Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Featured Replies

ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

 
ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை



பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகளின் போது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றிற்குள் பிரவேசித்த போது ஹிருனிகா உரிய மரியாதை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதே பிழையை தொடர்ந்தும் மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129514/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஹருனிகா தான் வந்தால்  நீதிபதி எழுந்து நிற்பார் என்று யோசித்திருப்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

நீதிமன்றிற்குள்  நீதிபதி  பிரவேசித்த போது ஹிருனிகா உரிய மரியாதை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதே பிழையை தொடர்ந்தும் மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவங்கள் ஆகலும் செல்லம் குடுத்து பழக்கிட்டாங்கள் போலை கிடக்கு :cool:

  • தொடங்கியவர்

 
 
'நன்னெறிகளைப் பின்பற்றவும்'
 
01-03-2016 11:16 AM
Comments - 0       Views - 0

article_1456811251-Hirunika.jpgநீதிமன்றத்தில் நடந்துகொள்ளும் முறைமை பற்றி எடுத்துகூறி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எச்சரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைப் பின்பற்றி நடக்குமாறு அறிவுரை வழங்கினார்.

அவருடைய தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி ஷிரான் குணரத்ன, ரணவக்க குணதிலக்க மற்றும் எம்.சீ.பீ எஸ் மொராயஸ் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, மன்றுக்கு வந்திருந்த ஹிருணிகா எம்.பி, தலைவணங்காது நீதிமன்றுக்குள் நுழைந்தார். இதனை அவதானித்ததன் பின்னரே நீதிபதிகள், மேற்கண்டவாறு எச்சரித்தனர். வழக்கின் சாட்சி விசாரணைகளை இடைநிறுத்திய நீதிபதிகள் குழு, ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றுக்கு முன்பாக அழைத்து, இது நீதிமன்றமாகும் என்று அறிவித்தனர். நீதிமன்றுக்குள் நுழைகையில் தலைவணங்குதல், சம்பிரதாயமாகும் என்று சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றத்துக்குக் கௌரவமளிக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு முகங்;கொடுக்க வேண்டிவரும் என்றும் எடுத்துரைத்து எச்சரித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/167204/-%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%AE-#sthash.8r7UdEZH.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை வரும்போது ...
ஒருக்கா எழுந்து நின்றால் நீதிபதிக்கு குறைந்தா போய்விடும் ?

பெண் பாவம் பொல்லாது என்று அவருக்கு தெரியவில்லை போல.

  • தொடங்கியவர்

எங்கையடா ஆளை இந்த பக்கம் காணவில்லை என்று பார்த்தேன்..:cool: வந்து விட்டார்.. இனியாவது புத்திமதியை சொல்லுவம் என்று இல்லை...:grin:

நீதிபதியை எழுத்து நிற்க சொல்லுகிறார்..tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எங்குமே சட்டத்திற்கு அமையத்தானே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றது, ஆகவே அது சட்டமன்றமாகத்தானே இருக்கமுடியும்...?? :rolleyes:

சட்டங்களுக்கு அடிபணியவேண்டுமே தவிரத் தலைவணங்கவேண்டிய அவசியமில்லை.:rolleyes::rolleyes: 

 

நீதிக்கமைய தீர்ப்புகள் வழங்கப்படும் மன்றங்களே நீதிமன்றமாக இருக்கமுடியும்.:) இன்று நீதிமன்றம் எங்காவது உள்ளதா...?? :(

நீதிமன்றமாக இருந்தால் தலைவணங்கவேண்டியது அவசியம். நீதிமன்றத் தீர்ப்பு கடவுளின் தீர்ப்புக்கு இணையானது. :):)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.