Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

Featured Replies

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்
 
யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்
யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
 
சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு எண்ணெய் மற்றும் பார உலோகங்கள் கலந்துள்ளதாகவும் இவ்வாண்டு தொடக்கத்தில் யாழ்.குடாநாடு முழுவதும் பரபரப்பான பேச்சுக்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
 
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நிபுணர்குழு வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருந்தது.
 
மேற்படி குழு கடந்த பல மாதங்களாக பல்வேறு நவீன கருவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், சுகாதார அமைச்சு உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், வடமாகாண விவசாய அமைச்சின் பங்களிப்புடனும் செயற்பட்டு தனது ஆய்வு அறிக்கையின் இறுதி அறிக்கையை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
 
இதற்கமைய மேற்படி ஆய்வு அறிக்கை இன்றைய தினம் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் ஆகியோரிடம் நிபுணர் குழுவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மேற்படி நிபுணர்குழு தனது ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாவது,
குடாநாட்டின் சுன்னாகம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி குடாநாட்டின் நீரில் எண்ணை நச்சுக்கள் இல்லை.
 
ஆனால் குடாநாட்டு நீர் பாவனைக்கு உகந்தது என்பதை தம்மால் கூறமுடியாது எனவும், தாம் ஆய்வுக்காக பெற்றுக் கொண்ட நீர் மாதிரிகள் அனைத்திலும் மலக்கிருமிகள் மிகமிக அதிகளவு காணப்பட்டுள்ளதாகவும், தமது நீர் மாதிரிகளில் 50 வீதமானவற்றில் அதிகளவு நைத்திரேற்றுக் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருப்பதுடன்,மலக்கிருமிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நீரை சுடவைத்துப் பருகலாம். ஆனால் நைத்திரேற்று தாக்கத்தை தணிக்க சாதாரணமான வழிகள் இல்லை. எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
 
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் குடிநீரை மக்கள் பயன்படுத்த முடியுமா? முடியாதா? என மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 
 
இதற்குப் பதிலளித்த நிபுணர் குழு,
நீரில் எண்ணை நச்சுக்கள் இல்லை. ஆனால் நைத்திரேற்று மற்றும் மலக்கிருமிகள் ஆபத்தான அளவில் காணப்படுகின்றது.
எனவே இந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியுமா? என்பதை சுகாதார அமைச்சும் நீர்வழங்கல் அமைச்சுமே முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

வேறொரு பதிவில் ஊரில் குப்பை சேர்கிறது என்று கூறப் பட்ட முறைப்பாட்டிற்கு வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கப் பட்டன. அந்தக் குப்பைகள் மனிதருக்கு என்ன தீமைகளைக் கொண்டு வரும் என்று காட்டும் செய்தி தான் இது: மனித, மிருகக் கழிவுகள் குடி தண்ணீர் மூலங்களில் கலந்தால் ஈ.கோலை (E. coli) என்ற பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடிய பக்ரீரியா பரவும். இந்த பக்ரீரியா பாவிக்கப் படும் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியைக் காலப் போக்கில் பெற்றால், இப்போது பாவனையில் இருக்கும் பக்ரீரிய எதிர்ப்பு மருந்துகள் எதுவும் வேலை செய்யாமல் போகும்! பொதுச் சுகாதாரமின்மை தாயகத்தில் சாதாரணமான விடயம் என்று உதாசீனம் செய்யும் நபர்களுக்கு இது சமர்ப்பணம்!

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் பிரதேசங்களில் உள்ள ஆயிரக் கணக்கான கிணறுகளில் இருந்து பெறப்படும்  நிலத்தடி நீரையே  குடிநீராக பயன்படுத்தும் முறை  படிப்படியாக மாற்றப்பட்டு யாழ்மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான நீர் பொதுவழங்கல் முறையில் சென்றடைவதற்கு வேண்டிய குழாய் வலையமைப்பு இனி வரும் காலங்களில் நிர்மாணிக்கப்படுதல் அவசியம் என்பதையே மேற்படி அறிக்கை சுட்டி நிற்கிறது. அல்லது குறைந்த பட்சம் வாழ்விடங்களில் மலசல கூடங்களின் கழிவுப்பொருட்களையாவது தனியான சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி அவற்றை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவழங்கல் முறையில் விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் செய்வதற்கு ஏற்றதா என்பதை முன்கூட்டியே பரிசோதனை செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. பயிருக்கு இடும் இரசாயன உரம், அத்துடன் மனித, மிருக கழிவுப்பொருட்கள் என்பன மழைநீரில் கரைந்து நிலத்தடியில் செல்வதால் அவை மீண்டும் குடிநீர் கிணறுகளில் ஊற்று நீராக வெளியேற்றப்படுகின்றன. இயற்கை மழைநீர் பூமியின் மண்படுக்கைகள் ஊடாக கீழ் நோக்கி செல்லும்போது ஓரளவு மாசுக்களும் நோய் கிருமிகளும் வடிகட்டப்படும் என்றாலும் முற்றிலும் சுத்தமான குடிநீரை இம்முறையில் பெறுவது சாத்தியமற்ற ஓன்று.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பல வாழ்விடங்கள் குறுகிய காலத்திலேயே பெரிய நகரங்களாக பெருத்து மக்கள் தொகையுடன்  சம காலத்தில் பொருண்மிய பயன்பாட்டின் அதீத அதிகரிப்பையும்  காண்கிறோம். அந்த வளர்ச்சிக்கு ஏற்றால்போல்  அப்பிரதேசங்களில் வேண்டிய உட்கட்டமைப்பு இருக்கிறதா என்றல் இல்லை என்பதுதான் பதில்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.