Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் பள்ளிக்கூடங்களை கடற்படை இன்னும் விடுவிக்கவில்லை'

Featured Replies

சம்பூர் பள்ளிக்கூடங்களை கடற்படை இன்னும் விடுவிக்கவில்லை'

150822175115_sampur_president_512x288_bb

 பள்ளிக்கூடங்கள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி கடந்த அக்டோபர் மாதத்தில் உறுதியளித்திருந்தார்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றதிற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

சம்பூர் பிரதேசத்தில் 818 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள எல்லைக்குள் தான் சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் ஶ்ரீ முருகன் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளும் மக்கள் குடியிருப்பு நிலங்களும் உள்ளன.

குறித்த பாடசாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2005ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பிரதேச மக்கள் யுத்த சூழ்நிலையில் தமது பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் அந்த பிரதேசம் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அந்த பிரதேச மக்களின் மீள்குடியேற்றமும் தடைப்பட்டிருந்தது.

151010163330_sampur_512x288_bbc_nocredit கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களின் காணிகளை மீள கையளிக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்பூர் பிரதேச மீள்குடியேற்றத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அங்குள்ள கடற்படை முகாமுக்கு மாற்று காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இரண்டு, மூன்று மாதங்களில் கடற்படையினர் குறித்த பாடசாலைகளிலிருந்து வெளியேறிவிடுவார்கள் ஜனாதிபதியினால் அவ்வேளை உறுதிமொழி வழங்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்கிறார் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா.

இது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர மனுக்களில் அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணியை தொடர்பு கொண்ட போது குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் கடற்படையுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளாதாக பதில் அளித்தார்.

அடுத்த இரண்டு மாதங்களில் அந்த பகுதியிலிருந்து கடற்படை வெளியேறிவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160103_sampuru_schools

 

ஆக்கப்பொறுத்தவங்களுக்கு ஆறப்பொறுக்க முடியவில்லை ?

 

6 minutes ago, Gari said:

 

ஆக்கப்பொறுத்தவங்களுக்கு ஆறப்பொறுக்க முடியவில்லை ?

 

பாடசாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் ஏழை மாணவர்களால் எதை ஆக்க முடியும். ?

எவ்வளவு காலத்திற்குத்தான் ஆறியிருப்பது?

1 minute ago, Iraivan said:

பாடசாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் ஏழை மாணவர்களால் எதை ஆக்க முடியும். ?

எவ்வளவு காலத்திற்குத்தான் ஆறியிருப்பது?

இதில் உள்ள கடற்படை முகாம் இடம் மாறுவதற்குரிய பெரும்பாலான வேலைகள் முடிந்து மைத்திரி தை முதல் வாரத்தில் திறந்து வைப்பதாக இருந்தது ,விரைவில் இடம்மாறும் ,பாடசாலையை திருத்தி இயங்குவதற்குரிய ஒழுங்குகளை கல்வி அமைச்சர் செய்துள்ளதாக அவருடன் கதைத்தபோது தெரிவித்தார் .

 

On ‎4‎/‎01‎/‎2016 at 3:07 PM, Gari said:

இதில் உள்ள கடற்படை முகாம் இடம் மாறுவதற்குரிய பெரும்பாலான வேலைகள் முடிந்து மைத்திரி தை முதல் வாரத்தில் திறந்து வைப்பதாக இருந்தது ,விரைவில் இடம்மாறும் ,பாடசாலையை திருத்தி இயங்குவதற்குரிய ஒழுங்குகளை கல்வி அமைச்சர் செய்துள்ளதாக அவருடன் கதைத்தபோது தெரிவித்தார் .

 

நல்லது, இப்படிப்பட்ட செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவை.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டிலாவது பள்ளிக்கூடம் போகப் பிரியப்பட்ட பிள்ளைகளுக்கும் சம் வைச்சார் ஆப்பு. எனி எப்ப கடற்படை விலகி எப்ப பள்ளிக்கூடமோ. ஆனால் சம் சும் கும்பலுக்கு சமாளிப்புக்கேசனுக்கு ஆக்கள் உலக அளவில் பரந்திருக்கினம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On January 4, 2016 at 9:07 PM, Gari said:

இதில் உள்ள கடற்படை முகாம் இடம் மாறுவதற்குரிய பெரும்பாலான வேலைகள் முடிந்து மைத்திரி தை முதல் வாரத்தில் திறந்து வைப்பதாக இருந்தது ,விரைவில் இடம்மாறும் ,பாடசாலையை திருத்தி இயங்குவதற்குரிய ஒழுங்குகளை கல்வி அமைச்சர் செய்துள்ளதாக அவருடன் கதைத்தபோது தெரிவித்தார் .

நல்ல செய்தி. கடந்த காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இளவயதினர் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத அச்சநிலை பல்வேறு வழிகளில் நிலவியது. அந்த நிலைமை இன்று இல்லை. கிழக்கு மாகாணத்தின் கடந்த வருட உயர்தரப் பரீட்சை முடிவுகள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றது. இந்தக் கல்விப் பாரம்பரியம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கட்டியெழுப்பப்படல்வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4.1.2016 at 2:52 AM, Gari said:

ஆக்கப்பொறுத்தவங்களுக்கு ஆறப்பொறுக்க முடியவில்லை ?

 

ஆறப்போடுவதற்கு ஒர் 20வருசம் போதுமா???

ஏனெண்டால் சிங்கவன் இனவிருத்தி செய்து சர்வஜனவாக்கெடுப்பு நடத்த வசதியாய் இருக்குமெல்லே...

  • 2 months later...

சம்பூர் மகா வித்தியாலயமும் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டது:-

25 மார்ச் 2016
 

 

சம்பூர் மகா வித்தியாலயமும் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டது:-

 

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பூர் மகா வித்தியாலயமும் கடற்படையினரால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்த காலத்தில் கையகப் படுத்தப்பட்ட இந்தப்பாடசாலை கடந்த பல வருடங்களாக கடற்படையினரின் வசம் இருந்த நிலையில் இன்று பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டு உள்ளது.
 

 

 

http://www.globaltamilnews.net/

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

விடுபட்டால் மட்டும்  போதாது

இயங்கணும்

அந்த பாடசாலைக்கு தேவையானவற்றை புலம் பெயர் மக்கள் செய்து கொடுக்கணும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.