Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையில் ஆளும் கட்சிக்குள் உச்ச தொனியில் இரு மணி நேரம் கருத்து மோதல்

Featured Replies

வடமாகாண சபையில் ஆளும் கட்சிக்குள் உச்ச தொனியில் இரு மணி நேரம் கருத்து மோதல்

வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இரண்டு குழுக்களாக பிரிந்து சுமார் இரு மணி நேரம் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். 

 
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. 
 
அதன் போது கடந்த அமர்வில் விவசாய அமைச்சர் மீது 11 குற்ற சாட்டுகள் முன் வைக்கப்பட்டு பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
 
குறித்த பிரேரணையை மாகாண சபை பதிவேட்டில் (ஹன்சால்டில்) இருந்து நீக்க வேண்டும் என கோரி முதலமைச்சருக்கு எட்டு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பி இருந்தனர்.
 
எனவே அந்த பிரேரணையை பதிவேட்டில் இருந்து நீக்குமாறு முதலமைச்சர் கோரினர். 
 
உடனே எழுந்த மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் யோசித ராஜபக்சேவுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே சட்டத்தரணியாக நீதிமன்றம் சென்றது போன்று இன்று விவசாய அமைச்சருக்காக முன்னாள் நீதியரசர் சட்டத்தரணியாக வாதிட வந்துள்ளார் என நக்கலான தொனியில் கருத்து கூறினார்.
 
அதனை அடுத்து எழுந்த உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் , கடந்த அமர்வில் முதலமைச்சர் விவசாய அமைச்சரிடம் கோர வேண்டும் என கோரியே பிரேரணை நிறைவேற்ற பட்டது. அதனால் முதலமைச்சர் கருத்து கூறினார் 
 
அதற்காக முதலமைச்சரை மஹிந்த யோசிதவுடன் ஒப்பிடுவது கீழ்த்தரமான செயற்பாடு என கடுமையான தொனியில் கூறினார்.
 
அதனை அடுத்து கருத்துக்கூறிய முதலமைச்சர், குற்றசாட்டு என்றால் என்ன சாட்டுதல் என்றால் என்ன என்பதை முதலில் அறியுங்கள் நீங்கள் முன் வைத்தவை சாட்டுதல்கள் மாத்திரமே குற்ற சாட்டுகள் அல்ல என ஆவேசமாக கூறினார்.
 
அதனை அடுத்து சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இரு பிரிவாக பிரிந்து கருத்து மோதலில் ஈடுபட்டனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் மௌனமாக கருத்து மோதல்களை பார்வையிட்டுக்கொண்டு இருந்தனர். 
 
சுமார் இரு மணி நேரம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றன சிலர் ஆவேசமான  குரலில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
 
இறுதியில் முதலமைச்சர் அன்றைய தினம் அமைச்சர் மீது முன் வைத்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் அமைச்சரிடம் விளக்கம் கோரி எழுந்து மூலம் பதில்களை பெற்றுக்கொண்டு உள்ளேன் என்றார். அதை தொடர்ந்து விவசாய அமைச்சரும் தான் எந்த விசாரணையையும் எதிர்க்கொள்ள தயார் என கூறினார் அவைத்தலைவர் அன்றைய பிரேரணையை ஹன்சால்டில் இருந்து நீக்க முடியாது என கூறினார். அதனை தொடர்ந்து மோதல் தணிந்து தேநீர் இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கபட்டது.
 
 
ஒரு  மாதகால அவகாசம். இல்லையேல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செல்வேன் - ஜி.ரி.லிங்கநாதன்.
 

நான்  கொண்டுவந்த பிரேரணை  தவறா அல்லது கொண்டு வந்த முறை தவறா என்பதை எனக்கு முதலில் தெளிவு படுத்துங்கள். கடந்த அமர்வில் பிரேரணையை முன் மொழியும் போது பார்த்து கொண்டு இருந்தவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

 
மாகாண சபை மீதும் முதலமைச்சர் மீதும் நம்பிக்கை இருந்ததால் தான் அமைச்சர் ஊழல் செய்துள்ளாரா என விசாரிக்குமாறு பிரேரணை கொண்டு வந்தேன். இல்லை ஏனெனில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமோ  சென்று இருப்பேன்.
 
அரசியல் பழிவாங்களுக்காகவோ அல்லது எனது சுயலாபத்திற்காகவோ இந்த பிரேரணையை கொண்டு வரவில்லை.  நாம் முன்வைத்த குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் அமைச்சர் குற்றமற்றவர் என்பதை வெளிப்படுத்துங்கள். 
 
எம் குற்றசாட்டு தொடர்பில் அமைச்சர் மீது விசாரணை செய்யுங்கள் எதற்காக பயப்படுகின்றீர்கள் ? மாகாண சபைக்கு ஒரு மாத கால அவகாசம் தருகின்றேன் நான் சுமத்திய குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள படவேண்டும். இல்லாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வேன். 
 
 
விவசாய அமைச்சர் ஊழல் செய்தார் அதற்கான ஆதாரம் உண்டு. -அயுப் அஸ்மின்.
 
அன்றைய தினம் விவசாய அமைச்சர் மீது சாட்டப்பட்ட அனைத்து குற்ற சாட்டுக்களுக்கும் எம்மிடம் தரவுகள் ஆதாரங்கள் இருக்கின்றன.
 
அவற்றை கொண்டு நாம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சென்று இருப்போம். ஆனால் நாம் மாகாண சபை மீதும் முதலமைச்சர் மீதுமான நம்பிக்கையிலையே இங்கே அதனை கொண்டு வந்தோம்.
இன்று அந்த நம்பிக்கை கேள்விக்குறி ஆகிவிட்டது. 
 
என் கேள்விக்கு உடன் பதில் வேண்டும். என கடும் தொனியில் அயுப் அஸ்மின் தெரிவிக்க சிரித்தவாறு பதில் அளித்த விவசாய அமைச்சர்.
 
இப்பொழுது அமைச்சரிடம் கேள்வி ஒன்று கேட்கிறேன் அவர் அதற்கு இப்ப உடனே ஆம்  அல்லது இல்லை என பதில் அளிக்க வேண்டும். சுன்னாக நிலத்தடி நீர் மாசுக்கு காரணமாக மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் இரு பொட்டி நிறைய பணத்துடன் உங்களை சந்திக்க வந்தார்களா இல்லையா என இப்ப பதில் அளியுங்கள் என கடும் தொனியில் கோரினார்.
 
அதற்கு பதில் அளித்த விவசாய அமைச்சர் என்னை யாரும் பொட்டி படுக்கையுடன் இதுவரை சந்திக்க வில்லை பொட்டி படுக்கையுடன் என்னை சந்திக்க நான் யாரையும் அனுமதிப்பதில்லை. என சிரித்தவாறு பதிலளித்தார்.
 
குற்றச்சாட்டுகளை நாகரிமகான முறையில் கேள்விகளாக கேட்டு இருக்கலாம். பிரேரணையாக கொண்டு வந்தது தவறு. - சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை.
 
அன்றைய தினம் எனது கருத்தை கூற நான் ஆறு தடவைகள் எழுந்தேன் அதனை அவைத்தலைவர் கவனிக்கவில்லை. 
 
அன்றைய தினம் அமைச்சர் மீது குற்றசாட்டு முன் வைத்து பிரேரணை கொண்டு வந்தமை தவறு. எதிர்க்கட்சி தலைவர் விவசாய அமைச்சினால் உழவர் தினத்திற்காக எவ்வளவு பணம் செலவழிக்க ப்பட்டது என நாகரிகமாக கேள்வி எழுப்பி யுள்ளார். அதற்கு நிச்சயமாக அமைச்சர் பதில் அளித்தே ஆக வேண்டும்.
 
அதே போன்று அன்றைய தினம் அமைச்சர் மீதான குற்ற சாட்டை நாகரிகமான முறையில் கேள்விகளாக கேட்டு  இருக்கலாம் அதற்கு நிச்சயமாக அமைச்சர் பதில் அளித்தே  இருக்க வேண்டும். அதனை விடுத்து அவைத்தலைவர் நேரடியாக உறுப்பினரின் பெயரை கூற அந்த உறுப்பினர் எழும்பி நிகழ்சி நிரலில் இல்லாத விடயத்தை குறித்து  பேசினார் அதனை தொடர்ந்து இன்னமும் சில உறுப்பினர்கள் பேசினார்கள் பின்னர் பிரேரணை என்றார்கள் பின்னர் எதிர்ப்பின்றி நிறைவேற்றம் என்றார்கள்.
 
சபையில் என்ன நடக்கின்றது என நாம் அறிந்து கொள்ள முதலே எல்லாம் முடிந்து சபையை ஒத்தி வைத்து விட்டார்கள்.
 
பின்னர் நேற்று ஒரு கடிதம் வந்தது விவசாய அமைச்சருக்கு எதிரான பிரேரணை நீர்ந்து போகாமல் இருக்க நாம் ஒன்றினைவோம் என இவ்வாறு கையெழுத்து தேவை என்றால் மாத்திரம் எம்மை கேட்பார்கள் இல்லாவிடின் எம்மை எதுவும் கேட்கமாட்டார்கள்.
 
குற்றசாட்டுக்களை விசாரணை செய்யுங்கள். - அரியக்குட்டி பரம்சோதி
 
மாநகர சபை சம்பந்தப்பட்ட சில குற்ரசாட்டுகள் தொடர்பில் சில பிரச்சனைகளை இந்த சபைக்கு கொண்டு வந்த போது இது ஆளும் கட்சி தொடர்பான பிரச்சனை அதனை ஆளும் கட்சியுடன் பேசி தீர்ப்போம் என கூறி அந்த பிரச்சனைகளை சபையில் எடுத்து கொள்ளது நிராகரித்தீர்கள்.
 
ஆனால் இந்த பிரச்சனையை சபையில் எடுத்து கொண்டீர்கள். அது இப்போது முடிந்த விடயம். தற்போது  அமைச்சர் மீதான குற்றசாட்டுக்களை விசாரணை செய்யுங்கள். விசாரணையில் அமைச்சர் குற்றமற்றவர் என்றால் குற்றமற்றவர் என கூறுங்கள்.
 
அதனை விடுத்து விசாரணையே செய்யாது, அவர் குற்றமற்றவர் என வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
 
 
எவருடைய நிகழ்சி நிரலிலும் இயங்கவில்லை. - சந்திரலிங்கம் சுகிர்தன்.
 
எங்கள் மக்கள் பிரச்சனை தொடர்பிலையே கதைக்கின்றோம். நாம் யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இயங்க வில்லை. அமைச்சர் மீதான குற்ற சாட்டை விசாரியுங்கள். என்பதே  எமது கோரிக்கை.
 
விடுதலை போராட்ட தோல்விக்கு காரணம் காட்டிகொடுப்பும் கழுத்தறுப்பும் தான். - அன்ரனி ஜெகநாதன்.
 
தமிழர்களின் தோல்விக்கு காரணம் காட்டிக்கொடுப்புக்களும் , கழுத்தறுப்புக்களுமே எமது போராட்டம் தோல்வி அடைய அதுவே  காரணம்.
 
எமது உரிமைக்காக போராட தொடங்கிய பல்வேறு இயக்கங்களும் பின்னர் தமக்குள் பிளவு பட்டு மோதிகொண்டார்கள். பின்னர் சிலர் இராணுவத்துடன் இணைத்து ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டு காட்டிக்கொடுப்புக்கள் கழுத்தறுப்புக்கள் ஊடாக எமது போராட்டத்தை தோற்கடித்தார்கள். 
 
மற்றைய மாகாண சபைகளில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியுமே மோதிக்கொள்ளும் ஆனால் வடக்கு மாகாண சபையிலையே எதிர்க்கட்சி சும்மா இருக்க  ஆளும் கட்சி இரு பிரிவாக நின்று மோதிக்கொள்கின்றனர்.
 
குற்றசாட்டு தொடர்பில் விவசாய அமைச்சரிடம் இருந்து எழுது மூல பதில்களை பெற்று விட்டேன். - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
 
குற்றச்சாட்டுக்களை குற்ற சாட்டுக்களாக முன் வைக்க வேண்டும். வெறும் சாட்டுதல்களாக முன் வைத்து ஒருவர் மீது சேறு பூச கூடாது.
 
அன்றைய தினம் சாட்டுக்களாக முன் வைக்கப்பட்டவை தொடர்பில் எமக்கு தரப்பட்ட ஆதாரங்கள் சான்றுகள் தொடர்பில் விவசாய அமைச்சரிடம் பதில் கோரி எழுத்து மூலமான பதில்களை பெற்றுக்கொண்டு உள்ளேன். 
 
மேலதிகமாக அவர் மீது குற்றசாட்டுக்கள் இருந்தால் உறுப்பினர்கள் அவை தொடர்பிலான தரவுகள் சான்று ஆதாரங்கள் இருந்தால் என்னிடம் ஒப்படைக்கலாம். கௌரவ உறுப்பினர் அஸ்மின் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார் அவர் தன்னிடம்  உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன்.
 
ஏகமனதாக நிறைவேற்றபட்ட பிரேரனையை நீக்க முடியாது. - சீ.வி.கே.சிவஞானம்.
 
இந்த சபையில் அன்றைய தினம் அந்த தீர்மானம் எடுத்து கொள்ளும் போது எந்த எதிர்ப்பும் இருக்க வில்லை. இன்றைக்கு வந்து அது நடைமுறை பிறழ்வு என என் மீது குற்றம் சாட்டுகின்றீர்கள்.  அதற்கு ஆண்டவன் தான்  பதில் சொல்ல  வேண்டும்.
 
அந்த தீர்மானம் உரிய முறையில் தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை பதிவேட்டில் இருந்து நீக்க முடியாது. தீர்மானம் நிறைவேற்றப்படும் போது கருத்து வேறுபாடு இருக்கின்றதா என சபையில் கேள்வி எழுப்பினேன் அதன் போது ஒருவருமே  கருத்து கூறவில்லை.
 
எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார். - விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்.
 
விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் 4 கோடியோ 400 ரூபாயோ  ஊழல்  செய்து இருந்தால் அது நிச்சயமாக விசாரிக்கப்படவே வேண்டும். ஆனால் ஆதரமற்ற குற்ற சாட்டுக்களால் மன சோர்வினை ஏற்படுத்த கூடாது. 
 
நான் திடீர் என்று அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் கோடிகளுக்கோ ரூபாய்களுக்கோ சேரம் போகிறவன் அல்ல என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் அதனை முதலமைச்சரிடம் கையளியுங்கள் இல்லாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமோ  கையளியுங்கள். நான்  எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்
 
  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபையில் அடிக்கடி வரும் குழப்பங்களுக்கும்
ஐங்கர நேசன் போன்ற திறமையான  அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கும்  அடுத்த தேர்தலுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருப்பதாக இன்று ஊரிலிருந்து எனது அண்ணர் கூறினார்.

தொடர்ந்து தாங்கள் மட்டுமே பாராளு மன்றிற்குச் செல்ல வேண்டும்.....
மாகாண சபை உறுப்பினர்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கக் கூடும்....

என்ற கவலைகள்  பெருத்த அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளதாம்.
அதனால் வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும்  தங்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்க மறுக்கும் சில மாகாண சபை உறுப்பினர்கள் என்று அவர்கள் மீது   திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்கின்றனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நாங்க கேட்டுப் போராடின உரிமை. சன நாய் அகம். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 சிவஞானத்தின் பேச்சுக்களும், செயற்பாடுகளும் நம்பிக்கையைத் தருகிற மாதிரித் தெரியவில்லை. அவசரப் பட்டு தனக்கு விருப்பமில்லாதவர்களை வெளியேற்ற சிலரை பயன்படுத்துமாப் போல் தெரிகிறது. முதலமைச்சரில் ஆரம்பித்து, நீண்டுகொண்டு போகிறது. ஒருவருக்கொருவர் குழி பறிக்கவே நேரம் காணாது அவர்களுக்கு. மக்களுக்கு சேவை செய்ய  எங்கே நேரமிருக்கப் போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மாகாணசபைகளிலும் இப்படி சண்டை நடைபெறுகிறதா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.