Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

1 hour ago, கலைஞன் said:

அக்கா தனது வீட்டில் பிள்ளைகள், ஆத்துக்காரருக்கு சமையல் செய்வதை இப்படி பூடகமாய் சொல்லுறா. இவ சமைப்பது தேர்வாம். அவையள் அதை சாப்பிடுவது பாடம் கற்பிப்பதாம். :24_stuck_out_tongue:

tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீ மனிதனாக வாழ்ந்தால் கோவிலுக்குப் போவாய்

 

நீ புனிதனாக வாழ்ந்தால் நீயே கோவிலாவாய்

Posted

*Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*. 
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.* 
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூற பாயுமே ,துள்ளலாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே 

வில்லோடு ரெண்டு அம்பு கொல்லாமல் கொல்லுமே ,பெண்பாவை கண்கள் ரண்டு பொய் சொல்லுதே 

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே ,என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே 

தேனோடை ஓரமே நீராடும் நேரமே , புல்லாங்குழல் தள்ளாடுமே 

பொன்மேனி கேளாய் ராணி , ராஜ ராஜ சோழன் நான்....!

--- கெத்து --- 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே 

வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே 

இனி பிரிவே இல்லை உன் உளறலும் எனக்கு இசை 

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் 

--- காதலர் தின நினைவுகள்---

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்...!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்  மனிதரின் மொழிகள் தேவையில்லை 

 இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்  மனிதற்கு மொழியே தேவையில்லை 

காற்றின் மொழியே ஒலியா இசையா  பூவின் மொழியே நிறமா மனமா 

கடலின் மொழியே அலையா நுரையா  காதல் மொழியே  விழியா இதழா....!

--- காதல் மொழி---

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16684031_1868963303346210_41646605780512

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் 

வான் மழையாக என்னைத் தேடி மண்ணில் வந்தாய் 

என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் 

நெஞ்செ நெஞ்செ நீ எங்கே நானும் அங்கே....!

--- தவிக்கும் நெஞ்சம்--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

தொட துண்டுதே துண்டுதே நிலா, உனை தீண்டினால் ஏனடி தடா 

என் நெஞ்சிலே முட்டுதே கிடா  என் அச்சமும் நாணமும் விடா 

வெள்ளை பொன் மேனிய கொள்ளை கொள்ள போகிறேன் 

மெல்ல போய் தீண்டினால் நானே கொள்ளை போகிறேன்

முன்னே நீ வந்ததும் முதுகுத் தண்டில் மழையடா , இன்பத் தலைவா இடைதொட 

 இடைவெளி ஏன் உன் அணைப்பினில்  நரம்புகள் நொறுங்கட்டும்.....!

---அழகிய சூடான பூவே ----

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

காத்தார் குழையாட பைம்பூண் கலனாட 

கோதை குழலாட வண்டின் குழாமாட

சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி  

--- பாசுரம்.---

பொன்வண்டொன்று மலரெண்டு முகத்தோடு மோத  -- நான் 

வளைகொண்ட  கையாலே மெதுவாக மூட ---என் 

கருங்கூந்தால் கலைந்தோடி மேகங்களாக -- நான் 

பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

---கவிரஸம் ---.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16640763_780055742151550_711359961333772

  • கருத்துக்கள உறவுகள்
Posted

GetAttachmentThumbnail?id=AQMkADAwATE0YjIwLWIyZjMtNDFkMi0wMAItMDAKAEYAAAPMPSJ5GOsETbNCujrA3wX1BwB2WGj8terNQZ1ons5CRdkgAAACAQwAAAB2WGj8terNQZ1ons5CRdkgAAE3F%2BetAAAAARIAEAB7O7JC3zsyT55Y3LFWs51s&thumbnailType=2&X-OWA-CANARY=wmdo1Pp5_kKiw0JA2fUCwFBOvWs2V9QYbz_zkowG66NnVUZW-7kcwnxMJlcroPNvPJl3hFc8Ny4.&token=a6883f9c-2a6d-4cd5-9484-3ad67546b096&owa=outlook.live.com&isc=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

மயிலைப் பார்த்து கரடி என்பார் மானைப் பார்த்து வேங்கை என்பார் 

குயிலைப் பார்த்து ஆந்தை என்பார் அதையும் சிலபேர் உண்மை என்பார் 

யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன சொல்வேன் 

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி....!

--- மனச்சாட்சி---  

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bildergebnis für வாழ்க்கை

Edited by Paanch



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.