Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் இந்தியரின் பார்வையில்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்து உத்ரெஹ்ட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் கொண்டு மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது.

இலங்கைத் தமிழர்கள், அவரது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் லைடனில் இருந்து தொடர்வண்டியில் கிளம்பி தனியாளாகப் போய்ச் சேர்ந்து விட்டேன். பிறகு, லைடன் இலங்கை நண்பர்கள் சிலரை அரங்கில் சந்திக்க முடிந்தது. கூட்டம் முழுக்க கூட இருந்து தமிழீழ நடப்புகளை எனக்குப் புரியும் படி நண்பர் பாஸ்கர் விவரித்துக் கொண்டிருந்தார். (நான் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்தியத் தமிழன்.)

அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருந்திருப்பார்கள். ஜெர்மனி மாவீரர் நாள் கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கூடி இருந்தார்களாம் !! ஆனால், இங்குள்ள மொத்த இலங்கைத் தமிழர் தொகையை கணக்கில் கொண்டால் பத்தில் ஒருவர் பங்கு கொண்டிருப்பார் என்று சொல்லலாம். இந்த நாட்டில் உள்ளூர் மக்கள் கூட கேளிக்கை, சமயம் சாராத நிகழ்ச்சிக்கு இவ்வளவு பேர் கூடுவார்களா என்பது சந்தேகம் தான். 2 வாரம் முன்னர் இங்கு தேசியத் தேர்தல் நடந்ததை கூட வேலை பார்ப்பவர்கள் சொல்லித் தான் அறிந்து கொண்டேன். அவ்வளவு கமுக்கமான ஊர் இது.

அரங்கத்தில் நுழைந்தபோது மாவீரர் நினைவுப் படங்களுக்கு சாற்றுவதற்காக கார்த்திகைப் பூக்களைத் தந்தார்கள். இது தமிழீழ தேசியப் பூ. நம்மால் இயன்ற, விரும்பிய தொகையை கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூக்களை நினைவுப் படங்களுக்கு சாற்றும் போது ஒவ்வொருவரின் சிறப்பையும் பாஸ்கர் விவரித்துக் கொண்டு வந்தார். நிறைய மாவீரர்கள் மிகவும் இளம் வயதில் (30 வயதுக்குள்) இறந்து அமரர்களாய் இருந்தது மனதில் தைத்தது. ஏனோ, நம்ம ஊரில் திரையரங்கில் சீட்டு வாங்க நிற்கும்போது ரசிகர் மன்றம் சார்பாக வரிசையாக படம் போட்டு அடுக்கி வைத்திருக்கும் சுவரொட்டிகள் தான் நினைவுக்கு வந்தது. நம்ம ஊரில் வேறு எங்கு இளைஞர் படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன?

(தமிழகத்தில் தான் பொதுவாக இலங்கை என்று குறிப்பிடுகிறோம். ஆனால், அவர்கள் தமிழீழம், சிறீலங்கா அரசு என்று தெளிவாகத் தனித்தனியாகக் குறிப்பிடுகிறார்கள்.)அண்மையி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் நினனவு என்றால் சோகமாக இருக்குமோ என்று நானாக நினைத்துக் கொண்டிருந்தது தவறாகப் போனது. பலர் பகட்டாடைகள், நகைகள் சூடி வந்திருந்தனர். ஒரு இனத்தின், சமூகத்தின் ஒன்று கூடல் நிகழ்வாகத் தான் என்னால் இதை பார்க்க முடிந்தது.

எனது அருமை ஈழ பெருமக்களே.. இதை பற்றி என்ன நினைக்கிறீங்கள்.?

யோ காவடி என்ன லொள்ளா? ஈழத்தமிழரிட்டை வேற என்னத்தை எதிர்பார்க்கிறீர்?

ஒவ்வொருவரும் தங்களுக்கை என்னென்ன கதைத்தவை என்றதையும் கவனிச்சு கேட்டிருந்தா ரவி முதலே எழும்பி ஓடியந்திருப்பார்.

ஏதோ இனி வரும் காலங்களில் விளம்பர பனர்கள் கட்டவுட்கள், சிறுண்டிச்சாலை என்று விரிவாக்கம் செய்யாமல் இருந்தாலே பெரிய விடையம்.

எனக்கு ஆசை தேசிய தலைவரின் உரையை போட்டிருந்தால் தங்களுக்குள்ளை குசு குசுக்காமல் எத்தினபேர் கவனமாக பொறுமையாக முடியும் வரை இருந்து கேட்டிருப்பினம்?

உரை முடிய அதைப்பற்றி அவர்கள் என்ன கருத்துக்கள் சொல்லியிருப்பினம் என்பதையும் பார்க்க வேணும்.

ஹிந்திப்படம் பாத்து முடிய கதை சொன்ன மாதிரி இருக்கும். :icon_idea:

ஆய்வாளர்கள் ஆசிரியர் தலையங்கம் கண்ணோட்டங்கள் எழுதுறவை பாடே அப்படி இப்படி என்றால் சாதாரண மக்களின் நிலையை கேக்க வேணுமா

Edited by kurukaalapoovan

காவடி

என்னப்பா இப்படி குரை சொல்லுகிறீர் தமிழிச்சிகள் தாம் வாங்கிய நகைகளையும் புடவைகளையும் எங்கப்பா அழகு பாப்பது பஸன் சே எங்க நடத்திறது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும்

:icon_idea::rolleyes::lol:

ஈழவன் எங்கட இடத்தில் அப்படியா?? உண்மையை சொல்லுங்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் எங்கட இடத்தில் அப்படியா?? உண்மையை சொல்லுங்க...

ஏனுங்கோ அம்மணி,

உங்கட இடத்தார் என்னத்தில குறை வைச்சவை?

ஏதோ கனடா லண்டனோட ஒப்பிடேக்க உங்கட இடம் பராவயில்லை எண்டு சொல்லலாம். அவ்வளவுதான்.

ஏன் தூயா மட்டும் என்னவாம்?

கழுத்தில காதில மூக்கில நெத்தில எண்டு அடுக்கிக் கொண்டுதானே இங்க களத்திற்கே வாறா!!!!

நாம் கதைப்பது மனிதர்களை பற்றி...கனடா, லண்டனை விட இங்கு பரவாயில்லை என்பதே நல்ல விடயம் தானே!!

சிலர் போடும் உடைகளின் வண்ணங்கள் கொஞ்சம் மனதை உறுத்தும் தான்...ஆயினும் இதுவரை நான் மாவீரர் நாளுக்கு பட்டோ, நகைகளோ அடுக்கியபடி யாரும் வந்து பார்த்ததில்லை..

ஒருவேளை நீங்கள் நிகழ்ச்சி செய்தவர்களை குறிப்பிடுகிறீர்களோ??

காவடி என்ன புதுசா கதை எல்லாம் விடுறிங்கள்?

ஏதோ எழுதனும் ஏன்ரதுக்காக இப்படியா? நானும் அங்கு நின்றேன்..

இங்கு இருக்கு சனத்தொகைக்கு 1500 என்பது பெரிய தொகை தான்

அடுத்து பெண்கள் சாறி காட்டாம இல்லை ஜீன்ஸ் போட்டு கொண்டா?

அதுவும் இல்லாமலா?

அடுத்து என்ன சனம் பேச்சை ஒன்றையும் கேக்கவில்லையா? தங்கள் பாட்டுக்கு பேசி கொண்டு இருந்தார்களா? ஏன் இப்படி பொய் சொல்கிறிங்கள்?

ஏதோ கேவலபடுத்துவதுக்காக எழுதுகிறிங்கள்

நீர் பார்க்கும் பார்வையில் தப்பை வைத்து கொண்டு விமர்சனம்

நரி ஊருக்குள்ளே வருவதே தப்பு இதுக்குள்ளே ஊளையிட்டு கொண்டு வரலாமா?

பெட்டை பார்க்க வந்து விட்டு நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கு உமக்கு?????

மற்றது குறுக்ஸ் காவடி இங்கு நிகழ்ச்சி நடத்து மண்டபம் எடுக்கும் போது கேட்பார்கள் கண்டின் திறக்க வேண்டுமா இல்லை சாப்பாடு குடிவைகை நடத்துஅனர்களே ஒழுங்கு செய்வார்களா என்று ( மற்றது இல்லை :P )

அவர்கள் கண்டின் திறந்தால் எனன் கிடைக்கும் அவர்கள் பியரும் விற்பார்கள்

எமது மக்கள் நிகழ்ச்சியில் இதை எல்லாம் அனுமதிக்கலாமா?

அக்கவே தான் சில ந்லம் விரும்பிகள் இலவசமாகவும் சிலர் செலவுக்கு ஆனா பொறுட்களை வாங்கி கொடுதால் எமக்கு தேவையான பலகாரங்களை செய்து கொடுப்பார்கள் அவைகளை விற்ற காசு மடபத்துக்கோ இல்லை அங்கி செய்யப்பட அழங்காரங்களுகோ போதுமானது இல்லை ஆனாலும் சிறு தொகை என்றாலும் உதவியாக இருக்கும் தானே பல மணித்தியால்ங்கள் பயனம் செய்து களையோடு வாற மக்களுக்கு ப்சியையும் போகும் தானே????????

இதில் நக்கல் பன்னா என்ன இருக்கு???

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று விமர்சிப்பதை விடுத்து எப்படியோ நடத்தி காட்டிவிட்டார்காளே என்று சந்தோசபடுங்கள்

அதுவும் கடும்போக்கு உள்ள அரசு ஆட்சியில் இருக்கும் போது நாளை ஏதும் நடவடிகை எடுக்கும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பெண்ட்டாட்டி பிள்ளை ஏதோ நீங்கள் வந்து பார்ப்பது போல்.....................................

இது விமர்சிக்க வேண்டிய நிகழ்ச்சி இல்லை

( இறந்த உடலை சுடுகாட்டுக்கு கொண்டு போகும் போது தண்ணி அடிச்சு ஆடி கொண்டு போகும் தமிழ்நாட்டு ஒருவர் நிகழ்ச்சியை விமர்ச்சனம் செய்தா இப்படி தான் தவறாக புரிந்து கொள்ளுவார்கள்...................................

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

ஒருவேளை நீங்கள் நிகழ்ச்சி செய்தவர்களை குறிப்பிடுகிறீர்களோ??

தூயா நிகழ்ச்சி செய்தவ்ர்கள் என்றால் சின்ன பிள்ளைகள் அவர்கள் கழுத்திலும் காதுலும் ஏன் உடை கூட இல்லாம வந்து ஆடனுமா?

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களை சொல்ல தேவை இல்லை இதை நடத்தி முடிப்பதுக்குள் எவளவு அலைச்சல் கள்.............

நானும் இந்த எழுச்சி நிகழ்வில் பங்கு பற்றியவன் என்கின்றமுறையில் முன்பு நடந்த மாவிரர் தின நிகழ்வுகளிலும் பார்க்க இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடிதான் விசயம் தெரியாமல் கதைக்கிறார் என்றால் அதுக்கு சிங்சா தாளம் போட்டவர்களுக்கு எங்கே போச்சுது புத்தி?ஒரு உணர்ச்சி பூர்வமான மாவீரர் நாளை ஏன் இப்படி விமர்சிக்கின்றீர்கள்? :angry:

புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக நடப்பதாக சொல்வது 100 வீதம் உண்மையான கூற்று என்று சொல்ல முடியாது.

அட, இந்த ஒரு வசனத்தை எழுதுவதற்கே எவ்வளவு சிந்தித்து எழுத வேண்டி இருக்கிறது.

வேண்டாம். நான் எழுதவில்லை. மாவீரர்தின நிகழ்வுகளுக்கு போகின்ற உங்களுக்கு உண்மை தெரியாதா? என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேர்மனியில் நடந்த மாவீரர் நிகழ்விலே பன்னீராயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பார்க்க எவ்வளவு பிரமாண்டமாக இருந்தது.இத்தனை ஆயிரம் ஈழத்தவர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலே யேர்மன் நாட்டு காவல் துறையிடம் எந்த உதவியும் கோராமல் தாங்களாகவே கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடாத்தி முடித்தனர்.ஒரு பெண் தாலிக்கொடியுடனும் ஒரு சோடி காப்பும் ஒரு சங்கிலி ஒருமோதிரத்துடனும் வந்தால் அது தப்பா? சிற்றுண்டிச்சாலையில் நின்றால் தப்பா?கடையில் சாமான் வாங்கினால் அது தப்பா?எத்தனை ஆயிரம் மக்கள் தமிழ்கடைகள் இல்லாத இடத்தில் இருந்து வந்திருப்பார்கள்.அவர்கள் ஒரு சில பலசரக்குப் பொருட்கள் வாங்குவதில் தப்பில்லையே.ஒரு சில ஒட்டுண்ணி கூட்டம்(பெட்டை தேடும் கூட்டம்) செய்யும் தில்லானா மோகனாம்பாள் கூத்தால் ஏன் மாவீரர் நாளை உணர்ச்சிபூர்வமாக இல்லை என்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களோடை பெரிய கரைச்சலப்புவை.. வினித் இதை நானெங்கை எழுதியிருக்கிறன்.. தலைப்பியேலே போட்டிருக்கிறன் இந்தியரின் பார்வையென்று.. பதிலுக்கு ரவி எண்டு எழுதினவரின் பெயரும் போட்டிருக்கிறன். என்னொடை எதுக்கு பாயுறியள்.. இது ஒரு வயைப்பதிவில வந்தது.. அதை தூக்கி போட்டன். யாழில தூக்கிப் போடுறது தானே நடக்குது.

எனக்கென்ன சந்தேகம் எண்டால் கந்தப்பு ஒருமுறை ஜெயபாலன் ஒரு முறை தன்ரை அம்மா நினைவாக எழுதினதை தூக்கிப் போட ஒருதரும் அதை வாசிக்காமல் தலைப்பை மட்டும் வாசித்து விட்டு கந்தப்புவின் அம்மாவின் மறைவிற்கு அனுதாபம் சொன்னவை. கடைசியா கந்தப்பு தன்ர அம்மா உயிரோடை இருக்கிறா எண்டு அறிக்கை விட வேண்டியிருந்தது.

அது மாதிரி தான் இதுவும்.. என்ன ஏதெண்டு விசாரிக்கிறேல்லை.. ஏறி விழுறது..

மற்றும் படி கோப்பாயில் நிலவிய விசுவமடுவில் நிலவகின்ற அந்த உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய அந்த இறுக்க நிலை எந்தப் புலத்திலும் சுட்டாலும் வராது. வருவதற்கான காரணங்களும் இல்லை.

புலத்தில் மாவீரர் தினம் ஒட்டுமொத்த தமிழினமும் புலிகள் மீதுள்ள தம் நம்பிக்கையை ஆதரவை உணர்த்துவதற்கான ஒரு பொதுக்கூட்டம். ஒன்று கூடல்.. அவ்வளவே

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் படி கோப்பாயில் நிலவிய விசுவமடுவில் நிலவகின்ற அந்த உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய அந்த இறுக்க நிலை எந்தப் புலத்திலும் சுட்டாலும் வராது. வருவதற்கான காரணங்களும் இல்லை.

புலத்தில் மாவீரர் தினம் ஒட்டுமொத்த தமிழினமும் புலிகள் மீதுள்ள தம் நம்பிக்கையை ஆதரவை உணர்த்துவதற்கான ஒரு பொதுக்கூட்டம். ஒன்று கூடல்.. அவ்வளவே

மெத்தச் சரி.. விசில் பறந்த காட்சிகளையும் லண்டனில் பார்த்தேன். உண்மையான கல்லறைகள் உள்ள இடத்தில் விசிலடித்தவர்களும் இறுகித்தான் நிற்பார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தாயக மாவீரர் தின அனுபவம் ஒண்டு.. வலைப்பதிவில எழுதுப்பட்டது. சத்தியமாச் சொல்லுறன் இதை நான் எழுதேல்லை.. ஏனெண்டால் சிலர் சொல்லுவினம்.. காவடி உமது அனுபவம் எம்மை சில்லிட வைக்குது எண்டு..

வாசியுங்கோ வாசித்து விட்டு இதற்கும் புலத்துக்கும் என்ன வித்தியாசம் எண்டு நீங்களே மனசுக்கள்ளை கேளுங்கோ..

இதுக்கு மேலை நான் இலங்கை அரசு ஒட்டுக்குழுக்கள் டக்ளஸ் ஆகியோரின் கைக்கூலியாக விரும்பவில்லை. ஏனெண்டால் உடன வாற பதிலுகள் உதுகள் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மயானங்களை புனிதமாக்கும் மாவீரர்நாள

நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது உறவினர்கள் யாவரும் செல்லடியில் செத்துப்போனாலோ அல்லது அகதியாகி உலகில் எங்கேனும் அவலப்பட்டாலோ அவன் கல்லறையை சீச்சி அவனை தத்தெடுத்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் தயார். அவன் என்பிள்ளை அவனுக்கு நான் சுடரேற்றுகிறேன் என்று எல்லாரும் முன்வருவார்கள்.(இதைத்தான் அல்லது இதனால்தான் புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்கிறார்கள்) மாவீரர் நாள் அன்று துயிலுமில்லம் கல்லறைகளாலும் கண்ணீராலும் நிரம்பியிருக்கும் எல்லாரும் ஒரே நேரத்தில் சுடரேற்ற ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். உயிர் உருக்கும் பாடல்அது.

மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி

வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி

இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே

இங்கு கூவிடும் எங்களின் அழுங்குரல் கேட்குதா

குழியினுள் வாழ்பவரே

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

உங்களை பெற்றவர்.உறவினர் வந்துள்ளோம்

அன்று செங்களம் மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

இந்தப்பாடல் விடுதலைப்புலிகளின் வீரச்சாவுகளில் மட்டுமே ஒலிக்கும் பாடல் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது.வர்ணராமேஸ்வரன் பாடியது. உயிர் உருக்கும் வரிகள் மாவீரர் தினத்தன்று அவர்களுக்காக சுடரேற்றும் போது மட்டுமே இது ஒலிக்கும். இதில் வரும்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

என்ற வரிகள் வரும்போது கோரசாக நிறைய பாடகர்கள் பாடுவார்கள்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

என்று

அப்படி பாடிய பாடகர்களில் ஒருவரான பாடகர் சிட்டுவும் களத்தில் வீரச்சாவடைந்தபோது அவருக்காகவும் இந்தப்பாடல் ஒரு முறை ஒலித்தது. அப்போது சிட்டுவின் வீரச்சாவு அஞ்சலி நிகழ்வை தொகுத்து வழங்கியவர் சொன்னார் இதோ சிட்டுவுக்காக இறுதியாக ஒருமுறை சிட்டுவே பாடிய பாடல் .. கூடியிருந்த சனங்கள் ஹோ என்று கதறின. சிட்டுவின் ஞாபகங்கள் உணர்வூட்டும் பாடல்களாக இன்றைக்கும் வாழ்கிறது அங்கே.

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

இந்த வரிகளைக் கேட்டு விட்டும் யாரும் அழாமல் துயிலுமில்லத்தில் இருந்து திரும்பி வர முடியாது. கனவுகள் விழித்துக்கொள்ளும். எல்லாரும் அழுவார்கள் அங்கே கல்லறைக்குள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. யாரும் அண்ணன் தம்பீ வீரச்சாவோ இல்லையோ துயிலுமில்ல வளாகத்தில் இருக்கிற அத்தனை பேரும் வெட்கத்தைவிட்டு கதறுவார்கள். அது கவலையா கோபமா என்று தெரியாத அழுகை. தீபங்களின் ஒளியில் கண்ணீர்த்துளிகள் மட்டும் மினுங்கிக்கொண்டிருக்கும். மௌனம் ஒரு பெரிய பாசையைப்போல எல்லாவற்றையும் ஆட் கொண்டிருக்கும். தீபங்கள் குரலெடுத்து அழுவது எல்லோருக்கும் கேட்கும். கல்லறைகள் மெல்லப்பிழப்பது போல இருக்கும். எதுவுமே பேச முடியாது நின்றிருப்போம். மொழியை மறந்து விட்டது போல இருப்போம் அங்கே அப்படித்தான் இருக்கமுடியும்.

துயிலுமில்லம் தான் இன்றைக்கு தமிழர்களின் புனிதப்பொருளாகிவிட்டது. விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த போராளிகளின் வித்துடல்களை (உடல்களை) அங்கே விதைத்து வைத்திருக்கிறார்கள் தங்கள் அபிலாசை மீட்க தங்கள் மக்களின் துயரங்களைக் களைய அவர்கள் மறுபடியும் முளைப்பார்கள் என்று உணர்வு பொங்கச் சொல்வார்கள் தமிழ் மக்கள். அது தான் உண்மையும் கூட.அதனால் தான் அவர்களை புதைப்தில்லை விதைக்கிறார்கள்.

வரலாற்றில் நாங்கள் சுடலை என்பதை ஒரு தீட்டுப்பொருளாக துக்கிக்கும் இடமாக அல்லது எல்லாவற்றினதும் முடிவாக கருதி வந்த வழமையை மாற்றி புதிதாக அதை புனிதத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். அது புனிதம் மட்டுமல்ல எல்லாவற்றினதும் தொடக்கமும் கூட. அது மாவீரர் மயானம் அல்ல மாவீரர் துயிலும் இல்லம். அது நிச்சயமாக தீட்டுப்பொருள் அல்ல அங்கிருப்பவை வெறும் கல்லறைகளும் இல்லை இரத்தமும் சதையுமான வீரர்கள் இளமையும் குறும்புமாக ஓடித்திரிய வேண்டிய பிஞ்சுகள். கல்லறைகளின் அருகே போனால் காதை வைத்துக் கேட்டால் நிச்சயம் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக்குரல் தன் அம்மாவை அறுதல் படுத்தும் தங்கைக்கு உத்வேகம் அளிக்கும். சிலசமயம் துணைவியின் தலைகோதும்.தான் பார்த்தேயிராத தன் குழந்தையை முத்தமிடும்.தோழர்களை உற்சாகப்படுத்தும்.

உள்ளேயிருப்பவர்களின் புன்னகை கல்லறைகளின் முகங்களில் ஒட்டியிருக்கும். கல்லறை ஒரு வேர்விட்ட மரம்போல உறுதியாய் இருக்கும். அங்கிருந்துதான் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்குவதற்கான சக்தியை தமிழர்கள் பெறுகிறார்கள். போராளிகளிற்கும் தமக்குமான சின்னச்சின்ன முரண்பாடுகளை மக்கள் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கடக்கிறார்கள். எத்தனை தடவைகள் குண்டு வீசினாலும் என்னதான் பொருளாதாரத்தடை போட்டாலும் உயிர்வாழ்கிற எங்கள் சனங்களின் உறுதியின் ரகசியம் இவர்களின் தியாகங்கள் தான்.

இந்த தமிழர்களின் புனித இடத்தைத்தான் சிங்களஅரசுபடைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது புல்டோசர் போட்டு தோண்டியது.ராணுவ டாங்க்கினை ஏற்றி கல்லறைகளை மிதித்தது.எங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்களா எங்கள் மனங்களுக்கு மதிப்பளிப்பார்கள். அவர்களிடமா நாங்கள் மனிதாபிமானம் பேசுவது.சொல்லுங்கள் உறவுகளே?

(மன்னிக்கவும் நண்பர்களே முதலில் போட்ட பதிவை புளொக்கர் விழுங்கி விட்டதால் மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது)

த.அகிலன்

கனவெழுதியது த.அகிலன் நேரம்:2:13 PM

காவடியின் சாயம் வெளுத்துட்டுது என்று தான் நானும் சொல்லுவன். தன்னுடைய கருத்து என்று எழுதினா ஏச்சு விழும் திட்டு விழும் என்று புலிகளையும் உணர்வாளர்களையும் திட்டிறதுக்கு ரவி... ரொபி... என்று சும்மா ஒரு பெயரில அதுவும் வழர்ந்து வரும் ஈழ - இந்தி உறவை சீர்குலைக்கும் கபட நோக்கோடு இந்தியர் என்று புருடா விடலாம் தானே?

சுட்டதுகளிற்கு இணைப்புகளை குடுத்தா ஏன் இப்படி எல்லாம் சந்தேகிக்கிறம். :lol:

சரி விடையத்திற்கு வருவம்...

என்னைப் பொறுத்தவரை மாவீரர்தின நிகழ்வுகள் என்பது ஒரு சமய நிகழ்வின் புனிதம் எழிமை மொளனம் இருக்க வேண்டியது. அதில் பங்கெடுப்பவர்களின் உடையில் தோற்றத்தில் நடத்தையில் அந்த புனிதம் எளிமை மொளனம் இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாட்டு நிகழ்வுகளில் காண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. மாவீரர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் போன்றவர்கள் தான் மீட்டப்படும் நினைவுகளில் இருப்பதை காணலாம். ஏனையோரில் பெரும்பாலானோருக்கு ஒரு சாதாரண ஒன்று கூடல் மனநிலைதான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எவ்வாறு பக்த்தியுடன் தத்தமது வழிபாட்டுத்தலங்களில் நடந்து கொள்கிறார்களோ அதே எழிமையான புனிதமான நடத்தையை தான் வருடத்தில் 1 நாளாவது மாவீரர்களிற்கா செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

காவடி , நீங்கள் அந்த இந்தியத்தமிழரின் வலைப்பின்னலின் முகவரியினை யாழில் இணைத்திருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்காது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் யோசித்துப் பாத்தன்.. ஒரு பெண் ஒரு 10 பவுண் தாலிக்கொடியுடனும் அதோடை ஒரு சங்கிலியுடனும் கையில என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ரண்டு மோதிரம்.. ரண்டு சோடிக் காப்பு .. புருசன் ஆசையா வாங்கித்தந்த நெக்லஸ்.. இவ்வளத்தையும் போட்டு கைச் சங்கிலி இல்லையெண்டால் அடுத்தவை என்ன நினைப்பினை..? அதுக்காக அதொண்டு.. இதுகளோடை மாவீரர் தினம் போனால் என்ன தப்பா.. ரவிக்கு எங்களைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா காவடியாரே!இன்னும் இருக்கா? இருந்தால் இன்னும் அவிட்டு விடும்.நெஞ்சு குத்துகின்றதே.பாதிக்கப்பட்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா காவடியாரே!இன்னும் இருக்கா? இருந்தால் இன்னும் அவிட்டு விடும்

இப்போதைக்கு இவ்வளவும்தான்..

மாவீரர் கல்லறை என்பது கோவில் மாதிரி தாயகக்கனவுடன் உறங்கும் வீர புருசர்களின் சமாதி நான் சிறுவயதில் கோப்பாய் மாவீரர் கல்லறைகளை தரிசிருத்திருகிறேன் அப்படி உணர்வு எந்தக்கல்நெஞ்சத்த்வரையும் உறைய வைக்கும் ஒரு புனித இடம்.ஆனால் இங்கு கல்லறை மாதிரிகளை வைத்து காலணிகளுடன் அஞ்சலி செலுத்திரம் எண்டு பூவோட போய் கும்புடுவீனம் பார்க்க வேதனையாய் இருக்கும்

கடந்த வருடம் மெல்பேன் மாவீரர்தினத்துக்கு நடிகர் விவேக் வந்திருந்தார் உடனேஎ சனம் மாவீரர்களை மறந்துவிட்டது உடனே அமைப்பாளர்கள் விவேக்கை மண்டபத்தை விட்டு கூட்டி சென்றார்கள் அப்படி ஒரு அவலம் 2005 ஆண்டு மாவீரர் தினத்தில் நடந்தது அப்போது நினைத்தேன் இவர்காளுக்ககவா இவ்வளவு பெரிய தியாக்கத்தை இவர்கள் செய்தார்கள் என்று.ஒரு நடிகனுக்காக எம்முயிருலும் மேலானவர்களை மறக்கத்துணிந்த கூட்டம் எம் இனம்

Edited by ஈழவன்85

சகோதரர்க்ளே, வீண்விவாதங்கள் எதற்கு.

ரவி என்பவர் ஒரு இந்திய சகோதரர், அவரின் வலைப்பூவை நானும் படித்தேன். அது போல அகிலன் என்பவர் ஈழத்து சகோதரர். ஈழத்தில் ஒரு பத்திரிகையில் வேலை செய்தவர், தற்போது இந்தியாவில் 1 மாதமாக இருக்கின்றார். அவர் எழுதியது தான் அடுத்து வந்தது.

சகோதர தேசத்து நண்பர் அப்படி எழுதினால், அவர் ஏன் எழுதினார்...உண்மையை புரிந்தாரா என்று பாராமல், எமக்குள் ஏன் இப்படியான வாதங்கள்???!!!

எம்மை நாமே இளிவு படுத்த கூடாது.. உத்தமர்கள் மத்தியில் ஒரு கருணா போல, எம்மிடையே ஆடம்பரமாக நகை அணிபவர்கள் ஒரு சிலர் இருக்கலாமே..

நான் இங்கு எப்படி என்பதை மட்டுமே சொன்னேன்...இங்கு அப்படியான பகட்டுவேலைகள் என் கண்ணுக்கு தெரிவதில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.