உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
By
நிழலி
in இனிய பொழுது
Share
-
Tell a friend
-
Topics
-
80
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டுரை தகவல் எழுதியவர், எமிலி ஆட்கின்சன், ஜாக் பர்கெஸ் பதவி, பிபிசி செய்திகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு. இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு 'புதிய அமைப்பு ' உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார். 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாட்கள் போருக்கு பிறகு கோலன் குன்றுகளை கைப்பற்றியது இஸ்ரேல். இஸ்ரேல் கோலன் குன்றுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என சர்வதேச சட்டப்படி கருதப்படுகிறது. அங்கு தற்போது உள்ள மக்கள் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நெதன்யாகு கூறியுள்ளார். அசத் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கோலன் குன்றுகளை சிரியாவில் இருந்து பிரிக்கும் மோதலற்ற பகுதிக்கு இஸ்ரேலிய படையினர் முன்னேறினர். சிரிய தலைநகர் டமாஸ்கஸில் கட்டுப்பாடுகள் மாறியுள்ளதால் போர்நிறுத்த நடவடிக்கைகள் சீர் குலைந்துவிட்டன என்று கூறி அந்த படையினர் முன்னேறியுள்ளனர். சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் தனது மனைவியுடன் ரஷ்யா சென்றது ஏன்? எதிர்காலம் என்ன? சிரியா: நகரின் மையத்தில் ரகசியமாக செயல்பட்ட உளவு அமைப்பின் சித்திரவதை சிறை- அங்கு இருந்தது என்ன? பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தது? - அந்த பணம் இனி என்னவாகும்? இருப்பினும், ஞாயிறு மாலை அன்று பெஞ்சமின் வெளியிட்ட அறிக்கையில், ''சிரியாவுடன் எந்தவிதமான மோதலிலும் ஈடுபட விருப்பம் இல்லை'' என்று குறிப்பிட்டிருந்தார். "சிரியா தொடர்பான இஸ்ரேலிய கொள்கையை நாங்கள் கள நிலவரத்திற்கு ஏற்ப தீர்மானிப்போம்," என்று அவர் கூறினார். கோலன் குன்றுகளில் மொத்தமாக 30 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். சர்வதேச சட்டங்களின் படி, அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களாக அறியப்படுகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்களோடு 20 ஆயிரம் சிரியா மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ட்ரூஸ் அரேபியர்கள் ஆவார்கள். இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்கு அந்த பகுதி வந்த பிறகு அங்கிருந்து செல்லாதவர்கள் ட்ரூஸ் அரேபியர்கள். நெதன்யாகு அந்த பகுதியை இஸ்ரேல் தன்னுடைய கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கும் என்றும் அந்த பகுதியை வளமாக மாற்றி அங்கே குடியேற்றங்களை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொடர்ச்சியான கிளர்ச்சி மற்றும் போரால் துவண்டு போன சிரியா புதிய பிரச்னைகளை அனுமதிக்காது என்று அபு முகமது அல் ஜொலானி பேசியுள்ளார். எந்த சச்சரவையும் சிரியா அனுமதிக்காது ஆனால் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுத் ஓல்மெர்ட், கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவாக்குவதற்கான தேவை ஏதும் இருப்பதாக தோன்றவில்லை என்று தெரிவித்தார். "நெதன்யாகு, சிரியாவுடன் எந்த மோதலிலும் ஈடுபட விரும்பவில்லை. புதிதாக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் அதற்கு மாறாக நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க காரணம் என்ன?" என்று பிபிசி உலக சேவையின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார் ஓல்மெர்ட். ''ஏற்கனவே நமக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன'' என்று அவர் மேலும் தெரிவித்தார். சிரியாவின் புதிய தலைவராக கருதப்படும் அபு முகமது அல் ஜொலானி ( அஹமது அல்-ஷரா), இஸ்ரேல் சிரியா நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக விமர்சனம் செய்தார். இதற்கு ஒரு நாள் கழித்து நெதன்யாகுவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹூமன் ரைட்ஸ் என்ற போர் கண்காணிப்பு குழு, டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து இஸ்ரேல் 450 தாக்குதல்களை சிரியாவில் நடத்தியுள்ளது என்று கூறியுள்ளது. அபு முகமது அல் ஜொலானி இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் சிவப்பு கோட்டை மீறிவிட்டது என்று தெரிவித்தார். மேலும் அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் கூறினார். மேலும் சிரியா எந்த அண்டை நாட்டினருடனும் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்தார். சிரியா தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், தொடர்ச்சியான கிளர்ச்சி மற்றும் போரால் துவண்டு போன சிரியா புதிய பிரச்னைகளை அனுமதிக்காது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு, ''ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றுவிடுவதை தடுக்க இந்த தாக்குதல்கள் தேவையானது'' என்று வாதிட்டது. தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்16 டிசம்பர் 2024 சுவிட்சர்லாந்தின் 'மிகவும் விருப்பமான நாடு' அந்தஸ்தை இழந்த இந்தியா - சுவிஸ் நிறுவனங்களில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனைவி அஸ்மா அல்-அசத்துடன் சிரிய அதிபர் பஷர் அல்-அசத் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் (கோப்புப் படம்) 'ஒரு வாய்ப்பு வழங்குவது அவசியம்' டமாஸ்கஸ் மீது ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் சில பிரிவினர் தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு, சிரியா அதிபர் பஷர் அல் அசத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தனர். தற்போது அந்த குழுவே சிரியாவில் இடைகால ஆட்சியை அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் அறிவிக்கப்படாத தலைவராக ஜொலானி உள்ளார். சனிக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளின்கன், வாஷிங்கடன் நேரடியாக ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சி குழுவோடு பேசியது என்று குறிப்பிட்டார். ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் குழுவை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சிரியா தூதர் கெய்ர் பெடெர்சென் ஞாயிற்றுக் கிழமை அன்று, சிரியாவில் பொருளாதார நிலைமைகள் சீரடைய, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தடைகள் நீக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். "பொருளாதார தடைகளுக்கு ஒரு முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பிறகு தான் சிரியாவை மீண்டும் கட்டமைக்க முடியும்," என்று டமாஸ்கஸ் வந்த அவர் கூறினார். துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் யசர் குலெர், சிரியாவின் புதிய அரசுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்ய துருக்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார். "புதிய நிர்வாகம் என்ன செய்யும் என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று குலெர் கூறியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு மற்றும் பிற துருக்கிய ஊடகங்கள் தெரிவித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd7584dxg29o -
அருமையான "சமப்படுத்தல்" செய்திருக்கிறீர்கள். "புரின் காதல்" முற்றினால் - அதுவும் புரின் புரியன்மாருக்கு Red Bull , மன்னிக்கவும், Red Pill முழுங்கினால்- இப்படி முரட்டு முட்டுக் கொடுக்கும் பலம் வந்து விடுகிறதென நினைக்கிறேன்😎. குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது வானத்தில் இருந்து இரசாயன ஆயுதம் வீசிய, ஹிற்லருக்கு இணையான ஒருவர் அசாத்- இவர் சிறுபான்மையினரான அலவைற்றுகளுக்காகவும், ஷியாக்களுக்காகவும் இதைச் செய்யவில்லை. "அசாத்" குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகச் செய்தவையே இந்த மனித குலத்திற்கெதிரான செயல்கள்.
-
By ஏராளன் · பதியப்பட்டது
16 DEC, 2024 | 06:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆர்ஜன்டீன வேகப்பந்துவீச்சாளர் ஹேர்னன் ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக் நிகழ்த்திய வீரர்களுக்கான அரிய சாதனை ஏடுகளிலும் அவர் இணைந்துகொண்டுள்ளார். அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உப பிராந்திய அமெரிக்காக்கள் (Americas) தகுதிகாண் சுற்றிலேயே ஆர்ஜன்டீன வீரர் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார். புவனஸ் அயர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கேமன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஹேர்னன் ஃபெனெல் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆறாவது வீரராக ஃபெனெல் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னர் ராஷித் கான் (ஆப்கானிஸ்தான் எதிர் அயர்லாந்து 2019), லசித் மாலிங்க (இலங்கை எதிர் நியூஸிலாந்து 2019), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 2021), ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இங்கிலாந்து 2022), வசீம் யாக்கூப் (லெசோத்தோ எதிர் மாலி 2024) ஆகியோர் இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டியிருந்தனர். ஹேர்னன் ஃபெனெல் தனது கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ட்ரோய் டெய்லர், அலிஸ்டெயார் இஃபில், ரொனல்ட் ஈபான்க்ஸ், அலெஸாண்ட்ரோ மொறிஸ் ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துகொண்டார். அவர் அப் போட்டியில் 14 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதேவேளை இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக்குகளைப் பதிவு செய்த வீரர்கள் வரிசையில் வசீம் அபாஸ் (மோல்டா), பெட் கமின்ஸ் (அவுஸ்திரேலியா), மார்க் பாவ்லோவிக் (செர்பியா), டிம் சௌதீ (நியூஸிலாந்து), லசித் மாலிங்க (இலங்கை) ஆகியோருக்கு அடுத்ததாக ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார். கேமன் தீவுகளுக்கு எதிராக ஃபெனெல் சாதனை நிலைநாட்டிய போதிலும் அவரது அணிக்கு தோல்வியே மிஞ்சியது. அப் போட்டியில் கேமன் தீவுகள் 116 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஆர்ஜன்டீனாவால் 94 ஓட்டங்களையே பெறமுடிந்தது. https://www.virakesari.lk/article/201451 -
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,FACEBOOK/ILAYARAAJA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அவரை உள்ளே அனுமதிக்காததற்கு அவரது சாதி தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோயில் விதிகளின் படி அர்த்த மண்டபத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்று கோயில் நிர்வாகம் கூறுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு என்ன நடந்தது? கோயில் நிர்வாகம் என்ன சொல்கிறது? இளையராஜா தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் என்ன? ஆகமங்களுக்கு 'மூலமே' இல்லையா? ஆகம விதி உண்மையில் இருக்கிறதா? பழனி கருவறையில் சேகர்பாபு நுழைந்ததாக சர்ச்சை: "சித்தர்கள் பிரதிஷ்டை செய்த கோவிலில் ஆகம விதிக்கு இடம் உண்டா?" திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள் இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்து அல்லாதவர்கள் பணியாற்றக் கூடாதா? சட்டம் சொல்வது என்ன? ஆண்டாள் கோயிலில் என்ன நடந்தது? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோயில் அதன் கட்டடக்கலைக்கு புகழ் பெற்றது. மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பங்கேற்றார். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் இசைத்தொகுப்பிலிருந்து பாடல்களை இசைக்கலைஞர்கள் அங்கு பாடினர். ஆண்டாள் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஶ்ரீ ஆண்டாள் ஜீயர் மடத்தை சேர்ந்த, ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் இளையராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்பாக, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள ஆண்டாள் ரெங்கமன்னார் இருக்கக் கூடிய அர்த்த மண்டபத்துக்குள் ஜீயர்களுடன் நுழைய முயன்ற போது இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டார். பட மூலாதாரம்,HANDOUT இளையராஜா தடுக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது? ஆண்டாள் சன்னதியில், அர்த்த மண்டபத்துக்கு வெளியே இருக்கும் வசந்த மண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். "கருவறைக்கு செல்லும் வழியில் இருக்கும் அர்த்த மண்டபத்தை நோக்கி இளையராஜா சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று ஜீயர்கள் தெரிவித்தனர். எனவே வழக்கமாக அனைவரும் பிரார்த்தனை செய்யும் இடத்தில் நின்று இளையராஜா வணங்கினார்" என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதன் பின், இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே செல்லதுரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சன்னதி,நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதி ஆகியவற்றில் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். ஆடிப் பூர கொட்டகையில் நடைபெற்ற திவ்ய பாசுர நிகழ்ச்சியில் பங்கேற்றார். பட மூலாதாரம்,HANDOUT அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா?8 ஜூன் 2021 "தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"21 ஜனவரி 2020 இந்நிலையில், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால்தான் கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அவர் ஜீயர்களால் தடுத்து நிறுத்தப்படும் காட்சிகளை கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இளையராஜாவுக்கு நேர்ந்தது தவறு" கோயில் வழக்கமே காரணம் என்று நிர்வாகம் கூறினாலும், கருவறைக்குள் நிகழ்த்தப்படும் தீண்டாமையே இது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை. தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு அரசு மையத்தில் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் 24 பேர் பல்வேறு கோயில்களில் பணியமர்த்தப்பட்டனர். அவற்றில் 6 கோயில்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டவை. "தமிழ்நாட்டில் அர்ச்சகராக பிராமணர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வது எல்லா இடங்களிலும் இன்னும் சாத்தியமாகவில்லை. திருச்சியில் உள்ள ஆகம விதிக்கு உட்பட்ட வயலூர் முருகன் கோயிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்ய அனுமதிக்கப்படாததால், நீண்ட போராட்டம் நடத்தி, ஒரு மணி நேரம் பூஜை செய்தார். அவரது நியமனம் செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை பெற்றுள்ளோம்" என்று அர்ச்சகராக பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வி ரங்கநாதன். "ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு நேர்ந்தது தவறு, ஆனால் இந்த தீண்டாமை குறித்து அவர் குரல் எழுப்புவாரா? " என்கிறார் அவர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, வி ரங்கநாதன், அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் 2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்துக்கு சாதி தடையாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், உச்சநீதிமன்றத்தில் அந்த தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. "கோயில்களின் மரபு, வழக்கம் என்று கூறியே பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு 24 அர்ச்சகர்களுக்கு மேல் நியமனம் செய்யாமல் இருக்க தடையாக இருப்பதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளே" என்கிறார் ரங்கநாதன். இளையராஜா தடுக்கப்பட்டது ஏன்? இளையராஜா சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாடசாலை ஆகம ஆசிரியரான கோகுலகிருஷ்ணன், "ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வைக்காநசம் என்ற ஆகம விதிக்கு உட்பட்டது. தோளில் சக்கர அடையாளம் பெற்றுக்கொள்வது, உடலில் பெருமாள் பாத அடையாளங்களை பெறுவது உள்ளிட்ட ஐந்து தீட்சைகள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் செல்லலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலில் பெண்களே பூஜை செய்கின்றனர்." என்கிறார். தமிழ்நாட்டில் இருந்து பிரேசிலுக்கு சென்று தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள்6 மணி நேரங்களுக்கு முன்னர் கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் கோயில் வழக்கப்படி அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர், "அர்த்த மண்டபத்திற்குள் கோவிலில் பணி செய்யும் அர்ச்சகர்களை தவிர்த்து மற்ற நபர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் இசையமைப்பாளர் இளையராஜாவை அங்கிருந்து வெளியேறுமாறு ஜீயர் மற்றும் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இளையராஜா வெளியேறி சாமி தரிசனம் செய்தார்" என தெரிவித்தார். இளையராஜா விளக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா தடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்கு அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/@ILAIYARAAJA - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cgm9wekk4epo -
ஆசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப்படைகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்கும் மேற்கிற்கெதிரான ஆனால் மேற்குலகில் வசிக்கும் ஒரு சிலர், தாம் ஒற்றைக்காலில் நின்று ஆதரிக்கும் அதி மேன்மை தங்கிய, மனிதருள் மாணிக்கம் ஐயா புட்டின் அவர்கள் அப்கானிஸ்த்தானில் ஆட்சிபுரியும் அடிப்படைவாதிகளான தலிபான்கள் மீதான தடையினை நீக்கி பரஸ்பரம் உறவுகளை மேற்கொள்ளப்போகிறாரே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? தலிபான்கள் நல்லவர்கள் என்று இனி எழுதிக்கொண்டு வருவார்கள். புட்டின் செய்தால் அது சரியாகத்தானே இருக்கும், என்ன நான் சொல்லுறது?
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts