Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரைநலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல் 10பொதுமக்கள் பலி.

Featured Replies

வாகரைநலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல் 10பொதுமக்கள் பலி.

- பண்டார வன்னியன் ளுரனெயலஇ 10 னுநஉநஅடிநச 2006 12:00

வாகரையில் சிறிலங்காப் படையினர் நலன்பரி நிலையங்களை இலக்குவைத்து இன்று மேற்கொண்ட எறிகணை வீச்சுத் தாக்குதலில் 10ற்கும் அதிகமான அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15வரையானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.(படங்கள்இணை

Edited by mooki

  • தொடங்கியவர்

வாகரையில் மீண்டும் சிறி லங்கா படையினரின் ஆட்லரி தாக்குதலில் பல மக்கள் கொல்லபட்டுல்லதாக தெரிவிக்கபடுகிரது. உடலங்கள் வீதியெக்கும் சிதறி கிடப்பதாக அறியமுடிகிரது.

  • தொடங்கியவர்

வாகரை மாங்கேணியூடாக படையினர் நகர்வு- எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் பலி- 20 பேர் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 10 டிசெம்பர் 2006, 13:05 ஈழம்] [திருமலை விசேட நிருபர்]

மட்டக்களப்பு வாகரை நோக்கி மாங்கேணியூடாக படைநகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரமாரியான எறிகணைச் சூட்டாதரடன் இந்நகர்வை படையினர் மேற்கொண்டனர்.

கண்டலடியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

இச்சம்பவத்திலேயே 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்தனர்.

நேற்று பாற்சேனை வம்மிவட்டவான் பகுதி மீது படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் 19 பேரினது சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த பொதுமக்களின நிலை கவலைக்கிடமாகியுள்ளதுடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலை அங்கு காணப்பட்டு வருகின்றது.

தொடர்ந்தும் படையினர் வாகரைப் பகுதியை நோக்கி செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதல் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் வாகரை மருத்துவமனையில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்தி: வாகரையில் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள்: 15 பொதுமக்கள் பலி- 35 பேர் காயம்

http://www.eelampage.com/?cn=30094

10 more Tamil refugees killed, new SLA offensive south of Vaharai.

10 Internally displaced people, who fled artillery bombing in Palchenai and Vammivedduvan in Vahrai region to Kandalady Government School, were killed and more than 15 wounded when Sri Lanka Army fired artillery shells hit the school Sunday morning, according to LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan. Sri Lanka Navy gunboats were also engaged in firing shells towards densely populated refugee camps as Sri Lankan forces opened a new front towards Panichchankerni Sunday morning. Meanwhile, a Tamil Rehabilitation Organisation official in Vaharai told TamilNet all the five refugee camps in Vaharai were being targeted by artillery shelling forcing all civilians to flee.

Mr. Moorthy, TRO's coordinator in Vaharai further said more than 7000 civilians were gathered at the hospital site in Vaharai Sunday morning as TRO volunteers buried six civilian's bodies brought from Kandalay IDP camp area.

Meanwhle, a female patients of the 10 critically wounded among the 26 patients admitted at Vaharai hospital following artillery barrage on two refugee camps Saturday, succumbed to her wounds as the hospital was refused permission by the military to transport the critically wounded to Valaichenai hospital through Mankerny SLA camp.

Five boats were engaged Sunday morning in an attempt to transport the critically wounded, but the heavy shelling from gunboats in the seas off Vaharai, scuttled the attempt.

Hospital staff had again urged for transport via landroute for critically injured, medical sources said.

The biggest military offensive, launched by the SLA this year in Trincomalee, imposing an econoimic blockade on 40 000 civllians in the region and denying access to NGOs and closing down the gateways, has continued for more than two months.

Sri Lanka Monitoring Mission has been denied access to the area by Colombo.

www.tamilnet.com

தொடர்ந்தும், பசி, பட்டினி, படையினரின் கொலைவெறித் தாக்குதலென சொல்லணெத் துயரை அனுபவித்துவரும், வாகரை மக்களிற்கு எப்போது விடிவு பிறக்கப்போகிறது?

(2 ஆம் இணைப்பு) வாகரை மாங்கேணியூடாக படையினர் நகர்வு- எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் பலி- 75 பேர் காயம்

மட்டக்களப்பு வாகரை நோக்கி மாங்கேணியூடாக படை நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரமாரியான எறிகணைச் சூட்டாதரவுடன் நகர்வை மேற்கொண்ட படையினரின் எறிகணைகள் கண்டலடியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது வீழ்ந்து வெடித்தன.

இச்சம்பவத்திலேயே 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கொல்லப்படுவதும், காயப்படுவதும், பட்டினி கிடப்பதும் முக்கியமற்ற வெறும் செய்திகளாகத்தான் பலருக்குத் தெரிகின்றது. இராணுவம் முன்னேறியதா? புலிகள் முன்னேறினார்களா? என்று பார்க்கும் கூட்டம் மக்களின் அவலத்தைப் போக்க தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். புனர்வாழ்வுக் கழகம், வெண்புறா போன்ற அமைப்புக்கள் அழைப்பு விடுக்கும்வரை காத்திராமல் உங்கள் உதவிகளைச் செய்யுங்கள் (பண்டிகைக் காலம் வருகின்றது, அதற்காக ஆடம்பரமாகச் செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியையாவது அல்லலுறும் மக்களுக்காகக் கொடுக்க முன்வரவேண்டும்)

புலிகளின் கட்டுப்பட்டு நிலங்களை இராணுவம் ஆகிரமிக்க தொடங்கிய சண்டையில் இராணுவத்தின் பக்கம் யாரும் இறக்கவில்லலயாம் சந்தோமாம் யாருக்கோ ஆனா நாளுக்கு 10க்கு மேற்ப்பட்ட மக்கள் இறப்பது பற்றி கவலையும் இல்லையாம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரச பயங்கரவாதம்: சங்கதி.கொம்

படங்கள் கோரமாகவுள்ளது...!

:D:):lol:

Edited by Tigerblade

இந்த படங்களை மேற்கத்தேய ஊடகங்களின் முன்பக்கத்தில் வரச் செய்ய வேண்டும். இன்று டாபோர் நாளாக பிரகடனப்படுத்தி அங்கு நடக்கு இனஅழிப்பை தடுக்க முயல்கிறார்கள். எமது நாட்டில் நடக்கும் இனஅழிப்பு எப்போ இவர்களின் கவனத்தை பெறப் போகிறது?

இந்திய பத்திரிகைளின் முன்பக்கத்திலாவது வருமா நாளை?

புலிகளின் கட்டுப்பட்டு நிலங்களை இராணுவம் ஆகிரமிக்க தொடங்கிய சண்டையில் இராணுவத்தின் பக்கம் யாரும் இறக்கவில்லலயாம் சந்தோமாம் யாருக்கோ ஆனா நாளுக்கு 10க்கு மேற்ப்பட்ட மக்கள் இறப்பது பற்றி கவலையும் இல்லையாம் :D

http://www.yarl.com/forum3/index.php?showt...id=244547&#

  • தொடங்கியவர்

இப்படி மக்களை பதை பதைக்க கொடூரமாக கொல்லுகிறார்களே? இதை தடுக்க யாருமே இல்லையா? இந்த மக்கள் செய்த பாவம் தான் என்ன? இந்த கொடூரமான உலகில் ஏன் தான் பிறந்தமோ தெரியவில்லை.

முறியடிப்பு சமரை கொஞ்சம் மாற்றி இரணுவத்தின் விநியோக பாதைகளை சிதைக்கும் விதமாக உத்திகளை மாற்றி பார்க்க வேண்டிய தருணம் இது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு அதிர்ச்சி வைத்தியம் உடனடி தேவை. I agree There is a risk factor in it.But... at this juncture it might be an unavoidable measure

அது தானே குடுத்த காசுக்கு வடிவா வேலை செய்யிறாங்கள் இல்லை. அவைக்கு என்ன நோய் என்ன வைத்தியம் என்று தெரியாது போல கிடக்கு. நீங்கள் இங்கை இருந்து உங்கடை அதிர்ச்சி வைத்தியங்களை பற்றி விலாவாரியா விளக்கமாக எழுதி ஒருக்கா வடிவா படத்தை கீறி குடுத்தியள் என்றால் அங்கை இருக்கிறவை மிச்சத்தை ஜமாய்ச்சுடுவினம்.

முறியடிப்பு சமரை கொஞ்சம் மாற்றி இரணுவத்தின் விநியோக பாதைகளை சிதைக்கும் விதமாக உத்திகளை மாற்றி பார்க்க வேண்டிய தருணம் இது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு அதிர்ச்சி வைத்தியம் உடனடி தேவை. I agree There is a risk factor in it.But... at this juncture it might be an unavoidable measure

அவ்வாறு செய்ய முடிந்தால் நல்லது. அல்லது அப்படிச் செய்ய முடியாவிட்டால் தந்திரோபாய பின்னகர்வை செய்தாவது மக்களை பெரும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். 30 ஆயிரம் பேரில் ஏற்கவே பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் பட்டினி நோய் என்பவற்றினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் பரிதவித்துக் கொண்டுள்ளனர். இரண்டில் ஒன்றை விரைந்து செய்யவேண்டும்.!

நான் படங்கள் இங்கே கீறி கொடுத்தால், குறுக்காலே போவதற்கு சிங்கள படைகளுக்கு தான் துணை நிற்கும், குறுக்காலே போனவரே!

நிற்க, கொடுத்த காசுக்கு வேலை செய்வதற்கு அவர்கள் ஒன்றும் கூலிப்படைகள் அல்ல. எங்கள் விடுதலை இயக்கம்!!!.

நகைச்சுவை கூட கொஞ்சம் நாவடக்கத்தோடு வர வேண்டும், குறுக்கால போனவரே. அப்படி இல்லாததால் தான் நிறைய விடயங்கள் குறுக்கால போய் விட்டது குறுக்கால போனவரே

அது தானே குடுத்த காசுக்கு வடிவா வேலை செய்யிறாங்கள் இல்லை. அவைக்கு என்ன நோய் என்ன வைத்தியம் என்று தெரியாது போல கிடக்கு. நீங்கள் இங்கை இருந்து உங்கடை அதிர்ச்சி வைத்தியங்களை பற்றி விலாவாரியா விளக்கமாக எழுதி ஒருக்கா வடிவா படத்தை கீறி குடுத்தியள் என்றால் அங்கை இருக்கிறவை மிச்சத்தை ஜமாய்ச்சுடுவினம்.

நான் படங்கள் இங்கே கீறி கொடுத்தால், குறுக்காலே போவதற்கு சிங்கள படைகளுக்கு தான் துணை நிற்கும், குறுக்காலே போனவரே!

நிற்க, கொடுத்த காசுக்கு வேலை செய்வதற்கு அவர்கள் ஒன்றும் கூலிப்படைகள் அல்ல. எங்கள் விடுதலை இயக்கம்!!!.

நகைச்சுவை கூட கொஞ்சம் நாவடக்கத்தோடு வர வேண்டும், குறுக்கால போனவரே. அப்படி இல்லாததால் தான் நிறைய விடயங்கள் குறுக்கால போய் விட்டது குறுக்கால போனவரே

காசுக்கு வேலை செய்யிற கூலி ஆக்கள் இல்லை விடுதலை இயக்கம், இது மிச்சம் இருக்கிற ?#8220;ய்வு நேரத்தின் பொழுது போக்கு அல்ல விடுதலைப் போராட்டம் என்று தெரியுது எல்லே பிறகு என்ன இழவுக்கு இங்கு இருந்து கொண்டு அங்கு அவர்கள் அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும் ஏன் இன்னமும் செய்யவில்லை என்று உளறுறியள்?

இதில நகச்சுவையும் இல்லை நாவடக்கமும் இல்லை உண்மையைத்தான் கேக்கிற. புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிற *** என்னத்து அங்க இருக்கிறவை அடுத்தாக "என்ன செய்ய வேண்டும் செய்யவில்லை" என்று ஆய்வு செய்யுறியள்? இங்கு நாங்கள் என்ன செய்ய வேணும் செய்யவில்லை என்றதைப் பற்றி நாசம்அறுவார் கதையுங்கோ ஆய்வு செய்யுங்கோவன்.

அங்கை இருக்கிறவைக்கு அதிர்ச்சி வைத்தியமோ ஆயுள்வேத வைத்தியமோ என்று இங்கு இருந்து ஒரு *** ஆய்வு செய்ய வேண்டிய கேவலத்தில் அங்கு உள்ளவர்கள் இல்லை. இங்கு எமது கடமை பெறுப்புகள் பற்றி கவனம் சொலுத்துங்கோ அது போதும்.

நீர் படம் கீறீ குடுத்தா சிறீலாங்கா பயன் அடைந்துடும் அது தான் கீறாமல் இருக்கிறீர் அந்தளவு திறமையான இராணுவ விற்பன்னர் என்று சொல்ல வாறீரோ? பொத்திக் கொண்டு ஏதாவது நடக்கிறதைப் பற்றி கதையும்.

***- சொற்கள் நீக்கப்பட்டுள்ளது

ஓம் ஓம் இராணுவ விற்பன்னர் அதிர்ச்சி வைத்திய திட்டம் பற்றி படம் கீறி முடிஞ்சுது தாய்மொழி பற்றி தற்குறிகளிற்கு வகுப்பு எடுக்கிறார். சுத்தியிருந்து கேழுங்கோ.

TTN தொலைக்காட்சியில் செய்தியில் ஒளிபரப்பாகிய சிறு விபரணம். http://www.yarl.com/videoclips/view_video....3be8079a5c74d07

  • கருத்துக்கள உறவுகள்
அவ்வாறு செய்ய முடிந்தால் நல்லது. அல்லது அப்படிச் செய்ய முடியாவிட்டால் தந்திரோபாய பின்னகர்வை செய்தாவது மக்களை பெரும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். 30 ஆயிரம் பேரில் ஏற்கவே பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் பட்டினி நோய் என்பவற்றினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் பரிதவித்துக் கொண்டுள்ளனர். இரண்டில் ஒன்றை விரைந்து செய்யவேண்டும்.!
  • கருத்துக்கள உறவுகள்

oh, what do you think once EPRLF/EPDP ATTACK KARAINAGAR CAMP ATTAK OR ALLAN COUPLE'S KIDNAP.DO YOU MEAN TO BACK OFF LIKE THAT? OR DO YOU WANT ATTACK LIKE ELLEPHANT PASS OR MULLITHIVU.

ஐயோ இவர் ஒருத்தர் இதுக்குள்ள சும்மா பக்கங்களை நிரப்பிக் கொண்டு...!!...??

எப்படா என்னைக் கவுக்கலாம் எண்டு அலையுறார்....!

உங்கட பிரச்சனை என்ன எண்டு தெளிவா சொல்லுங்கோ?

இப்ப நான் தமிழின துரோகி எண்டு ஒத்துக் கொள்ள வேணும் அவ்வளவுதானே. ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை தமிழின நாட்டுப்பற்றாளரான நீங்கள் தயவு செய்து தமிழிலேயே இனி எழுத வேணும் சம்மதமோ? அப்ப நான் ஒரு தமிழ்பற்றாளருக்கு தமிழில் எழுதக் கற்றுக் கொடுத்த திருப்தியோட அந்த பழியை ஏற்கிறன்.

Edited by saanakiyan

யேர்மனியில் தமிழ்மக்கள் நாளைய தினத்தை துக்க தினமாக அனுட்டிக்க முடிவு .

தென் தமிழீழத்தில் சிறீலங்காப் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும். படையினரின் கொலை வெறியாட்டத்தைக் கண்டிக்கவும் 12.12.06 செவ்வாய்க்கிழமையை யேர்மன் வாழ் தமிழ்மக்கள் துக்கநாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென யேர்மன் தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சர்வதேச மனித உரிமைகள் தினத்திலன்று சிறீலங்கா படை வாரையிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம் பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தி 4 சிறுவர்கள் உட்பட 21 பொதுமக்களைப் படுகொலை செய்ததுடன் 50க்கு மேற்பட்ட பொதுமக்களைக் காயப்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாட்களாக நடைபெற்ற படையினரின் தாக்குதல்களில் 41 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மக்களை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதைப் படையினர் தடுத்து வருகின்றனர்.

எனவே இச்சம்பவத்தை யேர்மனிய மக்களுக்குத் தெரியப்படுத்தவும் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தவும் 12.12.06 அன்று செவ்வாயக்கிழமையை யேர்மன் வாழ் தமிழ்மக்கள் துக்க நாளக கடைப்பிடிப்பதுடன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போதும் கறுப்புப்பட்டி அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் சிறீலங்கா அரசுமேற்கொண்ட அரசபயங்கரவாதத்தை உலகுக்கு எடுத்துரைப்போம். எனஅவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

ஏனைய நாட்டு மக்களும் ஏதாவது செய்யலாமே?

http://www.battieezhanatham.com/newsite/in...7&Itemid=37

(படங்கள் கோரமானவை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.