Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை – பிரதமர்

Featured Replies

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை – பிரதமர்

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை – பிரதமர்:-



வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற ஆசிய பிராந்திய வலய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் விசாரணை ஒன்றில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க முடியும் என்ற போதிலும் தீர்ப்பு அளிக்கும் செயன்முறையில் பங்களிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகளில் பங்கெடுக்க அனுமதியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரை உள்நாட்டு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதவான்கள் உள்ளக விசாரணைகளில் அமர்வதற்கு அனுமதிக்க வேண்டுமாயின் அரசியல் சானத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.நீதிமன்றக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்கள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128512/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை – பிரதமர்

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை – பிரதமர்:-



வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

உங்கள் நாட்டு மக்களை இராணுவத்தைக்கொண்டும், காவல்துறை, மற்றும் காடையர்களைக் கொண்டும் கொல்வதற்கு, உங்கள் அரசியல் சாசனத்தில் இடமுள்ளதா பிரதமரே... ??? :rolleyes:

கொலைகாரர்களுக்கு உயர் பதவிகள் வழங்கி உபசரிக்கவும் உங்கள் அரசியல் சாசனத்தில் இடமுள்ளதா பிரதமரே... ??? :unsure:

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் உலகம் சொல்லுதில்ல.. அரசியல் அமைப்பை சீர்செய்து.. உலக தரத்திற்கு மனித உரிமைகளைப் பேண.. மானுடத்திற்கு எதிரான குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லி. அப்புறம்.. என்ன.. சட்டமில்ல.. சரக்கில்லை என்று கொண்டு. செய்ய மனசில்ல என்று சொல்லுறது. இந்த நிலையில்.. தமிழருக்கு.. பூனைக்குட்டி கிடைக்கப் போகுதாம்.. என்று சிலர் கட்டி இருக்கிற கோவணத்தையும் உருவி எறிஞ்சு கொண்டிருக்கினம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் அண்டு தொடக்கம் தமிழருக்கு பேப்பட்டம் கட்டிக்கொண்டுதானே திரியிறாங்கள் .இது தெரியாமல் எங்கடை ஒரு சிலதுகள் சிங்களத்தின்ரை முந்தானையை பிடிச்சுக்கொண்டு விரல்சூப்புதுகள். tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

குடிமக்கள் மீது குண்டு போட மட்டும் 
சாசனத்தில் இடம் இருக்கு ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.