Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோஷித்த ராஜபக்ஷ கைது

Featured Replies

யோஷித்த ராஜபக்ஷ கைது
 
 

article_1454151754-1254.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார்.

விசாரணைகளை அடுத்து, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/165012/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.9ybfO48L.dpuf

யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் கைது

யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் கைது

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷவிடம் சற்றுமுன்னர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்தே அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்‌ஷவை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு இவர்கள் இன்று காலை விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மூவரும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

நல்ல விடயம் ,

அட நாட்டுக்காக பாடுபட்டவர்களை காட்டி கொடுக்கின்றாங்க்களா என்று சிங்கள இனவாதிகள் அவர்கள் இணையங்களில் கொட்டி தீர்க்க போகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, arjun said:

நல்ல விடயம் ,

அட நாட்டுக்காக பாடுபட்டவர்களை காட்டி கொடுக்கின்றாங்க்களா என்று சிங்கள இனவாதிகள் அவர்கள் இணையங்களில் கொட்டி தீர்க்க போகின்றார்கள் .

கைது வேறு .....தண்டனை வேறு ......கைது பண்ணி உபசரிப்பு செய்ய என்று ஒரு கோஸ்டி உண்டு என்பதும் யாம் அறிவோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடிச்சு உள்ளை போடவேண்டியவனை வெளியிலை விட்டுட்டு.....tw_angry:

  • தொடங்கியவர்
மஹிந்த சற்று முன்னர் வந்தடைந்தார்
 

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/165021/-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.ChJ4LBb7.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மகிந்த ராஜபக்ஷ மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது

யோஷித்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை பெரும் நிதிமோசடிகள் தொடர்பான சிறப்பு பொலிஸ் பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிஎஸ்என் ஊடக நிறுவனத்தின் மூலம் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

யோஷித்த ராஜபக்ஷ கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, யோஷித்த ராஜபக்ஷவின் தந்தை மகிந்த ராஜபக்ஷ, மூத்த சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் அங்கு சென்றிருந்தனர்.

150306152234_yoshitha_mahinda_512x288_st

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, சிஎஸ்என் நிறுவனத்தின் தலைவரான ரொஹான் வெலிவிட்ட மற்றும் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசியின் கொழும்பு செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை கைதுசெய்வதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்று மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

'நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் இருந்திருந்தால் நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்களோ ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ உருவாகியிருக்காது' என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160130_yoshitha_rajapakshe

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.