 1990 இலிருந்து வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. சொந்தங்கள், அயலவர்கள் உலகம் முழுவதும் பரவி விட்டார்கள். மொத்தத்தில் இன்னுமொரு வெறுமையான தீபாவளி.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2015, 05:06:27, புங்கையூரன் said:

வணக்கம், ஜீவா! கொஞ்சம் குழம்பித் தான் போய் விட்டேன் போல உள்ளது!

தீபாவளி, விளக்கீடு இரண்டும் கார்த்திகை மாதத்தில்..அடுத்தடுத்து வருகின்றன என்று நினைக்கிறேன்!

தீபாவளி என்பது  தீப + ஆவளி என்று இரு வார்த்தைகள் சேர்ந்தது..அதாவது தீபங்களின் வரிசை என்று பொருள்படும்!

அதனால் தான்... இந்தக் குளறுபடி ஏற்பட்டது!

வயசு போட்டுது tw_blush:

On 12/11/2015, 05:18:25, தமிழ் சிறி said:

தியேட்டருக்கு வரும், புது சினிமாப் படங்களை சேர்க்க மறந்திட்டீங்க ஜீவா.  Smiley

On 12/11/2015, 09:42:23, suvy said:

புங்கை தங்களின் கருத்து அருமையானது....!

கச்சியப்பருக்கு திதி ,அதிதி என இரு மனைவியர். அதில் ஒருவரின் பிள்ளைகள்  சுரர்கள் (தேவர்கள்) என்றும், மற்றவரின் பிள்ளைகள் அசுரர் எனவும் கூறுவர். ஆகவே சுரருக்கும் அசுரருக்கும் கச்சியப்பர்தான் தந்தையாவார். (கிருத , திரேதா யுகங்கள்)

இராமன் மஹா விஷ்னுவின்  அவதாரம். சும்மா ஆரியம் திராவிடம் என்று மதவாதிகள் பிரித்தாள நினைத்தால் அதுக்கேன் விலை போறீங்கள். அவை வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தின் குறியீடுகள் அவ்வளவுதான்.

ஈழத்திலும் யாழ்ப்பாணத்தார்/ மட்டக்களப்பார்.  யாழ்ப்பாணத்தார் / வன்னியார், நகரத்தார்/ தீவார். ( இந்த லட்சணத்தில் இலங்கையே ஒரு உசுக்குட்டித் தீவுதான்) இப்படி எத்தனை வேறுபாடுகள் அதுவும் பத்து மைலுக்குள்.

விஷ்னு வாமன அவதாரத்தில் அசுரச் சக்கரவர்த்தி மாபலியிடம் பிச்சை எடுத்து மூன்றடி மண் கேட்கிறார்.

மீனாக , பண்றியாக, நரசிங்கமாக இப்படிப் பல....!

தீபாவளிக்கு காரணமான நரகாசுர வதம்கூட அவர் விருப்பபபடிதான் நடந்தது. தாய்தந்தையரான பூமாதேவி விஷ்னுவால்தான் நிகழ்ந்தது.

எமது மூதாதையர் தொன்று தொட்டு செய்து வந்திருக்கின்றார்கள் , அதை நாமும் செய்கின்றோம்,வருசதில் ஒருநாள் யாரையும் நோகடிக்காமல் சந்தோசமாக இருக்கின்றோம்.

இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்துவிட்டு அடுத்து உங்களிடம் ஒரு தீர்வோ, தெரிவோ இருக்குதா என்டால் எதுவுமில்லை. சும்மா சகட்டு மேனிக்கு யானை வாழைத் தோட்டத்துக்க புகுந்தமாதிரி போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா

On 12/11/2015, 14:35:41, மீனா said:

புங்கை, சுவி... உங்கள் இருவரதும் கருத்துக்கள்  மிக அருமை!.... :)

இப்ப சித்திரைப் புத்தாண்டைத் தைப் பொங்கலுடன் சேர்த்திட்டார்கள் ஒரு கூட்டத்தினர் ....ஒரு கொண்டாட்டம் குறைந்திட்டுது சிலருக்கு... தீபாவளிக்கும் ஆப்பு வைத்தால்..

சொந்த நாடும் இல்லை கொண்டாட்டங்களும் இல்லை......

ஆண்டவா கண் திறக்கமாட்டாயா???

:)

ஆண்டவனுக்கு இருக்கிற பிரச்சனைக்குள்ள இதைப் பாக்க எங்க நேரம் மீனா ???

On 12/11/2015, 15:09:37, ஜீவன் சிவா said:

இந்தக் கொண்டாட்டங்கள் புலத்தில் முதற் சந்ததியினரான நாம் இருக்கும் வரைதான். அடுத்த சந்ததியினர் நிச்சயமாக இவ்வாறான கொண்டாட்டங்களில் விருப்பு காட்டமாட்டார்கள். அவர்கள் வளரும் சூழல், கலாச்சாரம் போன்ற காரணிகளால் அவர்கள் சிலவேளைகளில் மாறுபட்ட முறையில் கொண்டாடத் தொடங்கலாம்.

இருந்தாலும் அம்மா தேய்த்துவிட்ட எண்ணெய்,கண் எரிய எரிய தலையில் தப்பிய சீயாக்காய் அரப்பு, புது உடையுடன் ஒரு ஊர்சுற்றல், குடும்பமாக அடித்த ஆட்டின் இரத்த வறை, மூளைப் பொரியல், அடுப்புக்குள் சுட்டுத் தின்னும் ஆட்டின் இன்னொரு உறுப்பு (பெயர் மறந்து விட்டது) அப்புறம் மதியம் ஆட்டிறைச்சியுடன் சாப்பாடு + சூப்பு (தீபாவளிக்கும் காய்ச்சலுக்கும்தான் சூப்பு கிடைக்கும்). மறுபடியும் அடுத்த செற் உடுப்புடன் ஊர் வலம். ஆ புதுப்பட ரிலீஸ் (குறிப்பிடாவிட்டால் தமிழ்சிறீ கோவிப்பார்).

இப்படி அனுபவித்த தீபாவளியை, யாழில் தற்காலிகமாக வசித்தாலும் பார்க்க முடியவில்லை. எனது சொந்த ஊர் 1990 இலிருந்து வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. சொந்தங்கள், அயலவர்கள் உலகம் முழுவதும் பரவி விட்டார்கள். மொத்தத்தில் இன்னுமொரு வெறுமையான தீபாவளி.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.எது உங்கள் ஊர் சிறி ஜீவன் ??

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.எது உங்கள் ஊர் சிறி ஜீவன் ??

காங்கேசன்துறை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை இன்னும் இருக்குத்தானே. எந்த வரைபடத்தில் இருந்து எடுத்தார்கள்??

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காங்கேசன்துறை இன்னும் இருக்குத்தானே. எந்த வரைபடத்தில் இருந்து எடுத்தார்கள்??

மக்களற்ற இடம் 25 வருடமாக வேறுமனே புவியியல் படத்தில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் வீடுகளற்று வெறுமையாக இருப்பதையே அப்படி எழுதினான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.