Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

553745345_1124292653221684_8146212397527

5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்..

1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – வறுக்க

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும்.

2. 30 நிமிடம் ஊறவைக்கவும்.

3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.

---

2. மசாலா நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

கரம் மசாலா – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும்.

3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும்.

4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும்.

---

3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – 1

கருவேப்பிலை – 1 கைப்பிடி

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும்.

2. மீனை அதில் ஊறவைக்கவும்.

3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும்.

4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார்.

---

4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy)

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – ஆழ்வறுக்க

செய்முறை:

1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும்.

2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும்.

3. சூடாக சாப்பிட அருமை.

---

5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

கொத்தமல்லி இலை – ½ கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 4 பல்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – வறுக்க

செய்முறை:

1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும்.

2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.

3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.

4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும்.

தமிழ்நாடு ரெசிப்பீஸ்

எனக்கு மிகமிக பிடித்தமான உணவு.

வெங்காயமும் நிறைய போட்டு பொரித்து பிரட்டி எடுத்து சாப்பிடுவேன்.

  • Replies 782
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழினி
    தமிழினி

  • இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....! 

  • நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

புரட்டாதி வந்தாலே இப்பிடியான செய்முறைகளை தேடித்தேடி வாசிக்கச்சொல்லும். ஏனெண்டால் வீட்டு நிலைமை அப்படி.😂

உங்கடை நெத்தலி செய்முறையளுக்கு ஒருத்தர் ஓடி வந்து தாங்ஸ் பண்ணியிருக்கிறார். அந்த தாங்ஸ் ஆயிரம் கதை சொல்லும்.🤣

3 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு மிகமிக பிடித்தமான உணவு.

வெங்காயமும் நிறைய போட்டு பொரித்து பிரட்டி எடுத்து சாப்பிடுவேன்.

இலங்கையில் நிற்கும் போது…. ஒரு உணவகத்தில் வெள்ளை குழல் புட்டும்…. வெங்காயம், நெத்தலி போட்டு பொரித்து எடுத்த பிரட்டல் கறியும் சாப்பிட்டேன். 👍🏽

ஆஹா…. அப்படி ஒரு சுவையான உணவாக இருந்தது. இதற்கு முன் அந்தச் சுவையில் நெத்தலியை சாப்பிட்டதே இல்லை. இப்ப நினைத்தாலும் அந்த வாசனையும், சுவையும் மறக்க முடியாதது. இதனை சாப்பிட என்றே… மீண்டும் ஒருக்கால், ஶ்ரீலங்காவுக்கு விமான ரிக்கற் போட்டு போக வேண்டும் போல் உள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வகையான நெத்தலி மீன் பொரியலுக்கும் அதிக சுவை தரக்கூடிய லெமன் ரைஸ் .........சொல்லி வேல இல்ல .........!😋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/9/2025 at 05:54, தமிழ் சிறி said:

இலங்கையில் நிற்கும் போது…. ஒரு உணவகத்தில் வெள்ளை குழல் புட்டும்…. வெங்காயம், நெத்தலி போட்டு பொரித்து எடுத்த பிரட்டல் கறியும் சாப்பிட்டேன். 👍🏽

ஆஹா…. அப்படி ஒரு சுவையான உணவாக இருந்தது. இதற்கு முன் அந்தச் சுவையில் நெத்தலியை சாப்பிட்டதே இல்லை. இப்ப நினைத்தாலும் அந்த வாசனையும், சுவையும் மறக்க முடியாதது. இதனை சாப்பிட என்றே… மீண்டும் ஒருக்கால், ஶ்ரீலங்காவுக்கு விமான ரிக்கற் போட்டு போக வேண்டும் போல் உள்ளது. 🙂

மனிசருக்கு எதிரியே நாக்கு தான்.மூளை வேண்டாம் வேண்டாம் எண்டு எச்சரிச்சாலும் நாக்கு சொல்வழி கேக்காது.😂 இஞ்சை பார் சிறித்தம்பி நெத்தலி பிரட்டலுக்காக பிளைட் எடுத்து சிலோனுக்கு போகோணும் போல கிடக்காம்.😄

On 27/9/2025 at 11:51, suvy said:

எந்த வகையான நெத்தலி மீன் பொரியலுக்கும் அதிக சுவை தரக்கூடிய லெமன் ரைஸ் .........சொல்லி வேல இல்ல .........!😋

சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂

இது ஒரு நல்ல கேள்வி கு . சா ........ நான் மச்சம் சாப்பிடுவதை விட்டு ஒரு 18/20 வருடங்கள் இருக்கும் ........பிரான்ஸ் வந்தபின்னும் சாப்பிட்டானான் ........!

__ வீட்டில குழல் புட்டு அவிக்க சொல்லிவிட்டு மாதகல் போய் முரல்கருவாடு சிற்பம் வாங்கி வந்து அடுப்புத் தணலுக்குள் சுட்டு புட்டுடன் சாப்பிடுறனான் .......!

__கருமேகங்கள் குவிந்து மழை பொழியும் நேரம் பொன்னாலையில் ஓரா, பண்ணைப்பாலத்தில் ஒட்டி , மற்றும் காரையூர் , சின்னக்கடை சந்தை , பாசையூர், கொழும்புத்துறை படகுகளில் வரும் மீன்கள், நாவற்குழியடியில் விசேஷமான கயல் என்று வாங்கி விழுங்கிய நாட்கள் பல ......!

__ அன்று முற்றவெளி முனியப்பர் கோயிலில் இறைச்சி படையலிட்ட நாளில் இருந்து (பின்பு அது நிறுத்தியாச்சுது ) கவனாவத்தையோடு மற்றும் பல கோவில்களின் வேள்வி இறைச்சிகள் , பரந்தனில் இருந்து வவுனியா மடு ஈறாக காட்டு வேலைகள் விதம் விதமான இறைச்சி வகைகளுக்கு குறைவில்லை . .......!

__ கோழி முட்டை , மீன் முட்டை என்று பலப்பல முட்டைகள் எதையுமே விட்டதில்லை ......!

__ ப்ளவுஸ் ,மொக்கங் கடை என்று கொழும்பு ஈறாக எத்தனை எத்தனையோ கடை சாப்பாடுகள் ......!

அப்படியெல்லாம் சாப்பிட்டதால்தானோ என்னமோ இப்போ பல வருடங்களாக முட்டை கூட தொடுவதில்லை . ......ஆனால் அந்த சுவை இன்னும் நாக்கில் ........!

மலரும் நினைவுகளை மீட்ட கேள்வி தொடுத்த உங்களுக்கு நன்றி . .......! 😇

  • கருத்துக்கள உறவுகள்

கோழி கறிக் குழம்பு . ........! 😃

  • கருத்துக்கள உறவுகள்

பூசணிக்காயில் ஒரு அருமையான உணவு ..........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

558078855_1111792671164492_7784424707667

இவற்றுள் உங்களுக்குத் பிடித்தமான இனிப்பை தேர்ந்தெடுங்கள் ...... பின்பு

அந்தப் பெயரை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ..... பின்பு

யூடியூப் பக்கத்தைத் திறந்து அதற்குரிய இடத்தில் அந்தப் பெயரை எழுதுங்கள் . .... பின்பு

அதில் தேடும் இடத்தில் சுட்டியை அழுத்துங்கள் ....... உடனே

அதை எப்படி செய்வதென்று காட்டித்தர பலர் உதவிக்கு ஓடி வருவார்கள் . .......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.