Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டியத் தேவை உள்ளது: சம்பந்தர்

Featured Replies

பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டியத் தேவை உள்ளது: சம்பந்தர்

 

இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

      151206180549_tna_sampanthar_512x288_bbc_

 மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.

வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்

ஞாயிற்க்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றறில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் ''வரவு - செலவுத் திட்டத்ததை விமர்சிக்கலாம். அதற்காக அதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை''என வலியுறுத்தி கூறினார்

"கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் நிதானமாக பக்குவமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

"நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது " என்றும் குறிப்பிட்டார் இரா. சம்பந்தன் .

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் 16ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறுகின்றது

அதன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் பெறும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி , புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

ஈ.பி. ஆர். எல். எப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஈ.பி. ஆர். எல் எப் எடுத்துள்ள இதே நிலைப்பாட்டை இறுதி வாக்கெடுப்பின் போது டெலோவும் எடுக்க தற்போது தீர்மானித்துள்ளது.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் இதி வாக்கெடுப்புக்கு முன்னதாக தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் என டெலோ எதிர்பார்க்கின்றது.

அப்படி முடிவ வெளிவராவிட்டால் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இறதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க மாட்டர்கள் என்கின்றர் டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன்.

இந்த முடிவை தமது கட்சியின் பொதுச் சபை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151206_lanka_budget_tna

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் உள்ள தனித்துவமான கட்சிகள் என்ற வகையில் எதிர்ப்புத் தெரிவிக்க TELO வுக்கும் EPRLF இக்கும் உரிமையுண்டு. அரசியல் கைதிகள் தொடர்பில் TELO எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது.  ஆனால் உறுதியான கொள்கை இருக்குமானால் ஏன் வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. துணிவாக எதிர்த்து வாக்களிக்கலாமே! 

 

Edited by நிழலி
சீண்டல் கருத்து நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சம் தேவை இருக்கு என்பார்.. சும் தேவை இல்லை என்பார்.. மாவை.. தேவை இருக்கு இல்லை என்பார்... முதலில் உவை ஒரு முடிவுக்கு வரட்டும். சம் சும் வாக்களிச்சாலும்.. வாக்களிக்காவிட்டாலும் பட்ஜட் நிறைவேறும். சம் சும்மா படம் காட்ட வேண்டாம். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.