Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகம்

Featured Replies

 

வலி.வடக்கில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகம்

வலி.வடக்கில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகம்:-

 

 கடந்த இருபத்தைந்து வருடங்களாக அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வீமன் காமம் பகுதியில் உள்ள இரு வீட்டில் , இராணுவத்தினரின் வதை முகாம்கள் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 
குறித்த பகுதி கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள் சென்ற போது அருகருகாக உள்ள இரு வீட்டின் உட்பகுதி கூரை பகுதி முட்கம்பிகள் கொண்டு வேயப்பட்டு காணப்பட்டது.
 
அதில் ஒரு வீட்டின் ஒரு அறை , இருட்டறையாக பயன்படுத்தப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் , சித்திரவதைக்கு உட்படுத்த பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளன.
f41lac.jpg
குறித்த அறையின் மேற்பகுதி கூரை முட்கம்பிகள் கொண்டு மேயப்பட்டு காணப்படுவதுடன், அறையின் மேற்பகுதியை சுற்றி வெளி வெளிச்சம் வராதவாறு தகரம் அடிக்கப்பட்டு மறைக்கபட்டு உள்ளது. சுவர்களில் ஆணிகள் அடிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அறைக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டவில்லை.
 
அந்த அறையின் கதவில் " எல்லா தர அதிகாரிகளும் உள் நுழைய முடியாது" என சிங்களத்தில் எழுதி ஒட்டப்பட்டு உள்ளன. 
sfw9k1.jpg
 
அத்துடன் அந்த வீட்டின் மற்றும் ஒரு அறை வாசலில் "வெளியாட்கள் உட் செல்ல தடை" என சிங்களத்தில் எழுதப்பட்டு உள்ளது. அந்த அறையின் வாசலில் "எம்.ஐ. ரூம்" என ஆங்கிலத்தில் எழுதபட்டு உள்ளன, எம்.ஐ. என்பது "Military-intelligence " என்பதாக இருக்கலாம் எனவும் எனவே அந்த அறை இராணுவ புலனாய்வாளர்களின் அறையாக இருந்து இருக்கலாம்.
அல்லது இரு வீடுகளுமே இராணுவ புலனாய்வாளர்கள் தங்கி இருந்த வீடுகளாகவும் அந்த வீடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கபடுகின்றது.
 
அந்த வீட்டின் மற்றுமொரு அறையில் இராணுவ சீருடைகள் காணப்பட்டன.
 
2mczjvc.jpg
விசாரணை தேவை.
 
வதைமுகாம்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என மீள்குடியேற்ற தலைவர் ச.சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அது தொடர்பில் மேலும்  தெரிவிக்கையில்,
கடந்த 1990ம் ஆண்டு இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த வேளையிலும் பின்னர் 1996ம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றியது தொடக்கம் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் யாழில் பெருமளாவான இளைஞர்கள் யுவதிகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பலர் காணாமல் போயுள்ளனர்.
2jg9chx.jpg
அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள், அக் கால பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு இருக்கலாம். என சந்தேகிக்கின்றேன், 
ogfa85.jpg
இராணுவத்தினரின் வதைமுகாம்கள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும். ஆணைக்குழுவின் சாட்சியங்களின் போது பலர் தமது பிள்ளைகள் , கணவன் மாரை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளனர் என சாட்சியம் அளித்துள்ளனர்.
 
எனவே இவை தொடர்பில் நிச்சயமாக விசாரணைகள் நடாத்தபட்டு உண்மைகள் கண்டரியபப்ட வேண்டும் என வலி.வடக்கு மீள்குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்தார்.

2n0kby0.jpg

 

 

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127456/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்
மேலதிக படங்கள் இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வதை முகாம் இருக்கவில்லை என்றால் அது நிச்சயமாக பொய். ஏற்கனவே வரணியில் வதைமுகாம் இருந்துள்ளது. இன்னும் பல நிச்சயமாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயமாகவே ஒரு வதைமுகாம்தான் என்பதில் சந்தேகமே இல்லை. இது தொடர்பானவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்படல் வேண்டும். 

மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் எப்படி வந்தாலும்

எந்த வடிவில் வந்தாலும்

கண்டிக்கப்படணும்

தண்டிக்கப்படணும்

அது எழுத்தாக இருப்பினும்..

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இராணுவத்திற்கு எதிராக இன்று ஈராக்கில் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்தும் போர்க்குற்றம் குறித்தும் விசாரணைகள் வரலாம் என்று செய்திகள் வருகின்றன.

ஆனால் ரணில்.. மைத்திரி.. சந்திரிக்கா.. மகிந்தா ஆட்சியாளர்கள் தங்கள் இராணுவத்தை எப்படியும் காப்போம் என்று சொல்ல சம் சும் கும்பலோ ஐக்கிய சொறீலங்கா.. தான் முக்கியம்.. மற்றது எதுவும் எதிர்கட்சி தலைமையில் இருக்க எமக்கு அவசியமில்லை என்று முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

என்ன இந்த சிங்கள மனித மிருகங்கள் சம் சும் கும்பல் போன்ற எம்மவர்களாலேயே தண்டனைக்கு இடமின்றி காப்பாற்றப்படும் அவல நிலை தான் காணப்படுகிறது. இதுவும் எமது மக்களின் சாபக்கேடுகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

வடக்கில் வதை முகாம் இருக்கவில்லை என்றால் அது நிச்சயமாக பொய். ஏற்கனவே வரணியில் வதைமுகாம் இருந்துள்ளது. இன்னும் பல நிச்சயமாக இருந்திருக்கும்.

வடக்கில் ஒவ்வொரு ஊரிலும் இராணுவத்தின் அட்டூழியங்களும் தெருவில் வைத்து சித்திரவதைகளும் கண்ணால் கண்ட நிகழ்ச்சிகள் தானே.......யாழ் மாவட்டமே சிங்களத்தின் சித்திரவதை முகாம்.

  • தொடங்கியவர்
 
 
 
 

வதை முகாம் என சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடய பொருட்கள் அழிப்பு

 
வதை முகாம் என சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடய பொருட்கள் அழிப்பு :-

 


வலி.வடக்கு வீமன்காம் பகுதியில் இராணுவத்தினரின் வதைமுகாம்களாக இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடயபொருட்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு உள்ளன.

குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள் சென்ற போது அருகருகாக உள்ள இரு வீட்டின் உட்பகுதி கூரை முட்கம்பிகள் கொண்டு வேயப்பட்டு காணப்பட்டது.

அதில் ஒரு வீட்டின் ஒரு அறை , இருட்டறையாக பயன்படுத்தப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் , சித்திரவதைக்கு உட்படுத்த பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து இருந்தன.

குறித்த அறையின் மேற்பகுதி கூரை முட்கம்பிகள் கொண்டு மேயப்பட்டு காணப்பட்டதுடன், அறையின் மேற்பகுதியை சுற்றி வெளி வெளிச்சம் வராதவாறு தகரம் அடிக்கப்பட்டு மறைக்கபட்டு இருந்தன. சுவர்களில் ஆணிகள் அடிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் அறைக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டவில்லை.

அந்த அறையின் கதவில் " எல்லா தர அதிகாரிகளும் உள் நுழைய முடியாது" என சிங்களத்தில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தன.

அத்துடன் அந்த வீட்டின் மற்றும் ஒரு அறை வாசலில் "வெளியாட்கள் உட் செல்ல தடை" என சிங்களத்தில் எழுதப்பட்டு இருந்தது. அந்த அறையின் வாசலில் "எம்.ஐ. ரூம்" என ஆங்கிலத்தில் எழுதபட்டு இருந்தன , எம்.ஐ. என்பது "Military-intelligence " என்பதாக இருக்கலாம் எனவும் எனவே அந்த அறை இராணுவ புலனாய்வாளர்களின் அறையாக இருந்து இருக்கலாம்.எனவும் சந்தேகம் எழுந்து இருந்தன.

அல்லது இரு வீடுகளுமே இராணுவ புலனாய்வாளர்கள் தங்கி இருந்த வீடுகளாகவும் அந்த வீடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டன.

அந்த வீட்டின் மற்றுமொரு அறையில் இராணுவ சீருடைகள் காணப்பட்டன.

தற்போது குறித்த இரு வீட்டின் மேல் கூரையில் வேயப்பட்டு இருந்த முட்கம்பிகள் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு உள்ளன.

வீட்டின் சுவர்களில் எழுதப்பட்டு இருந்த,  சிங்கள எழுத்துக்கள் வர்ணம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வீட்டினுள் காணப்பட்ட இராணுவத்தினரின் உடைகள் மற்றும் இராணுவத்தினரின் ஆவணங்கள் என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டு வீட்டுனுள் காணப்பட்ட இராணுவ தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

இராணுவத்தினருக்கு வதை முகாம்களோ , சித்திரவதை முகாம்களோ நடாத்த வேண்டிய தேவை இல்லை என இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127548/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.