Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது! அமைச்சர் ராஜித கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது! அமைச்சர் ராஜித கூறுகிறார்
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 01:32.35 AM GMT ]
rajitha-senaratne.jpg
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. முன்னைய அரசாங்கத்தை போலவே எம்மையும் கருதாது அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ எம்மால் அனாவசியமாக எதையும் மேற்கொள்ளவும் முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணை பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும்.

வடக்கு,கிழக்கு பகுதிகளின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும், இந்த நிலைமை தொடருமாயின் மீண்டும் சர்வதேச தரப்பிடம் முறையிடவேண்டி வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் பதிலை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைபோல் பாவித்தனர்.

அதேபோல் அனாவசிய இராணுவ முகாம்களை அமைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியும் தமது ஆதிக்கத்தை தக்க வைத்திருந்தனர். எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கிலும், கிழக்கிலும் அனாவசிய இராணுவ முகாம்கள் அனைத்தையும் நீக்கி பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

எனினும் வடக்கிலும், கிழக்கிலும் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் இல்லை. நாம் ஜனாநாயக ரீதியில் இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டில் சகல பகுதிகளிலும் மூவின மக்களும் வாழ உரிமை உள்ளது. அதேபோல் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யுத்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்ட சிங்கள் மக்களின் நிலங்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

எமது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றும். நாம் வடக்கில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இப்போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுதான் வருகின்றது.

தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் தமிழ் மக்களின் உரிய நிலங்களில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. இந்த விடயத்தில் யாரும் எம்முடன் முரண்பட்டு சர்வதேச தரப்பை நாடவேண்டிய தேவை இல்லை. முன்னைய அரசாங்கத்தை போலவே எம்மையும் கருதி செயற்படாது எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் தயாராக வேண்டும்.

மேலும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை அரசாங்கம் எமது பொறிமுறைக்கு அமைய மேற்கொண்டு வருகின்றது. கடந்த காலத்தில் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்கு மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம்.

அதேபோல் இந்த விசாரணைகளின் போதும் நாம் பொதுமக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி உண்மை சாட்சியங்களை சேகரித்து வருகின்றோம். எனினும் இந்த விவகாரங்களில் எவரதும் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவும் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.

அதேபோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ எம்மால் அனாவசியமாக எதையும் மேற்கொள்ளவும் முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணை பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை நாம் சரியான முறையில் நிறைவேற்றுவோம். அதேபோல் உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையும் இந்த அரசாங்கத்தில் முழுமையடையும் என அவர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmtzCSaSWlvzH.html

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கப் போகிற 2016 இலங்கை மக்கள் எல்லோருக்கும் நல்லதாக இருக்கப்போகின்றது என்ற நம்பிக்கை பிறக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா தெற்கில் 2,000 ஏக்கரில்
2,000 சிங்களவர்கள் குடியேற்றம்
வீ.ஆர். வரதராஜா

 

29_Vadduvaakal_stupa_02-1-300x224.jpg

அதிதீவிரம் காட்டுகின்றது சிங்கள அரசு. வடமாகாணத்தில் ஒரு சிங்களத் தொகுதியையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகப் பொறுப்புடன் நடந்துகொள்கின்றது. வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் தமிழர்களே பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஆனால் சிங்கள மக்களை அங்கு குடியேற்றி தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்குவதுடன் மகாண சபையிலும் சிங்களப் பிரதிநிதித்துவம் பெறப்படவேண்டும் என்பதில் அதிதீவிரம் காட்டப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மாத்திரம் சிங்கள இராணுவம் ஆட்சி செய்கின்றது.

திட்டமிட்ட அடிப்படையில் மிக ஆழமாக சிங்களக் குடியேற்றம் இடம்பெறுகின்றது. அந்தக் குடியேற்ற இலக்கு நிறைவாகும் வரை வடமாகாண சபை தேர்தல் நடைபெறாது. தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி ஆட்சி செய்தார்களோ அதே போன்று சிங்கள மக்களை வன்னியில் குடியேற்றி ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கின்றது இராணுவம்.

கானமயிலாட கண்டிருந்த வான் கோழியும்…®  என்ற பொன்மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.

வவுனியா தெற்கு சிங்களப் பிரிவை ஏற்கனவே ஏற்படுத்தி இருந்த சிங்களம், அப்பிரிவில் 2,000 ஏக்கர் காணியை துப்பரவு செய்து அங்கு சிங்களவர்களை குடியேற்றி வருகின்றது. ஒரு சிங்களவருக்கு ஒரு ஏக்கர் வீதம் அந்தக் காணிகள் பங்கிடப்பட்டுள்ளன.

அவர்கள் அங்கு விவசாயம் செய்வதற்கு உதவியாக 10 மில்லியன் ரூபாவை விவசாய அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது. சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் மிகப் பரந்தளவிலான ஆயிரக்கணக்கான அரச காணிகள் வெறுமனே கிடக்கின்றன.

வவுனியாவில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு தென்னிலங்கை தானே பூர்வீக வாழ்விடம். அவர்களை அங்கே இதே வளத்துடன் குடியமர்த்தினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் அல்லவா? ஆனால் அதனைவிடுத்து எவ்வித தொடர்பும் அற்ற பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்துவரும் வடக்குகிழக்கு மாகாணங்களில் அவர்களை குடியமர்த்த  ஏன் அரசாங்கமே தமது வளங்களை பயன்படுத்த வேண்டும்.

1949ஆம் ஆண்டு 140 சிங்கள வாக்காளர்களை மாத்திரமே கொண்டிருந்த திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று இரண்டு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியது யார்? இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக ஒருமுறை அதிலும் விருப்பு வாக்குகளை மாத்திரமே பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வரும் அளவுக்கு தமிழரின் எண்ணிக்கையை அங்கு குறைத்தது யார்?

திட்டமிட்டு சிங்கள அரசுகள் செய்த சூழ்ச்சிகளினால் இவை ஏற்பட்டன என்பது பகிரங்கமான உண்மை. வன்னியிலும் இந்த நிலையை ஏற்படுத்த மகிந்த அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.  56ம் சிங்கள இராணுவ கட்டளைப்பிரிவு வவுனியாவில் இரண்டாயிரம் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதில் மகிந்த அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அனாதைகளாக சிறிய கூடாரங்களில் வாழ சிங்கள அரசு நிர்பந்தித்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகின்றார். அவர்களுக்கு உதவ அரசாங்கம் முன்வராத அதே வேளையில், வேறு பொது நிறுவனங்களையும் உதவி செய்யவிடாமல் தடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

———————————————————–

மன்னாரில் ஆயிரம் ஏக்கர் தமிழர்

காணியை அமைச்சர் ரிச்சாட் அபகரிப்பு!

————————————————————

 

இதேவேளையில் வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் துன்பங்களைக் கொடுத்துவரும் அமைச்சர் ரிசார்ட் பதூர்தீன் இப்போது தமிழருக்குச் சொந்தமான நில அபகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தலைமன்னார் பழைய பாலத்தடியைச் சுற்றியுள்ள ஆயிரம் ஏக்கர் தமிழருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தம் வசப்படுத்தியுள்ளார்.

திடீரென தமது காணிகளைச் சுற்றி வேலி கட்டப்படுவதை அறிந்து காணி உரிமையாளர்கள் அங்கு சென்றபோது, அமைச்சரின் சகோதரர்கள் அவை தமக்குச் சொந்தமானவை என போலி ஆவணங்களை காட்டியுள்ளார். அதுமாத்திரமல்ல காணிகளிலுள்ள பனைமரங்களைத் தரித்து கூடிய விலைக்கு கொழும்பு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகிறார். இது குறித்து சட்டநடவடிக்கை எடுக்க அவர்கள் ஆலோசிக்கின்றபோதும், நீதிமன்றமே அரசின் வசம் இருப்பதால் வழக்கு தாக்கல் செய்தால் நீதி கிடைக்குமா எனச் சந்தேகிக்கின்றனர்.

இந்தியா சிறிலங்காவின் அயல்நாடு மாத்திரமல்ல, வரலாற்றுகாலம் தொட்டு மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட நாடு. சிறிலங்காவை ஆண்ட மன்னர்கள் அனைவரும் – இறுதி மன்னன் விக்ரமராஜசிங்கன் வரை- தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என இந்திய சரித்திர வரலாறுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு, வெளிநாட்டு சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை சிறிலங்கா எப்போதுமே இந்தியாவுடன் நட்பைப் பேணவேண்டும் என்பது ஒரு கட்டுப்பாடு அல்ல கடப்பாடு என்றே குறிப்பிடவேண்டும். அந்த அளவிற்கு சகோதர உறவு கொண்ட நாடு.

சிறிலங்கா தொடர்பான ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு உலக நாடுகள் இந்தியாவின் அபிப்பிராயத்திற்கு முன்னுரிமை கொடுப்பது வழமை. அதன் அடிப்படை நோக்கமும் அவ்விரு நாடுகளின் தொடர்பை சரிவர புரிந்து கொண்டதனால் தான் என்பதும் தெளிவு.

ஐ.நா. மனித உரிமை பேரவை மகாநாடு மாத்திரமல்ல, ஐ.நா. பாதுகாப்புச் சபையும் சிறிலங்காவுக்கு எதிராக முடிவை எடுக்குமுன்பதாக இந்தியாவின் ஆதரவை பெற்றேயாக வேண்டும். இதனை சிறிலங்கா அரசியல் தலைவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் கடுமையாகவே இருந்தது.

ஆனால் இந்தியா அதில் தலையிட்டு, கடுமையான வாசகங்களை அகற்றி மிகக் குறைந்தளவு அழுத்தங்களைக்கொண்ட தீர்மானமாக மாற்றியது. ஆனால் அதனைக்கூட சிறிலங்கா அரசு இதுவரை நிறைவேற்றவில்லையென வெளிநாடுகள் பல தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவை மகாநாட்டின்போது சிறிலங்காவுக்கு எதிராக மிகக் கடுமையான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் சிறிலங்கா அரசின் முதல் அரசியல் வியூகமாக இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சி ஒன்று இவ்வார முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, வர்த்தக ஒப்பந்தம், பயங்கரவாத – போதை மருந்து கடத்தல் தடுப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்ட போதும் சிறிலங்கா அரசுக்கெதிராகவோ, அன்றி அழுத்தம் கொடுக்கும் விதமாகவோ இந்தியா வாக்குறுதிகள் எதனையும் கோரவில்லை. ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியால் வழக்கமாக தெரிவிக்கும் கருத்துக்களை குறிப்பிட்டார்.

தமிழர்களின் சுயகௌரவமான வாழ்வுக்கு சிறிலங்கா உறுதியளிக்க வேண்டும் என்றும், நிரந்தரமான தீர்வு அரசினால் கொண்டுவரப்படவேண்டும் என்றும், மீள்குடியேற்றம் தமிழர்களை திருப்தியளிக்கும் வகையில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறினார். போர் முடிந்த காலப் பகுதியிலிருந்தே இந்தியா இதனையே கூறிவருகின்றது. ஆனால் எவ்வித முன்னேற்றமும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் இடம்பெறவில்லை என தமிழர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவை மகாநாட்டின்போது சிறிலங்கா எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து இருதரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தும் செய்திகள் வெளியாகவில்லை. ஆனால், இந்தியா, சிறிலங்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கையேதும் எடுக்கும் சந்தர்ப்பம் எழாது என்பது இச்சந்திப்பின்போது  சிறிலங்காவுக்குப் புரிந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தியாவுக்கான வியூகத்தில் ஓரளவு திருப்தி கண்டுள்ள சிறிலங்கா, அடுத்தாக அமெரிக்காவின் பக்கம் தம் கவனத்தை  திருப்பியுள்ளதாக குறிப்பிடுகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக இனவாதக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் பல கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றன.

ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய அமெரிக்காவுக்கு எதிராகத் தெரிவித்த கடுமையான விமர்சனம் சகல ஊடகங்களிலும் வெளியாகின. அமெரிக்கா உதவி செய்யாவிட்டால், நாம் சீனாவின் உதவியைப் பெறுவோம். ‘போரின்போது அமெரிக்கா எவ்வித உதவியும் செய்யவில்லை’ என அவர் தெரிவித்திருப்பது அமெரிக்காவை சீண்டிப்பார்க்கும் முயற்சியாகவே அமையும் என ஐ.தே.க. பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக செய்துவரும் உதவிகளை சிறிலங்கா அரசு எளிதில் மறந்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளையில், சிறிலங்கா அரசுக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவிப்பவர் தண்டிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக சிறிலங்காவின் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எது எப்படி இருப்பினும் சிறிலங்கா அரசு எப்போதும் அமெரிக்காவுடன் சுமூகமான உறவையே பேணிவருகின்றது. பல விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் அதிஉயர் மட்டக்குழுவொன்று கொழும்பு வரவிருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணுமுகமாக சில வாக்குறுதிகளை வழங்கலாம் என பல அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மூவர் கொண்ட அமெரிக்க குழுவின் பிரதம நீதியரசர் நீக்கம், மனித உரிமை மீறல்கள் அதிகரித்தல், தமிழர்களின் மீள்குடியேற்றம், நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் செயற்படுத்தப்படாமை தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவற்றுடன் பசுபிக்-இந்து சமுத்திர கடல் எல்லைகளில் அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறிலங்கா எவ்விதம் உதவ முடியும் என்பது குறித்தும் ஆராயப்படலாம் என்றொரு செய்திக்குறிப்பு ‘நியூயோர்க் டைம்ஸ்”நாளிதழில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஆலோசிக்கப்படும் போது அமெரிக்காவுக்குச் சார்பாக நடந்துகொள்வதன்மூலம் அதன் ஆதரவைப் பெறலாம் என்பது சிறிலங்காவின் இரண்டாவது வியூகமாக இருக்கலாம்.

ஆனால், அமெரிக்கா தம் தூதுவராலயங்களின் மூலம் சிறிலங்காவுக்கு எதிரான கடும் நடவடிக்கைக்கு ஆதரவுதேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ‘இன்னர் சிட்டி பிரஸ்’ குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சிறிலங்காவின் வியூகம்  பலனளிக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இருப்பினும் இந்தியா தக்க சமயத்தில் தலையிட்டு சிறிலங்காவுக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தும் என்றொரு நம்பிக்கை இருப்பதாக சிறிலங்கா அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை இந்தியாவை அமெரிக்கா தம் பக்கம் கொண்டுவந்துவிடும் என்று குறிப்பிடப்படுவதையும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் முதல் தீர்மானத்தின்போது இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா விட்டுக்கொடுத்தது என்றும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

http://www.worldtamils.com/?p=58262

  • கருத்துக்கள உறவுகள்

தீகோழி ரேஞ்சில் நம்ம புலத்து தமிழரசு காவடிகள் தலிவரு சம்பந்தன் சம்பூரை வாயால் விடுவித்து விட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு காலம் நடந்ததற்கு என்ன பதில் அமைச்சரே.. எனி ரகசியமாக நடக்க உள்ளதற்கு என்ன பதில் அமைச்சரே..??! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.