Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் இருப்பானா 

அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன்கூட இருப்பானா 

உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா 

அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய  காரியமா....!

---ஊர்வம்பு---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும், விரல்களை பிணைத்தவாறு பேசவேண்டும் 

காலை எழும்போது நீ வேண்டும், தூக்கம் வரும்போது தோள் வேண்டும் 

நீ பிரியாவாராம் தந்தால் அதுவே போதும்...!

---செந்தூரா--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16807458_1098903366886052_55741332493931

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16807768_1498352836876587_17866270525225

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா, தென்னங்காய் நீர்தழும்ப  தென்றல்தான் நீந்துதம்மா 

ஊர்முழுதும் உறங்கையிலே ஓசையது அடங்கையிலே, வாசல்திறக்க ஆசை பிறக்க அம்மம்மா 

நாணம் உன்னை விடுமோ... 

--- வாலிபக் கவிஞர் வாலி--- 

 

  • Like 1
Posted

What is the difference between *Punniam* and *Paavam*..

*Punniam is a debit card - pay first and enjoy later*!


*Paavam is a credit card - enjoy first and pay later*!

 

*KARMA* is a restaurant, where there is no need to place order - *We are served, what we have cooked*..!

 

எங்கோ வாசித்தது

இதனை தமிழில் மொழியாக்கம் செய்தால் அழகு குறைந்துவிடும் என்பதால் அப்படியே பகிர்கின்றேன்
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16864059_1233923969978794_34920889130818

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கன்னத்தில பழத்தோட்டம் கண்களில சதிராட்டம் 

கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம் 

உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை 

உறவு கொண்டாலே ராஜா, மயங்காத மனம் யாவும் மயங்கும்...!

--- பானுமதி---

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம் கொள்ளி வரை வருமா 

வீடுவரை உறவு வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ....!

--- தத்துவம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும் 

சிறப்பொடு பூ ,நீர் திருந்த முன் ஏந்தி 

மறப்பின்றி  உன்னை வழிபடும் வண்ணம் 

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே....!

---திருமூலர்---

(அடுத்து எங்கெங்கே என்னென்ன பிறப்பு வாய்க்குமோ அறியேன். அப்போது உன்னைநான் மறந்தும் போகலாம்.அப்படி ஆகிவிடாமல், மறக்காமல்  என்னிரு கரங்களில் சிறந்த மலர்களையும் நண்நீரையும் ஏந்தி உன்முன் வந்து வழிபாடும் வண்ணம் அருள்பாலிக்க வேண்டும் என் ஈசனே).

சிவராத்திரி தினங்களில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் :--

--- தவம் புரிந்த அம்பாளின் வேண்டுதலுக்கினாங்க அவரை இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனது.

--- பார்த்தனுக்கு பாசுபதாஸ்திரம் அருளியது.

--- கண்ணப்பநாயனாரிடம் கண்தானம் பெற்று அவர் சத்திர சிகிச்சை செய்ய அனுமதித்தது.

---பகீரதனின் பகீரத முயற்சியால் கங்கை பூமிக்கு வர அவளை உச்சியில் தாங்கி பார்வதி அறியாமல் பதுக்கி வைத்திருப்பது.

---மார்கண்டேயருக்கு அபாயம் அளிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு , பிரம்மா விஷ்ணு அறியாத தன பாதத்தை காலனின் மார்பில் வைத்து கருணை புரிந்தது. 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிராணிகள் மூச்சு விடும் அளவு

 

ஒரு நிமிடத்துக்கு………

 

மனிதன் 15 முறை சுவாசிக்கிறான்சராசரி ஆயுள் 100 வயது

 

ஆமை 5 முறை சுவாசிக்கிறது—150 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை

 

பாம்பு 8 முறை சுவாசிக்கிறது– 30 ஆண்டு (உணவு வேட்டை ஆடுகையில் 15 முறையாக அதிகரிக்கும்)

 

யானை 12 முறை சுவாசிக்கிறது—90 ஆண்டு

 

குதிரை 19 முறை சுவாசிக்கிறது— 50

 

பூனை 25 முறை சுவாசிக்கிறது—13 ஆண்டு

 

நாய் 29 முறை சுவாசிக்கிறது—14 ஆண்டு

 

புறா 37 முறை சுவாசிக்கிறது—9 ஆண்டு

 

முயல் 39 முறை சுவாசிக்கிறது–8 ஆண்டு

 

திமிங்கிலம் 6 முறை சுவாசிக்கிறது –111 ஆண்டு

 

யானை 4,5 (படுத்த நிலையில்) முறை சுவாசிக்கிறது —70 ஆண்டு

 

குதிரை 8-15 முறை சுவாசிக்கிறது —50 ஆண்டு

 

சிம்பன்சி குரங்கு -14 முறை சுவாசிக்கிறது -40 ஆண்டு

 

குரங்கு—32- முறை சுவாசிக்கிறது –18-23 ஆண்டு

 

மூஞ்சுறு—170 முறை சுவாசிக்கிறது — 1 ஆண்டு

 

வீட்டு எலி- 95-160 முறை சுவாசிக்கிறது—2 முதல் 3 ஆண்டு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் 

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் 

மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....!

--- வாழ்க்கையும் பயணமும்--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

அண்ணை ரைட் ....!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்...!

சேவை செய்யும் தியாகி  சிங்கார போகி 

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி 

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே 

உண்மையிலே இதுதான் சமரசம் உலாவும் இடமே....!

--- மயானம்--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16999116_777458455739547_735870061910392

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16996470_10211017709293205_8835079162140




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.