Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணதேவன் .

Featured Replies

மரணதேவன்

 

பூட்டிய கடைக்கதவை திரும்ப இழுத்துப்பார்த்து விட்டு தெருவில் இறங்க வழக்கக்தை விட இன்று பிந்திவிட்டது என்பதை உணர்ந்தான் மதி .கடை

பூட்டும் நேரம் வந்து வரிசையில் நின்ற அந்த நாலு கஸ்டமர்களையும் மனதில் திட்டிக்கொண்டு இரவு பத்து நாற்பது மணி பஸ்சும் போயிருக்கும் . இனி

எப்படியும் அடுத்த பஸ் வர பதினோன்றாகும் சப்பேயிற்கு பத்து நிமிட நடைதான் ஆனால் இந்த நேரம் இருட்டில் நடப்பதை விட பஸ்சிற்கு காத்திருப்பது

பாதுகாப்பனது என்று எவருமற்ற அந்த பஸ் நிலையத்தில் ஒதுங்குகின்றான் .

 

தினமும் பகலில் எந்தவொரு பய உணர்வும் இல்லாமல் உலா வரும் இந்த இடம் இரவானதும் வேறு ஒரு கோலம் பூண்டுவிடுகின்றது. இன்று பகல் கூட

மதிய சாப்பாடு வாங்க கடையை பூட்டிவிட்டு சன நெருசல் நெருங்கிய இந்த வீதியால் தான் Kentucky வாங்க போனான்.

இப்போ அனைத்து கடைகளும் பூட்டி தெருவில் மக்கள் ஆரவாரம் அற்று வெறுமையாகி, தனிமை மதிக்கு மனதில் ஒரு வித பயத்தை கொண்டு

வந்துவிட்டிருந்தது .

 

ஆங்காங்கே நடந்தது தன்னை கடந்து திரிபவர்கள் எவரும் பகலில் ஒருபோதும் தென்படாதர்களாக ஒரு வித போதை மயக்கத்தில் அவனிடம்

சில்லறைகாசு அல்லது சிகரெட் கேட்பவர்களாக இருந்தார்கள் .இல்லை என்று சொல்லும் போது தூசணத்தால் திட்டுபவர்களும் காறி துப்பிக்கொண்டே

செல்பவர்க்ளை பார்க்க இரவு மனிதர்களே இப்படிதானோ என்று எண்ணிக்கொண்டான்.

 

இவர்கள் யாராலும் தனக்கு ஏதும் வில்லங்கம் வரமுதல் பஸ் வரவேண்டும் என வேண்டவும் திடீரென்று வானம் வெளிக்க இடி மின்னலுடன் மழை

தூறத்தொடங்குகின்றது. காற்று வேறு சற்று பலமாக வீசி மதியின் உடைகள் நனைய மதிக்கு உடலில் குளிர் படர ஆரம்பிக்கின்றது .

திடிரென உருவாகும் இயற்கையின் மாற்றம் கூட மனிதருக்கு மனதில் பயத்தை உருவாக்குகின்றதுஎன மதி மனதில் நினைத்துக்கொண்டான்

 

மழைக்கிடையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களில் இருந்து முகத்தில் அடிக்கும் வெளிச்சமும் அவை எழுப்பும் ஒலியும் ஆங்கில மாபியா படங்களில்

வருவது போல தன்னை யாரோ கடத்த போகின்றார்களோ என்பதாகவும் ஒரு பிரமை வந்து போனது .

 

வீதியில் இருக்கும் தண்ணீரை விசிறியடித்தபடி பஸ் வந்து காலடியில் நின்றது .பஸ்ஸிற்குள் நாலு பேர்கள் தான் இருந்தார்கள் .இரண்டு நிமிடத்தில்

Bloor ஸ்டேசனில் பஸ் வந்துசேர்ந்து விட்டது .உடனே ரெயினை பிடித்துவிடவேண்டும் என்று மதி ஓடிச்சென்று படியிறங்கி வர நேரம் பதினொன்று

ஐந்து, ரெயின் வர நாலு நிமிடங்கள் இருக்கு என்று பிளாட்பாரத்தில் உள்ள மணிக்கூட்டில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டு இருக்கு .

 

Kennedy Station போகும் பிளாட்பாரத்தில் எவருமில்லை .மறு புறத்தில் சிலர் இருப்பது தெரிகின்றது . யாரோ படியிறங்கி வரும் சத்தம் கேட்கின்றது .

மழை காரணமாக நடந்து வருபவர் ஆளையே மூடி ஆடை அணிந்திருப்பதால் முகத்தை பார்க்கமுடியவில்லை ஆனால் ஆண் என்று தெரிகின்றது .

தனிமைக்கு ஒரு துணை கிடைத்தது போலிருந்தாலும் சிலவேளை தன்னை பிடித்து ரெயினில் தள்ளியும் விடுவானோ என்ற ஒரு நினைப்பும் மதிக்கு

வந்துபோனது .எதற்கும் பாதுகாப்பாக சற்று தள்ளியே நிற்போம் என்று பிளாட்பாரத்தின் கடைசிக்கு செல்கின்றான் .

 

ரெயின் வருவதற்கான சத்தம் சிறிதாக கேட்கத்தொடங்குகின்றது அத்தோடு உர்ர்ர்ர் என்று நிலக்கீழ் பாதைக்குள் அடைபட்ட காற்றை கிழிக்கும்

ஓசையும் அந்த காற்று ஸ்டேசன் கதவுகளையும் அடித்து திறந்து மூடும் சத்தமும் மதிக்கு ஒரு வித எரிச்சலை உருவாக்குது .

ரெயின் பிளாட்பாரத்தில் நிற்க சற்று தள்ளி நின்ற பயணி அடுத்த Compartment ஏறுவது தெரிகின்றது . அப்பாடி அவன் தன்னை தள்ள வரவில்லை

என்றபடியே தானும் உள்ளே ஏறுகின்றான் .

 

பின்னிரவு ரெயின் பயணம் மதிக்கு ஒன்றும் புதிதில்லை .வேலை செய்த களையில் தூங்கி வழியும் முகங்கள் தான் சிலர் ஆங்காங்கே இருந்தார்கள் .

முன் சீட்டிற்கு மேலே காலை தூக்கி போட்டுக்கொண்டு இரண்டு இளைஞர்கள் அவர்கள் தங்கள்பாடு . ரெயினில் ஏறினால் யார் முகத்தையும்

பார்க்காமல் மூலை இருக்கையாக அமர்ந்து புத்தகம் படிப்பதுதான் மதியின் வழக்கம் . அன்றும் கடைசியாக வந்த ஆனந்தவிகடனை புரட்ட

ஆரம்பிக்கின்றான் .

 

Kennedy Subway ,பிறகு YRT to Mccowan,அடுத்து பஸ் எப்படியும் வீடு போய் சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் என்று நினைக்க மதிக்கு விசராக

இருந்தது . Castle Frank ஸ்டேசனை தாண்டி ரெயின் பாலத்தில் பயணிக்கும் போது களனி ஆற்றை தாண்டும் யாழ் தேவியின் நினைவும் சிறு வயதில்

களனி ஆற்றில் எழுந்து பாயும் புழுதி நிறதண்ணீரை பார்த்து பயந்ததும் உண்டு .

 

அசோகமித்திரனின் சிறுகதை ஒன்று வந்திருக்கு அதை வாசிப்பம் என்று கதையில் மூள்கிவிட்டான் மதி .ரெயின் ஒவ்வொரு ஸ்டேசனாக நிற்பதும் பின் வேகமெடுத்து ஓடுவதாகவும் இருந்தது .

 

கிரீச் என்று பெரிய சத்தத்துடன் ரெயின் பிரேக் அடித்தது .சில பயணிகள் சீட்டில் இருந்து விழுந்தும் விட்டார்கள் .மதி புத்தகத்தை மூடியபடியே எந்த

ஸ்டேசன் என்று யன்னலை பார்க்க மடார் மடார் என்று ரெயினிற்குள் இருக்கும் கதவுகளை திறந்தபடி ரெயின் ஓட்டுனர் பயணிகள் எல்லோரையும்

முன்பக்கம் போய் வெளியேற சொல்லுகின்றார்.ரெயினின் கதவுகள் எதுவும் திறக்கவில்லை .ரெயின் ஸ்டேசனை அண்மித்தவுடன் நின்றுவிட்டது .

ரெயினில் வந்த மொத்த பயணிகளும் ஒரு கதவால் நெருக்குபட்ட படியே திட்டியபடி வெளியேறுகின்றார்கள்.

 

Pape ஸ்டேசன் , மதிக்கு எதோ நடக்க கூடாதது நடந்துவிட்டதாக உள்மனது சொல்லுகின்றது. கதவால் வெளியேறும்போது தண்டவாளத்தை

எட்டிபார்க்கவேண்டும் என்று மனம் அடிக்குது தற்செயலாக பார்க்க முடியாத கோர காட்சியாக இருந்தால் பல நாட்களுக்கு தூக்கம் வராது என்று

நடந்தவன் கடைசி படியேறும் போது ஆவல் மீதியால் தலையை திருப்புகின்றான் .

 

அட பார்க்காமலே இருந்திருக்கலாம் .ஸ்டேசனுக்கு வெளியில் வருகின்றான் .

 

மழை இன்னமும் கொட்டிக்கொண்டிருக்கு .எங்கும் ஆம்புலன்ஸ் ஒலி . Stretcher உடன்  முதலுதவியாளர்கள் ஸ்டேசனிற்குள் இறங்கி ஓடுகின்றார்கள்.

ரெயினால் இறங்கிய பயணிகளால் நிறைந்து Pape ஸ்டேசன் அல்லோலகல்லோடப்படுகின்றது .ரெயின் இனி ஓடாது . எல்லோரும் இனி Shuttle

பஸ்ஸில் தான் பயணிக்கவேண்டும் என்று அறிவிக்கின்றார்கள் . எல்லோருக்கும் வீடு போக வேண்டிய அவசரம் . அவரவருக்கு அவரவர் பிரச்சனை .

 

நாலாவதாக வந்த Shuttle Bus இல் ஏறி அரை குறையில் விட்ட அசோகமித்திரனின் சிறுகதையை வாசிக்க ஆனந்தவிகடனை புரட்டுகின்றான் மதி .

 

Pape ஸ்டேசனில் தண்டவாளங்களுகிடையில் மரணதேவன் கையில் உயிருடன் செல்லும் காட்சி மட்டுமே கண்ணிற்கு தெரியுது .

 

Edited by arjun
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் .....திகிலூட்டும் கதை

  • கருத்துக்கள உறவுகள்

கதை விளங்வில்லை அர்ஜுன். மதி உண்மையில் விபத்தில் இறந்து விட்டாரா அல்லது கனவா? 

முன்பு இப்படி தினமும் வேலை முடிந்து இரவில் கடும் குளிரில் தனியாக வந்த அனுபவம் உண்டு. 

28 minutes ago, colomban said:

கதை விளங்வில்லை அர்ஜுன். மதி உண்மையில் விபத்தில் இறந்து விட்டாரா அல்லது கனவா? 

கதை நல்லாத்தான் போச்சு ஆனால் எனக்கும் இறுதி வரிகள் புரியவில்லை. எதற்கு வம்பு, கதை தொடருமாக்கும் என்றிருந்து விட்டேன்.

  • தொடங்கியவர்

பின்னோட்டம்,பச்சை  இட்டவர்களுக்கு நன்றி .

பதியும் போது பந்திகள் பொருந்திவரவில்லை ஏனென்று தெரியவில்லை .

ரெயின் இடையில் நின்றது மதி எட்டிப்பார்த்தது பின்னர் பஸ்ஸில் ஏறியது என்று குழப்பம் இல்லாமல் எழுதயதாகவே உணர்ந்தேன் .

2 hours ago, arjun said:

பின்னோட்டம்,பச்சை  இட்டவர்களுக்கு நன்றி .

பதியும் போது பந்திகள் பொருந்திவரவில்லை ஏனென்று தெரியவில்லை .

ரெயின் இடையில் நின்றது மதி எட்டிப்பார்த்தது பின்னர் பஸ்ஸில் ஏறியது என்று குழப்பம் இல்லாமல் எழுதயதாகவே உணர்ந்தேன் .

இப்ப எனக்கு ஒரு உண்மை செரிஞ்சாகணும்

கதை முடிந்தால் மதி எங்கே?

மதிக்கு என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

மதியை விதி முடித்து விட்டதா ,  பஸ்ஸில் அசோகமித்திரன் படிக்கிறது ஆவியா...!

எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கு....!

அர்ஜுன் அண்ணா எழுதிற கதைகள் வாசிக்க நல்லாய் இருக்கும், ஆனா இந்தக் கதையின் தலையங்கத்தைப் பார்க்க வாசிக்க விருப்பமில்லை... கருத்துகளைப் பார்த்து விட்டு வாசிக்கலாமா என்று தீர்மானிப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கரையோரம் என ஓர் படம் பார்த்தேன். இதுபோல் ஒர் கதைதான். கதாநாயகன் கடைசியில் தான் உயிரோடு இருக்கின்றான இல்லையா என தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்...எப்படி அண்ணா இப்படி எல்லாம் எழுதுறீங்கள்...சுப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

கதை திகிலாகத்தான் இருந்தது. இப்படியான அனுபவங்கள் இரவுப் பயணங்களில் வரும். ஒருமுறை ரயிலில் வேலையால் வரும்போது இடையில் ஒருவர் தண்டவாளத்தின் முன்னால் பாய்ந்துவிட்டார். அப்போது ஆறு மணி இருக்கும். ரயில் நின்ற இடமோ பெரிய பணக்காரர்கள் golf விளையாடும் wentworth க்குக் கிட்ட. நான் கடைசிப் பெட்டியில் இருந்துகொண்டு எப்போது ரயில் வெளிக்கிடும் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அம்புலன்ஸ், தீயணைப்புப் பிரிவினர், பொலிஸ் எல்லாம் வந்தனர். அவர்கள் வந்து நான் இருந்த கடைசிப் பெட்டியைச் சுத்திவந்து கீழே பார்க்க ஆரம்பித்தபோதுதான் பிணம் எங்கள் பெட்டிக்குக் கீழே கிடக்கின்றது என்று தெரிந்தது. கூட இருந்த எல்லோரும் கத்திக் கொண்டு முன் பெட்டிகளுக்கு ஓடத் தொடங்கிவிட்டார்கள். அட இவ்வளவு நேரம் செத்த பிணமாக இருந்தாளுக்கு மேல் அல்லது குறையுயிரோடு இருந்தாளுக்கு மேலேதான் இருந்தனான் என்று அப்படியே இருந்துவிட்டேன். என்னை மாதிரி இன்னொரு வெள்ளையும் இருந்தான். 

செத்தவனைத் திட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர 5 மணித்தியாலம் எடுத்தது.. 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,பிணத்திற்கு பயந்து எழுந்து போய் இருக்க வேண்டாம்,அட்லீஸ்ட் ஒரு மனிதாபிமானத்திலாவது எழுந்து போய் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் எல்லாம் கோழைகளாய் தற்கொலை செய்பவர்களுக்குக் காட்டுவதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.