Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்படாது?

Featured Replies

புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்படாது?

புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது எனவும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ஊடகமொன்று அரசாங்கத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் சாசனம் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்காக உருவாக்கப்பட உள்ளதாகவும், வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும், அவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படும் எந்தவிதமான திருத்தங்களும் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் எவ்வித விடயங்களும் உத்தேச புதிய அரசியல் சாசனத்தில் கிடையாது என குறிப்பிடப்படுகிறது.

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை பாராளுமன்றில் ஆற்றவுள்ளார்.

பாராளுமன்றினை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றும் யோசனை நாளை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசியல் சாசனத்திற்கு மூன்றில் இரண்டு ஆதரவினைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அந்த.. 2016 இல் சொறீலங்காவில் தமிழர்களுக்கு அதிசயம் நடக்கப் போகிறது.. என்ற குடுகுடுப்பைக்காரர்களை இழுத்துவாருங்கள்.. குழப்பவாதிகள் தொலைந்தார்கள்.. 68 வருடங்கள் இல்லாத சூழல் பிறந்திருக்குது.. இதோ சிங்களவன்.. தங்கத்தட்டில் வைச்சு எல்லாம் தரக் காத்திருக்கிறான்.. தமிழீழத்தை கைவிட்டிட்டம்... ஏன் கேட்கவே இல்லை என்ற கும்பல்கள்.. ஓடியாங்கோ....! உங்களுக்கு நல்ல செய்தி பிறந்திருக்குது. tw_blush::rolleyes:tw_angry:

தமிழன் கேணயனா உள்ள வரை சிங்களவன் நல்லாவே எருமை மாட்டை வைச்சு ஏரோபிளேன் ஓட்டுவான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் எழுதியது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பு மாற்றத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நினைக்கவில்லை. நீர்த்துப் போன மாகாண சபை அரசியலை சமஸ்டியாகக் ஏற்றுக்கொள்ளவும், தமிழ்த் தேசிய இனத்தை வெறும் சிறுபான்மையினமாக ஏற்றுக்கொள்ளவும், போர்க்குற்றங்களை மறக்கவும் எம்மைத் தயார்படுத்தவேண்டும் என்று நினைக்கின்றேன்

சிவா பசுபதி பேரவையில் இணைகின்றார் தான் நினைவு வருகின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nedukkalapoovan said:

எங்க அந்த.. 2016 இல் சொறீலங்காவில் தமிழர்களுக்கு அதிசயம் நடக்கப் போகிறது.. என்ற குடுகுடுப்பைக்காரர்களை இழுத்துவாருங்கள்.. குழப்பவாதிகள் தொலைந்தார்கள்.. 68 வருடங்கள் இல்லாத சூழல் பிறந்திருக்குது.. இதோ சிங்களவன்.. தங்கத்தட்டில் வைச்சு எல்லாம் தரக் காத்திருக்கிறான்.. தமிழீழத்தை கைவிட்டிட்டம்... ஏன் கேட்கவே இல்லை என்ற கும்பல்கள்.. ஓடியாங்கோ....! உங்களுக்கு நல்ல செய்தி பிறந்திருக்குது. tw_blush::rolleyes:tw_angry:

தமிழன் கேணயனா உள்ள வரை சிங்களவன் நல்லாவே எருமை மாட்டை வைச்சு ஏரோபிளேன் ஓட்டுவான். :rolleyes:

என்ன நெடுக்கர்! அவையளைப்பத்தி இன்னும் உங்களுக்கு தெரியாதே??????
இந்த வீடியோவை பாருங்கோ....அப்ப தெரியும் இவையின்ரை ஜில்மா கதையள்tw_lol:

நல்லது எதுவும் நாட்டில் நடந்ததுவிடுமோ என்று  பலர் அங்கலாய்ப்பது புரிகின்றது .

ஆனால் இந்த முறை நல்லது நடந்தே தீரும் .இதுவரை நாங்கள் சொன்ன பல விடயங்கள் நடந்துதான் வந்திருக்கு இதுவும் தப்பாது .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களெனில் நீங்கள் யார் சார்....

குடுகுகுப்பை அடிப்பதுக்கும், சோதிடம் சொல்வதுக்கும் ஒரு கூட்டம் எப்பவும் இருக்கும்.....

( ஆனாலும் மனம் என்னவோ உங்களின் சோதிடம் பலிக்க மனம் துடிக்குது)

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, arjun said:

சிவா பசுபதி பேரவையில் இணைகின்றார் தான் நினைவு வருகின்றது .

இங்கு பலருக்கு விசைப்பலகையை தட்டும்போது கைவிரல்களுக்கும் மூளைக்குமான தொடர்பு இல்லாமல் போவதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

16 hours ago, மலையான் said:

நாங்களெனில் நீங்கள் யார் சார்....

குடுகுகுப்பை அடிப்பதுக்கும், சோதிடம் சொல்வதுக்கும் ஒரு கூட்டம் எப்பவும் இருக்கும்.....

( ஆனாலும் மனம் என்னவோ உங்களின் சோதிடம் பலிக்க மனம் துடிக்குது)

குடு குடுப்பை அடித்து சொன்னாலும் சரியாக சொல்லுகின்றோம் அதுதான் முக்கியம் 

ஆனால் பல அரசியல் தீர்க்கதரிசிகள் ஆய்வாளர்கள் சொன்னது பிழையாய்  போனது .

18 minutes ago, arjun said:

குடு குடுப்பை அடித்து சொன்னாலும் சரியாக சொல்லுகின்றோம் அதுதான் முக்கியம் 

ஆனால் பல அரசியல் தீர்க்கதரிசிகள் ஆய்வாளர்கள் சொன்னது பிழையாய்  போனது .

போராடினால் வெற்றி கிட்டலாம் இல்லை தோற்று போகலாம்...  இதிலை  காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக நீங்கள் சொன்னது தான் நடந்தது எண்டது .. 

நீங்கள் சொன்ன விடயங்களிலை உங்கள் எல்லோரையும் விட புலிகள் கெட்டவர்கள் என்பது மிக முக்கியமாக நிறுவபடாமலே இருக்கிறது எண்டது  என் மண்டைக்குள் அடிக்கடி வந்து போகிறதை தவிர்க்க முடியவில்லை...   

எல்லா கெட்டவனுக்கும் ஒரு பலிக்கடா தேவைப்படுகிறது தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள...  உலக ஜதார்த்தம் இப்படி தான் இண்று நகர்கிறது... 

சிங்கள( சிங்களவர்களால் சிங்களவர்களுக்காக நடக்கும் )  அரசியல் ஜாப்பு திருத்ததில்  தமிழர்களுக்கு நலன் கிட்டும் எண்ற உங்களின் கனவு மெய்ப்பட வேண்டும் எண்று வாழ்த்துகிறேன்... 

21 hours ago, கிருபன் said:

இன்னொரு திரியில் எழுதியது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பு மாற்றத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நினைக்கவில்லை. நீர்த்துப் போன மாகாண சபை அரசியலை சமஸ்டியாகக் ஏற்றுக்கொள்ளவும், தமிழ்த் தேசிய இனத்தை வெறும் சிறுபான்மையினமாக ஏற்றுக்கொள்ளவும், போர்க்குற்றங்களை மறக்கவும் எம்மைத் தயார்படுத்தவேண்டும் என்று நினைக்கின்றேன்

இறுதி பேட்டியில் நடேசன் அண்ணை சொன்னது போல புலிகளுக்கு பிறகு தமிழர்களுக்கு எண்று தனித்துவமான அரசியல் எண்று ஏதும் இருக்க போவது இல்லை...

உலக மயமாக்கல் அறிமுகமானதின் பின்னர் சுய சார்பு நிலை என்பது முட்டாள்களின் செயலாகவும் கெட்டவார்த்தை போலவும் , வேடிக்கையாகவும் ஆகிவிட்டது...  ஒட்டுண்ணீ அரசியலே சாத்தியமானது... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.