Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமாகி விட்டார்

Featured Replies

அன்பு பாலசிங்கம் அண்ணன் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்வதோடு காலம் எம்மை சோதிப்பது மட்டும் இல்லாது எமது தலைமைகளையும் சோதிக்கின்றது அதனால் தான் என்னவோ காலனவன் காவிக்கொண்டு சென்றுவிட்டான் அண்ணன் பாலா உயிரை இருப்பினும் உமது உறிதி எங்களுக்கு ஒரு பாடமாக அமைத்து விட்டு தான் சென்றீர்கள் அங்கு இருந்தும் உங்கள் ஆண்மா எங்களை எமது மக்களை எமது மண்ணை பார்த்துக்கொண்டு தான் இருக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை

விடியும் விடியும் தமிழீழம் விடியும் அப்போது உங்கள் ஏக்கமும் விடியும்!

முடியும் முடியும் சிங்களவன் ஆட்டம் முடியும் அப்போது உங்கள் தாகமும் முடியும் !

கனத்த இதயமாய் கரைபுரண்டோடிய அண்ணா உம்மை பாசத்தாள் இறுக அனைத்து கடை இருளின் விளிம்பில் நிக்கும் எமது இனத்தின் விடுதலையை வென்று உமது தூர நோக்கிய பார்வையின் கண்களால் ஒரு முறை தமிழீழத்தை பார்த்து ரசித்து ஆறுதல் அடைவீர்கள் என்று பலர் வேண்டி நிக்க தாங்கள் எங்களை விட்டு பிரிந்த தேனோ?

உமது பாசத்தின் மணைவி பிள்ளைகளுக்கு எமது தமிழீழத்தின் சார்பாகவும் எமது குடும்பத்தின் சார்பாகவும் ஆறாத்துயரில் வாடும் உங்களுக்கு சிறு ஆறுதல் கூறி நிக்கின்றோம்.

நன்றியுடன்

நாதன் தோமஸ் குடும்பம்!!!

  • Replies 93
  • Views 13.4k
  • Created
  • Last Reply

Bala Annai, our beloved porali, who sacrificed his entire life time for our people is at peace now.

After strengthning the hand of our leader politically as a loyal soldier and showing the path forward, he has left us all. It is all of our duty to carry forward his dream. The sacrifices we are asked to make as individuals is small when comparared to what aunty Adele and Bala Annai have made over their life time. This is the best way we can remember Bala annai.

My sincere condolences to aunty adele and close friends.

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் எனும் தத்துவ பேரொளியின் ஒளி அகன்றுவிட்டது. தமிழீழத்துக்கும் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் ஈடு செய்து கொள்ள முடியாத இழப்பு, அன்னாரின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.. :rolleyes:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தமிழீழ வரலாற்றில் மிகப் பெரிய பாத்திரம் வகித்த மனிதர் அவர். எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் பிரிவால் வாடும் எங்களின் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அடல் அன்ரி அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எங்களின் தேசத்தின் வரலாற்றிலும் எங்களின் இதயங்களிலும் அவர் என்றென்றும் நிலைத்திருப்பார்

சாவை அறிந்து

சாவிலே வாழ்ந்த

சரித்திர நாயகனுக்கு

என் கண்ணீர் அஞ்சலிகள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சழுத்தும் சோகத்துடன்

நாமிருக்க...

வஞ்சனைகள் மகிழ்ந்திருக்க

துஞ்சமெனவுயிரை மதித்து

தஞ்சமென போகாது..

விஞ்சி நின்ற அரசியல் பேராளி

நா கொண்டு நாடு நாடாய்

போராடினார் இவர்..

நூறு பேர் வரினும்

நாலு வார்த்தையிலே -அவர்

நாவடைத்து வென்றவன்.

தூக்கிய ஆயுதத்தின் நீதியை

துலக்கிய தத்தவஞானி..

வித்தகன் தலைவனுக்கு

வழி சொல்லும் தீரன்

வந்த கொடிய நோயால்

வானகம் நோக்கி

பயணித்தார்...

வாழும் வரை வாழ்தார் தமிழீழத்துக்காய், வீழும் போதும் உரைத்து சென்றார் மக்களுக்காய் என்று, வாழும் போது வளர்த்த சேய்கள் பல. வீழ்ந்த பின் அவர் வருவர் இவர் இடைவெளி நிரப்ப என்ற நம்பிக்கையுடன்..

அரசியல் போராளிக்கு எனது வீரவணக்கம்!

Edited by Nitharsan

உள்ளம் குமுறுகிறது. பாலா அண்ணா மறைந்தாலும் எங்கள் இதயத்தில் என்றுமே நிறைந்திருப்பார்.

வார்த்தைகள் வரவில்லை. எங்கள் சோகம் தொடர் கதையாகிறதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரது இழப்பு ஈடுசெய்யமுடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால் இதனால் நாங்கள் தளர்ந்துபோகக்கூடாது.

தனது வாழ்க்கைக்காலத்திலேயே தமிழீழம் மலர்ந்துவிடும் என்று தான் நம்புவதாக ஒருமுறை பாலா அண்ணை கூறியிருந்தார். ஆனால் அது அவருக்கு கனவாகவே போய்விட்டது. ஆனால் அவரது கனவு நனவாகும் நாள் நிச்சயம் வரும். அதற்கு எல்லாரும் சேர்ந்து உழைக்கவேண்டும்.

உடலால் இறந்தாலும் தமிழ்ஈழ மக்கள் மனதில் தமிழ்ஈழ போராட்ட வரலாற்றில் இறவாவரம் பெற்றிருக்கும் தத்துவாசிரியர் பாலசிங்கம் ஜயாவிற்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அன்னாருக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் காலமானார்

[வியாழக்கிழமை, 14 டிசெம்பர் 2006, 20:20 ஈழம்] [காவலூர் கவிதன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், லண்டனின் இன்று வியாழக்கிழமை காலமானார்.

35 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிப்புற்றிருந்த இவர், 90களின் பிற்பகுதியில் சிறுநீரக மாற்றீடு செய்துகொண்டார். இவருக்கு புற்றுநோய் பரவியிருந்தமை, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த இவர், தனது 68வது வயதில், காலமானார். இவரது உயிர்பிரியும் வேளை, இவரது பாரியார் அடேல் பாலசிங்கம் உடனிருந்தார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நேரடி ஈடுபாடு கொண்டிருந்த பாலசிங்கம் அவர்கள், 1985ம் ஆண்டு முதல் பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் நேரடியாகப் பங்கெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :புதினம்.கொம்

அரசியலின் மாவீரர்

பாலா அண்ணாவின் பூதவுடலை

வீரத்தமிழீழமண் எடுத்துக்கொள்ளவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணனின் மறைவு ஈடு செய்யக் கடினமான ஒன்று. அன்னாரது மறைவுக்கு எனது இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவிற்கு வீரவணக்கங்கள்.

ஆயிரம் பேர் வந்தாலும் உமக்கு ஈடாக மாட்டார்கள் ஐயா

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்ரன் பாலசிங்கம் ஐயா அவர்களுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழினத்தின் விடுதலைச் சிந்தனையுடன் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம். ஈழத்தமிழர்களின் நெஞ்சில் தனக்கென்று தனியான இடத்தைப் பிடித்தவர். இதனால் நம்மவர்களால் 'பாலா அண்ணா' என்ற உறவு விழிப்பைப் பெற்றவர்.

இன்று, எங்கள் பாலா அண்ணாவின் இயற்கை எய்திய தகவல் காற்றலையூடாகவும் மின்னலையூடாகவும் பரவிச் சூழ்கையில் உறைந்து இறுகி மௌனிக்கிறோம்.

-நம் மனதில் வரித்துள்ள இலட்சிய நோக்கில் வீறுடன் செயற்படும் மனவுறுதி கொள்வதே நாம் இவருக்குச் செலுத்தும் வீர வணக்கம்!

2005ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற மாவீரர்நாளில் அமரர் அன்ரன் பாலசிங்கம் ஆற்றிய உரை ஒளிவடிவில்

http://www.yarl.com/videoclips/view_video....70ded05f5a3bf3e

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் ஐயாவிற்க்கு வீரவணக்கங்கள்.

ஆண்ட பரம்பரை மீணடும் ஆள நினைத்தது என்ன தவறு என்பதற்கு எம்மவர் குரலை உலகெங்கும் உரக்கக் கூறுவதற்கு உறுதுணையாய் நின்ற உத்தம மாமனிதராகிய அண்டன் மாமா! உமது பிரிவால் நாம் மீளா துயர்கொள்கிறோம்!!!!

தாங்கள் இன்று எம்மைவிட்டு உடலால் பிரிந்தாலும் நினைவுகளாள் என்னறென்றும் எமது உள்ளத்தில்!!!!!

ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்!!!!!!!

Edited by Shakana

அன்னாரின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் என்ற மாபெரும் பட்டத்தை வழங்கி தேசிச தலைவர் அவர்கள் கவுரவித்து இருக்கின்றார்..

:rolleyes::lol::lol::lol::(:( இந்த செய்தியை யாழ் இணையத்தில் முதன் முதல் படித்ததும் என் மனமே ஒரு கணம் உறந்தது. எமது தேசத்தின் குரலுக்கு எனது உளமார்ந்த அஞ்சலி. கொடுத்துவைத்தவர் மாவீரர்களுடன் இனி பிரியாத உறவிலே கலந்துவிட்டார்.

எமது கண்ணீர் அஞ்சலிகள்.

தெய்வமே தெய்வமே நன்றி அய்யா நன்றி நீர் எமக்கா பட்ட துன்பங்கள் எத்தனை எத்தனை சாந்தி சாந்தி மனமார ஓய்வெடும் நன்றி நன்றி கடைசிக்காலத்தில் நேரில் சொல்ல ஆசைப்பட்டேன் முடியால் போய்விட்டதே பாலாஅண்ணா நன்றி நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.